என் மலர்
கோவில்கள்
எகிப்து நாட்டில் இருக்கிறது. 4 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட இந்த கோவில் இன்றும் கம்பீரமாக காட்சி அளிக்கிறது.
இன்றைய பல மதங்கள் தோன்றுவதற்கு முன்பு உலகில் பல நாடுகளில் இந்து மதம் போன்று பல கடவுள்களை வணங்கும் பழக்கம் இருந்துள்ளது. இந்து மதம் போன்றே பூஜை முறைகளும் இங்கு நடந்துள்ளன. இப்படி ஒரு கோவில் எகிப்து நாட்டில் இருக்கிறது. 4 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட இந்த கோவில் இன்றும் கம்பீரமாக காட்சி அளிக்கிறது.
அந்த கோவிலின் பெயர் கர்னக் கோவில். எகிப்து நாட்டில் உள்ள லக்சர் நகரத்துக்கு அருகே நைல் நதி ஓரமாக இந்த கோவில் அமைந்துள்ளது. பழங்கால கோவில்களில் கம்போடியாவில் உள்ள ஆங்கோர்வாட் கோவில்தான் உலகிலேயே பெரியதாகும்.
இதில் 2-வது பெரிய கோவிலாக கர்னக் கோவில் உள்ளது. இந்த கோவில் மொத்தம் 200 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது. 1.50 கிலோ மீட்டர் நீளம், 0.8 கிலோ மீட்டர் அகலத்தில் மிக பிரமாண்டமாக இருக்கிறது. பண்டைய எகிப்தியர்கள் ஆமுன், முட், கோன்சு ஆகிய தெய்வங்களை வழிபட்டுள்ளனர். இதில் ஆமுன், முட் கணவன்- மனைவி சாமிகள் ஆவர். கோன்சு சந்திர கடவுள் ஆவார்.
இவர்களுக்காக இந்த கோவில் கட்டப்பட்டு உள்ளது. அதில் ஆமுன், முட், கோன்சு ஆகிய சாமிகளுக்கு தனித்தனி கோவிலாக கட்டி உள்ளனர்.
பிற்காலத்தில் சூரிய கடவுளான ஏடனுக்கு தனிக்கோவில் ஒன்றும் அதே வளாகத்தில் கட்டப்பட்டது. இதனால் ஓரே வளாகத்தில் 4 பிரமாண்ட கோவில்கள் இருக்கின்றன. இதில். ஆமுன் கோவில்தான் மற்ற கோவிலை விட பெரிய கோவிலாக உள்ளது. அந்த கோவில் மட்டுமே 61 ஏக்கர் நிலப்பரப்பில் உள்ளது.
இது தவிர 21 சிறு கோவில்களும் அதே வளாகத்தில் உள்ளன.
இடையில் ஏற்பட்ட பூகம்பங்கள், இயற்கை சீற்றங்கள், எதிரி நாடுகள் படையெடுப்பு போன்ற காரணங்களால் கோவிலின் பல பகுதிகள் சேதம் அடைந்து இருந்தாலும், பெரும்பாலான வளாகம் அதே கம்பீரத்துடன் உள்ளது.
தற்போது இந்த கோவிலில் வழிபாடு எதும் இல்லை. திறந்தவெளி அருங்காட்சியகமாக கோவில் மாற்றப்பட்டு உள்ளது. இன்றைக்கு எகிப்து நாட்டை சுற்றி பார்க்கவரும் சுற்றுலா பயணிகளில் முக்கிய சுற்றுலா பட்டியலிலும் கர்னக் கோவில் இடம் பெறுகிறது. எகிப்தில் உள்ள கீசா பிரமீடை அடுத்து அதிக சுற்றுலா பயணிகள் இந்த கோவிலுக்கு தான் வருகின்றனர். கர்னக் கோவிலில் 56 ஆயிரம் சதுர அடி பிரமாண்ட அரங்கம் ஒன்று உள்ளது. உலகில் உள்ள பழங்கால அரங்கங்களில் இதுதான் மிக பெரியதாகும்.
இந்த மண்டபத்தை 134 கல்தூண்களை அமைத்து அதில் நிறுவி உள்ளனர். இந்த தூண்களில் 122 தூண்கள் தலா 10 மீட்டர் உயரம் கொண்டது. மற்ற 12 தூண்கள் மைய மண்டபத்தில் அமைக்கப்பட்டு உள்ளது. அந்த தூண்கள் ஒவ்வொன்றும் 21 மீட்டர் உயரத்தில் உள்ளன. அந்த தூண் 3 மீட்டர் சுற்றளவு கொண்டது. 70 டன் எடை உள்ளது.
இவ்வளவு எடை கொண்ட தூணை எப்படித்தான் பொருத்தினார்களோ? என்பது மிகப்பெரிய ஆச்சரியமான விஷயமாகவே உள்ளது.
தூண்களின் மேல் பகுதியில், வேறு தூண்களை அமைத்து ஒன்றோடு ஒன்று பொருத்தி உள்ளனர். இந்த தூண்களை வளைவாக வடிவமைத்து இருக்கிறார்கள். எப்படி இவ்வளவு கச்சிதமான வளைவு தூண்களை செதுக்கினார்கள் என்பதும் ஆச்சரியத்தை ஏற்படுத்துகிறது.
தூண்களின் தாங்கு திறனையும் துல்லியமாக கணக்கிட்டு அமைத்து இருப்பது அந்த காலத்திலேயே எகிப்து கட்டிட கலை வல்லுனர்கள் நிபுணத்துவம் பெற்றவர்களாக இருந்துள்ளனர் என்பதை காட்டுகிறது. இதே போல் மேலும் 16 அரங்கங்களும் கோவில் வளாகத்தில் உள்ளன. மேலும் இந்த கோவிலில் 97 அடி உயரத்தில் ஓரே கல்லில் ஆன ராட்சத தூண் ஒன்று அமைக்கப்பட்டு உள்ளது. இந்த துணின் எடை 323 டன்.
இவ்வளவு பெரிய தூணை 161 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள கல்குவாரியில் இருந்து வெட்டி எடுத்து வந்துள்ளனர். எந்த நவீன தொழில் நுட்பமும் இல்லாத அந்த காலத்தில் இவ்வளவு அதிக எடை கொண்ட தூணை எப்படி இங்கு கொண்டுவந்து சேர்த்தார்களோ தெரிய வில்லை. இதே எடை கொண்ட மேலும் 4 தூண்களும் முந்தைய காலத்தில் அங்கு இருந்துள்ளன.
கி.பி.338-ம் ஆண்டில் ரோம் மன்னன் கான்ஸ்டாடின் இந்த பகுதியை கைப்பற்றினான். அவன் இதில் ஒரு தூணை ரோம் நகருக்கு கொண்டுவர தனது படைக்கு உத்தரவிட்டான். எனவே அந்த தூணை பெயர்த்து எடுத்து கொண்டு சென்றனர். இவ்வளவு பெரிய தூணை எடுத்து செல்ல மிகவும் கஷ்டப்பட்டனர். பெரும் சிரமத்துக்கு பிறகு ஆலெக்சாண்டிரியா நகரம் வரையே அந்த தூணை அவர்களால் கொண்டு செல்ல முடிந்தது.
பின்னர் மீண்டும் கடும் முயற்சி செய்து ரோம் நகருக்கு எடுத்து சென்றனர். ஆனால், இதற்கு 26 வருடங்கள் ஆகி இருந்தன. தற்போது கோவில் வளாகத்தில் ஒரு தூண் மட்டுமே உள்ளது. மற்ற 2 தூண்கள் பற்றிய விவரங்கள் தெரியவில்லை. கறுப்பு கிரானைட் கற்களால் உருவாக்கப்பட்ட 600 சாமி சிலைகள் கோவிலில் உள்ளன. இவை தவிர 4500 சிலைகள் கோவில் வளாகம் முழுவதும் உள்ளன. கோவில் சுவர்களில் ஏராளமான சிற்பங்கள் செதுக்கப்பட்டு உள்ளன.
