என் மலர்
நீங்கள் தேடியது "admk activists meeting"
கோவை:
வால்பாறை சட்டமன்ற தொகுதி சார்பில் பாராளுமன்ற தேர்தல் பணிக்கான ஆலோசனைக்கூட்டம் நாளை (ஞாயிற்றுக்கிழமை) வால்பாறை துளசியம்மாள் திருமண மண்டபத்தில் காலை 10 மணிக்கு நடைபெறுகிறது. ஆலோசனைக் கூட்டத்தில் கோவை புறநகர் மாவட்ட செயலாளரும் நகராட்சி நிர்வாகம் ஊரக வளர்ச்சித் துறை அமைச்சருமான எஸ்.பி.வேலுமணி, துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன், மகேந்திரன் எம்.பி., வால்பாறை சட்டமன்ற உறுப்பினர் கஸ்தூரி வாசு ஆகியோர் கலந்து கொண்டு கட்சி வளர்ச்சி பணி குறித்து பேசுகிறார்கள்.
கூட்டத்தில் மாவட்ட நிர்வாகிகள், மாவட்ட சார்பு அணி செயலாளர் கள், ஒன்றிய செயலாளர்கள், பேரூராட்சி செயலாளர்கள், ஊராட்சி நிர்வாகிகள், ஆகியோர் கலந்து கொள்கிறார்கள்.
இதற்கான ஏற்பாடுகளை அண்ணா தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழு தலைவரும் தோட்ட தொழிற் சங்க செயலாளருமான வி.அமீது, வால்பாறை நகர செயலாளர் மயில் கணேசன் ஆகியோர் செய்து வருகிறார்கள்.