search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "18 MLAs Disqualification appeal case"

    எம்எல்ஏக்கள் தகுதிநீக்கம் தொடர்பான மேல்முறையீட்டு வழக்கில் உச்ச நீதிமன்றத்தில் நல்ல தீர்ப்பு கிடைக்கும் என நம்புவதாக தங்க தமிழ்ச்செல்வன் தெரிவித்தார். #18MLAsCaseVerdict #ThangaTamilSelvan #SupremeCourt #TTVDhinakaran
    மதுரை:

    தமிழகத்தில் டிடிவி தினகரன் ஆதரவாளர்களான 18 எம்எல்ஏக்கள் சபாநாயகரால் தகுதி நீக்கம் செய்யப்பட்டது செல்லும் என உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. இதையடுத்து தகுதி நீக்கம் செய்யப்பட்ட 18 எம்எல்ஏக்களுடன் இன்று டிடிவி தினகரன் ஆலோசனை நடத்தினார். அப்போது உயர்நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்ய தீர்மானிக்கப்பட்டது.

    ஆலோசனைக் கூட்டம் முடிந்ததும் தங்க தமிழ்ச்செல்வன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    தகுதிநீக்கம் செல்லும் என உயர்நீதிமன்றம் அளித்த தீர்ப்பை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்வோம். சபாநாயகர் ஒவ்வொரு முறையில் தவறு செய்துகொண்டிருக்கிறார். சபாநாயகர் செய்தது தவறு என்பதை நிரூபிக்கவே உச்சநீதிமன்றம் செல்கிறோம். அதேசமயம் நாளையே தேர்தல் வந்தாலும் 18 பேரும் சந்திக்க தயாராக இருக்கிறோம்.



    2 அல்லது மூன்று நாளில் மேல்முறையீடு செய்ய உள்ளோம். உச்ச நீதிமன்றத்தில் நல்ல தீர்ப்பு கிடைக்கும் என நம்புகிறோம். மேல்முறையீட்டு வழக்கை விரைந்து முடிக்க வேண்டும் என கூறுவோம்.

    22 தொகுகிளிலும் வளர்ச்சிப் பணிகளை மேற்கொள்ள வலியுறுத்தி வரும் 10ம் தேதி முதல் உண்ணாவிரதம் இருக்க உள்ளோம். இறுதியாக ஆர்.கே.நகர் தொகுதியில் உண்ணாவிரதம் இருப்போம்.

    இவ்வாறு அவர் கூறினார். #18MLAsCaseVerdict #ThangaTamilSelvan #SupremeCourt #TTVDhinakaran
    ×