10.5 மீட்டர் உயரம் கொண்ட சாமியின் சிலை ஒன்றும் பிரமாண்டமாக இருக்கிறது. கோவில் வளாகத்திலேயே பெரிய ஏரி ஒன்றும் அமைக்கப்பட்டு இருந்தது. அந்த ஏரியை சுற்றி பூந்தோட்டங்கள் இருந்தன. மேலும் கோவில் பூசாரிகள் குடியிருப்புகளும் இந்த ஏரியை சுற்றி அமைக்கப்பட்டு இருந்தன. வளாகம் முழுவதும் 10-க்கும் மேற்பட்ட பிரமாண்ட அலங்கார வளைவுகளும் அமைக்கப்பட்டு உள்ளன.
இந்தகோவில் இவ்வளவு பிரமாண்டமாக அமைந்ததற்கு முக்கிய காரணம் ஒன்று உள்ளது. ஏனென்றால், இந்த கோவில் சில ஆண்டுகளில் கட்டப்பட்டது அல்ல. பல நூற்றாண்டுகள் கொஞ்சம், கொஞ்சமாக தொடர்ந்து கட்டப்பட்டது.
கோவில் அமைந்துள்ள பகுதி முன்பு தேபஸ் என்று அழைக்கப்பட்டது. இது எகிப்தின் தலைநகரமாகவும் இருந்தது. இதை ஆண்டு வந்த 1-ம் செனுஸ்ட்ரட் என்ற மன்னன் கி.மு.1950-ம் ஆண்டு வாக்கில் கோவிலை கட்ட தொடங்கினான். அவனுக்கு பிறகு வந்த 30 மன்னர்கள் கோவிலை தொடர்ந்து விரிவாக்கம் செய்து கட்டினார்கள். 1-ம் துத்மோசிஸ், 1-ம் சேத்தி, 2-ம் ராம்சஸ் ஆகிய மன்னர்கள் கோவில் கட்டுமான பணிகளில் அதிக அக்கறை எடுத்து மேலும் பல கட்டிடங்களை கட்டினார்கள்.
ஒருவர் கட்டிய கட்டிடத்தை மற்றவர் இடித்து விட்டு கட்டிய சம்பவம் அடிக்கடி நடந்தன. ஹேட்சபஸ்ட் என்ற பெண் அரசி கட்டிய பெரும்பாலான கட்டிடங்களை அதற்கு பிறகு வந்த மன்னர் இடித்து தள்ளிவிட்டு புதிய கட்டிடத்தை கட்டினார். இந்த கோவிலில் முக்கிய தெய்வமாக அமுன் இருந்து வந்த நிலையில், அகன்ட்டான் என்ற மன்னன் சூரிய கடவுளான ஏடனுக்கு முக்கியத்துவம் வழங்கி அவருக்கு பிரமாண்ட கோவிலை கட்டினான்.
ஆனால், அவனுக்கு பிறகு வந்த மன்னர் அந்த கோவிலில் பெரும் பகுதியை இடித்து விட்டு மீண்டும் அமுன் கடவுளுக்கே முக்கியத்துவம் கொடுத்தார். கி.மு 360-ம் ஆண்டு வாக்கில் ஆட்சியில் இருந்த எகிப்து மன்னன் 1-ம் நெக்டனவோ காலம் வரை தொடர்ந்து கட்டுமான பணிகள் நடந்து கொண்டே இருந்தன. அதன் பிறகு கிரேக்கத்தை சேர்ந்த தாலமி வம்சத்தினர் அந்த பகுதியை கைப்பற்றி கொண்டனர். அதன் பிறகுதான் கோவில் கட்டுமான பணிகள் நின்றன.
அதாவது கோவில் கட்டுமான பணிகள் 1600 ஆண்டுகளாக தொடர்ந்து நடந்தன.
உலகில் வேறு எந்த கட்டிடமும் இவ்வளவு நீண்ட காலமாக கட்டப்பட்டது இல்லை.
கி.பி 323-ம் ஆண்டில் கிறிஸ்தவர்கள் இந்த பகுதியை கைப்பற்றினார்கள். அதற்கு முன்புவரை இங்கு வழிபாடு நடந்து வந்தது. கிறிஸ்தவர்கள் கைப்பற்றிய பிறகு வழிபாடுகளுக்கு தடை விதித்து விட்டனர். அவர்கள் இதே வளாகத்தில் 4 கிறிஸ்தவ கோவிலை கட்டினார்கள். அந்த கோவில்களில் கிறிஸ்தவ வழிபாடுகள் நடந்தன.
இடையில் பல மன்னர்கள் அந்த இடங்களை கைப்பற்றிய போதெல்லாம் கட்டிடத்தின் பல பகுதிகளை இடித்து தள்ளி விட்டனர்.
ஆனாலும் கூட மீதம் இருக்கும் கட்டிடங்களும் பிரபிப்பை ஏற்படுத்தும் வகையிலே இருக்கின்றன. கர்னக் கோவில் அந்த பகுதி மக்களின் புனித தலமாகவும் இருந்துள்ளது. கோவிலுக்கு மக்கள் புனித யாத்திரை வருவதை வழக்கமாக கொண்டிருந்தனர்.
ஒவ்வொரு ஆண்டும் 27 நாட்கள் தொடர் திருவிழா நடைபெறும். அப்போது நம் ஊர் கோவில்களில் நடப்பது போன்று திருக்கல்யாண நிகழ்ச்சிகளும் நடந்து உள்ளன. திருவிழாவின் போது சாமிக்கு 11 ஆயிரம் ஜாடி உணவுகள், 385 ஜாடி மது ஆகியவற்றை வைத்து வழிபட்டுள்ளனர். ஆடுகளை பலி கொடுக்கும் நிகழ்ச்சிகளும் நடந்துள்ளன.
கோவிலில் மட்டும் 80 ஆயிரம் ஊழியர்கள் பணியாற்றி வந்துள்ளனர். கோவிலுக்கு என்று 7 லட்சம் ஏக்கர் விவசாய நிலம், 4 லட்சத்து 21 ஆயிரம் ஆடு, மாடுகள் இருந்துள்ளன.

முருகப்பெருமானின் ஆறாவது படைவீடாகப் போற்றப்படும் பழமுதிர்ச்சோலைக்கு, "சோலைமலை" என்ற பெயரும் உண்டு.
முருகப்பெருமானின் ஆறாவது படைவீடாகப் போற்றப்படும் பழமுதிர்ச்சோலைக்கு, "சோலைமலை" என்ற பெயரும் உண்டு. இங்குள்ள முருகப்பெருமான் வெற்றிவேல் முருகன் என்று அழைக்கப்படுகிறார். பழமுதிர்ச்சோலை என்பதற்கு "பழங்கள் உதிர்க்கப் பெற்ற சோலை" என்று பொருள் எடுத்துக் கொள்ளலாம்.
எந்த முருகன் கோவில்களுக்கும் இல்லாத தனிச்சிறப்பு இந்தக் கோவிலுக்கு உண்டு. அதாவது, இந்தத் தலம் அமைந்துள்ள மலையின் அடிவாரத்தில் கள்ளழகர் கோவிலும், மலை உச்சியில் முருகப்பெருமானின் ஆறாவது படைவீடும் அமைந்துள்ளது. இது சைவ, வைணவ ஒற்றுமைக்கு எடுத்துக்காட்டாக உள்ளது.
திருமுருகாற்றுப்படையில் வரும் பழமுதிர்ச்சோலை என்பதற்கு பழம் முற்றிய சோலை என்று நச்சினார்க்கினியர் உரை எழுதியிருக்கிறார். கந்தபுராணத் துதிப்பாடலில், வள்ளியம்மையைத் திருமணம் செய்ய விநாயகரை யானையாக வந்து உதவும்படி முருகப்பெருமான் அழைத்த தலம் பழமுதிர்ச்சோலை என்று கூறுகிறார் கச்சியப்ப சிவாச்சாரியார்.
எனவே ஆறாவது படை வீடாகிய பழமுதிர்ச்சோலை, வள்ளி மலையைக் குறிக்கும் என்று ஒருசாரார் தெரிவிக்கின்றனர். ஆனால் அருணகிரிநாதர், திருப்புகழில் வள்ளி மலையையும், பழமுதிர்ச்சோலையையும் தனித்தனியே பாடியிருக்கிறார். மேலும் பழமுதிர்ச்சோலையில் இன்றும் காணப்படுகின்ற "நூபுர கங்கை" என்னும் சிலம்பாற்றை பழமுதிர்ச்சோலைத் திருப்புகழில் குறிப்பிட்டுப் பாடியுள்ளார். அதனால், பழமுதிர்ச்சோலையே முருகப்பெருமானின் ஆறாவது படைவீடாக கணக்கில் எடுத்துக் கொள்ளப்படுகிறது.
