search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Senthilkumar MLA"

    • ரூ.1.63 கோடி மதிப்பில் பஸ் நிலையம் அமைக்க அடிக்கல் நாட்டப்பட்டு பணிகள் தொடங்கியது.
    • பஸ் நிலைய திட்டத்தை மீண்டும் துவங்கி பயன்பாட்டிற்கு கொண்டு வருவது தொடர்பாக அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.

    புதுச்சேரி:

    பாகூரில் பஸ் நிலையம் அமைக்கப்பட வேண்டும் என பல ஆண்டுகளாக கோரிக்கை இருந்து வருகிறது.

    இந்த நிலையில், கடந்த 2022-ம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் மத்திய அரசின் ரூர்பன் திட்டத்தின் கீழ் ரூ.1.63 கோடி மதிப்பில் பஸ் நிலையம் அமைக்க அடிக்கல் நாட்டப்பட்டு பணிகள் தொடங்கியது.

    ஆனால், கட்டுமானங்களுக்கான அஸ்திவாரம் அமைக்கப் பட்ட நிலையில் பணிகள் முடிவடையாமல் கிடப்பில் போடப்பட்டதால், அந்த ஒப்பந்த்தம் ரத்து செய்யப்பட்டது.

    இந்நிலையில், மீண்டும் அத்திட்டத்தை செயல்படுத்துவது தொடர்பாக, செந்தில்குமார் எம்.எல்.ஏ., பொதுப்பணித்துறை தலைமை பொறியாளர் வீரசெல்வம், செயற்பொறியாளர் கள் சந்திரசேகர், பாலசுப்ரமணியன் மற்றும் அதிகாரிகளுடன் சென்று பஸ் நிலைய கட்டுமான பணி நடைபெற்ற பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    அப்போது, பஸ் நிலைய திட்டத்தை மீண்டும் துவங்கி பயன்பாட்டிற்கு கொண்டு வருவது தொடர்பாக அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். 

    • செந்தில்குமார் எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்
    • இளநிலை பொறியாளர் புனிதவதி மற்றும் தி.மு.க. கம்யூ., உள்ளிட்ட கட்சியினர் மற்றும் பொது மக்கள் கலந்து கொண்டனர்.

    புதுச்சேரி:

    பாகூர் கொம்யூன் பஞ்சாயத்து சார்பில், சட்ட மன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியின் மூலம் ரூ.11 லட்சத்து 80 ஆயிரம்மதிப்பீட்டில் பாகூர் கிழக்கு வீதி சந்திப்பு தெய்வ சகுந்தலா நகரில் தார் சாலையும் மற்றும் பங்களா வீதி சந்திப்பு அன்னை நகரில் ரூ. 24 லட்சத்து 93 ஆயிரம் மதிப்பில் சிமெண்ட் சாலை அமைக்கப்படுகிறது.

    இப்பணிகளுக்கான பூமி பூஜை நிகழ்ச்சி இன்று நடந்தது. இதில், செந்தில்குமார் எம்.எல்.ஏ. கலந்து கொண்டு பூமி பூஜை செய்து பணிகளை தொடங்கி வைத்தார்.

    இந்நிகழ்ச்சியில், பாகூர் கொம்யூன் பஞ்சாயத்து ஆணையர் கார்த்திகேயன், மேலாளர் ரவி, உதவி பொறியாளர் சுப்ரமணியன், இளநிலை பொறியாளர் புனிதவதி மற்றும் தி.மு.க. கம்யூ., உள்ளிட்ட கட்சியினர் மற்றும் பொது மக்கள் கலந்து கொண்டனர்.

    • செந்தில்குமார் எம்.எல்.ஏ., இயக்கி வைத்தார்
    • கமலா நேரு திருமண மண்டபம் அருகே ரூ.12 லட்சத்து 18 ஆயிரம் செலவில் மின் துறை சார்பில் புதிய மின்மாற்றி நிறுவப்பட்டது.

