search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "accusation documents"

    கருப்பு பண தடுப்பு சட்டத்தின் கீழ் கார்த்தி சிதம்பரம் மீது கூறியுள்ள குற்றச்சாட்டு தொடர்பான ஆவணங்களை அவருக்கு வழங்க வேண்டும் என்று வருமான வரித்துறைக்கு ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
    சென்னை:

    முன்னாள் மத்திய மந்திரி ப.சிதம்பரத்தின் மனைவி நளினி சிதம்பரம், மகன் கார்த்தி சிதம்பரம், மருமகள் ஸ்ரீநிதி ஆகியோர் இங்கிலாந்து, அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளில் முதலீடு செய்துள்ள சொத்து விவரங்களை மறைத்துள்ளதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதுதொடர்பாக கருப்பு பண தடுப்பு சட்டத்தின்கீழ் அவர்கள் 3 பேருக்கும் வருமானவரித் துறை கடந்த ஏப்ரல் 13-ந் தேதி நோட்டீஸ் அனுப்பியது.

    அதில், இங்கிலாந்து மற்றும் அமெரிக்காவில் உள்ள சொத்துகளை வாங்கியது குறித்தும், வங்கி கணக்குகள் குறித்தும் விளக்கம் அளிக்க வேண்டும் என்று கூறப்பட்டிருந்தது. இந்த நோட்டீசுக்கு கார்த்தி சிதம்பரம் உள்ளிட்டோர் சார்பில் வருமானவரித் துறைக்கு விளக்கக்கடிதம் அனுப்பப்பட்டது.

    கருப்பு பண தடுப்புச் சட்டத்தின் கீழ் கார்த்தி சிதம்பரம் உள்பட 3 பேருக்கு எதிராக சென்னை எழும்பூர் பொருளாதார குற்றத்தடுப்பு சிறப்பு கோர்ட்டில் வருமானவரித் துறையினர் புகார் மனு தாக்கல் செய்தனர்.

    குற்றச்சாட்டு தொடர்பான ஆவணங்களை தங்களுக்கு வழங்க வருமான வரித்துறைக்கு உத்தரவிடக்கோரியும், இதுதொடர்பான விசாரணைக்கு தடை விதிக்கக்கோரியும் கார்த்தி சிதம்பரம் உள்பட 3 பேரும் சென்னை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்தனர்.

    இந்த மனு தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி, நீதிபதி பி.டி.ஆஷா ஆகியோர் முன்னிலையில் நேற்று விசாரணைக்கு வந்தது. மனுதாரர்கள் தரப்பில் மூத்த வக்கீல்கள் ஏ.ஆர்.எல்.சுந்தரேசன், சதீஷ் பராசரன் ஆகியோர் ஆஜராகி வாதாடினர்.

    மனுவை விசாரித்த நீதிபதிகள், குற்றச்சாட்டு தொடர்பான ஆவணங்களை நாளைக்குள்(14-ந் தேதி) மனுதாரர்களுக்கு வழங்க வேண்டும் என உத்தரவிட்டு விசாரணையை 19-ந் தேதிக்கு தள்ளிவைத்தனர்.

    ×