என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "1 lakh 27 thousand"

    • விவசாயிகள் 11,526 தேங்காய்களை விற்பனைக்கு கொண்டு வந்தனர்.
    • மொத்தம் 4,702 கிலோ எடையுள்ள தேங்காய்கள் 1 லட்சத்து 27 ஆயிரத்து 295 ரூபாய்க்கு விற்பனை நடைபெற்றது.

    மொடக்குறிச்சி:

    மொடக்குறிச்சி ஒன்றியம் அவல்பூந்துறை ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் தேங்காய் ஏலம் நடைபெற்றது.

    ஏலத்தில் அரச்சலூர் அவல்பூந்துறை உள்ளிட்ட அப்பகுதி சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த விவசாயிகள் 11,526 தேங்காய்களை விற்பனைக்கு கொண்டு வந்தனர்.

    இதில் ஒரு கிலோ குறைந்தபட்ச விலையாக 23 ரூபாய் 31 காசுக்கும், அதிகபட்ச விலையாக 30 ரூபாய் 13 காசுக்கும், சராசரி விலையாக 28 ரூபாய் 39 காசுக்கும் ஏலம் போனது. மொத்தம் 4,702 கிலோ எடையுள்ள தேங்காய்கள் 1 லட்சத்து 27 ஆயிரத்து 295 ரூபாய்க்கு விற்பனை நடைபெற்றது.

    ×