    புதுச்சேரி:

    பாகூர் காமராஜர் நகர் பகுதியில் அடிக்கடி குறைந்தழுத்த மின் பிரச்சினை ஏற்பட்டு வந்தது.

    இப்பிரச்சினையை சரி செய்திட வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்து வந்தனர். இதையடுத்து, செந்தில்குமார் எம்.எல்.ஏ., முயற்சியால் பாகூர் கமலா நேரு திருமண மண்டபம் அருகே ரூ.12 லட்சத்து 18 ஆயிரம் செலவில் மின் துறை சார்பில் புதிய மின்மாற்றி நிறுவப்பட்டது. இந்த மின்மாற்றியை செந்தில்குமார் எம்.எல்.ஏ., பூமி பூஜை செய்து இயக்கி வைத்தார்.

    இந்நிகழ்ச்சியில், மின் துறை செயற்பொறியாளர் செல்வராஜ், உதவி பொறியாளர் சக்திவேல், இளநிலை பொறியாளர் பிரபுராம், பொது மக்கள் பலர் கலந்து கொண்டனர்.

    • செந்தில்குமார் எம்.எல்.ஏ.தொடங்கி வைத்தார்
    • பரிக்கல்பட்டு தாங்கள் வாய்க்காலை தூர்வாரி சுத்தப்படுத்திட ரூ.6.62 லட்சம் ஒதுக்கப்பட்டுள்ளது.

    புதுச்சேரி:

    புதுச்சேரி பொதுப் பணித்துறை நீர் பாசன கோட்டம் சார்பில் குருவிநத்தம் சித்தேரி 2-ம் நிலை பாசன வாய்க்கால், மேல் பரிக்கல்பட்டு ஏரி வாய்க்கால், ஆராய்ச்சிக்குப்பம் ஏரி வாய்க்கால், சடக்குளம் தாங்கள் வாய்க்கால், உச்சிமேடு தாங்கள், பரிக்கல்பட்டு தாங்கள் வாய்க்காலை தூர்வாரி சுத்தப்படுத்திட ரூ.6.62 லட்சம் ஒதுக்கப்பட்டுள்ளது.

    இதேபோல் குருவிநத்தம் சித்தேரி முதல் மணப்பட்டு ஏரி வரை உள்ள வாய்க்காலை ரூ. 5.98 லட்சம் செலவிலும், பாகூர் ஏரியிலிருந்து செல்லும் குடியிருப்பு பாளையம் மதுரை வாய்க்கால் சேரி மதுக்கு வாய்க்கால் காட்டுக்குப்பம் ஏரி வரத்து வாய்க்காலை தூர்வாரி சுத்தப்படுத்த ரூ.4.5 லட்சம் ஒதுக்கீடு செய்யப் பட்டுள்ளது.

    இதற்கான பூமி பூஜை நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் செந்தில்குமார் எம்.எல்.ஏ., கலந்துகொண்டு பூமி பூஜை செய்து வாய்க்கால் தூர்வாரும் பணியை தொடங்கி வைத்தார்.

    இந்நிகழ்ச்சியில் பொதுப்பணித்துறை நீர்ப்பாசன கோட்ட உதவிப் பொறியாளர் ராஜன், இளநிலை பொறியாளர்கள் ஜெயராமணன், நடராஜன், சுற்றுச்சூழல் பாதுகாப்பு அமைப்பு தலைவர் மஞ்சினி, திமுக பிரமுகர்கள், விவசாயிகள், பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.

    • டிராக்டர் பழுதடைந்து விவசாய பணிகளுக்கு பயன்படுத்த முடியாத சூழ்நிலை ஏற்பட்டது.
    • விவசாய உழவு பணிக்கான டிராக்டர் மற்றும் ரோட்டாவேட்டர் வாங்கப்பட்டது.

    புதுச்சேரி:

    பாகூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்திற்கு, விவசாய உழவு பணிக்கான டிராக்டரை செந்தில்குமார் எம்.எல்.ஏ., வழங்கினார்.

    பாகூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம் அமைந்துள்ளது. இந்த சங்கத்தின் மூலம் விவசாய உழவு பணிக்காக, கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பு டிராக்டர் வாங்கப்பட்டது. அந்த டிராக்டர் பழுதடைந்து விவசாய பணிகளுக்கு பயன்படுத்த முடியாத சூழ்நிலை ஏற்பட்டது.

    அப்பகுதி விவசாயிகள் புதிதாக டிராக்டர் வாங்க வேண்டுமென வேண்டுகோள் விடுத்தனர். செந்தில்குமார் எம்.எல்.ஏ., முயற்சியின் பெயரில், மூன்று பேர் கொண்ட ஒரு நிர்வாக குழு அமைக்கப்பட்டு புதுச்சேரி மாநில கூட்டுறவு வங்கி நிதி உதவி மூலமாக 10 லட்சத்து 20 ஆயிரம் ரூபாய் மதிப்பில் புதிதாக விவசாய உழவு பணிக்கான டிராக்டர் மற்றும் ரோட்டாவேட்டர் வாங்கப்பட்டது.

    இதனை பயன்பாட்டிற்கு அர்ப்பணிக்கும் நிகழ்ச்சி நேற்று பாகூரில் நடைபெற்றது. இதில் செந்தில்குமார் எம்.எல்.ஏ., கலந்துகொண்டு பாகூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க நிர்வாகிகள் மதி ( எ) பொன்னம்பலம், குமாரக்கிருஷ்ணன், ஹரிலிங்கம் ஆகியோரிடம் வழங்கினார்.

    இந்நிகழ்ச்சியில், பாகூர் தொகுதி தி.மு.க., நிர்வாகிகள் பிரமுகர்கள் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.

    • செந்தில்குமார் எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்
    • குருவிநத்தம் சித்தேரி அணைக்கட்டு கட்டுப்பாட்டு அறை வளாகத்தை சுற்றிலும் ரூ.15 லட்சத்து 49 ஆயிரத்து 675 செலவில் மதில் சுவர் அமைப்பதற்கான பூமி பூஜை நடந்தது.

    புதுச்சேரி:

    பாகூர் கொம்யூன் பஞ்சாயத்து சார்பில், சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியின் மூலம் மூ.புதுக்குப்பம் சுனாமிநகரில் தார்சாலை, குடிநீர் குழாய் அமைக்க ரூ.33 லட்சத்து 73 ஆயிரம் மதிப்பில் ஏற்பாடு செய்து அதற்கான பூமி பூஜை நடைபெற்றது.

    இதில் செந்தில்குமார் எம்.எல்.ஏ., ஆணையர் கார்த்திகேயன் மற்றும் அதிகாரிகள், பொதுமக்கள் கலந்து கொண்டு பூமி பூஜை செய்து பணியை தொடங்கி வைத்தனர்.

    தொடர்ந்து பாகூர் துாக்குபாலம் முதல் வண்ணாங்குளம் சாலையை ரூ. 9 லட்சத்து 30 ஆயிரம் செலவில் தார்சாலை அமைக்கவும், குருவிநத்தம் இலுப்பை தோப்பு குடியிருப்பு பகுதியில் ரூ.5 லட்சத்து 10 ஆயிரத்து 400 செலவில் சிமெண்ட் சாலை அமைக்கவும், பொதுப்பணித்துறை நீர்பாசன பிரிவு சார்பில், குருவிநத்தம் சித்தேரி அணைக்கட்டு கட்டுப்பாட்டு அறை வளாகத்தை சுற்றிலும் ரூ.15 லட்சத்து 49 ஆயிரத்து 675 செலவில் மதில் சுவர் அமைப்பதற்கான பூமி பூஜை நடந்தது.

