என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "2 lady students"

    • வெவ்வேறு சம்பவங்களில் 2 பள்ளி மாணவிகள் மாயமாகினர்.
    • போலீசார் வழக்குபதிவு செய்து மாயமானவர்களை தேடி வருகின்றனர்.

    தேனி:

    தேனி மாவட்டம் பண்ணைக்காடு பஜனைமடம் தெருவை சேர்ந்த முத்துமணி மகள் கிருத்திகா(14). இவர் தேனியில் உள்ள பள்ளியில் விடுதியில் தங்கி 9-ம் வகுப்பு படித்து வந்தார்.

    சம்பவத்தன்று விடுதியில் இருந்த மாணவி திடீரென மாயமானார். சக மாணவிகள் இதுகுறித்து ஆசிரியர்களுக்கு தகவல் தெரிவித்தனர்.

    இதனைதொடர்ந்து விடுதி செயலாளர் அருள்பிரகாசம் கொடுத்த புகாரின்பேரில் தேனி போலீசார் மாணவியை தேடி வருகின்றனர்.

    கெங்குவார்பட்டி ராமர்கோவில் தெருைவ சேர்ந்த வெள்ளைச்சாமி மகள் காவியா(21). இவர் கொடைக்கானல் அன்னைதெரசா கல்லூரியில் பி.எஸ்.சி படித்துவிட்டு வீட்டில் இருந்தார்.

    சம்பவத்தன்று கடைக்கு செல்வதாக கூறிச்சென்ற காவியா வீடு திரும்பவில்லை. இதுகுறித்து அவரது தந்தை கொடுத்த புகாரின்பேரில் தேவதானப்பட்டி போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×