பழமுதிர்ச்சோலை முருகப்பெருமானுக்கு உகந்த நாளாக வெள்ளிக்கிழமை கருதப்படுகிறது. அன்றைய தினம் முருகப் பெருமானுக்கு தேனும் தினை மாவும் நைவேத்தியமாகப் படைக்கப்படுகிறது. கோவில் மூலஸ்தானத்தில் வெற்றிவேலனாக முருகப்பெருமான் அருள்பாலிக்கிறார்.
அவ்வையை சுட்ட பழம் :
அறுபடை வீடுகள் ஒவ்வொன்றிலும் திருவிளையாடல் புரிந்த அழகன் முருகன், இந்தத் தலத்தில், மதுரை நோக்கிச் சென்று கொண்டிருந்த அவ்வையாரிடம் திருவிளையாடல் புரிந்ததாகச் சொல்கிறார்கள். தனது புலமையால் புகழின் உச்சிக்குச் சென்ற அவ்வையாருக்கு தான் என்ற அகங்காரம் ஏற்பட்டது. அந்த அகங்காரத்தில் இருந்து அவ்வையை விடுவிக்க எண்ணிய முருகப்பெருமான், அவ்வை மதுரைக்கு காட்டு வழியாக நடந்து செல்லும் வழியில் ஆடு மேய்க்கும் சிறுவனாக தோன்றி வந்தார். அங்கிருந்த ஒரு நாவல் மரத்தின் கிளை ஒன்றில் ஏறி அமர்ந்து கொண்டார்.
நடந்து வந்த களைப்பால் அந்த மரத்தின் அடியில் வந்து அமர்ந்தார் அவ்வை. நீண்ட தொலைவு பயணம் செய்திருந்ததால் அவருக்குக் களைப்பையும் தந்திருந்தது. வயிறு பசிக்கவும் செய்தது. அப்போது, தற்செயலாக அந்த மரக்கிளையில் ஆடு மேய்க்கும் சிறுவன் ஒருவன் அமர்ந்திருப்பதைக் கண்டார். அந்த மரத்தில் நிறைய நாவல் பழங்கள் இருப்பதையும் பார்த்தார். உடனே அந்தச் சிறுவனிடம், "குழந்தாய்... எனக்குப் பசிக்கிறது.
சிறிது நாவல் பழங்களைப் பறித்துத் தர முடியுமா?" என்று கேட்டார். அதற்கு, சிறுவனாக இருந்த முருகப்பெருமான், "சுட்டப் பழம் வேண்டுமா? சுடாத பழம் வேண்டுமா? " என்று கேட்டார். சிறுவனின் கேள்வி அவ்வைக்குப் புரியவில்லை. பழத்தில் கூட சுட்டப் பழம், சுடாத பழம் என்று இருக்கிறதா? என்று எண்ணிக் கொண்டவர், விளையாட்டாக "சுட்டப் பழத்தையே கொடுப்பா..." என்று கேட்டுக் கொண்டார்.
தொடர்ந்து, நாவல் மரத்தின் கிளை ஒன்றை சிறுவனாகிய முருகப் பெருமான் உலுப்ப, நாவல் பழங்கள் அதில் இருந்து கீழே உதிர்ந்து விழுந்தன. அந்தப் பழங்களைப் பொறுக்கிய அவ்வை, அந்தப் பழத்தில் மணல் ஒட்டி இருந்ததால், அவற்றை நீக்கும் பொருட்டு வாயால் ஊதினார். இதைப் பார்த்துக் கொண்டிருந்த சிறுவனாகிய முருகப்பெருமான், "என்ன பாட்டி... பழம் சுடுகிறதா?" என்று கேட்டார். சிறுவனின் அந்த ஒரு கேள்வியிலேயே அவ்வையின் அகங்காரம் பறந்து போனது.
தன்னையே சிந்திக்க வைத்த அந்தச் சிறுவன் நிச்சயம் மானுடனாக இருக்க முடியாது என்று கணித்த அவ்வை, "குழந்தாய்... நீ யாரப்பா? " என்று கேட்டார். மரக்கிளையில் இருந்து கீழே குதித்த சிறுவன் முருகப்பெருமான், தனது சுயஉருவத்தை காண்பித்து அவ்வைக்கு அருளினார். இந்தத் திருவிளையாடல் நடந்த நாவல் மரத்தின் கிளை மரம் இன்றும் சோலைமலை உச்சியில் காணப்படுகிறது. சோலைமலை முருகன் கோவிலுக்கு சற்று முன்னதாக இந்த மரத்தை இன்றும் நாம் பார்க்கலாம்.
நூபுர கங்கை தீர்த்தம் :
பழமுதிர்ச்சோலைக்கு சற்று உயரத்தில் நூபுர கங்கை என்ற புனித தீர்த்தம் அமைந்துள்ளது. இதற்கு சிலம்பாறு என்ற பெயரும் உண்டு. இந்தத் தீர்த்தம் எங்கு உற்பத்தியாகிறது என்பதே புரியாத புதிராக இருக்கிறது. ஆயிரம் ஆண்டுகளுக்கும் மேலாக இந்த தீர்த்தத் தண்ணீர் வந்து கொண்டிருப்பதாக கூறுகிறார்கள். முருகப்பெருமானின் திருப்பாதத்தில் இருந்து இது உருவாகியது என்ற கர்ண பரம்பரைக் கதையும் வழக்கில் சொல்லப்பட்டு வருகிறது.
மலை உச்சியில் ஓரிடத்தில் இந்த தீர்த்தத் தண்ணீர் ஓரிடத்தில் விழும் வகையில் ஏற்பாடு செய்திருக்கிறார்கள். இந்த இடத்தில் ராக்காயி அம்மன் கோவில் அமைந்துள்ளது. இந்த அம்மனை வழிபடச் செல்பவர்கள், நூபுர கங்கை விழும் இடத்தில் புனித நீராடிச் செல்வதை வழக்கமாக கொண்டுள்ளனர். இந்த தீர்த்தத் தண்ணீர் இரும்புச்சத்து, தாமிரச்சத்து காரணமாக ஆரோக்கியம் மிகுந்த சுவை கொண்டதாக காணப்படுவதோடு, அதில் அபூர்வ மூலிகைகள் பல கலந்து இருப்பதால் நோய் தீர்க்கும் அருமருந்தாகவும் இருக்கிறது.
இந்தத் தீர்த்தத்தில் நீராடினால் அனைத்து நோயும் பறந்தோடிவிடும் என்கிற நம்பிக்கையில் இங்கு தினமும் அதிக அளவில் பக்தர்கள் வந்து நீராடிச் செல்கிறார்கள். இந்தத் தீர்த்தத் தண்ணீரில்தான் புகழ் பெற்ற அழகர்கோவில் பிரசாதமான சம்பா தோசை தயார் செய்யப்படுகிறது. மேலும், இந்த அழகர்மலையில் பல்வேறு மூலிகைத் தாவரங்கள், மரங்கள் காணப்படுகின்றன.
பழமுதிர்ச்சோலை முருகனை தரிசிக்கச் சென்றால், இந்த மூலிகைகள் மற்றும் மூலிகை சம்பந்தப்பட்ட பொருட்களையும் கையோடு வாங்கி வரலாம். சர்க்கரை நோய் உள்ளவர்களுக்கு, அந்த நோய் சட்டென்று கட்டுப்பட விசேஷ மூலிகை மரம் ஒன்றும் இங்கு காணப்படுகிறது. அந்த மரத்தின் விதையில் ஒன்றை சாப்பிட்டாலே சர்க்கரை நோய் கட்டுப்பட்டு விடும் எனறு இங்குள்ளவர்கள் சொல்கிறார்கள்.
