என் மலர்
நீங்கள் தேடியது "260 tonnes of plastic waste"
- 14 டன் பிளாஸ்டிக் கழிவுகள் சிமெண்ட் ஆலைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
- கழிவுகளை தூய்மை பணியாளர்கள் விற்று பணப்பயன் அடைகின்றனர்.
கோபி:
ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் நகராட்சி திடக்கழிவு மேலா ண்மை திட்டத்தின் கீழ் தினமும் 18 டன் திடக்க ழிவுகள் சேகரம் செய்ய ப்படுகிறது.
இதில் 9 டன் மக்கும் கழிவுகளை எந்திரத்தில் அரைத்து, தொட்டிகளில் நிரப்பப்பட்டு 40 நாட்கள் மக்கிய பிறகு அவற்றை குறைந்த விலைக்கு விவசாயிகளுக்கு வழங்கப்படுகிறது.
3 டன் அதிக ஈரப்பதம் உள்ள உணவு கழிவுகள், பழ கழிவுகள் மற்றும் கோழி கழிவுகளை கொண்டு மின்சாரம் தயாரிக்கப்படுகிறது. இந்த மின்சாரத்தை கொண்டு எந்திரங்கள் இயக்கப்படுகிறது.
மக்காத மறுசுழற்சிக்கு பயன்படும் சில வகையான கழிவுகளை தூய்மை பணியாளர்கள் விற்று பணப்பயன் அடைகின்றனர். மக்காத மறு சுழற்சிக்கு உதவாத பிளாஸ்டிக் பேப்ப ர்கள் போன்றவற்றை மாற்று எரிபொருளுக்காக சிமெண்ட் ஆலைக்கு அனுப்பி வைக்கப்படுகிறது.
தற்போது 14 டன் பிளாஸ்டிக் கழிவுகள் சிமெண்ட் ஆலைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இதுவ ரையிலும் கோபிசெட்டி பாளையம் நகராட்சியில் இருந்து 3,260 டன் பிளா ஸ்டிக் கழிவுகள் மாற்று எரிபொருளுக்காக சிமெ ண்ட் ஆலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.






