என் மலர்
நீங்கள் தேடியது "பென் கரண்"
- தசைப் பிடிப்பு காரணங்களால் பிரண்டன் டெய்லர் விலகியுள்ளார்.
- இங்கிலாந்து நட்சத்திர வீரர்களான சாம் கரண், டாம் கரண் ஆகியோரின் சகோதரர் பென் கரண்.
டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரை இந்தியா மற்றும் இலங்கை நாடுகள் நடத்துகின்றன. இந்த தொடரில் ஜிம்பாப்வே அணி 2 போட்டிகளில் விளையாடி 2 போட்டியிலும் வெற்றி பெற்று அந்த குரூப்-ல் 2-வது இடத்தில் உள்ளது. இன்று ஆஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டியில் வெற்றி பெற்று உலகத்தையே திரும்பி பார்க்க வைத்துள்ளது.
இந்நிலையில் இங்கிலாந்து நட்சத்திர வீரர்களான சாம் கரண் மற்றும் டாம் கரண் ஆகியோரின் சகோதரரான பென் கரண் ஜிம்பாப்வே அணியில் இணைந்துள்ளார். விக்கெட் கீப்பர் பேட்டரான பிரெண்டன் டெய்லருக்கு பதிலாக பென் கரண் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.
ஜிம்பாப்வே அணி தனது முதல் டி20 உலகக் கோப்பையில் பங்கேற்றபோது விளையாடிய பிரண்டன் டெய்லர் (40 வயது) தற்போது தசைப் பிடிப்பு காரணங்களால் விலகியுள்ளார்.
கடந்த 2004-ல் அறிமுகமான பிரண்டன் டெய்லர் இதுவரை 36 டெஸ்ட், 207 ஒருநாள், 59 டி20 போட்டிகளில் ஜிம்பாப்வே அணிக்காக விளையாடியுள்ளார்.
பென் கரண் நல்ல ஆல்ரவுண்டர் என்பதால், ஜிம்பாப்வே அணிக்கு கூடுதல் பலத்தைச் சேர்ப்பார் எனக் கருத்தப்படுகிறது.
- அயர்லாந்துக்கு எதிரான 3-வது ஒருநாள் போட்டியில் பென் கரண் தனது முதல் சதத்தை பதிவு செய்தார்.
- பென் கரணின் சகோதரர்களான டாம் கரண், சாம் கரண் ஆகியோர் இங்கிலாந்து அணிக்காக விளையாடி வருகின்றனர்.
அயர்லாந்து அணி ஜிம்பாப்வேவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு மூன்று வடிவிலான கிரிக்கெட் தொடரிலும் விளையாடி வருகிறது. இதில் முதலில் நடைபெற்ற ஒரே ஒரு டெஸ்ட் போட்டியில் அயர்லாந்து அணி வெற்றி பெற்றது.
இதனையடுத்து இரு அணிகளுக்கும் இடையேயான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரானது நடைபெற்றது. இதில் முதல் 2 போட்டிகள் முடிவில் ஜிம்பாப்வே மற்றும் அயர்லாந்து அணிகள் தலா ஒரு வெற்றியைப் பெற்று தொடரை சமன்செய்திருந்தது.
இந்நிலையில் இரு அணிகளுக்கு இடையேயான தொடரின் வெற்றியாளரைத் தீர்மானிக்கும் மூன்றாவது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி நேற்று நடைபெற்றது. இதில் முதலில் பேட்டிங் செய்த அயர்லாந்து அணி 50 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 240 ரன்களைச் சேர்த்தது.
அதன்பின் இலக்கை நோக்கி விளையாடிய ஜிம்பாப்வே அணி 39.3 ஓவர்களில் இலக்கை எட்டியதுடன் 9 விக்கெட் வித்தியாசத்தில் அயர்லாந்து அணியை வீழ்த்தியதுடன் 2-1 என்ற கணக்கில் ஒருநாள் தொடரை வென்றது. இப்போட்டியில் சதமடித்து அணிக்கு வெற்றியைத் தேடிக்கொடுத்த பென் கரண் ஆட்டநாயகன் விருதை வென்றார்.

இந்நிலையில் பென் கரண் குடும்பத்தில் முதல் சர்வதேச சதத்தை பதிவு செய்த முதல் வீரர் என்ற சாதனையை பென் கரண் படைத்துள்ளார். பென் கரணின் சகோதரர்களான டாம் கரண், சாம் கரண் ஆகியோர் இங்கிலாந்து அணிக்காக விளையாடி வருகின்றனர். இவர்கள் இருவரும் சர்வதேச போட்டிகளில் ஒரு சதம் கூட அடிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.