திருமண பரிகார தலம் :
முருகப்பெருமானுக்கு ஆரம்ப காலத்தில் இங்கு ஆலயம் கிடையாது என்றும், இடைப்பட்ட காலத்திலேயே பக்தர்களால் மலைக்கு இடையே கோவில் எழுப்பப்பட்டு, வழிபாடு நிகழ்த்தப்பட்டு வருகிறது என்றும் கூறப்படுகிறது. திருமணம் ஆகாதவர்கள், இந்த வெற்றிவேல் முருகனை வழிபட்டால் சட்டென்று திருமணம் முடிவாகி, சிறப்பான வாழ்க்கை அமையும் என்று கூறுகிறார்கள்.
விழாக்கள் விவரம் :
இந்தக் கோயிலில் கந்த சஷ்டி விழா முக்கிய விழாவாக கொண்டாடப்படுகிறது. மேலும் முருகனுக்குரிய தைப்பூசம், வைகாசி விசாகம், கிருத்திகை ஆகிய நாட்களிலும் சிறப்பு பூஜைகளும், அபிஷேகங்களும் நடைபெறுகின்றன.
பயண வசதி :
மதுரை மாநகரில் இருந்து வடக்கே 20 கிலோமீட்டர் தொலைவில் உள்ள அழகர்மலை உச்சியில் இந்த பழமுதிர்ச்சோலை அமைந்துள்ளது. மதுரை பெரியார் பேருந்து நிலையத்தில் இருந்து அடிக்கடி பேருந்து வசதி உள்ளது. அழகர்மலை அடிவாரத்தில் இருந்து மலை உச்சிக்குச் செல்ல கள்ளழகர் கோவில் நிர்வாகமே வாகனங்களை இயக்குகிறது.
காரில் செல்பவர்கள் தனிக்கட்டணம் செலுத்தி மலை உச்சிக்குப் பயணமாகலாம். சுமார் 15 நிமிடங்கள் வளைந்து நெளிந்து செல்லும் மலையில் மெதுவாக பயணித்தால் மலை உச்சியை அடையலாம். அங்கு பழமுதிர்ச்சோலை என்கிற சோலைமலை அமைந்துள்ளது.

நீலகண்ட முனிவர் என்பவரே, முதன் முதலில் இத்தலத்தில் வழிபட்டு பூஜைகள் செய்துள்ளார்.
தேவாரப் பாடல் பெற்ற நடுநாட்டுத் தலம், நீலகண்ட முனிவர், அரகண்ட தாதோர மகரிஷி ஆகியோர் வணங்கி பேறுபெற்ற தலம், திருஞானசம்பந்தர், திருவண்ணாமலை பதிகத்தைப் பாடிய திருக்கோவில், ரமண மகரிஷியின் தவம் தொடங்கிய ஆலயம், ஆட்சியாளர்கள் மற்றும் அலுவலர்களின் ஆபத்துக்களை நீக்கும் தலம் என பல்வேறு பெருமைகள் கொண்டது அரகண்டநல்லூர் ஒப்பிலாமணீஸ்வரர் திருக்கோவில்.
தலவரலாறு :
நீலகண்ட முனிவர் என்பவரே, முதன் முதலில் இத்தலத்தில் வழிபட்டு பூஜைகள் செய்துள்ளார். அதன்பிறகே இங்கு கோவில் எழுப்பப்பட்டது என தலவரலாறு கூறுகிறது. இந்த ஆலயத்தின் தொடக்கம், பல்லவர் கால குடைவரையில் தொடங்கியது. கல்வெட்டுகளின் அடிப்படையில் கோவில் கருவறையும், அர்த்தமண்டபமும் மூன்றாம் குலோத்துங்கன் காலத்தில் கி.பி. 1210–ம் ஆண்டில் கட்டப்பட்டதை கல்வெட்டின் வாயிலாக அறிய முடிகிறது. நிருத்த மண்டபம், இரண்டாம் ராஜராஜ சேதிராயனால் கட்டப்பட்டது.
இந்தக் கோவிலில் அமைந்துள்ள நடன மண்டபம், பழங்காலத்தைச் சேர்ந்தது என்று கூறப்படுகிறது. இந்த மண்டபத்தை கட்டி முடிக்க வேண்டும் என்ற நல்ல எண்ணத்தில், இளவெண்மதி சூடினான் என்பவன், அதற்கென தன் உயிரையும் தியாகம் செய்வதாக அறிவித்தான். அதன்படி நடன மண்டபம் கட்டி முடித்ததும், தன் இன்னுயிரை தியாகம் செய்தான் என தல வரலாறு கூறுகிறது. நவராத்திரி மண்டபம் முதலாம் குலோத்துங்கன் காலத்தில் கட்டப்பட்டுள்ளது.
160 அடி உயரம் கொண்ட கோவில் ராஜகோபுரம் 15–ம் நூற்றாண்டைச் சார்ந்தது. இது கோபு நாயக்கராயன், வாலு நாயக்கர், பொம்மனார், பாப்புநாயக்கராயன், நாகம நாயக்கன் மற்றும் பொம்ம நாயக்கன் ஆகியோரால் கட்டப்பட்டதென கல்வெட்டு குறிப்பிடுகிறது.
இந்த ஆலயம், கவின் கலை பண்பாட்டு மையமாகத் திகழ்வதை, முதலாம் ராஜராஜ சோழன் கால கல்வெட்டின் மூலம் அறிய முடிகிறது. இத்தலத்தில் பழங்காலத்தில் மாதந்தோறும் விழாக்கள் கொண்டாடப்பட்டு வந்ததையும், பல்வேறு மடங்கள் அமைந்திருந்ததையும் கல்வெட்டுகள் எடுத்துரைக்கின்றன.
தலத்தின் தனிச்சிறப்புகள் :
பல்லவர் கால விநாயகர், பலகைக் கல்லில் புடைப்புச் சிற்பமாக அமர்ந்த கோலத்தில் வீற்றிருக்கிறார். இவரின் கண்கள் இரண்டும் வலது, இடது என நாம் எந்த இடத்தில் நின்று நோக்கினாலும், அவர் நம்மை மட்டுமே பார்ப்பதாகக் காட்சி தருவது அதிசயமான நிகழ்வாகும். இந்த விநாயகர் பத்மாசனத்தில், மேல் இரு கரங்களில் ஒன்றில் யோக தண்டம் ஏந்தியும், மற்றொன்றில் ஜெப மாலை, கீழ் இரு கரங்களில் ஒன்றில் ஓலைச்சுவடியும், மற்றொன்றில் கரும்பும் ஏந்தி காட்சி தருகிறார். இவரின் பார்வை அதிசயத்தை இன்றும் வெளிநாட்டவரும் கண்டு வியந்து செல்கின்றனர்.
இத்தலத்து இறைவன் பெயர் ஒப்பிலாமணீஸ்வரர் என்பதாகும். எவருக்கும் ஒப்பு இல்லாத இறைவன் என்பதும், இந்தத் திருப்பெயரில் வீற்றிருப்பவர் இவர் ஒருவரே என்பதும் தனிச் சிறப்பாகும். வடக்கு நோக்கிய முருகப்பெருமான், ஆறு கரங்களுடன் ஒரு முகமாக காட்சி தருவதும், தெற்குநோக்கிய எழிலான துர்க்கையும் குறிப்பிடத்தக்கவை.
திருவண்ணாமலையில் லிங்கங்களாகவே இருக்கும் என்பதைக் குறிப்பால் உணர்ந்த திருஞானசம்பந்தர், இப்பாறை மீது நின்று, திருவண்ணாமலைப் பதிகம் பாடினார் என்பது வரலாறு. ரமணரின் முதல் தியானம் இந்தத் திருக்கோவிலில் இருந்தே தொடங்கியிருக்கிறது. இவரின் கல்திருமேனி கருவறை வெளிப்புறம் அமைந்துள்ளது. சனி பகவான் காகத்தின் மீது, ஒரு காலை ஊன்றி காட்சி தருகின்றார். இது ஒரு அபூர்வக் கோலமாகும்.
ஆலய அமைப்பு :
தென்பெண்ணையாற்றின் வடகரையோரம், எழிலான பாறையின் மீது தெற்கு நோக்கிய ஏழுநிலை ராஜகோபுரம் அமைந்துள்ளது. இங்கிருந்து ஆற்றின் அழகையும், தென்கரையில் அமைந்துள்ள வீரட்டேசுவரர் திருக்கோவிலையும், கபிலர் குன்றையும் காணலாம்.
