என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "நக்சல்கள்"

    • அமைதி இருக்கும்போது அதிக பொருளாதார வளர்ச்சியை அடைய முடியும்.
    • அமைதியை நிலைநாட்ட பாதுகாப்பு பணியாளர்கள் திறம்பட பணியாற்றுகின்றனர்.

    புவனேஸ்வர்:

    ஒடிசா மாநிலத்தின் கட்டாக் மாவட்டத்தில் உள்ள முண்டாலியில் மத்திய தொழில் பாதுகாப்பு படையின் 57-வது நிறுவன தின விழா நேற்று நடந்தது. இதில் மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா பங்கேற்றார். அப்போது அமித்ஷா பேசியதாவது:

    ஆந்திரா, தெலுங்கானா, ஒடிசா, சட்டீஸ்கர் போன்ற மாநிலங்களில் பயங்கரவாதிகளுக்கு எதிரான போராட்டத்தில் சி.ஐ.எஸ்.எப். வீரர்கள் குறிப்பிடத்தக்க பங்களிப்பை ஆற்றி உள்ளனர்.

    பெரிய சவால்கள் இருந்தபோதும் பாதுகாப்புப் படையினர் ஒவ்வொரு பணியையும் ஒழுக்கத்துடனும், உறுதியுடனும் மேற்கொண்டு வருகின்றனர்.

    நீர்த்தேக்கங்கள் முதல் நாடாளுமன்றம் வரை முக்கிய இடங்களுக்கு சி.ஐ.எஸ்.எப். வீரர்கள் பாதுகாப்பை அளிக்கின்றனர். இதன் மூலம் நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு சிறந்த ஊக்கியாகப் பயன்படுகிறது.

    அமைதி இருக்கும்போது அதிக பொருளாதார வளர்ச்சியை அடைய முடியும். தொழில்துறை அமைதியை நிலைநாட்ட பாதுகாப்பு பணியாளர்கள் திறம்பட பணியாற்றுகின்றனர்.

    வரும் 2047-ம் ஆண்டுக்குள் வளர்ச்சி அடைந்த இந்தியாவை உருவாக்க வேண்டும் என பிரதமர் மோடியின் தொலைநோக்கு பார்வையை நனவாக்க சி.ஐ.எஸ்.எப். வீரர்கள் துணையாக உள்ளனர். இந்த மாத இறுதிக்குள் நக்சல் இல்லாத நாடாக இந்தியா மாறும் என தெரிவித்தார்.

    சத்தீஸ்கர் மாநிலத்தின் சுக்மா மாவட்டத்தில் நக்சல்கள் நடத்திய வெடிகுண்டு தாக்குதலில் பாதுகாப்புப்படை வீரர் பலியான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. #Naxals
    ராய்ப்பூர்:

    சத்தீஸ்கர் மாநிலத்தில் நக்சல்கள் அதிக அளவில் உள்ளன. நக்சல்களுக்கும், பாதுகாப்பு படையினருக்கும் நடைபெறும் சண்டையில் பலர் கொல்லப்படுவர். மேலும், நக்சல்கள் தாக்குதல் நடத்த பல இடங்களில் குண்டுகளை மண்ணில் புதைத்து வைத்திருப்பர்.

    இந்நிலையில், இன்று காலை சுமார் 7.45 மணியளவில் சுக்மா மாவட்டதின் புஸ்வாடா கிராமத்திற்கு அருகில் உள்ள காட்டுப்பகுதியில் பாதுகாப்பு படை வீரர்கள் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது மண்ணில் புதைத்து வைக்கப்பட்டிருந்த வெடிகுண்டு வெடித்து சிதறியது. இதில் சப்-இன்ஸ்பெக்டர் ராஜேஷ் குமார் பரிதாபமாக உயிரிழந்தார். கான்ஸ்டபிள் மானிக் தின்பார் படுகாயமடைந்தார்.

    படுகாயமடைந்தவர்களுக்கு ராய்ப்பூரில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. நக்சல்களை பிடிக்க போலீசார் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். பாதுகாப்புப்படை வீரர் கொல்லப்பட்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. #Naxals

    ×