என் மலர்
நீங்கள் தேடியது "CD sports"
- மதுரையில் பள்ளி மாணவர்களுக்கான குறுவட்ட விளையாட்டு போட்டி நடந்தது.
- இந்த போட்டியை அமைச்சர் தொடங்கி வைத்தார்.
மதுரை
மதுரை ரேஸ்கோர்ஸ் மைதானத்தில் பள்ளி கல்வித்துறை சார்பில், மாணவ- மாணவிகளுக்கான தடகள விளையாட்டுப் போட்டிகள் நடந்து வருகிறது. ஆரப்பாளையம் குறுவட்டம் சார்பில் இன்று விளையாட்டு போட்டிகள் நடத்தப்பட்டது. இதில் 475 மாணவிகள் உள்பட ஆயிரம் பேர் கலந்து கொண்டனர். விளையாட்டு போட்டியை அமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு தொடங்கி வைத்தார்.
இதில் கலெக்டர் அனீஷ் சேகர், மாநகராட்சி மேயர் இந்திராணி உள்பட பலர் கலந்து கொண்டனர்.






