search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "49 people arrested"

    • தடை செய்யப்பட்ட குட்கா, லாட்டரி மற்றும் கஞ்சா விற்பனை செய்பவர்களை கைது செய்து வருகின்றனர்.
    • கண்காணிப்பு பணிகளிலும் போலீசார் ஈடுபட்டு வருவது குறிப்பிடத்தக்கதாகும்.

    கடலூர்:

    கடலூர் மாவட்டத்தில் போலீஸ் சூப்பிரண்டு சக்தி கணேசன் உத்தரவின் பேரில் தடை செய்யப்பட்ட குட்கா, லாட்டரி மற்றும் கஞ்சா பொருட்கள் விற்பனை செய்யப்படுவதை தீவிரமாக கண்காணித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என போலீசாருக்கு அதிரடியாக உத்தரவிட்டிருந்தார். அதன்படி மாவட்டம் முழுவதும் போலீசார் சோதனையில் ஈடுபட்டு தடை செய்யப்பட்ட குட்கா, லாட்டரி மற்றும் கஞ்சா விற்பனை செய்பவர்களை கைது செய்து வருகின்றனர். இந்த நிலையில் கடந்த 11 ந்தேதி முதல் நேற்று வரை மாவட்டம் முழுவதும் தடை செய்யப்பட்ட 20 கிலோ குட்கா பொருட்கள் மற்றும் 3/4 கிலோ கஞ்சா ஆகியவற்றை போலீசார் தீவிர சோதனையில் பறிமுதல் செய்தனர்.

    மேலும் இதில் கஞ்சா விற்பனை செய்ததாக 20 நபர்களும், குட்கா பொருட்கள் விற்பனை செய்ததாக 19 நபர்களையும், லாட்டரி விற்பனை செய்ததாக 10 நபர்களையும் என 49 பேர் போலீசார் கைது செய்து கடும் நடவடிக்கை எடுத்து உள்ளனர். மேலும் மாவட்ட முழுவதும் சோதனையும் மற்றும் கண்காணிப்பு பணிகளிலும் போலீசார் ஈடுபட்டு வருவது குறிப்பிடத்தக்கதாகும்.

    ×