என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஜி.வி.பிரகாஷ்குமார்"

    • அரசியல் குழப்பங்களுக்கு மத்தியில் காணாமல் போன தனது நாயைத் தேடி அலைகிறார் ஜி.வி.பிரகாஷ்
    • படத்திற்கு ஜி.வி.பிரகாஷ்குமாரே இசையமைத்துள்ளார்.

    ஜி.வி. பிரகாஷ் குமார் நடிப்பில் உருவாகியுள்ள 'லக்கி' திரைப்படம் நேரடியாக ஜியோ ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் பிப்ரவரி 20-ஆம் தேதி வெளியாகவுள்ளது.

    அரசியல் குழப்பங்களுக்கு மத்தியில் காணாமல் போன தனது  நாயைத் தேடி அலைகின்ற ஒரு இளைஞனைப் பற்றிய கதையாக இது உருவாக்கப்பட்டுள்ளது. ஜி.வி. பிரகாஷ் குமாருடன் இணைந்து அனஸ்வர ராஜன், மேக்னா சுமேஷ், இளங்கோ குமரவேல், தேவதர்ஷினி உள்ளிட்டோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். படத்திற்கு ஜி.வி.பிரகாஷ்குமாரே இசையமைத்துள்ளார். கந்தசாமி மற்றும் புஷ்பா கந்தசாமி ஆகியோர் படத்தை தயாரித்துள்ளனர்.

    படம் நேரடியாக ஓடிடி-யில் வெளியாவதால், பாடல்கள் அனைத்தும் இம்மாதத்திலேயே ஒவ்வொன்றாக வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. 


    • ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் 'எஸ்கே21' படத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் நடித்து வருகிறார்.
    • இதில் ராணுவ வீரராக நடிக்கும் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக சாய் பல்லவி நடித்து வருகிறார்.

    சிவகார்த்திகேயன் நடிக்கும் 'எஸ்கே21' படத்தின் டைட்டில் டீசர் நாளை (பிப் -16) வெளியாகிறது.

    ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் 'எஸ்கே21' படத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் நடித்து வருகிறார். இப்படத்தை கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் , சோனி பிக்சர்ஸுடன் இணைந்து தயாரிக்கிறது. இதில் ராணுவ வீரராக நடிக்கும் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக சாய் பல்லவி நடித்து வருகிறார். இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ்குமார் இசையமைக்கிறார்.

    'எஸ்கே 21' என அழைக்கப்படும் இப்படத்தின் டைட்டில் டீசர் சிவகார்த்திகேயனின் பிறந்த நாளை முன்னிட்டு நாளை மாலை 5 மணிக்கு வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது. சிவகார்த்திகேயனுக்கு 17-ம் தேதி பிறந்த நாள் என்பது குறிப்பிடத்தக்கது.

    ×