ஆலயத்தின் வெளியே தென்புறம் ஐந்து குடைவரை அறைகள் அமைந்துள்ளன. இது சமணர்கள் குகை என வரலாற்று ஆய்வாளர்கள் கூறுகிறார்கள். என்றாலும், இதனை பஞ்சபாண்டவர் குகை என்று இந்தப் பகுதியில் அழைக்கின்றனர். இதனுள் அமைந்துள்ள சிறிய அறை திரவுபதிக்கானது என்றும் கூறப்படுகிறது. இங்குள்ள சுனை ‘பீமன் சுனை’ என்று அழைக்கப்படுகிறது. இதற்கு கட்டியம் கூறும் விதமாக இங்கே திரவுபதியம்மன் ஆலயமும் அமைந்துள்ளது.
கோவிலில் பலிபீடம், கொடிமரம் மேற்கு திசையில் அமைந்துள்ளன. அதன் அருகே திருஞானசம்பந்தரின் திருப்பாதங்கள் பீடத்தின் மீது பதிந்து திருவண்ணாமலையை நோக்கியவாறு அமைந்துள்ளது. மேற்கு நோக்கிய சன்னிதியில் நந்திதேவர் கிழக்கு பார்க்க, இறைவன் ஒப்பிலாமணீஸ்வரர் மேற்கு முகமாய்க் காட்சி தருகிறார். இவருக்கு அதுல்யநாதேஸ்வரர், அறையணிநாதர் என்ற பெயர் களும் உள்ளன.
அம்மன் சன்னிதி தனியே கிழக்கு முகமாய் இருக் கிறது. இது மூன்றாம் ராஜேந்திர சோழனால் உருவாக்கப்பட்டதாகும். அன்னை எழிலாக நின்ற கோலத்தில், எளிய வடிவில் அருள் வழங்குகின்றாள். அன்னை அழகிய பொன்னம்மை, அருள்நாயகி, சவுந்தர்ய கனகாம்பிகை என பலவாறு அழைக்கப்படுகிறாள். இதன் அருகே அண்ணமலையார், உண்ணாமுலை அம்மன் சன்னிதி தனியாக இருக்கிறது.
இத்தலம் அரசாங்கத்தில் ஏற்படும் குழப்பங்களைத் தீர்க்க வழிகாட்டும் தலமாகவும், அரசாள்வோர் ஆபத்துக்களை நீக்கி வெற்றிக்கு வழிகாட்டும் பரிகாரத் தலமாகவும் அமைந்துள்ளது. இதனை அண்மையில் ஆலயம் குறித்து கிடைத்துள்ள பழமையான ஓலைச்சுவடிகளின் மூலம் தெரியவந்துள்ளது. அரகண்ட தாதோர மகரிஷி என்பவர் இந்த ஆலயத்திற்கு அரூபமாக வாழ்ந்து வருவதாகவும், இவரையும் இத்தலத்து இறைவன் ஒப்பிலாமணீஸ்வரனையும் மனமுருகி வேண்டி வழிபாடு செய்தால் மேற்கூறியபடி அரசாள்வோருக்கு நன்மைகள் அனைத்தும் கிடைக்கும் என்றும் அந்தச் சுவடியில் கூறப்பட்டுள்ளது.
‘தலையினால் தொழுதோங்குவார் நீங்குவார் தடுமாற்றமே’ என்று இத்தலத்தின் திருஞானசம்பந்தர் பாடியுள்ள வரிகள் இதனை உறுதி செய்கின்றன. இதே போல, இத்தலம் தொழுவோரின் கர்ம வினைகள் அனைத்தையும் நீக்கும் என்பதை, ‘பரவுவார் பழி நீங்கிடப் பறையுந்தாஞ் செய்த பாவமே’ என்ற வரிகளும், ‘வாரமாய் நினைப்பார் கடம் வல்வினை அவை மாயுமே’ என்ற வரிகளும் உறுதிப்படுத்துகின்றன.
எனவே, அரசாள்வோருக்கு பயம், குழப்பம், நடுக்கம் உள்ளிட்ட ஆபத்துக்கள் ஏற்பட்டால், அவர்கள் இங்கு வந்து அரகண்ட தாதோர மகரிஷியையும், இறைவனையும் மனமுருகி பிரார்த்தனை செய்து வழிபட்டுச் சென்றால் தீர்வு கிடைக்கும். காலை 7 மணி முதல் 11 மணி வரையிலும், மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரையிலும் சுவாமி தரிசனம் செய்யலாம். இவ்வாலயம் இந்து சமய அறநிலையத்துறையால் நிர்வகிக்கப்பட்டு வருகிறது.
தொன்மைச் சிறப்பு :
இந்தத் திருத்தலத்திற்கு அறைகண்ட நல்லூர் என்பது தொன்மைப் பெயராகும். அறை என்பதற்கு ‘பாறை’ என்று பொருள் வழங்கப்படுகிறது. அறையணிநல்லூர் என்ற பெயரும் உண்டு. மேலும், இந்தப் பகுதியை ஆட்சி செய்த தெய்வீகமன்னன் என்பவன், தனது திருமணத்தின் போது, பல அறங்களைச் செய்தான். எனவே இத்தலம் அறங்கண்ட நல்லூர் என்று பெயர்பெற்றது என்றும் கூறுவர். அறங்கண்ட நல்லூரே மருவி, அரகண்டநல்லூராக அழைக்கப்படுகிறது.
தென்பெண்ணையாற்றின் தென்கரையில் அமைந்துள்ள திருக்கோயிலூரும், வடகரையில் அமைந்துள்ள அரகண்டநல்லூரும் ஒரே விதமான வரலாற்றுப் பின்னணி கொண்டதாகவே அமைந்துள்ளன. இங்குள்ள 96 கல்வெட்டுகள் இத்தலத்தின் வரலாற்றைத் தெளிவாக எடுத்துரைக்கின்றன. மலைநாடு என அழைக்கப்பட்ட இந்தப் பகுதி, ‘மலாடு’ என வழங்கப்பட்டது. சோழர், பாண்டியர், விஜயநகர மன்னர் என பல பெருவேந்தர்களின் ஆளுகையின்கீழ், குறுநில மன்னர்கள் பலர் இந்தப் பகுதியை ஆட்சி செய்துள்ளனர். இதில் குறிப்பிடத்தக்கவர்கள் மலையமான் திருமுடிக்காரி, தெய்வீகன், மெய்பொருள் நாயனார் முதலானோர் ஆவர்.
அமைவிடம் :
விழுப்புரம் மாவட்டம், திருக்கோயிலூர் வட்டத்தில் அரகண்டநல்லூர் அமைந்துள்ளது. விழுப்புரம்– திருவண்ணாமலை – காட்பாடி ரெயில் வழித்தடத்தில், திருக்கோயிலூர் ரெயில் நிலையம் எதிரே பாறை மீது அமைந்த கோவிலே அரகண்டநல்லூர் ஆலயமாகும். தென்பெண்ணையாற்றின் தென்கரையில் வீரட்டேசுவரர் தலமும், வடகரையில் இந்தத் தலமும் இருக்கின்றன.
விழுப்புரம் – திருக்கோயிலூர் சாலையில் திருக்கோயிலூருக்கு முன்பாக அரகண்ட நல்லூர் காவல் நிலையம் நிறுத்தம் இறங்கி, பின்புறம் நடந்தால் எளிய மலைப்பாதையின் மூலம் ஆலயத்தினை அடையலாம்.
சென்னையில் இருந்து தென்மேற்கே 200 கிலோமீட்டர் தொலைவிலும், விழுப்புரத்தில் இருந்து மேற்கே 40 கிலோமீட்டர் தூரத்திலும், திருவண்ணாமலையில் இருந்து வடகிழக்கே 40 கிலோமீட்டர் தொலைவிலும் இந்த திருத்தலம் இருக்கிறது.

இறைவன் வைத்தமாநிதிப் பெருமாள், நிட்சயபவித்ரன் போன்ற பெயருடன் அருள்பாலிக்கும் தலம் திருக்கோளூர்.
