search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "615 kg silver theft"

    • தமிழகம் மட்டுமின்றி தெலுங்கானா, கேரளா, புதுவை ஆகிய மாநிலங்களில் உள்ள வெள்ளி ஷோரும்களூக்கு வெள்ளி பொருட்களை உற்பத்தி செய்து வழங்கி வந்தனர்.
    • புகார் செய்தார். இந்த நிலையில் நேற்று பன்னீர்செல்வத்தின் வீட்டில் புகுந்த மர்மநபர்கள் அங்கிருந்த 615 கிலோ வெள்ளி, ரூ.2 லட்சம் ஆகிய வற்றை எடுத்து சென்றதாக தெரிகிறது.

    சேலம்:

    சேலம் குகை மார்க்கெட் தெருவை சேர்ந்தவர் பன்னீர்செல்வம்(வயது49). இவர் தனது மாமனார் வேணுகோபாலுடன் சேர்ந்து வெள்ளி தொழிலில் ஈடுபட்டார்.

    தொழில் தொடங்கியபோது வேணுகோபால் ரூ.19 ஆயிரத்து 712 மற்றும் 28 கிலோ வெள்ளி, பன்னீர்செல்வம் ரூ.2374 மற்றும் 53 கிலோ வெள்ளியை முதலீடாக போட்டிருந்ததாக கூறப்படுகிறது.

    இங்கிருந்து தமிழகம் மட்டுமின்றி தெலுங்கானா, கேரளா, புதுவை ஆகிய மாநிலங்களில் உள்ள வெள்ளி ஷோரும்களூக்கு வெள்ளி பொருட்களை உற்பத்தி செய்து வழங்கி வந்தனர். இந்த நிலையில் மாமனாருக்கு உடல்நிலை சரியில்லாததால் அவரது மகனும் பன்னீர்செல்வத்தின் மைத்துனருமான சத்திய நாராயணன் தொழிலை கவனித்தார்.

    இதனிடையே சத்திய நாராயணன் கூறியதன்பேரில் பன்னீர்செல்வம் ரூ.11.45 லட்சத்தை சேலம் 3 ரோட்டில் உள்ள தனியார் நிறுவனத்தில் முதலீடு செய்தார். அதற்கான பங்கு தொகை ரூ.18.67 லட்சத்தை சத்தியநாராயணன் எடுத்துக்கொண்டதோடு வெள்ளிபட்டறையில் இருந்த 500 கிலோ வெள்ளியையும் அவர் அபகரித்ததாக தெரிகிறது.

    வெளிமாநில விற்பனை வகையில் 1047 கிலோ வெள்ளிக்கான வரவு-செலவையும் சத்திய நாராயணன் கொடுக்க மறுத்து தன்னை மோசடி செய்ததாக பன்னீர்செல்வம் சேலம் மாநகர போலீஸ் கமிஷனரிடம் புகார் செய்தார். இந்த நிலையில் நேற்று பன்னீர்செல்வத்தின் வீட்டில் புகுந்த மர்மநபர்கள் அங்கிருந்த 615 கிலோ வெள்ளி, ரூ.2 லட்சம் ஆகிய வற்றை எடுத்து சென்றதாக தெரிகிறது.

    இதுபற்றி பன்னீர்செல்வம் செவ்வாய்பேட்டை போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். புகாரில் சத்தியநாராயணன் மற்றும் 2 பேர் சேர்ந்து தனது வீட்டில் வெள்ளி, பணத்தை திருடி சென்றதாக குறிப்பிட்டுள்ளார். இதைதொடர்ந்து சத்திய நாராயணன் உள்ளிட்ட 3 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.

    ×