என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "A sit-in in front of the municipal office"

    • பேரூராட்சியில் பணியாற்றும் 45 பெண் மற்றும் 35 ஆண் தூய்மை பணியாளர்கள் என மொத்தம் 80 பேர் பணியாற்றி வருகின்றனர்.
    • 6 வது வார்டு உறுப்பினர் செந்தில்குமார் பெண் தூய்மை பணியாளர்களை உங்களை இங்கு யார் தீவைக்க சொன்னது என்று கூறி பெண் தூய்மை பணியாளர்களை ஆபாசமாக பேசியதாக கூறப்படுகிறது.

    பரமத்தி வேலூர்:

    நாமக்கல் மாவட்டம் வேலூர் பேரூராட்சியில் மொத்தம் 18 வார்டுகள் உள்ளது. அனைத்து வார்டு களிலும் தினந்தோறும் குப்பைகள் அகற்றுவது, கழிவு நீர் சுத்தம் செய்வது, சாக்கடை சுத்தம் செய்வது, வீட்டில் இருக்கும் குப்பைகளை எடுத்து செல்வது உள்ளிட்ட பணிகளை பேரூராட்சியில் பணியாற்றும் 45 பெண் மற்றும் 35 ஆண் தூய்மை பணியாளர்கள் என மொத்தம் 80 பேர் பணியாற்றி வருகின்றனர்.

    இந்த நிலையில் நேற்று குப்புச்சிபாளையம் 6- வது வார்டு பகுதியில் 4 பெண் தூய்மை பணியாளர்கள் 3 ஆண் தூய்மை பணியா ளர்கள் குப்பைகளை சுத்தம் செய்து கொண்டிருந்தனர். அப்பொழுது அருகே வெட்டி கீழே போடப்பட்ட முள்ளு செடிகளை அங்கி ருந்த வீட்டின் உரிமையாளர்கள் தீ வைத்து அப்புறப்படுத்துமாறு கூறியுள்ளனர்.

    அதனையடுத்து தூய்மை பணியாளர்கள் முட்செடிகளுக்கு தீவைத்து அருகில் பரவாமல் பார்த்துக் கொண்டு இருந்ததாக கூறப்படுகிறது. அப்போது அங்கு வந்த தி.மு.க வைச் சேர்ந்த 6 வது வார்டு உறுப்பினர் செந்தில்குமார் பெண் தூய்மை பணியாளர்களை உங்களை இங்கு யார் தீவைக்க சொன்னது என்று கூறி பெண் தூய்மை பணியாளர்களை ஆபாசமாக பேசியதாக கூறப்படுகிறது.

    இதனை அறிந்த சக தூய்மை பணியாளர்கள் ஒன்று சேர்ந்து நேற்று மாலை வேலூர் பேரூராட்சி அலுவலகம் முன்பு அமர்ந்து முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    தகவல் அறிந்து அங்கு வந்த வேலூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் இந்திராணி தூய்மை பணி யாளர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தி தரக்குறை வாக பேசிய வார்டு உறுப்பி னர் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்தார். இதனையடுத்து முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்ட தூய்மை பணியாளர்கள் நேற்று இரவு 8.30 மணிக்கு அங்கி ருந்து கலைந்து சென்றனர்.

    ×