என் மலர்
நீங்கள் தேடியது "Aggrieved MLA"
- 1-வது கோட்டம் பூனைகரடு அருந்ததியர் பகுதியில் உள்ள கழிவறை இடிக்கப்படுவதாக அப்பகுதி மக்கள் அருள் எம்.எல்.ஏ.வை சந்தித்து புகார் கூறினர்.
- இதையடுத்து அருள் எம்.எல்.ஏ. நேரில் சென்று சம்பந்தப்பட்ட இடத்தை பார்வை யிட்டார்.
சேலம்:
சேலம் மேற்கு சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட 1-வது கோட்டம் பூனைகரடு அருந்ததியர் பகுதியில் உள்ள கழிவறை இடிக்கப்படுவதாக அப்பகுதி மக்கள் அருள் எம்.எல்.ஏ.வை சந்தித்து புகார் கூறினர்.
இதையடுத்து அருள் எம்.எல்.ஏ. நேரில் சென்று சம்பந்தப்பட்ட இடத்தை பார்வை யிட்டார். இதையடுத்து மாநகராட்சிஅதிகாரிகளை உடனடியாக வரவழைத்து கழிவறை இடிக்கப்படு வதற்கான காரணம் குறித்து கேட்டறிந்தார்.
அப்ேபாது அருள் எம்.எல்.ஏ. அதிகாரிகளிடம் இங்கு 50-க்கும் மேற்பட்ட அருந்ததியர் குடும்பங்கள் சிறு சிறு வீடுகளில் வசித்து வருகின்றனர். அவர்களுக்கு இந்த கழி வறையை விட்டால் வேறு கழிப்பிடமே இல்லை. எனவே கூடுதலாக அதாவது புதிதாக கழிவறை மாநகராட்சி மூலம் கட்டித் தர வேண்டும் என கேட்டுக்கொண்டார்.
1986 -ம் ஆண்டு அருந்ததிய மக்களுக்கு தரப்பட்ட இந்த வீடுகளுக்கு நிரந்தரப்பட்டா இல்லை. அதனைபெற்றுத் தருமாறு அப்பகுதியில் வாழும் மக்கள் கேட்டனர். அதன் அடிப்படையில் உடனடியாக தாசில்தாருக்கு தொடர்பு கொண்டு விரைந்து பட்டா வழங்கிட நடவடிக்கை எடுக்குமாறு கூறினார்.
பின்னர் அப்பகுதியில் உள்ள மக்களை வீடு வீடாக சென்று சந்தித்து அடிப்படை பிரச்சனை குறித்து கேட்டறிந்தார். அவருடன் பகுதி தலைவர் செந்தில்குமார், தமிழ், மாரியப்பன் மற்றும் பலர் உடனிருந்தனர்.






