என் மலர்

  நீங்கள் தேடியது "Adipati Ambal"

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • 13 ஊர் குலால பங்காளிகள் பங்கேற்ற ஆதிப்பாட்டி அம்பாள் பூஜை விழா நடந்தது.
  • காவல் உதவி ஆய்வாளர் ஜேசுதாஸ் தலைமையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

  திருப்பத்தூர்

  சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் நாடு ராஜக்கம்பட்டி நாட்டைச் சேர்ந்த கண்டவராயன்பட்டி, நடுவிக்கோட்டை பங்காளிகள் நடத்தும் 13 ஊர் குலால பங்காளிகளின் ஆதிப்பாட்டி அம்பாள் 6-வது பூஜை படைப்பு விழா நடந்தது.

  முதல் நாள் நிகழ்வாக நடுவிக்கோட்டையில் உள்ள சூலக்கருப்பர் கோவிலில் தீபாராதனை வழிபாடு, தொங்கலுடைய அய்யனார் கோவிலில் ஹோமம் மற்றும் அபிஷேகம் நடந்தது. அதனைத்தொடர்ந்து சுவாமி அழைப்பு, கிடா வெட்டுதல் நடைபெற்று, மேல்குடி ஆதினமிளகி அய்யனார், வல்லநாட்டுக்கருப்பர் கோவிலுக்கு சுவாமி அழைத்துச் செல்லும் நிகழ்வு நடந்தன.

  தொங்கலுடைய அய்யனார் கோவிலில் சிறப்பு தீபாரதனை நடைபெற்று, அதனை தொடர்ந்து படையல் விழா நடந்தது. மேல்குடி ஆதீனமிளகி அய்யனார், வல்லநாட்டு கருப்பர் கோவிலில் படையல் விழா நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று வழிபாடு செய்தனர்.

  வல்லநாட்டு கருப்பருக்கும், பரிவார தெய்வங்களுக்கும், சுவாமி அழைப்பும், சிறப்பு அபிஷேக ஆராதனை, கிடா வெட்டுதலும் நடந்தன. மாலையில் காடப்பிள்ளை அய்யனார், வல்லநாட்டுக்கருப்பர் கோவிலில் இருந்து சுவாமி அழைத்துக் கொண்டு நாட்டார் முழப்படல் வருதல், முழப்பொட்டலில் இருந்து நாட்டார், நகரத்தாரை மேளதாளம் வாணவேடிக்கையுடன் பங்காளிகள் மற்றும் பிறந்த பெண் பிள்ளைகள், குழந்தைகளின் பூத்தட்டு ஆதிப்பாட்டி அம்பாளை அலங்கரித்தல் அதனை தொடர்ந்து சிறப்பு அபிஷேக தீபாராதனை நடந்தது.

  விழாவில் கண்டவராயன்பட்டி, நடுவிக்கோட்டை, தி.புதுப்பட்டி, செண்பகம்பேட்டை, நெடுமரம், சதுர்வேதமங்கலம், காளாப்பூர், சிங்கம்புணரி, சொக்கலிங்கபுரம், மல்லாக்கோட்டை, கட்டாணிப்பட்டி, அழகம்மாநகரி, பிடாரம்பட்டி ஆகிய 13 ஊர் குலால பங்காளிகள், பொதுமக்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். விழாவில் அமைச்சர் பெரியக்கருப்பன் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர். திருப்பத்தூர் கண்டவராயன்பட்டி காவல் உதவி ஆய்வாளர் ஜேசுதாஸ் தலைமையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். 

  ×