search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "1.2 CRORE"

    • ரூ.1.2 கோடி செலவில் 11 முடிவுற்றப் பணிகள் தொடங்கப்பட்டது
    • பொன்னமராவதி ஊராட்சி ஒன்றியத்தில்

    புதுக்கோட்டை,

    புதுக்கோட்டை மாவட்டம், பொன்னமராவதி ஊராட்சி ஒன்றியத்தில் ரூ.1.02 கோடி செலவில் 11 முடிவுற்றப் பணிகளை, சட்டம், நீதிமன்றங்கள், சிறைச்சாலை மற்றும் ஊழல் தடுப்பு சட்ட அமைச்சர் எஸ்.ரகுபதி திறந்து வைத்தார்.

    பின்னர் அமைச்சர் பேசும் போது:-

    தமிழ்நாடு முதலமைச்சர் கிராமப்புறங்களில் பொதுமக்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகளை நிறைவேற்றும் வகையில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறையின் சார்பில் பல்வேறு வளர்ச்சித் திட்டப் பணிகளை செயல்படுத்தி வருகிறார்கள். மேலும் முத்தமிழறிஞர் கலைஞரால் தொடங்கி வைக்கப்பட்ட அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சித் திட்டத்தின்கீழ் ஊராட்சிகள் தேர்ந்தெடுக்கப்பட்டு, அந்த ஊராட்சிகளுக்குத் தேவையான அடிப்படை கட்டமைப்பு வசதிகள் நிறைவேற்றப்பட்டு வருகின்றன.

    அந்தவகையில் பொன்னமராவதி ஒன்றியத்தில் நெடுஞ்சாலைத்துறையின் சார்பில், திருக்களம்பூர்ஊராட்சியில் ரூ.5.50 கோடி மதிப்பிலான 2 சாலைப் பணிகளும், கோவனூர் ஊராட்சியில் ரூ.4.27 கோடி மதிப்பிலான சாலைப் பணிகளும், செவலூர்ஊராட்சியில் ரூ.3 கோடி மதிப்பிலான சாலைப் பணிகளும் அமைப்பதற்கு நிர்வாக அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இப்பணிகள் அனைத்தும் குறிப்பிட்ட காலத்திற்குள் நிறைவடைந்து பொதுமக்களின் பயன்பாட்டிற்கு கொண்டுவர நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

    மேலும் திறந்து வைக்கப்பட்டுள்ள செவலூர் ஊராட்சி, மலையடிப்பட்டி பகுதிநேர நியாயவிலைக்கடையின் மூலம் 145 குடும்ப அட்டைதாரர்களுக்கு வீண்அலைச்சலை தவிர்த்து எளிதான முறையில் தங்களது குடியிருப்புகளுக்கு அருகிலேயே அத்தியாவசியப் பொருட்களை பெற்றுக்கொள்ள முடியும்.

    எனவே கிராமப்புறங்களின் முன்னேற்றத்திற்காக தமிழ்நாடு முதலமைச்சரால் செயல்படுத்தப்பட்டு வரும் மக்கள் நலத்திட்டங்களை பொதுமக்கள் அனைவரும் முறையாக பயன்படுத்திக்கொள்ள வேண்டும்.

    இவ்வாறு அமைச்சர் பேசினார்.

    • ரூ.1.2 கோடி மதிப்பில் வளர்ச்சித் திட்டபணிகள் தொடங்கி வைக்கப்பட்டது.
    • க.பரமத்தி ஊராட்சி, ஒன்றியம் குப்பம் ஊராட்சியில்

    கரூர்:

    கரூர் மாவட்டம், க. பரமத்தி ஊராட்சி ஒன்றியம், குப்பம் ஊராட்சி பகுதியில் பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகளை அரவக்குறிச்சி எம். எல்.ஏ. மொஞ்சனூர் இளங்கோ பூமி பூஜை செய்து தொடங்கி வைத்தார்.

    குப்பம் ஊராட்சிக்கு உட்பட்ட ஆண்டிபட்டியில் ரூ.3.71 லட்சம் மதிப்பீட்டில் பைப்லைன் விஸ்தரிப்பு செய்து தனிநபர் வீடுகளுக்கு குடிநீர் இணைப்பு வழங்குதல், இதே போல் ஆண்டி சங்கிலிபாளையம், அரசம்பாளையம், அய்யம்பாளையம், காளிபாளையம், காங்கயம்பாளையம், நடுப்பாளையம், பஞ் சயங்குட்டை, குப்பம் ஊராட்சி குப்பம், சக்கரா பாளையம், சாலிபாளையம், சாலிபாளையம் ஏ.டி காலனி, சங்கரன் பாளையம் நொச்சி காட்டூர், தலை தலை ஈத்துப்பட்டி, வேலாயுதம்பாளையம், காட்டுவலசு உள்ளிட்ட பகுதிகளில் ரூபாய் ஒரு கோடியே 2 லட்சத்து 74 ஆயிரத்து மதிப்பீட்டில் பைப் லைன் விஸ்தரிப்பு செய்து தனிநபர் வீடுகளுக்கு குடிநீர் இணைப்பு வழங்கும் பணிகளுக்கு பூமி பூஜை நடந்தது. இதில் அரவக்குறிச்சி எம். எல்.ஏ. மொஞ்சனூர் இளங்கோ பங்கேற்று பணிகளை தொடங்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஊராட்சி தலைவர் கார்த்திக் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    ×