    இந்நிகழ்ச்சியில், பாகூர் கொம்யூன் பஞ்சாயத்து உதவி பொறியாளர் முத்துசிவம், இளநிலை பொறியாளர்கள் பிரதிப்குமார், புனிதவதி, பொதுப்பணித்துறை நீர்பாசன பிரிவு உதவி பொறியாளர் ராஜன், இளநிலை பொறியாளர் ஜெயரமணன், தி.மு.க. தொகுதி செயலாளர் அரிக்கிருஷ்ணன், உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    • செந்தில்குமார் எம்.எல்.ஏ. வழங்கினார்
    • பயனாளிகளுக்கு 22 இஸ்திரி பெட்டி, 2 தவில் ஒரு சிகை திருத்தும் நாற்காலி வழங்கினார்.

    புதுச்சேரி:

    புதுச்சேரி அரசின் சமூக நலத்துறையின் மூலமாக நலிவடைந்த ஏழை சலவையாளர்கள் மற்றும் மருத்துவ இன மரபினர்களுக்கு இலவச தொழிற்கருவிகள் வழங்கும் விழா பாகூர் எம்.எல்.ஏ. அலுவலகத்தில் நடைபெற்றது.

    இதில் செந்தில் குமார் எம்.எல்.ஏ. தலைமை தாங்கி பயனாளிகளுக்கு 22 இஸ்திரி பெட்டி, 2 தவில் ஒரு சிகை திருத்தும் நாற்காலி வழங்கினார்.

    இதில் சமூக நலத்துறை அதிகாரிகள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர். மேலும் நில அளவை மற்றும் பதிவேடுகள் துறையின் மூலமாக 5 பேருக்கு இலவச மனைப்பட்டா வழங்கப் பட்டது.

    • புதுவை அருகே பாகூரில் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் இயங்கி வருகிறது.
    • இதனை பயன்பாட்டிற்கு அர்ப்பணிக்கும் நிகழ்ச்சி மருத்துவமனை வளாகத்தில் நடைபெற்றது.

    புதுச்சேரி:

    பாகூரில் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் இயங்கி வருகிறது. இதன் மூலமாக, 20-க்கும் மேற்பட்ட கிராமங்களை சேர்ந்த மக்கள் பயனடைந்து வருகின்றனர்.

    இந்நிலையில், பாகூர் தொகுதி தி.மு.க., செந்தில்குமார் எம்.எல்.ஏ. முயற்சியால், புதுவை ரிவாஜ் ரவுண்ட் டேபிள் 104, 41 இ.ஆர்.எஸ்., லெஸ்கோப்பெய்ன் 192 மற்றும் பிரான்ஸ் தமிழர்கள் சேவை சமூகம் ஆகியவை சார்பில், பாகூர் மருத்துவமனைக்கு புதியதாக ஆம்புலன்ஸ் வாகனம் வழங்கப்பட்டது.

    இதனை பயன்பாட்டிற்கு அர்ப்பணிக்கும் நிகழ்ச்சி மருத்துவமனை வளாகத்தில் நடைபெற்றது. இதில் சுகாதார துறை துணை இயக்குனர் டாக்டர் முரளி வரவேற்றார். சிறப்பு விருந்தினராக செந்தில்குமார் எம்.எல்.ஏ., கலந்து கொண்டு கொடியசைத்து ஆம்பு லன்ஸை பயன்பாட்டிற்கு அர்பணித்தார்.

    இந்நிகழ்ச்சியில், ரவுண்ட்டேபிள் இந்தியா தேசிய செயலாளர் சந்தோஷ்ராஜ், விஜயரா கவேந்திரா, சுஜெய், குணல், விஷ்ணுபிரபாகர்பிரவேஸ் ஜெயின், சார்லஸ் டேனியல், பிரேம்ராஜ், சுரேஷ் ஜெய்ஸ்வால் உள்ளிட்ட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர். பாகூர் ஜமுனாரவி தொகுப்புரையாற்றினார். பாகூர் அரசு ஆரம்ப சுகாதார நிலைய தலைமை டாக்டர் ஆனந்தவேலு நன்றி கூறினார்.

    • பொதுப்பணி துறையின் அரசு நிதி மூலம் ரூ.42 லட்சத்து 22 ஆயிரம் நிதி ஒதுக்கப்பட்டு அதற்கான பூமி பூஜை நிகழ்ச்சி இன்று நடைபெற்றது.
    • சப்-இன்ஸ்பெக்டர் நந்தகுமார் மற்றும் ஊர் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.

