என் மலர்tooltip icon

    வழிபாடு

    அனுமன் ஜெயந்தி வழிபாடும்.. மகத்துவமும்..!
    X

    அனுமன் ஜெயந்தி வழிபாடும்.. மகத்துவமும்..!

    • சனி பகவானையே ஒருமுறை சிறைப்பிடித்து விடுவித்தவர் அனுமன்.
    • பயம் நீங்கவும், புத்தி கூர்மை பெறவும், சொல்லாற்றல் வளரவும் அனுமன் வழிபாடு கைகொடுக்கும்.

    அனுமன் ஜெயந்தி என்பது அஞ்சனை மைந்தன், வாயு புத்திரன் என்று அழைக்கப்படும் ஸ்ரீ அனுமன் அவதரித்த தினமாகும். குறிப்பாக, தமிழகத்தில் மார்கழி மாத மூல நட்சத்திரமும், அமாவாசையும் இணையும் நாளில் இது கொண்டாடப்படுகிறது.

    2026-ம் ஆண்டு ஜனவரி 18-ம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) அனுமன் ஜெயந்தி கடைபிடிக்கப்பட உள்ளது.

    பொதுவாக மற்ற தெய்வங்களின் பிறந்தநாள் "திதி" அடிப்படையில் கொண்டாடப்படும். உதாரணமாக- விநாயகர் சதுர்த்தி. ஆனால், அனுமன் மற்றும் ராமபிரானுக்கு மட்டுமே அவர்கள் பிறந்த நட்சத்திரத்திற்கு அதிக முக்கியத்துவம் தரப்படுகிறது. மார்கழி மாத மூல நட்சத்திரம் வலிமை மற்றும் ஞானத்தின் அடையாளமாகக் கருதப்படுகிறது.

    அனுமன் ஜெயந்தி அன்று பக்தர்கள் அதிகாலையில் நீராடி, அனுமனுக்குப் பிடித்தமான வெண்ணெய் காப்பு, வடை மாலை, வெற்றிலை மாலை, சிந்துரம் பூசுதல் போன்றவை சாற்றி வழிபடுவது சிறப்பு.

    அனுமன் ஜெயந்தி அன்று "ஆஞ்சநேயாய வித்மஹே வாயுபுத்ராய தீமஹி தன்னோ ஹனுமன் ப்ரசோதயாத்" என்கிற இந்த மந்திரத்தைச் சொல்வது மிகுந்த பலனைத் தரும்.

    சனி பகவானையே ஒருமுறை சிறைப்பிடித்து விடுவித்தவர் அனுமன். அதனால், "என்னை வழிபடுபவர்களைச் சனி பீடிக்காது என்று சனி பகவான் அனுமனிடம் வரம் தந்துள்ளார். ஏழரைச் சனி, அஷ்டமச் சனி நடப்பவர்கள் அன்று அனுமனை வழிபடுவது சிறந்தது.

    பயம் நீங்கவும், புத்தி கூர்மை பெறவும், சொல்லாற்றல் வளரவும் அனுமன் வழிபாடு கைகொடுக்கும்.

    Next Story
    ×