search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "300 million dollar fund"

    அமெரிக்கா நிறுத்தவுள்ளதாக அறிவிக்கப்பட்ட நிதி ராணுவத்துக்கானது அல்ல என பாகிஸ்தான் வெளியுறவு துறை மந்திரி மொகமது குரேஷி தெரிவித்துள்ளார். #US #Pakistan
    இஸ்லாமாபாத்:

    பயங்கரவாத இயக்கங்களுக்கு துணை போவதாகவும், ஆப்கானிஸ்தானில் செயல்படும் பயங்கரவாத இயக்கங்களுக்கு புகலிடம் அளிப்பதாகவும் கூறி பாகிஸ்தானுக்கான நிதியுதவியை நிறுத்தப் போவதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் சில மாதங்களுக்கு முன் கூறியிருந்தார்.

    இதன் தொடர்ச்சியாக அமெரிக்காவில் உள்ள சர்வதேச ராணுவ பள்ளியில் பாகிஸ்தான் வீரர்கள் சேர தடை விதிக்கப்பட்டது. அமெரிக்காவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையே மோதல் உண்டாகியது.

    இதற்கிடையே, பாகிஸ்தான் ராணுவத்தில் பல்வேறு நலத்திட்டங்களை மேற்கொள்ள அமெரிக்க ராணுவம் வழங்கும் 300 மில்லியன் டாலர் (இந்திய மதிப்பில் ரூ.2 ஆயிரம் கோடி) நிதியுதவியை நிறுத்தி முடிவு எடுக்கப்பட்டுள்ளது என வெள்ளை மாளிகை அதிகாரிகள் தெரிவித்தனர். 

    இந்நிலையில், அமெரிக்கா நிறுத்தவுள்ளதாக அறிவிக்கப்பட்ட நிதி ராணுவத்துக்கானது அல்ல என பாகிஸ்தான் வெளியுறவு துறை மந்திரி மொகமது குரேஷி தெரிவித்துள்ளார். 

    இதுதொடர்பாக அவர் கூறுகையில், அமெரிக்கா நிறுத்தவுள்ளதாக அறிவிக்கப்பட்ட நிது ராணுவ நலத்திட்டங்களுக்கானது அல்ல. அந்த நிதி பயங்கரவாதத்துக்கு எதிராக எடுக்கப்படும் நடவடிக்கைகளுக்கானது என தெரிவித்துள்ளார்.

    அமெரிக்க வெளியுறவு துறை செயலாளர் மைக் பாம்பியோ செப்டம்பர் 5-ம் தேதி பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. #US #Pakistan
    ×