    புதுச்சேரி:

    பாகூர் போலீஸ் நிலையம் வளாகத்தை சுற்றி 300 மீட்டரில் புதிதாக மதில் சுவர் கட்டுவதற்காக பொதுப்பணி துறையின் அரசு நிதி மூலம் ரூ.42 லட்சத்து 22 ஆயிரம் நிதி ஒதுக்கப்பட்டு அதற்கான பூமி பூஜை நிகழ்ச்சி  நடைபெற்றது .

    இந்நிகழ்ச்சியில் தொகுதி எம்.எல்.ஏ. செந்தில்குமார் தலைமை தாங்கி பூமி பூஜை செய்து பணியை தொடங்கி வைத்தார்.

    நிகழ்ச்சியில் பொதுப் பணித்துறை செயற்பொ றியாளர் வல்லவன், உதவி பொறியாளர் ரவீந்திரன், இளநிலை பொறியாளர் ஏகாம்பரம், பாகூர் இன்ஸ்பெக்டர் கணேஷ், சப்-இன்ஸ்பெக்டர் நந்தகுமார் மற்றும் ஊர் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.

    • புதுவையின் கிராமப்புற மக்கள் அறியாமையில், புது வை நகர அமைப்பு குழுமம் அனுமதி பெறாமல் வீடு கட்டி வாழ்ந்து வருகின்றனர்.
    • புதுவை நகர அமைப்பு குழுமம் அனுமதி பெறாத காரணத்தால் பெற முடியாமல் தவித்து வருகின்றனர்.

    புதுச்சேரி:

    புதுவை சட்டசபையில் பூஜ்ய நேரத்தில் தி.மு.க. செந்தில்குமார் எம்.எல்.ஏ. பேசியதாவது:-

    புதுவையின் கிராமப்புற மக்கள் அறியாமையில், புது வை நகர அமைப்பு குழுமம் அனுமதி பெறாமல் வீடு கட்டி வாழ்ந்து வருகின்றனர். இனிவரும் காலங்களில் புதுவை நகர அமைப்பு குழுமம் அனுமதி பெற வேண்டும் என்ற விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும்.

    அதே நேரத்தில் தற்பொழுது கிராமப்புற மக்கள் வங்கி கடன் , வீடு கட்டுவதற்கு கடன், மற்றும் அடிப்படை வசதி பெறுவதற்கு புதுவை நகர அமைப்பு குழுமம் அனுமதி பெறாத காரணத்தால் பெற முடியாமல் தவித்து வருகின்றனர்.

    எனவே கடந்த காலங்களில் காலி மனைகளுக்கு 2017-ல் ரெகுலேஷன் போல கிராமப்புறங்களில் கட்டி முடிக்கப்பட்ட வீடுகளுக்கு ஒன் டைம் ரெகுலேஷன் கொடுத்து புதுவை நகர அமைப்பு குழுமம் அனுமதி அளிக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    • தி.மு.க. உறுப்பினர் செந்தில் குமார் எம்.எல்.ஏ. பட்ஜெட் பொது விவாதத்தில் பேசியதாவது:-
    • மாநிலத்தை நம்பி இருக்காமல் பஞ்சாயத்து மூலமே பல வேலைகளை செய்ய முடியும் மூலதன செலவீன நிதி15 சதவீதமாக மாநில அரசு உயர்த்த வேண்டும்.

    புதுச்சேரி:

    தி.மு.க. உறுப்பினர் செந்தில் குமார் எம்.எல்.ஏ. பட்ஜெட் பொது விவாதத்தில் பேசியதாவது:-

    பட்ஜெட்டில் 2023 - 24 ஆண்டு வருவாய் வரிகள் மூலம் ரூ 4087 கோடி என்று சொல்லப்பட்டுள்ளது 2021- 22-ல் ரூ 4661 கோடி, அடுத்த ஆண்டு ரூ.4383 கோடியாக இருந்தது. அது தற்போது 4087 கோடியாக குறைந்துள்ளது. கலால் வரி வளர்ச்சி அடைந்துள்ளது.

