என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "A flood of rain surrounded the garden"

    • காவிரி பாசன பகுதிகளில் கடந்த சில நாட்களாக மாலை மற்றும் இரவு நேரங்களில் இடி, மின்னலுடன் கூடிய மிக கனமழை பெய்து வருகிறது.
    • இதனால் இப்பகுதியில் பயிரிடப்பட்டுள்ள நெல், மக்காசோளம், கரும்பு, பருத்தி, வாழை, மரவள்ளி கிழங்கு வயல்களில் தண்ணீர் சூழ்ந்து சேதம் அடைந்துள்ளன.

    எடப்பாடி:

    சேலம் மாவட்டம் எடப்பாடி அடுத்த பூலாம்பட்டி கூடக்கல், குப்பனூர், மோளப்பாறை, பில்லுக்குறிச்சி உள்ளிட்ட காவிரி பாசன பகுதிகளில் கடந்த சில நாட்களாக மாலை மற்றும் இரவு நேரங்களில் இடி, மின்னலுடன் கூடிய மிக கனமழை பெய்து வருகிறது.

    இதனால் இப்பகுதியில் உள்ள நீர் நிலைகளில் நீர்மட்டம் உயர்ந்து வரும் நிலையில் நேற்று இரவு பூலாம்பட்டி சுற்று வட்டார பகுதியில் இடி, மின்னலுடன் கூடிய மிக கனமழை பெய்தது.

    இதனால் இப்பகுதியில் பயிரிடப்பட்டுள்ள நெல், மக்காசோளம், கரும்பு, பருத்தி, வாழை, மரவள்ளி கிழங்கு வயல்களில் தண்ணீர் சூழ்ந்து சேதம் அடைந்துள்ளன.

    இதேபோல் பூலாம்பட்டி அடுத்த குப்பனூர் பகுதியில் விவசாயி சக்திவேல் என்பவர் வீட்டு அருகில் இருந்த தென்னை மரத்தில் இடி தாக்கியதில் தென்னை மரம் பற்றி எரிய தொடங்கியது. அப்போது சக்திவேலின் வீட்டிலிருந்த மின்சாதன பொருட்கள் அனைத்தும் வெடித்து சிதறின. மேலும் அப்பகுதியில் உள்ள பல வீடுகளில் மின்சாதன பொருட்கள் பழுதடைந்தது.

    பூலாம்பட்டி மற்றும் சுற்று வட்டார காவிரி பாசன பகுதியில் பெய்து வரும் தொடர் கனமழையால் இப்பகுதி விவசாயிகள் மிகுந்த பாதிப்பிற்கு உள்ளாகி உள்ளனர்.

    ×