என் மலர்tooltip icon

    வழிபாடு

    Today Rasipalan: இன்றைய ராசிபலன் 01.12.2025 - இந்த ராசிக்காரர்களுக்கு நண்பர்களால் கையிருப்புக் கரையலாம்
    X

    Today Rasipalan: இன்றைய ராசிபலன் 01.12.2025 - இந்த ராசிக்காரர்களுக்கு நண்பர்களால் கையிருப்புக் கரையலாம்

    • இன்றைய ராசிபலன்
    • 12 ராசிகளுக்குமான இன்றைய ராசிபலன்கள்...

    மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிகளுக்கான இன்றைய ராசிபலன்கள்...

    மேஷம்

    முக்கியப் புள்ளிகளின் ஆலோசனையால் முன்னேற்றம் கூடும் நாள். அலுவலகப் பணிகள் துரிதமாக நடைபெறும். உத்தியோகத்தில் மேலதிகாரிகளின் மனதில் இடம்பெறுவீர்கள்.

    ரிஷபம்

    புதிய பாதை புலப்படும் நாள். காரிய வெற்றிக்கு நண்பர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். எடுத்த முயற்சி வெற்றி பெறும். உத்தியோக உயர்வு உண்டு.

    மிதுனம்

    ஆரோக்கியம் சீராக ஆகாரத்தில் கட்டுப்பாடு செலுத்துவது நல்லது. பிரபலமானவர்களின் அறிமுகம் கிடைக்கும். கடன் பிரச்சனைகளைச் சாமர்த்தியமாகச் சமாளிப்பீர்கள்.

    கடகம்

    சந்தித்தவர்களால் சந்தோஷம் கிடைக்கும். நேற்றைய பிரச்சனை இன்று நல்ல முடிவிற்கு வரும். நிலையான வருமானத்திற்கு வழியமைத்துக் கொள்வீர்கள்.

    சிம்மம்

    யோகமான நாள். சந்தித்தவர்களால் சந்தோஷம் கிடைக்கும். நேற்றைய பிரச்சனை இன்று நல்ல முடிவிற்கு வரும். உத்தியோகத்தில் உங்கள் கை ஓங்கும்.

    கன்னி

    வழிபாட்டின் மூலம் வளர்ச்சி ஏற்படும் நாள். பண நெருக்கடி அதிகரிக்கும். நண்பர்களால் கையிருப்புக் கரையலாம். உத்தியோகப் பிரச்சனைகள் நீடிக்கும்.

    துலாம்

    லட்சியங்கள் நிறைவேறும். நீண்ட நாட்களாக எதிர்பார்த்த காரியமொன்று இன்று கைகூடும். உத்தியோகத்தில் பணிநிரந்தரம் பற்றிய தகவல் உண்டு.

    விருச்சிகம்

    புதிய ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டு மகிழும் நாள். பொருளாதார நலன் கருதி எடுத்த முயற்சி வெற்றி பெறும். உத்தியோகத்தில் ஊதிய உயர்வு பற்றிய தகவல் வரலாம்.

    தனுசு

    பம்பரமாகச் சுழன்று பணிபுரியும் நாள். நிச்சயித்த காரியமொன்றில் திடீர் மாற்றங்களைச் செய்வீர்கள். தொழிலில் புதிய ஒப்பந்தங்கள் வந்து சேரும்.

    மகரம்

    வாங்கல் கொடுக்கல்களில் ஏற்பட்ட குழப்பங்கள் மாறும். பெரிய மனிதர்களின் தொடர்பு கிட்டும். உத்தியோகத்தில் எதிர்பார்த்த சலுகை கிடைக்கும்.

    கும்பம்

    வளர்ச்சிக்கு வழிகாட்ட நண்பர்கள் முன்வரும் நாள். நேற்றைய சேமிப்பு இன்றைய செலவிற்கு கைகொடுக்கும். உத்தியோகத்தில் ஏற்பட்ட வீண்பழிகள் அகலும்.

    மீனம்

    உற்சாகமும் மகிழ்ச்சியும் அதிகரிக்கும் நாள். தனவரவில் இருந்த தடை அகலும். நண்பர்களால் நல்ல தகவலொன்று வந்து சேரலாம்.

    Next Story
    ×