என் மலர்
நீங்கள் தேடியது "adukkamparai govt hospital"
வேலூர்:
தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டத்தின்போது நடந்த துப்பாக்கிச் சூடு சம்பவத்தை கண்டித்து மே-17 இயக்க ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி ஐ.நா. சபையில் பேசினார்.
பின்னர், நாடு திரும்பிய அவர் கைது செய்யப்பட்டு கடந்த ஆகஸ்ட் 11-ந் தேதி வேலூர் ஜெயிலில் அடைக்கப்பட்டார். இந்த நிலையில் திருமுருகன் காந்திக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டது.
வயிற்றுப்போக்கு, மயக்கம், மூச்சுத்திணறலால் பாதிக்கப்பட்டார். மருத்துவ பரிசோதனையில் அவரது உணவு குழாயில் பிரச்சினை இருப்பது தெரிந்தது.
இதையடுத்து, உடல்நிலை கடுமையாக பாதிக்கப்பட்ட திருமுருகன் காந்தி பலத்த போலீஸ் பாதுகாப்புடன் நேற்று அடுக்கம்பாறை அரசு ஆஸ்பத்திரிக்கு அழைத்து செல்லப்பட்டார்.
ஐ.எம்.சி.யு. பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ள திருமுருகன் காந்திக்கு 2-வது நாளாக இன்றும் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. ஸ்கேன் எடுத்து பார்த்தபோது வயிற்றில் புண் இருப்பதும் கண்டுபிடிக்கப்பட்டது.
இதையடுத்து, திருமுருகன் காந்தி உடல்நிலையை மருத்துவ குழுவினர் உன்னிப்பாக கவனித்து வருகின்றனர். #thirumurugangandhi #thoothukudisterlite






