search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Thailand Open Badminton"

    • 2-வது சுற்றில் இந்திய வீரர் சாய் பிரணீத், கொரிய வீரர் ஹியோக் ஜின் ஜியோனுடன் மோதினார்.
    • சாய் பிரணீத் கால் இறுதியில் சீனாவின் லீஷிபெங்யு டன் மோதுகிறார்.

    பாங்காக்:

    தாய்லாந்து ஓபன் பேட்மிண்டன் போட்டி நடந்து வருகிறது. இதன் 2-வது சுற்றில் இந்திய வீரர் சாய் பிரணீத், கொரிய வீரர் ஹியோக் ஜின் ஜியோனுடன் மோதினார்.

    இதில் சாய் பிரணீத் 24-22, 7-21, 22-20 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று கால் இறுதிக்கு தகுதி பெற்றார். அவர் கால் இறுதியில் சீனாவின் லீஷிபெங்யு டன் மோதுகிறார்.

    தாய்லாந்து ஓபன் பேட்மிண்டனில் பிவி சிந்து காலிறுதியில் மலேசிய வீராங்கனையை வீழ்த்தி அடுத்த சுற்றுக்கு முன்னேறினார். #PVSindhu
    தாய்லாந்து ஓபன் பேட்மிண்டன் தொடரின் பெண்களுக்கான ஒற்றையர் பிரிவின் காலிறுதி ஆட்டம் ஒன்றில் இந்திய வீராங்கனையான பிவி சிந்து மலேசியாவின் சோனியா செயாவை எதிர்கொண்டார்.



    முதல் செட்டை 21-17 என பிவி சிந்து கைப்பற்றினார். 2-வது செட்டையும் 21-13 என எளிதில் வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறினார். மலேசிய வீராங்கனையை வீழ்த்த பிவி சிந்துவிற்கு 26 நிமிடங்கள் மட்டுமே தேவைப்பட்டது.
    தாய்லாந்து ஓபன் பேட்மிண்டன் தொடரில் இந்திய வீராங்கனை பிவி சிந்து காலிறுதிக்கு முன்னேறியுள்ளார். #ThailandOpen #PVSindhu
    தாய்லாந்து ஓபன் பேட்மிண்டன் தொடரில் காலிறுதிக்கு முந்தைய சுற்றில் இந்திய வீராங்கனையான பிவி சிந்து ஹாங் காங் வீராங்கனை யிப் புய் யின்-ஐ எதிர்கொண்டார். இதில் பிவி சிந்து 21-16, 21-14 என நேர்செட் கணக்கில் வெற்றி பெற்று காலிறுதிக்கு முன்னேறினார்.



    காஷ்யப் 18-21, 21-18 19-21 என கடுமையாக போராடி ஜப்பான் வீரரிடம் வீழந்தார். அதேபோல் பிரணாய் 18-21, 14-21 என நேர்செட் கணக்கில் இந்தோனேசிய வீரரிடம் வீழ்ந்தார்.
    ×