என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "A tourist van collided with an auto"

    • ஏற்காட்டிற்கு வார விடுமுறையை முன்னிட்டு நேற்று பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் குவிந்தனர்.
    • ஏற்காட்டில் உள்ள முக்கிய சுற்றுலா இடங்களை சுற்றி பார்த்துவிட்டு மாலை பக்கோடா பாயின்ட் சென்று விட்டு திரும்பி கொண்டிருந்தனர். அப்போது எதிர்பாராத விதமாக எதிரே வந்த ஆட்டோ மீது சுற்றுலா வேன் மோதியது.

    ஏற்காடு:

    சேலம் மாவட்டம் ஏற்காட்டிற்கு வார விடுமுறையை முன்னிட்டு நேற்று பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் குவிந்தனர்.

    சுற்றுலா வேன்

    இந்த நிலையில் நேற்று காலை சென்னையை சேர்ந்த 10 பேர் சுற்றுலா வேனில் ஏற்காட்டிற்கு சுற்றி பார்க்க வந்தனர். வேனை சேலம் கோரிமேடு பகுதியை சேர்ந்த தாமஸ் என்பவர் (45) ஓட்டி வந்துள்ளார்.

    இவர்கள் ஏற்காட்டில் உள்ள முக்கிய சுற்றுலா இடங்களை சுற்றி பார்த்துவிட்டு மாலை பக்கோடா பாயின்ட் சென்று விட்டு திரும்பி கொண்டிருந்தனர்.

    ஆட்டோ மீது மோதல்

    அப்போது எதிர்பாராத விதமாக எதிரே வந்த ஆட்டோ மீது சுற்றுலா வேன் மோதியது.

    இதில் ஆட்டோ டிரைவரான ஏற்காடு லாங்கில் பேட்டையைச் சேர்ந்த ரவி மகன் நித்திஷ் (18) என்பவருக்கு பலத்த காயம் ஏற்பட்டது.

    இதையடுத்து அங்கிருந்தவர்கள் அவரை மீட்டு அங்குள்ள அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். மேலும் விபத்து குறித்து ஏற்காடு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    விபத்துகளை தடுக்க கோரிக்கை

    பிரதான சாலையான பக்கோடா பாயிண்ட் சாலையில் தனியாருக்கு சொந்தமான தங்கும் விடுதிகள் செயல்பட்டு வருகின்றன. இங்கு தங்க வரும் சுற்றுலா பயணிகளின் வாகனங்கள் சாலை இருப்புறங்களிலும் நிறுத்தப்படுவதால் அடிக்கடி போக்குவரத்து நெரிசலும், விபத்துகளும் ஏற்படுகிறது.

    இதை தவிர்க்க தங்கும் விடுதிகளில் வாகன நிறுத்துமிடம் ஏற்படுத்த அப்பகுதியினர் மற்றும் சுற்றுலா பயணிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.

    ×