என் மலர்
நீங்கள் தேடியது "2 person missing"
- தட்டச்சு பள்ளிக்கு சென்ற மாணவி திடீரென மாயமானார்.
- மாயமானவர்களை போலீசார் வழக்குபதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
கம்பம்:
தேனி மாவட்டம் கம்பம் 1-வது வார்டு கோம்பை ரோடு பகுதியை சேர்ந்தவர் அழகுகுமார்(34). இவர் கடந்த 4 வருடங்களாக உ.அம்மாபட்டிைய சேர்ந்த வனராஜ் என்பவருடன் சேர்ந்து தேங்காய் வியாபாரம் பார்த்து வந்தார்.
இந்நிலையில் கணவன்-மனைவி இடையே வாக்குவாதம் ஏற்பட்டதால் அழகுகுமார் சம்பவத்தன்று வீட்டைவிட்டு மாயமானார். பல இடங்களில் தேடியும் கிடைக்காததால் அவரது மனைவி கம்பம் வடக்கு போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் அவரை தேடி வருகின்றனர்.
உத்தமபாளையம் அடுத்துள்ள கோகிலாபுரம் சி.எஸ்.ஐ தெருவை சேர்ந்த சத்தியநாதன் மகள் ரிதன்யா(17). பிளஸ்-2 படித்து வருகிறார். சம்பவத்தன்று தட்டச்சு பள்ளிக்கு செல்வதாக கூறிச்சென்றவர் மாயமானார்.
இதுகுறித்து உத்தமபாளையம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.






