என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "A laborer drowned"

    • பிரபு தனது நண்பர்களுடன் கண்ணேரி மடுவு நீரோடை குட்டையில் குளிக்க சென்றுள்ளார்.
    • குட்டையில் குளித்து கொண்டிருந்தபோது சுழலில் சிக்கி மூச்சுத்திணறி நண்பர்கள் கண் முன்னே பரிதாபமாக இறந்து விட்டார்.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டம் அந்தியூர் அணைக்கரடு பகுதியை சேர்ந்தவர் பிரபு (30). இவர் பி.எஸ்.என்.எல். காண்ட்ராக்ட் கூலித்தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார்.

    கருத்து வேறுபாடு காரணமாக கடந்த 5 வருடங்களாக மனைவியை பிரிந்து வாழ்ந்து வருகிறார்.

    பிரபு தனது நண்பர்களான ராஜா, சின்னசாமி ஆகியோருடன் சம்பவத்தன்று அரேபாளையம், வனப்பகுதியில் உள்ள கண்ணேரி மடுவு நீரோடை குட்டையில் குளிக்க சென்றுள்ளார்.

    குட்டையில் குளித்து கொண்டிருந்தபோது சுழலில் சிக்கி மூச்சுத்திணறி நண்பர்கள் கண் முன்னே பரிதாபமாக இறந்து விட்டார்.

    இது குறித்து பிரபுவின் தாய் சின்னபொண்ணு அளித்த புகாரின்பேரில் ஆசனூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    ×