search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "600 பேர் கைது"

    புதுவையில் போக்குவரத்து தொழிலாளர்களின் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்ட சுமார் 600 பேர் கைது செய்யப்பட்டனர்.
    புதுச்சேரி:

    புதுவையில் போக்குவரத்து தொழிலாளர்களின் வேலைநிறுத்த போராட்டம் இன்று நடந்தது.

    வேலைநிறுத்த போராட்டத்தையொட்டி ஊர்வலம், மறியல் போராட்டம் நடந்தது. பழைய பஸ்நிலையம் அருகில் இருந்து புறப்பட்ட ஊர்வலத்திற்கு ஏ.ஐ.டி.யூ.சி. சேதுசெல்வம், தினேஷ்பொன்னையா, சி.ஐ.டி.யூ. சீனுவாசன், முருகன், ஐ.என்.டி.யூ.சி. குமார், முத்துராமன், தொ.மு.ச. அண்ணா அடைக்கலம், முரளி, விடுதலை சிறுத்தைகள் செந்தில் ஆகியோர் தலைமை தாங்கினர்.

    போராட்டத்தில் டிரைவிங் ஸ்கூல், இருசக்கர வாகனம், வாகன உதிரி பாகம், டெம்போ, ஆட்டோ, சுற்றுலா வாகனம் உள்ளிட்ட தொழிலாளர் சங்கத்தினர் நூற்றுக்கணக்கில் பங்கேற்றனர்.

    ஊர்வலம் அண்ணா சாலை, மறைமலை அடிகள் சாலை வழியாக புதிய பஸ் நிலையத்தை அடைந்தது. அங்கு மறியல் போராட்டம் நடத்தப்பட்டது. அவர்கள் பஸ் நிலையம் நுழைவு வாயிலின் எதிரில் தரையில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களை போலீசார் கைது செய்தனர். சுமார் 600 பேர் கைது செய்யப்பட்டனர்.

    அமெரிக்காவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் மோட்டார் சைக்கிள், இரும்பு மற்றும் உருக்கு உள்ளிட்ட முக்கிய பொருட்களுக்கு ரூ.1,600 கோடி வரியை இந்தியா விதித்துள்ளது. #India #RaiseDuties #USProducts
    புதுடெல்லி:

    அமெரிக்காவுக்கும், சீனாவுக்கும் இடையே வர்த்தக போர் ஏற்பட்டு உள்ளது. இதனால் இரு நாடுகளும் போட்டி போட்டு பரஸ்பரம் தங்களது நாடுகள் இறக்குமதி செய்யும் அத்தியாவசிய பொருட்களுக்கான வரிவிதிப்பை அதிகரித்து வருகின்றன.

    குறிப்பாக அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப், அண்டை நாடுகளான கனடா, மெக்சிகோ நாடுகளில் தவிர மற்ற நாடுகளில் இருந்து அமெரிக்காவிற்கு இறக்குமதி செய்யப்படும் முக்கிய பொருட்களுக்கான வரி விகிதத்தை கடுமையாக உயர்த்தி வருகிறார்.

    இந்த இரு வல்லரசு நாடுகளின் வர்த்தக மோதல் காரணமாக இந்தியாவும் பெரும் பாதிப்பை சந்தித்து உள்ளது.

    அண்மையில் இறக்குமதி செய்யும் உருக்கு மற்றும் அலுமினிய பொருட்கள் மீதான வரியை 241 மில்லியன் டாலர்கள் அளவிற்கு(சுமார் ரூ.1,600 கோடி) அமெரிக்கா திடீரென அதிகரித்தது. இதனால் இந்தியாவிற்கு ஏற்றுமதி மூலம் கிடைத்த வருவாய் குறையும் நிலை ஏற்பட்டது.

    இதை ஈடுகட்டும் விதமாக அமெரிக்காவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் மோட்டார் சைக்கிள், இரும்பு மற்றும் உருக்கு பொருட்கள், போரிக் அமிலம், பருப்பு வகைகள் உள்ளிட்ட 30 வித பொருட்களுக்கு இந்தியா கூடுதல் சுங்கவரியை விதிக்க முடிவு செய்தது. அதன்படி அமெரிக்காவில் இருந்து இறக்குமதி செய்யும் பொருட்களுக்கு 50 சதவீத கூடுதல் சுங்கவரியை விதிக்க பரிந்துரை செய்யப்பட்டு உள்ளது.

    உலகளாவிய வர்த்தகம் தொடர்பாக எடுக்கப்படும் முடிவுகள் 1994-ம் ஆண்டு உலக நாடுகள் இடையே செய்து கொள்ளப்பட்ட வர்த்தக ஒப்பந்தத்தின்படி உலக வர்த்தக அமைப்பிடம் தெரிவிக்கப்படவேண்டும் என்பது பொதுவான விதியாகும். இதனால் மத்திய அரசு தற்போது எடுத்துள்ள சுங்க வரி உயர்வு பற்றிய தகவலை பட்டியலாக உலக வர்த்தக அமைப்பிடம் தாக்கல் செய்து உள்ளது.

    இதுபற்றி மத்திய அரசு அதிகாரி ஒருவர் கூறுகையில், “அமெரிக்காவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் குறிப்பிட்ட பொருட்களுக்கு கூடுதல் வரி விதிப்பதன் மூலம் அமெரிக்கா விதித்த கூடுதல் வரிகளை சமநிலையில் வைக்கும் விதமாக இந்த வரி உயர்வுக்கு பரிந்துரை செய்யப்பட்டு உள்ளது. அமெரிக்கா எடுத்த நடவடிக்கையின் காரணமாக இதுபோன்ற பாதுகாப்பான பதில் நடவடிக்கையை எடுக்க இந்தியாவுக்கு உரிமை உண்டு. அதன்படி உலக வர்த்தக அமைப்பின் பொருட்களுக்கான வர்த்தக கவுன்சிலிடம் முறைப்படி அமெரிக்காவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் முக்கிய பொருட்கள் மீதான திருத்தியமைக்கப்பட்ட வரி விகிதத்தை இந்தியா தாக்கல் செய்து இருக்கிறது. அதில் அமெரிக்காவிற்கு அளிக்கப்பட்டு வந்த சலுகைகள் திரும்பப் பெறப்பட்டு உள்ளது” என்றார்.

    அமெரிக்காவின் நடவடிக்கையை தொடர்ந்து அமெரிக்காவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பாதாம் பருப்பு, ஆப்பிள், மோட்டார் சைக்கிள்கள் உள்ளிட்ட 20 வகையான பொருட்களுக்கு 10 முதல் 100 சதவீதம் வரை கூடுதல் வரி விதிக்க கடந்த மாதமே மத்திய அரசு சிபாரிசு செய்து இருந்தது, நினைவு கூரத்தக்கது.  #India #RaiseDuties #USProducts
    ×