என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "இளம்படை"

    • வைமா வித்யாலயாவில் இளம்படை தொடக்கவிழா நடந்தது.
    • அருணா திருப்பதி செல்வன் தலைமை தாங்கினார்.

    ராஜபாளையம்

    ராஜபாளையம் வைமா வித்யாலயாவில் தனியார் தொலைக்காட்சியின் இளம்படை தொடக்கவிழா நடந்தது. வைமா கல்வி நிறுவனங்களின் மேனேஜிங் டிரஸ்டி அருணா திருப்பதி செல்வன் தலைமை தாங்கினார்.

    வைமா கல்வி நிறுவனங்களின் திருப்பதி செல்வன் முன்னிலை வகித்தார். ராஜபாளையம் ரோட்டரி சங்க செயலாளர் பார்த்தசாரதி முதன்மை விருந்தினராக கலந்து கொண்டார். 27-வது வார்டு கவுன்சிலர் சுமதி ராமமூர்த்தி, 37-வதுவார்டு கவுன்சிலர் கார்த்திக், லட்சுமி மருத்துவமனை மேனேஜிங் டைரக்டர் கார்த்திகேயன் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர்.

    தனியார் தொலைக்காட்சியை சேர்ந்த சித்ரவேல் அறிமுக உரையாற்றினார்.ஒருங்கிணைப்பாளர் ராஜலட்சுமி இளம்படை மாணவர்களை அறிமுகம் செய்தார். இளம் படை கேப்டன் ஹாசினி ஏற்புரை வழங்கினார்.வைமா வித்யாலயா பள்ளி முதல்வர் கற்பகலட்சுமி நன்றி கூறினார்.

    ×