search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Unexpectedly"

    • ஆரணி அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனை
    • போலீசார் விசாரணை

    ஆரணி:

    திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி அடுத்த அக்ராபாளையம் கிராமத்தை சேர்ந்தவர் செல்வராஜ் (வயது 55), கூலித்தொழிலாளி. இவருக்கு திருமணமாகி லட்சுமி (40) என்ற மனைவியும், 2 மகள்களும் உள்ளனர்.

    இந்த நிலையில் கருத்து வேறுபாடு காரணமாக, கணவன் மனைவி இருவரும் பிரிந்து வாழ்ந்து வருகின்றனர். லட்சுமி தனது மகள்களுடன் தாய் வீட்டில் வசித்து வருகிறார். அதேபோல் செல்வராஜூம் தனியாக வசித்து வந்தார்.

    இந்த நிலையில் நேற்று இரவு செல்வராஜ் ராட்டிணமங்கலம் இ.பி.நகர் கூட்ரோடு பகுதியில் உள்ள கழிவுநீர் கால்வாயில் எதிர்பாராத விதமாக தவறி விழுந்து இறந்து கிடந்தார்.

    இதனை இன்று காலை அந்த வழியாக சென்றவர்கள் பார்த்து ஆரணி தாலுகா போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன் பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து செல்வராஜ் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆரணி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • அய்யப்ப பக்தர்கள் 11 பேர் படுகாயம்
    • போலீசார் விசாரணை

    ஜோலார்பேட்டை:

    ஆந்திர மாநிலம் சித்தூர் பகுதியை சேர்ந்த அய்யப்ப பக்தர்கள் 22 பேர் மினி வேனில் கேரளா மாநிலத்தில் உள்ள சபரிமலை கோவிலுக்கு இருமுடி கட்டிக்கொண்டு தரிசனம் செய்ய சென்றனர்.

    பின்னர் தரிசனம் செய்துவிட்டு இன்று காலை கிருஷ்ணகிரியில் இருந்து சித்தூர் செல்வதற்காக வேலூர் நோக்கி வேனில் வந்து கொண்டிருந்தனர். நாட்டறம்பள்ளி அடுத்த ஆத்தூர் குப்பம் பஸ் நிலையம் அருகே வேன் வந்தபோது முன்னால் சென்ற கன்டெய்னர் லாரி ஒன்று நெடுஞ்சாலையில் உள்ள பக்கவாட்டில் திரும்பியது. இதில் எதிர்பாராத விதமாக லாரி வேன் மீது மோதி விபத்துக்குள்ளானது.

    இதனால் வேனின் முன்பக்கம் சேதம் அடைந்தது. இதில் பயணம் செய்த அய்யப்ப பக்தர்கள் ஜெயசூர்யா, சக்கரவர்த்தி, கிஷோர், ராஜ்குமார், விஜய், சத்யராஜ் உள்ளிட்ட 11 பேர் படுகாயம் அடைந்தனர்.

    இதுகுறித்து நாட்டறம்பள்ளி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். விரைந்து வந்த போலீசார் படுகாயம் அடைந்தவர்களை சிகிச்சைக்காக 108 ஆம்புலன்ஸ் மூலம் நாட்டறம்பள்ளி மற்றும் வேலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    மேலும் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×