தல மூர்த்தி: வைத்தமாநிதி பெருமாள் (நிஷேபவித்தன்), புஜங்க சயனம் (கிழக்கு பார்த்த திருமுக அமைப்பு)
தல இறைவி: கோளூர்வல்லி நாச்சியார், குமுதவல்லி நாச்சியார்
தல தீர்த்தம்: குபேர தீர்த்தம், தாமிரபரணி
விமானம்: ஸ்ரீகரவிமானம்
கிரகம்: செவ்வாய் ஸ்தலம்
இறைவன் வைத்தமாநிதிப் பெருமாள், நிட்சயபவித்ரன் போன்ற பெயருடன் அருள்பாலிக்கும் தலம் திருக்கோளூர். குபேரன், மதுரகவி ஆழ்வார் போன்றவர்களுக்கு பிரத்யட்சமாக காட்சி தந்து அருள் செய்தவர். இந்தத் தலத்தில் குபேர தீர்த்தம், தாம்பிரவருணி நதி ஆகியவற்றைத் தீர்த்தங்கள் தல தீர்த்தமாக அமைந்துள்ளன.
ஸ்ரீகர விமானத்தின் கீழ், கிழக்கே தலை சாய்த்து சயனத் திருக்கோலத்தில் இடது கையை உயர்த்தி விரல் நுனிகளைப் பார்ப்பது போல் சேவை சாதிக்கிறார் பெருமாள். கோளூர்வல்லி தாயார் என்ற தனி சன்னிதியில் வீற்றிருக்கிறார். நம்மாழ்வார் 12 பாசுரங்களால் மங்களாசாசனம் செய்த தலம் இதுவாகும். இந்த ஆலயம் கிரகங்களில், மங்கலம் என்று வழங்கப்படும் செவ்வாய் கிரகத்திற்கு உரியதாக விளங்குகிறது. நம்மாழ்வாரின் சம காலத்தவரும் அவரது நேரிடை சீடருமான மதுர கவியாழ்வார் திரு அவதாரம் செய்த தலமும் இதுவே.
குபேரனுக்கு கிடைத்த சாபம் :
ஒன்பது வகையான நவ நிதியங்களுக்கும், எண்ணிலடங்கா பெரும் செல்வத்துக்கும் அதிபதியாக திகழ்பவன் குபேரன். அவன் அளகாபுரி என்ற இடத்தில் தனது இருப்பிடத்தை அமைத்து வாழ்ந்து வந்தான். குபேரன் சிறந்த சிவ பக்தன் ஆவான். ஒரு சமயம் மிகுந்த அன்புடனும், பக்தியுடனும் சிவபெருமானைத் தரிசிக்க கயிலாயம் சென்றான். அந்த அழகிய பொழுதில் சிவனும் பார்வதியும் குபேரனுக்கு ஒரு சேரக் காட்சி தந்தனர். மிகுந்த பக்திப் பெருக்குடன் சிவனைக் காணச் சென்ற குபேரன், தன் தாய் போன்ற பார்வதி தேவியை தீய எண்ணத்துடன் நோக்கினான்.
அச்செயலால் மனம் வெறுப்புற்ற பார்வதி தேவி, குபேரன் மீது கடும் கோபம் கொண்டாள். உடன் ஒரு கண்ணை இழக்கவும், அருவருப்பான உருவத்தைப் பெறவும், நவநிதியம் முழுவதும் இழக்கவும் சாபம் இட்டாள். நல்லோர் சாபம் உடனே பலிக்கும் என்பது போல அவை அனைத்தும் உடனே நிகழ்ந்தன. பொருப்பாளனை இழந்த நவ நிதியங்களும், தாம் தஞ்சம் அடைவதற்கான இடம் தேடின. தன் பக்தர் களுக்கு மரக்காலால் செல்வங்களை வாரி வழங்குபவனும், பொருனை நதிக்கரையில் சயனக் கோலத்தில் துயில் கொள்பவனுமான திருமாலைத் துதித்தன.
காக்கும் கடவுளான நாராயணன் அந்நிதியங்களுக்கு புகலிடம் தந்து, அவற்றை அரவணைத்து பள்ளி கொண்டான். நிதிகளைத் தன் பக்கத்தில் வைத்து பாதுகாப்பளித்து அதன் மீது சயனம் கொண்டதால், வைத்த மா நிதியின் மீது சயனம் கொண்டதால் ‘வைத்த மாநிதிப் பெருமாள்’ என்ற பெயர் பெற்றார். நிட்சயபவித்ரன் என்றாலும் அதே பொருளாகும். நிதியங்கள் எல்லாம் இங்கு வந்து தீர்த்தத்தில் மூழ்கி தங்களைத் தூய்மைப் படுத்திக்கொண்டதால், இங்குள்ள தீர்த்தத்திற்கு ‘நிதித் தீர்த்தம்’ என்று பெயர் வழங்கப்படலாயிற்று.
குபேரன் பரமசிவனின் பாதத்தில் விழுந்து மன்னிப்பு கேட்டான். சிவனோ, பார்வதியிடம் கேட்கச் சொன்னார். உமையவளிடம் தான் செய்த பாவத்தை மன்னிக்குமாறு வேண்டினான். உமையாளோ இட்ட சாபம், என்னால் மீளப் பெற முடியாது. தாமிர பரணி நதிக் கரையில் தர்ம பிசுனத்தலத்தில், உன் நவ நிதியங்களும் திருமாலிடம் தஞ்சம் அடைந்துள்ளன. திருமாலும் அதன் மீது சயனித்துள்ளார். நீயும் அத்தலம் சென்று இறைவனை வேண்ட உன் செல்வம் திரும்பக் கிடைக்கும்’ என்றாள் அன்னை பார்வதி.
பகுதி நிதி பெற்ற குபேரன் :
திருக்கோளூர் வந்த குபேரன் வைத்தமாநிதிப் பெருமாள் குறித்து கடும் தவம் மேற்கொண்டான். ஒரு மாசி மாதம் சுக்லபட்ச துவாதசியில் குபேரனுக்கு பெருமாள் காட்சி கொடுத்தார்.
‘நீ நிதியங்களுக்குப் பொருப்பாளனாக இருந்தாய். உன் குரூர எண்ணத்தால் அவை உன்னை விட்டு நீங்கின. முழு செல்வமும் உடனே உன்னிடம் தர இயலாது. தரும் செல்வம் கொண்டு பணிகளைத் தொடர்ந்து வா. நீ யார், யாருக்கு இந்த செல்வங்கள் சென்று சேர வேண்டு மென்று விரும்புகின்றாயோ, அவர்களிடம் நானே நேரில் சேர்ப்பேன்’ என்றார்.
திருமால் தந்த பொறுப்பையும், பொருளையும் பெற்றுக் கொண்டு மகிழ்ச்சியுடன் இருப்பிடம் திரும்பினான் குபேரன். அந்த செல்வங்களை ஒரே இடத்தில் நிலைத்து இல்லாமல், எல்லோருக்கும் பரவலாகக் கிடைக்கும் வகையில் அவற்றை லட்சுமிதேவியிடம் பொறுப்பாக ஒப்படைத்தான்.
குபேரனும், தர்ம குப்தனும் மீண்டும் தங்கள் செல்வங்களைப் பெற்றது போல், மக்களும் தாங்கள் இழந்த செல்வத்தை பெறுவதற்கு, மாசி மாதம் சுக்லபட்ச துவாதசியில் வந்து குபேர தீர்த்தத்தில் நீராடி வைத்தமாநிதி பெருமாளை வழிபாடு செய்கின்றனர்.
இத்தலத்தில் பெருமாள் செல்வம் அளந்ததால், தானியங்கள் அளக்கும் அளவு மரக்காலைத் தன் தலைக்கு வைத்து படுத்திருக்கிறார். மரக்காலைத் தலைக்கு வைத்து, கையில் அஞ்சனம், மை தடவி நிதி எங்கு எவ்வளவு உள்ளது என கணக்குப் பார்த்து அடுத்து செய்ய வேண்டியதை பார்த்துக் கொண்டிருப்பதாகக் கூறப்படுகிறது. இவ்வூர் மதுரகவி ஆழ்வாரின் அவதாரத் தலம் ஆகும். மதுரகவி ஆழ்வார் நம்மாழ்வாரையே குருவாக தெய்வமாகக் கொண்டவர்.
