search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "5State Election"

    • மத்திய பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர் ஆகிய மாநிலங்களில் வாக்கு எண்ணிக்கை தொடங்கியதில் இருந்து பாஜக முன்னிலை வகித்து வருகிறது.
    • மகத்தான வெற்றியைப் பெற்ற பாஜகவுக்கு வாழ்த்துகள்.

    மத்திய பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர், தெலுங்கானா, மிசோரம் ஆகிய மாநிலங்களுக்கான சட்டசபை தேர்தல் கடந்த நவம்பர் 7ம் தேதி முதல் 30ம் தேதி வரை பல்வேறு கட்டங்களாக நடைபெற்றது.

    இந்நிலையில், மத்திய பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர், தெலுங்கானா ஆகிய மாநிலங்களில் தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை இன்று காலை முதல் நடைபெற்று வருகிறது. மிசோரம் மாநிலத்தில் மட்டும் வாக்கு எண்ணிக்கை நாளை நடைபெற உள்ளது.

    இதில், மத்திய பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர் ஆகிய மாநிலங்களில் வாக்கு எண்ணிக்கை தொடங்கியதில் இருந்து பாஜக முன்னிலை வகித்து வருகிறது.

    இந்நிலையில், சனாதன தர்மத்தை அவதூறாக பேசினால் இதுதான் நிலை என்று முன்னாள் கிரிக்கெட் வீரர் வெங்கடேஷ் பிரசாத் தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

    இதுகுறித்து வெங்கடேஷ் பிரசாத் எக்ஸ் பக்கத்தில் குறிப்பிட்டிருப்பதாவது:-

    சனாதன தர்மத்தை துஷ்பிரயோகம் செய்தால் அது அதன் விளைவுகளை ஏற்படுத்தும். மகத்தான வெற்றியைப் பெற்ற பாஜகவுக்கு வாழ்த்துகள். இத பிரதமர் நரேந்திர மோடியின் அற்புதமான தலைமையும், அமித் ஷா மற்றும் அடி மட்டத்தில் கட்சி கேடரின் சிறப்பான பணிக்கும் கிடைத்த மற்றொரு சாட்சி.

    இவ்வாறு அவர் பதிவிட்டிருந்தார்.

    அதிகாரத்தை கைப்பற்ற மக்களை பிளவுப்படுத்தி வாக்கு வங்கி அரசியலில் ஈடுபடும் காங்கிரசை மக்கள் ஆதரிக்க கூடாது என ராஜஸ்தான் தேர்தல் பிரச்சார கூட்டத்தில் பிரதமர் மோடி தெரிவித்தார். #PMModi #5StateElection
    ஜெய்பூர் :

    ராஜஸ்தான் மாநிலத்தில் வசுந்தரா ராஜே தலைமையிலான பா.ஜ.க. ஆட்சி நடைபெற்று வருகிறது. அங்கு இந்த ஆண்டு இறுதியில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெறவுள்ளதால் காங்கிரசும், பா.ஜ.க.வும் மாறி மாறி வியூகம் வகுத்து களப்பணி ஆற்றி வருகின்றன.

    இதனிடையே நாடுமுழுவதும் பரபரப்புடன் எதிர்பார்க்கப்பட்ட ராஜஸ்தான் உள்ளிட்ட 5 மாநில தேர்தல் தேதியை தேர்தல் ஆணையம் இன்று அதிகாரபூர்வமாக அறிவித்தது. ராஜஸ்தான் மாநிலத்திற்கு தெலங்கானா மாநிலத்துடன் சேர்த்து டிசம்பர் 7-ம் தேதி வாக்கு பதிவு நடைபெற உள்ளது.

    இந்நிலையில், அம்மாநிலத்தின் அஜ்மர் மாவட்டத்தில் ஏற்பாடு செய்யப்பட்ட பொதுக்கூட்டத்தில் பங்கேற்று பிரதமர் மோடி இன்று தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கினார். அப்போது வாக்கு வங்கி அரசியலை காங்கிரஸ் கட்சி விரும்புவதாக குற்றம்சாட்டி பேசினார். மேலும் அவர் குறிப்பிட்டுள்ளதாவது :-

    ஒரு பக்கம் வாக்கு வங்கி அரசியல் நடைபெற்று வருகிறது, மறுபக்கம் மக்களுக்கான அரசியல் நடைபெறுகிறது. சமுதாயத்தை பிளவுப்படுத்துவதிலும், சமுதாயத்தை பிரிப்பதிலும் மற்றவர்கள் நம்பிக்கை கொண்டிருக்கும் வேலையில், நாங்கள் சமுதாயத்தை ஒருங்கினைத்து, அனைவரும் பயன்பெற வேண்டும் என்பதில் நம்பிக்கை கொண்டுள்ளோம்.

    60 வருடமாக நாட்டை காங்கிரஸ் தவறாக வழிநடத்தி வந்த நிலையில் இப்போது தான் நாடு சரியான பாதையில் பயணிக்கிறது. எனவே, அதிகாரத்தை கைப்பற்ற மக்களை பிளவுபடுத்தி வாக்கு வங்கி அரசியலில் ஈடுபடும் காங்கிரசை மீண்டும் அதிகாரத்தில் அமர வைக்காதீர்கள்.

    ஒரு குடும்பத்திடம் மட்டுமே காங்கிரசின் தலைமை சிக்குண்டு கீழ்த்தரமான அரசியல் செய்துவருகிறது. நமது ராணுவ வீரர்கள் 2 ஆண்டுகளுக்கு முன்னர் எல்லையை தாண்டி சென்று நடத்திய துல்லிய தாக்குதல்(சர்ஜிகர் ஸ்ட்ரைக்) பற்றி காங்கிரஸ் தலைவர்கள் சந்தேகத்துடன் கேள்வி எழுப்புகின்றனர்.

    இதுபோன்று அரசியல் செய்வதை நினைத்து காங்கிரஸ்காரர்கள் வெட்கப்பட வேண்டும். நான் ராஜஸ்தானின் வாக்காளனாக இருந்தால் முதல் வேலையாக பாஜகவை மீண்டும் ஆட்சியில் அமர்த்துவேன் என அவர் தெரிவித்தார்.  #PMModi #5StateElection
    ×