search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "actively investigating"

    • விசாரணையில் பூபதி உரிமம் இல்லாத நாட்டு துப்பாக்கியை வைத்திருந்தது தெரி யவந்தது.
    • கோபி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி மாவட்ட சிறையில் அடைத்தனர்.

    டி.என்.பாளையம்:

    டி.என்.பாளையம் அடுத்த கே.என்.பாளையம் பெரிய சென்ட்ராயன் பாளையம் கிராமம் செங்கரடு வன மாளிகை என்ற பகுதியில் பங்களாப்புதூர் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டு வந்தனர்.

    அப்போது அதே பகுதியில் சந்தேகத்திற்கு இடமான வகையில் நின்றிருந்த கொண்டிருந்த நபர் போலீசாரை கண்டதும் தப்பியோட முயன்றுள்ளார்.

    தப்பியோட முயன்ற அந்த நபரை பங்களாப்புதூர் போலீசார் மடக்கி பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில் அந்த நபர் கே.என்.பாளையம் அம்மன் நகரை சேர்ந்த அய்யப்பன் என்பவரது மகன் பூபதி (23) என்பது தெரியவந்தது.

    போலீசாரின் விசாரணையில் பூபதியின் விவசாய பூமி வனப்பகுதியை ஒட்டியுள்ளதால் வன விலங்குகளை வேட்டை யாட உரிமம் இல்லாத நாட்டு துப்பாக்கியை வைத்திருந்தது தெரி யவந்தது.

    இதனையடுத்து பூபதி வீட்டில் உரிமம் இல்லாமல் வைத்திருந்த நாட்டு துப்பாக்கியை பறிமுதல் செய்த பங்களாப்புதூர் போலீசார் வழக்கு பதிவு செய்து பூபதியை கைது செய்தனர்.

    அதேபோன்று டி.என்.பாளையம் அருகேயுள்ள கொங்கர்பாளையம் ஊராட்சி கொளுஞ்சி காடு தோட்டம் பொன்னம்பலம் என்பவரது கோழிப்பண்ணையில் சட்டவிரோதமாக வன விலங்குகளை வேட்டையாட நாட்டு துப்பாக்கி பதுக்கி வைத்திருப்பதாக பங்களாப்புதூர் போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

    தகவலின் பேரில் பொன்னம்பலம் (44) என்பவரது கோழிப்பண்ணைக்கு சென்ற போலீசார் அங்கு சோதனை செய்தனர். போலீசாரின் சோதனையில் பொன்னம்பலம் கோழிப்பண்ணையில் உரிமம் இல்லாமல் பதுக்கி வைத்திருந்த நாட்டு துப்பாக்கி ஒன்றை பங்களாப்புதூர் போலீசார் கைப்பற்றினர்.

    போலீசார் நடத்திய விசாரணையில் கொங்கர்பாளையத்தை சேர்ந்த கூணன் என்பவரது மகன் கருப்புசாமி (26) அதே பகுதியை சேர்ந்த அய்யப்பன் என்பவரது மகன் பெரியசாமி (21) ஆகியோர் வன விலங்குகளை வேட்டையாடிவிட்டு துப்பாக்கியை பொன்னம்பலம் கோழிப்ப ண்ணையில் மறைத்து வைத்து இருந்தது தெரிய வந்தது.

    அதனையடுத்து 3 நபர்களின் மீது வழக்கு பதிவு செய்த பங்களாப்புதூர் போலீசார் பொன்னம்ப லத்தை கைது செய்தனர். மேலும் இந்த வழக்கு தொடர்பில் தப்பியோடிய கொங்கர்பா ளையம் பகுதியை சேர்ந்த கருப்புசாமி மற்றும் பெரியசாமியை போலீசார் தேடி வருகின்றனர்.

    சட்ட விரோதமாக நாட்டு துப்பாக்கி வைத்திருந்ததாக கைதான 2 பேரிடம் இருந்து 2 நாட்டு துப்பாக்கிகளை பறிமுதல் செய்த போலீசார் 2 பேரையும் கோபி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி மாவட்ட சிறையில் அடைத்தனர்.

    வனவிலங்குகளை வேட்டையாட உரிமம் இல்லாத இதுபோன்ற சட்ட விரோதமாக நாட்டு துப்பாக்கிகள் வைத்திருந்து கைதாகும் நபர்களின் எண்ணிக்கை அதிகமாகி வரும் பட்சத்தில் இது போன்ற கள்ளத்தனமாக துப்பாக்கிகள் எங்கே தயாராகிறது? யாரிடம்? இருந்து வாங்குகிறார்கள், என்ன விலை? கொடுத்து வாங்குகிறார்கள் என்று இது போன்ற குற்றங்களை தடுக்க வனத்துறையினர் மற்றும் போலீசார் என்ன? நடவடிக்கை எடுத்துள்ளனர் என்ற கேள்விகள் எழுந்துள்ளன.

    ×