அவரின் பாசுரங்கள் கண்ணி நுண் சிறு தாம்பு எனத் தொடங்கும் 11 பாசுரங்களிலும் நம்மாழ்வாரைக் குறித்தே பாடியுள்ளார். கோவிலுக்குள் நுழைந்ததும் கொடிமரம், அடுத்து பலிபீடம் ஆகியவற்றுடன் மகா மண்டபம், முன் மண்டபம், அர்த்த மண்டபம் அமைந்துள்ளன.
கருவறையில், திருக்கோளூர் அண்ணல் கிடந்த கோலத்தில் எல்லோருக்கும் படி அளக்கிறார். தினமும் 5 கால பூஜை நடைபெறும் இத்திருக்கோவிலில் ஒவ்வொரு மங்கள வாரம் எனப்படும் செவ்வாய்க்கிழமை, புதன், வெள்ளி, சனிக்கிழமைகள் பொதுமக்களால் வார சிறப்பு நாட்களாகக் கொண்டு வணங்கப்படுகின்றன.
தினமும் காலை 7.30 மணி முதல் பகல் 12 மணி வரையும், மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரையும் கோவில் நடை திறந்திருக்கும்.

குழந்தை இல்லாதவர்கள் இங்குள்ள முருகனை ஆறு மாதங்கள் தொடர்ந்து சஷ்டி விரதம் இருந்து தேன் அபிஷேகம் செய்து வழிபட்டால் குழந்தை பாக்கியம் கிடைக்கும் என நம்பப்படுகிறது.
சுவாமி : அனலாடீஸ்வரர் (சிவன்).
அம்பாள் : திரிபுரசுந்தரி.
மூர்த்தி : அப்புலிங்கம், பிருத்விலிங்கம், லக்ஷ்மி, தண்டபாணி.
தீர்த்தம் : ஈஸ்வர தீர்த்தம்.
தலவிருட்சம் : வில்வம் மரம்.
கோவில் வரலாறு :
தாரகாசூரன் என்ற அரக்கனுக்கு வித்யுன்மாலி, தாரகாட்சன், கமலாட்சன் என்ற மூன்று புதல்வர்கள் இருந்தனர். தனது வம்சாவளி தொழிலான தேவர்கள், மனிதர்களை துன்பப்படுத்தும் பணியை அவர்களும் தொடர எண்ணினர். இதற்காக கடுமையான தவம் புரிந்து பிரம்மனிடம் வரங்களைப் பெற்றார்கள். அதன்வாயிலாக பொன் மற்றும் வெள்ளியால் ஆன அரண்கள் அமைத்துக்கொண்டனர்.
மேலும் ஆகாயத்தில் சஞ்சரிக்கும் தன்மை கொண்டவர்களாய், பல இடங்களுக்கும் பறந்து சென்று மூவுலகங்களையும் துன்பத்தில் ஆழ்த்தினர். அந்தத் துன்பத்தை பொறுத்துக்கொள்ள முடியாத தேவர்களும், முனிவர்களும் சிவபெருமானிடம் முறையிட்டனர்.
அவர்கள் வேண்டுதலுக்கு செவிசாய்த்த சிவபெருமான், பூமியை தேராகவும், சந்திர– சூரியரை குதிரைகளாகவும், பிரம்மனை சாரதியாகவும், மகா மேருமலையை வில்லாகவும், ஆதிசேஷனை வில் நாணாகவும், திருமாலை வாயுவாகிய சிறகாக அமைத்து, அக்னியை முனையாக கொண்ட அம்பாகவும், மற்ற தேவர்களை போர்க் கருவிகளாகவும் அமைத்துக் கொண்டு போர்க்கோலத்துடன் புறப்பட்டார். அங்கு மூன்று அசுரர்களுடன் போரிட்டு, அவர்களது அரண்களை முதலில் அழித்து, பின்னர் அவர்களையும் சம்ஹாரம் செய்தார்.
ஈஸ்வரி தீர்த்தம் :
அப்போது சிவபெருமான் விட்ட அம்பின் பொறி தொட்டு சென்ற இடம் ‘துவஷ்டபுரி’ என்று வழங்கப்பட்டது. அதுவே தற்போது தொட்டியம் என்று அழைக்கப்படுகிறது. சிவபெருமான் இந்த திரிபுரசம்ஹாரத்திற்கு புறப்பட்டு வந்த போது, இத்திருத்தலத்தில் பிரம்மன் யாகம் ஒன்றை செய்து கொண்டிருந்தார். அந்த யாக குண்டத்தில் சிவ பெருமான் நர்த்தனம் செய்த காரணத்தால் வட மொழியில் ‘அக்னி நர்த்தீஸ்வரர்’ என்று அழைக்கப்பட்டார்.
அதுவே தற்போது அனலாடீஸ்வரர் என்ற திருநாமத்தோடு விளங்குகிறது. சிவபெருமான் நர்த்தனம் புரிந்த யாககுண்டம், தற்போது ‘ஈஸ்வரி தீர்த்தம்’ என்ற பெயரில் உள்ளது. இந்த தீர்த்தம் அம்மன் சன்னிதிக்கு முன்பாக அமைந்துள்ளதால், அம்பாள் திரிபுரசுந்தரியாக பக்தர்களுக்கு அருள்புரிந்து வருகிறாள். பிரம்மன் இங்கு யாகம் செய்ததால் பிரம்மபுரம் என்றும், மத்திய மலையை அடுத்துள்ளதால் மத்தியாசலஷேத்திரம் என்றும், திரிபுரங்களையும் அழித்த காரணத்தால் திரிபுர சம்ஹார ஷேத்திரம் என்றும் அழைக்கப்படுகிறது. சிவபெருமான் செய்த அட்ட வீரட்டங்களில் எட்டு வீர செயல்களில் திரிபுர தகனமும் ஒன்று. அது இத்தலத்தில் நிகழ்ந்ததாக கூறப்படு கிறது.
சம்ஹார மூர்த்தி :
இதை ஆன்றோர்கள் பல பாடல்களில் சுட்டிக் காட்டி இருக்கின்றனர். இதன் அடையாளமாக இந்த ஆலயத்தில் திரிபுர சம்ஹார உற்சவமூர்த்தி, இடது கையில் வில்லை வளைப்பது போலவும், வலது கை விரல் அம்பு விடுவது போலவும் காட்சி தருகிறார். அனலாடீஸ்வரர் மற்றும் திரிபுரசுந்தரி சன்னிதிகள் அருகருகே அமைந்து சக்தியும் சிவமுமாக காட்சியளிப்பதாலும், சப்த கன்னிகள் வழிபட்டதாலும், பிரம்மன் செய்த யாககுண்டமே தீர்த்தமாக விளங்குவதாலும், இங்குள்ள அம்பாளை வணங்குவதால் உடலுக்கும், உள்ளத்திற்கும் வலிமை சேர்ப்பதுடன் குளிர்ச்சியை ஏற்படுத்துவதாக கூறப்படுகிறது.
இங்குள்ள ஈஸ்வரி தீர்த்தமே ஒரு காலத்தில் இப்பகுதி மக்களுக்கு பிணி போக்கும் மருந்தாக இருந்து வந்துள்ளது. மேலும் இங்குள்ள சிவபெருமானை விபத்து மற்றும் தீக்காயமடைந்தவர்கள் வழிபட்டால் உடனடியாக பலன் கிடைப்பது உறுதி. இங்கு காரண ஆகம முறைப்படி பூஜைகள் நடைபெற்று வருகிறது. இக்கோவிலில் நவக்கிரகத்திற்கு அருகில் உள்ள உயரமான கால பைரவர் சிலை மிகவும் சிறப்பு பெற்றதாக கூறப்படுகிறது.
