search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Agni Nakshatra is over"

    • புழுக்கத்தாலும், அனல் காற்றாலும் பொதுமக்கள் கடும் அவதி அடைந்து வருகின்றனர்.
    • சாலைகளில் மக்கள் நடமாட்டம் இன்றி வெறிச்சோடி காணப்படுகிறது.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டத்தில் கடந்த 2 மாதமாக வெயிலின் தாக்கம் அதிக அளவில் பதிவாகி வருகிறது. மாவட்டத்தில் அக்னி நட்சத்திரம் வெயில் தொடங்கும் முன்பே வெயிலின் தாக்கம் அதிக அளவில் பதிவாகி வந்தது. 107 டிகிரி வரை பதிவானது. இதனால் வாகன ஓட்டிகள். மக்கள் கடும் அவதி அடைந்தனர்.

    அதனைத்தொடர்ந்து ஈரோடு மாவட்டத்தில் அக்னி நட்சத்திர வெயில் வாட்டி வதைக்க தொடங்கியது. மாவட்ட–த்தில் அவ்வப்போது இரவு நேரங்களில் மட்டுமே மழை பெய்தது.

    காலை முதல் மாலை வரை வெயிலின் தாக்கம் உச்சத்தில் இருந்தது. தினமும் 100 டிகிரிக்கு மேல் வெயில் பதிவாகி வந்ததால் மக்கள் கடும் அவதி அடைந்தனர்.

    இந்நிலையில் நேற்று முன்தினத்துடன் அக்னி நட்சத்திரம் நிறைவு பெற்றது. இதன் பிறகு மாவட்டத்தில் வெயிலின் தாக்கம் குறையும் என்று எதிர்பார்த்த மக்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியது. வழக்கம்போல் வெயிலின் தாக்கம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

    காலை 9 மணிக்கு தொடங்கும் வெயிலின் தாக்கம் மாலை 6 மணி வரை உள்ளது. புழுக்கத்தாலும், அனல் காற்றாலும் பொதுமக்கள், வாகன ஓட்டிகள், குழந்தைகள், முதியவர்கள் கடும் அவதி அடைந்து வருகின்றனர்.

    வீடுகளில் 24 மணி நேரமும் மின்விசிறி இயங்கி வந்தாலும் புழுக்கத்தால் மக்கள் அவதி அடைந்து வருகின்றனர். காலை 11 மணி முதல் மாலை 3 மணி வரை முக்கிய சாலைகளில் மக்கள் நடமாட்டம் இன்றி வெறிச்சோடி காணப்படுகிறது.

    வழக்கம்போல் வெயிலின் தாக்கத்திலிருந்து தப்பிக்க மக்கள் கரும்பு பால், இளநீர், நுங்கு, மோர், போன்றவற்றை அருந்தி வருகின்றனர்.

    இதேப்போல் வெள்ளரி பிஞ்சு , பழம் வியாபாரமும் சூடு பிடிக்கத் தொடங்கியுள்ளது. இன்னும் சில நாட்கள் வெயிலின் அளவு இயல்பை விட அதிகமாக இருக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது. 

    ×