search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Agricultural machinery at subsidized prices"

    • வேளாண்மை இயந்திரமயமாக்கும் திட்டம் தமிழகத்தில் வேளாண்மைப் பொறியியல் துறையின் மூலம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
    • இத்திட்டத்தின்கீழ் தனிப்பட்ட விவசாயிகள் வேளாண் இயந்திரங்களை மானியத்தில் பெற்றிட ஏதுவாக முதற்கட்டமாக ரூ.1.61 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

    சேலம்:

    விவசாயத்தில் வேலையாட்களுக்கான பற்றாக்குறையினை நிவர்த்தி செய்து, குறித்த காலத்தே பண்ணைப்பயிர் சாகுபடி செய்திட ஏதுவாகவும், விவசாயிகளின் நிகர இலாபத்தினை உயர்த்திடவும் வேளாண்மை இயந்திரமயமாக்கும் திட்டம் தமிழகத்தில் வேளாண்மைப் பொறியியல் துறையின் மூலம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

    இந்த திட்டத்தின் கீழ் இந்த ஆண்டில் சேலம் மாவட்டத்தில் தனிப்பட்ட விவசாயிகளுக்கு வேளாண் எந்திரங்கள் மற்றும் கருவிகள் மானிய விலையில் வழங்கும் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. அதன்படி உழுவை எந்திரம் ரோட்டாவேட்டர், பவர்டில்லர், களைஎடுக்கும் கருவி, பல்வகை கதிர் பயிர் அடிக்கும் எந்திரம், நெல் அறுவடை எந்திரம் மற்றும் இதர எந்திரங்கள் வழங்கப்பட உள்ளது.

    இத்திட்டத்தின் கீழ் பயன்பெற விரும்பும் அனைத்து விவசாயிகள் விண்ணப்பம் மற்றும் வருவாய் ஆவணங்களை எங்களது சேலம் மாவட்டத்தில் உள்ள சேலம், மேட்டூர், ஆத்தூர் மற்றும் சங்ககிரி உபகோட்டங்களில் சமர்ப்பித்து மூதுரிமை அடிப்படையில் பெற்றுக்–கொள்ள கேட்டுக்–கொள்ளப்ப–டுகிறது. இத்திட்டத்தின்கீழ் தனிப்பட்ட விவசாயிகள் வேளாண் இயந்திரங்களை மானியத்தில் பெற்றிட ஏதுவாக முதற்கட்டமாக ரூ.1.61 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

    கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கி–ணைந்த வேளாண் வளர்ச்சி திட்டத்தில் செயல்படுத்தப்படும் கிராமங்களில் உள்ள விவசாயிகளுக்கு வேளாண் பணிகளுக்கான எந்திரங்கள் வாங்க முன்னுரிமை வழங்கப்படும். இதில் சிறு, குறு மகளிர், தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியினர் விவசாயிகளுக்கு 50 சதவிகித மானியமும் மற்றும் இதர விவசாயிகளுக்கு 40 சதவிகித மானியமும் அல்லது அரசு நிர்ணயிக்கும் தொகை உள்ளிட்டவற்றில் எது குறைவோ அதனை பின்னேற்பு மானியமாக விவசாயிகளின் வங்கி கணக்கில் வரவு வைக்கப்ப–டும். மேலும் தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியின சிறு / குறு விவசாயிகளுக்கு கூடுதலாக 20 சதவிகித மானியமும் கணக்கிட்டு தனியே வழங்கப்படும்.

    சேலம் மாவட்டத்தில் இத்திட்டத்தின் _லம் பயன்பெற விருப்பமுள்ள விவசாயிகள் தேவையான அனைத்து ஆவணங்கள் மற்றும் விண்ணப்பத்துடன் வேளாண் அலுவலகங்களை தொடர்புகொள்ளலாம் என்று மாவட்ட கலெக்டர் கார்மேகம் தெரிவித்து உள்ளார்.

    ×