என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "விருகம்பாக்கம் திருட்டு"

    சென்னை விருகம்பாக்கத்தில் கல்லூரி மாணவரிடம் செல்போன் பறித்த 2 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தினர்.
    போரூர்:

    விருகம்பாக்கம் ரெட்டி தெருவைச் சேர்ந்தவர் பழனி (18). என்ஜினீயரிங் கல்லூரி மாணவர்.

    நேற்று முன்தினம் மாலை மாணவர் பழனி வீட்டின் அருகில் உள்ள கடைக்கு செல்போனில் பேசியபடியே நடந்து சென்றார்.

    அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த 2 பேர் அவரிடம் இருந்த விலை உயர்ந்த செல்போனை பறித்து கொண்டு தப்பி சென்றனர். இதுகுறித்து பழனி விருகம்பாக்கம் போலீசில் புகார் அளித்தார்.

    செல்போன் பறித்து தப்பி சென்ற பைக்கின் எண்ணையும் போலீசாரிடம் பழனி தெரிவித்தார்.

    இந்த நிலையில் நேற்று இரவு விருகம்பாக்கம் காளியம்மன் கோவில் தெருவில் குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் வேலுமணி மற்றும் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அவ்வழியே வந்த அதே எண் கொண்ட மோட்டார் சைக்கிளை மடக்கி பிடித்தனர்.

    அதில் இருந்த மடிப்பாக்கத்தைச் சேர்ந்த கார்த்திக் பிரபு, சைதாப்பேட்டையைச் சேர்ந்த அசாருதீன் ஆகிய 2 பேரை கைது செய்தனர். அவர்களிடம் இருந்து செல்போன், பைக் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர்.

    இவர்கள் மீது கிண்டி, சைதாப்பேட்டை மவுண்ட் போலீஸ் நிலையங்களில் வழிப்பறி, திருட்டு வழக்குகள் உள்ளது. போலீசார் விசாரணையில் தெரியவந்தது.
    ×