என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "A boy arrested in POCSO"

    • கடந்த 6 மாதங்களுக்கு முன்பு இந்த கடைக்கு அதே பகுதியை சேர்ந்த 17 வயது சிறுமி ஒருவர் ஜவுளி எடுக்க வந்தார்.
    • சிறுவனையும், சிறுமியையும் மீட்டு வடவள்ளி போலீஸ் நிலையத்திற்கு அழைத்து வந்தனர்.

    வடவள்ளி,

    கோவை வடவள்ளி பகுதியில் ஒரு பிரபல துணிக்கடை செயல்பட்டு வருகிறது.

    இங்கு உடுமலையை சேர்ந்த 17 வயது சிறுவன் வேலை பார்த்து வருகிறார்.

    இந்த நிலையில் கடந்த 6 மாதங்களுக்கு முன்பு இந்த கடைக்கு அதே பகுதியை சேர்ந்த 17 வயது சிறுமி ஒருவர் ஜவுளி எடுக்க வந்தார். அப்போது சிறுவனுக்கு, அந்த சிறுமியுடன் நட்பாக பழக்கம் ஏற்பட்டது.

    இந்த பழக்கம் நாளடைவில் காதலாக மாறியது. இருவரும் ஒருவரையொருவர் தீவிரமாக காதலித்து வந்தனர். இந்த நிலையில் கடந்த 4 மாதங்களுக்கு சிறுமியும், சிறுவனும் வீட்டை விட்டு ஓட்டம் பிடித்தனர். இதுகுறித்து பெற்றோர் அளித்த புகாரின் பேரில் போலீசார் அவர்களை மீட்டு வந்து அறிவுரை கூறி வீட்டிற்கு அனுப்பி வைத்தனர்.இந்த நிலையில் சம்பவத்தன்று வீட்டில் இருந்த சிறுமி திடீரென மாயமானர்.

    இதுகுறித்து அவரது பெற்றோர் போலீசில் புகார் கொடுத்தனர். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரனை நடத்தினர். விசாரணையில் சிறுமி, சிறுவனுடன் பொள்ளாச்சி பகுதியில் இருப்பது தெரியவந்தது.இதையடுத்து போலீசார் பொள்ளாச்சி விரைந்து சென்று சிறுவனையும், சிறுமியையும் மீட்டு வடவள்ளி போலீஸ் நிலையத்திற்கு அழைத்து வந்தனர். பின்னர் சிறுமியிடம் விசாரணை நடத்தினர்.

    விசாரணையில், சிறுவன், சிறுமியை அழைத்து சென்று பொள்ளாச்சியில் வைத்து திருமணம் செய்ததும், பின்னர் அங்கு வீடு வாடகைக்கு எடுத்து தங்கி இருந்ததும் தெரியவந்தது.

    இதை யடுத்து போலீ சார் சிறுவன் மீது போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர். தொடர்ந்து அவ ரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×