என் மலர்
நீங்கள் தேடியது "ஆண் பிணம். MALE CORPSE"
- நெல்பேட்டை அருகில் உள்ள அரசு மதுபான கடை முன்பு சுமார் 50 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவர் இறந்த நிலையில் கிடந்தார்.
- அவர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர் என்பது தெரிய வில்லை
திருச்சி,
திருச்சி தஞ்சை ரோடு நெல்பேட்டை அருகில் அரசு மதுபான கடை உள்ளது. இந்த கடை முன்பு சுமார் 50 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவர் இறந்த நிலையில் கிடந்தார்.
தகவல் அறிந்து திருச்சி வரகனேரி கிராம நிர்வாக அலுவலர் சூசை ஆரோக்கியராஜ் காந்தி மார்க்கெட் போலீசில் புகார் கொடுத்தார். போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று இறந்து கிடந்த நபரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த சம்பவம் குறித்து காந்தி மார்க்கெட் போலீசார் வழக்குப்பதிவு செய்து இறந்த நபர் யார் ?எந்த ஊரை சேர்ந்தவர்? என்பது குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
- தவுட்டுப்பாளையம் அருகே அடையாளம் தெரியாத ஆண் பிணம்
- உடல் நிலை பாதித்து இறந்தார்? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
வேலாயுதம்பாளையம்,
கரூர் மாவட்டம் தவுட்டுப்பாளையம் அருகே கட்டிப்பாளையம் கருப்பண்ணசாமி கோவில் அருகே 65 வயது மதிக்கத்தக்க அடையாளம் தெரியாத ஆண் ஒருவர் மயங்கிய நிலையில் உயிருக்கு போராடிக் கொண்டிருந்தார். அதை பார்த்த அக்கம்பக்கத்தில் இருந்தவர்கள் மூலம் 108 ஆம்புலன்ஸ் வரவழைக்கப்பட்டு அவரை கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர் . அங்கு அவரை சிகிச்சையில் சேர்த்து அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. இருப்பினும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இது குறித்து வேலாயுதம்பாளையம் போலீசில் புகார் செய்தனர். புகாரின் பேரில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ரமேஷ் வழக்கு பதிவு செய்து பிரேதத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை சவக்கிடங்கில் வைத்துள்ளனர். இவர் யார் ? எந்த ஊர்? எதற்காக இங்கு வந்தார்? உடல் நிலை பாதித்து இறந்தார்? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.






