என் மலர்
நீங்கள் தேடியது "108 sangabhishekam for Sami"
- கோப்பணம்பாளையம் பரமேஸ்வரர் கோவிலில் உள்ள பாலமுருகன் கோவில் ஆண்டு விழா மற்றும் திருக்கல்யாண வைபவத்தை முன்னிட்டு 108 சங்காபிஷேகம் நடைபெற்றது.
- கோவில் வளாகத்தில் 108 வலம்புரி சங்குகள் வைக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.
பரமத்திவேலூர்:
நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் தாலுகா கோப்பணம்பாளையம் பரமேஸ்வரர் கோவிலில் உள்ள பாலமுருகன் கோவில் ஆண்டு விழா மற்றும் திருக்கல்யாண வைபவத்தை முன்னிட்டு 108 சங்காபிஷேகம் நடைபெற்றது. இதையொட்டி கோவில் வளாகத்தில் 108 வலம்புரி சங்குகள் வைக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. கோவில் வளாகத்தில் அக்கினி குண்டம் வைக்கப்பட்டு சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் ஓதினர்.
அதனைத் தொடர்ந்து பரமேஸ்வர், பாலமுருகன், அங்காள பரமேஸ்வரி அம்மன், அரசாயி அம்மன், மாசாணி அம்மன் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு பால், தயிர், பன்னீர், இளநீர், சந்தனம், மஞ்சள், திருமஞ்சனம், பஞ்சாமிர்தம், கரும்புச்சாறு, தேன், விபூதி உள்ளிட்ட 18 வகையான வாசனை திரவியங்களால் அபிஷேகம் நடைபெற்றது. இதில் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.






