என் மலர்

  நீங்கள் தேடியது "Actor Lisa Ray"

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  புற்றுநோய் பாதிப்பில் இருந்து மீண்ட நடிகை லிசா ரே வாடகை தாய் மூலம் இரட்டை குழந்தைகளை பெற்ற தகவல் வெளியாகியுள்ளது. #LisaRay
  சரத்குமார் நடித்த நேதாஜி படம் மூலம் சினிமாவில் அறிமுகமானவர் லிசா ரே. கனடாவில் இந்திய வம்சாவளி குடும்பத்தில் பிறந்தவர். இந்தி, தெலுங்கு, கன்னட படங்களிலும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளிலும் நடித்து பிரபலமானார்.

  2009-ம் ஆண்டு மைலமோ என்ற புற்றுநோயால் பாதிக்கப்பட்டார். ரத்த வெள்ளை அணுக்களை பாதிக்கும் இந்த புற்றுநோய் அபூர்வமான ஒரு நோயாகும்.

  2010-ம் ஆண்டு ஸ்டெம்செல் சிகிச்சையில் இருப்பதாக அறிவித்தார். ஆனால் முழுமையாக குணமடையவில்லை. நோய் பாதிப்புடன் இருக்கும்போதே 2012-ம் ஆண்டு கலிபோர்பியாவை சேர்ந்த ஜேசன் டேனியை திருமணம் செய்து கொண்டார்.

  லிசா ரே ஜேசன் டேனி தம்பதி வாடகைத்தாய் மூலம் குழந்தைகளை பெற்றெடுத்துள்ளனர். அந்த குழந்தைகளுக்கு சூஃபி, சோலேய்ல் என்று பெயரிட்டுள்ளனர். இதுகுறித்து லிசா ரே கூறியதாவது:-


  2009-ல் எனக்கு ரத்த புற்றுநோய் இருப்பது தெரிந்ததும், வாழ்நாள் முழுவதும் மருந்துகளுடன், குழந்தை பேறில்லாமல் வாழ வேண்டியிருக்கும் என நினைத்தேன். ஆனால், தொழில்நுட்ப முன்னேற்றத்தால், புற்றுநோய் குணமானதுடன், வாடகை தாய் மூலம், குழந்தைகளுக்கு தாயாகும் வாய்ப்பு கிடைத்துள்ளது.

  புற்று நோய்க்கு எதிரான என் பயணம், புற்று நோயால் பாதிக்கப்பட்டு, குழந்தை பேறுக்காக ஏங்குவோருக்கு நம்பிக்கை அளிக்கும் என, நம்புகிறேன். வாழ்க்கை, நமக்கு சவால்களையும், அற்புதங்களையும் வழங்குகிறது. என் செல்ல மகள்களுக்கு நன்றிக்கடன்பட்டுள்ளேன்.

  இவ்வாறு அவர் கூறினார்.

  லிசாரே ஜேசன் தம்பதிக்கு வாழ்த்துகள் குவிகின்றன. #LisaRay
  ×