என் மலர்
புதுச்சேரி

பயனாளிக்கு இஸ்திரி பெட்டியை செந்தில்குமார் எம்.எல்.ஏ வழங்கிய காட்சி.
பாகூரில் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவி
- செந்தில்குமார் எம்.எல்.ஏ. வழங்கினார்
- பயனாளிகளுக்கு 22 இஸ்திரி பெட்டி, 2 தவில் ஒரு சிகை திருத்தும் நாற்காலி வழங்கினார்.
புதுச்சேரி:
புதுச்சேரி அரசின் சமூக நலத்துறையின் மூலமாக நலிவடைந்த ஏழை சலவையாளர்கள் மற்றும் மருத்துவ இன மரபினர்களுக்கு இலவச தொழிற்கருவிகள் வழங்கும் விழா பாகூர் எம்.எல்.ஏ. அலுவலகத்தில் நடைபெற்றது.
இதில் செந்தில் குமார் எம்.எல்.ஏ. தலைமை தாங்கி பயனாளிகளுக்கு 22 இஸ்திரி பெட்டி, 2 தவில் ஒரு சிகை திருத்தும் நாற்காலி வழங்கினார்.
இதில் சமூக நலத்துறை அதிகாரிகள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர். மேலும் நில அளவை மற்றும் பதிவேடுகள் துறையின் மூலமாக 5 பேருக்கு இலவச மனைப்பட்டா வழங்கப் பட்டது.
Next Story