    விவசாயத்தை பாதுகாப்பதற்கும் பல சங்கடங்களை அனுபவிக்கிறோம் அதனால் தான் கலால் வரியில் உள்ளாட்சி வரி ஒதுக்கீடு செய்து வருமானத்தை தர வேண்டும்.மாநிலத்தை நம்பி இருக்காமல் பஞ்சாயத்து மூலமே பல வேலைகளை செய்ய முடியும் மூலதன செலவீன நிதி15 சதவீதமாக மாநில அரசு உயர்த்த வேண்டும்.மாநில அரசு மத்திய அரசுக்கு கொடுக்க வேண்டிய கடனை குறைக்க மத்திய அரசு உதவிட வேண்டும் குறிப்பாக நீண்ட கால கடனாக 50 ஆண்டு கால கெடுவில் கடன் வழங்கி மாநில அரசின் கடன் சுமையை போக்க வேண்டும்.

    தமிழில் 12-ம் வகுப்பு வரை படித்த மாணவர்களுக்கு சென்டாக்கில் தனி ஒதுக்கீடு வழங்க வேண்டும். கியாசுக்கு மாதம் ரூ. 300 மானியம் மாநில அரசு வழங்கும் அறிவிப்பு மத்திய அரசின் சுமையை மாநில அரசு ஏற்றதாகவே உள்ளது.

    தொழில் தொடங்க ரூ.100 கோடி முதலீடு செய்யும் நிறுவனங்களுக்கு ஆண்டுக்கு ஒரு சதவீதம் வீதம் 5 ஆண்டு காலத்திற்கு மானியம் போதுமானது அல்ல. அதனை உயர்த்த வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    • புதுவையின் அருகே பாகூரில் வட்டார அளவிலான தண்ணீர்த் திருவிழா நடைபெற்றது.
    • அறிவியல் இயக்கத்தின் பொறுப்பாளர் தட்சிணாமூர்த்தி பாராட்டி பேசினார். பாகூர் கொம்யூன் பஞ்சாயத்து ஆணையர் கார்த்திகேயன் நோக்கவுரை ஆற்றினார்.

    புதுச்சேரி:

    பாகூரில் வட்டார அளவிலான தண்ணீர்த் திருவிழா நடைபெற்றது.

    புதுவை நலப்பணிச் சங்கத்தின் ஆலோசகர் முத்துஅய்யாசாமி வரவேற்றார். புதுவை நலப்பணிச் சங்கத்தின் தலைவரும் பாகூர் தண்ணீர்த் திருவிழாவின் ஒருங்கிணைப்பாளருமான முனைவர் வெற்றிவேல் தலைமை தாங்கினார்.

    நல்லாட்சிக்கான கூட்டமைப்பு பொறுப்பாளர் விக்டர் ராஜ் அறிமுக உரையாற்றினார். தண்ணீர் ஒருங்கிணைப்பு குழுவின் பொறுப்பாளர் பாவாடை கருத்துரை வழங்கினார்.

    புதுவை அறிவியல் இயக்கத்தின் பொறுப்பாளர் தட்சிணாமூர்த்தி பாராட்டி பேசினார். பாகூர் கொம்யூன் பஞ்சாயத்து ஆணையர் கார்த்திகேயன் நோக்கவுரை ஆற்றினார்.

    சிறப்பு விருந்தினராக செந்தில்குமார் எம்.எல்.ஏ. கலந்து கொண்டு போட்டியில் வெற்றி பெற்ற மாணவிகளுக்குச் சான்றிதழ் வழங்கி பேசினார்.

    நிகழ்ச்சியில் சிலம்பப் பயிற்சியாளர் செல்வம், முதலுதவி பயிற்சியாளர் செஞ்சிலுவைச் சங்கத்தின் அருள், ஏரி சங்கத்தின் பொறுப்பாளர் அர்ச்சுனன், உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    ×