காரணம் தேய்பிறை அஷ்டமியில் விளக்கேற்றி பூஜை செய்தால் வழக்கு, பில்லி, சூனியம் போன்றவைகளிடமிருந்து மீண்டு மனதிற்கு நிம்மதியளிப்பதாகவும் இங்கு வள்ளி தெய்வானையுடன் முருகன் சுப்ரமணியராக அருள்புரிந்து வருகிறார். குழந்தை இல்லாதவர்கள் இங்குள்ள முருகனை ஆறு மாதங்கள் தொடர்ந்து சஷ்டி விரதம் இருந்து தேன் அபிஷேகம் செய்து வழிபட்டால் குழந்தை பாக்கியம் கிடைக்கும் என நம்பப்படுகிறது.
நடைதிறப்பு : காலை 8:00 மணி முதல் மதியம் 12:00 வரை, மாலை 4:00 மணி முதல் இரவு 8:00 வரை.
திருவிழாக்கள் : சூரசம்ஹார நிகழ்ச்சி, சிவராத்திரி, நவராத்திரி, வைகாசிமாத விழா ஆகியவை சிறப்பாக கொண்டாடப்படும்.
திருச்சியிலிருந்து சேலம் செல்லும் வழியில் 52 கிலோ மீட்டர் தூரத்திலும், நாமக்கல்லில் இருந்து திருச்சி செல்லும் வழியில் 32 கிலோ மீட்டர் தூரத்தில் தொட்டியம் நகரில் இக்கோவில் உள்ளது.
கோயில் முகவரி :
அருள்மிகு அனலாடிஸ்வரர் திருக்கோவில்,
தொட்டியம்,
திருச்சி மாவட்டம்.
தொலைபேசி எண் : 04326 - 254338.

பூவுலகத்தில் முதல் ‘கருமாற்றம்’ செய்து, இன்றைய நவீன தொழில்நுட்பத்திற்கு வித்திட்டவள், திருக்கருகாவூரில் வீற்றிருக்கும் கர்ப்பரட்சாம்பிகை என்னும் கருக்காத்த நாயகி அம்மன்.
முன்பொரு காலத்தில் சோழ நாட்டில் உள்ள வெட்டாற்றின் தென் கரையில் நிருத்துவர் என்ற முனிவர், தனது மனைவி வேதிகை என்பவருடன் இல்லறம் நடத்தி வந்தார். இந்த நிலையில் வேதிகை கருவுற்றாள். ஒரு நாள் மனைவியை ஆசிரமத்திலேயே விட்டு விட்டு, நிருத்துவ முனிவர் மட்டும் வெளியே சென்றிருந்தார். அந்த நேரம் பார்த்து ஊர்த்துவ பாதர் என்னும் முனிவர், அந்த ஆசிரமத்திற்கு வந்து உணவு கேட்டார்.
கருவுற்றிருந்த வேதிகை உடல் சோர்வு காரணமாக எழுந்து வருவதில் கொஞ்சம் தாமதம் ஏற்பட்டது. இதை அறியாத ஊர்த்துவ பாதர், வீட்டில் இருந்த பெண் தன்னை அலட்சியப்படுத்தியதாக எண்ணி, சாபமிட்டு விட்டுச் சென்று விட்டார். முனிவரின் சாபம் காரணமாக வேதிகையின் கரு கலைந்தது. இதனால் வேதிகை செய்வதறியாது திகைத்தாள். பின்னர் தான் நித்தம் வணங்கும் அம்பிகையிடம் தனது நிலை குறித்து வேண்டி முறையிட்டாள்.
அன்னையும் காக்கும் கடவுளாக எழுந்தருளி, வேதிகையின் உடலில் இருந்த அகன்ற கருவை, ஒரு குடத்துக்குள் வைத்து ஆவாகனம் செய்து, முழுக் குழந்தையாக உருவாகும் நாள்வரை காத்தாள். முழுக் குழந்தையாக ஜனித்ததும், அந்தக் குழந்தைக்கு ‘நைதுருவன்’ எனப் பெயரிட்டு, பெற்றோரிடம் சேர்த்தாள் அம்பிகை.
இவ்வாறு பூவுலகத்தில் முதல் ‘கருமாற்றம்’ செய்து, இன்றைய நவீன தொழில்நுட்பத்திற்கு வித்திட்டவள், திருக்கருகாவூரில் வீற்றிருக்கும் கர்ப்பரட்சாம்பிகை என்னும் கருக்காத்த நாயகி அம்மன்.
இந்த ஆலயத்தில் கிழக்கு பார்த்தபடி ராஜகோபுரமும், தெற்கில் நுழைவு வாசலும் உள்ளன. உள்ளே நுழைந்ததும் தென்புறமும், பின்புறமும் நந்தவனங்களும், வடக்கே வசந்த மண்டபமும் காணப்படுகின்றன. சுவாமி கோவிலுக்கு முன்புறம் கொடிமரம், பலிபீடம், நந்தி இருக்கின்றன.
முல்லை வன நாதர் :
முல்லைக் காடாக இருந்த இந்தத் திருத்தலத்தில், சுயம்புவாக உருவான இறைவன் வீற்றிருந்து அருள்பாலிக் கிறார். இத்தல இறைவன் வடமொழியில் மாதவிவேனேஸ்வரர் என்றும், தமிழில் முல்லை வன நாதர் என்றும் அழைக்கப்படுகிறார். இங்குள்ள மூலவருடையது, புற்று மண்ணால் ஆன சிவலிங்கத் திருமேனியாகும். சிவலிங்கம் மீது முல்லைக் கொடிகள் படர்ந்திருந்த வடுக்கள் இப்போதும் காணப்படுகின்றன. புற்றுமண்ணால் ஆனவர் என்பதால், மூலவருக்கு அபிஷேகம் செய்யப்படுவதில்லை. புனுகு சட்டம் மட்டுமே சாத்தப்படுகிறது. அவரது சன்னிதிக்கு வலதுபுறம் உளிபடாத சுயம்புவாக, கற்பக விநாயகர் காட்சி தருகிறார்.
சுவாமி சன்னிதிக்கு இடது புறத்தில் கருக்காத்த நாயகி அம்மன் தனிக் கோவிலில் எழுந்தருளியிருக்கிறார். மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவிலைப் போலவே, இந்த ஆலயத்திலும் அம்மனே பிரதானமாக உள்ளார். அம்மன் நின்ற கோலத்தில் கருணையை கண்களில் தாங்கியபடி அருள்பாலிக்கிறார். அம்மன் கோவிலுக்கு தனியாக ஒரு திருச்சுற்றும், எதிரே பெரிய மண்டபமும் அமைக்கப்பட்டுள்ளது.
சோமாஸ்கந்தர் :
இறைவன் – இறைவி கோவில்களுக்கு இடையில், முருகப்பெருமான் தனி சன்னிதியில் அருள்பாலிக்கிறார். வள்ளி– தெய்வானை இருபுறம் நிற்க, ஆறுமுகனாக, முருகப்பெருமான் வீற்றிருக்கிறார். சுவாமி, அம்பாள் சன்னிதிகளுக்கு இடையில் முருகப்பெருமான் சன்னிதி அமைந்துள்ளதால், இந்த ஆலயம் சோமாஸ்கந்தர் தத்துவத்துடன் விளங்குகிறது.
திருக்கோவிலின் தல விருட்சமான முல்லைக்கொடி, சண்டிகேஸ்வரர் சன்னிதிக்கு அருகில் மட்டுமின்றி, திருக்கோவிலின் வெளிச் சுற்றுப் பகுதியிலும், நந்தவனங்களிலும் இருப்பதைப் பார்க்கும்போது, இந்தத் தலம் முற்காலத்தில் முல்லை வனமாக இருந்திருப்பதை உறுதி செய்கிறது.
கோவிலுக்கு எதிரே அமைந்துள்ள திருக்குளம், ‘ஷீரகுண்டம்’ (பாற்குளம்) என்று பெயர் பெற்று திகழ்கிறது. இதற்கு தெய்வப் பசுவான காமதேனுவின் பால் கலந்த குளம் என்பது பொருள் ஆகும்.
தேவாரத் தலம் :
சைவ சமயக் குரவர்களான திருஞான சம்பந்தர், தனது 11 பதிகங்களிலும், திருநாவுக்கரசர் ‘திருத்தாண்டக’ப் பாடல்களிலும், சுந்தரர், ‘ஊர்த் தொகை’யிலும் இந்தத் திருத்தலத்தைப் பற்றி பாடியுள்ளனர்.
‘வெந்தநீறு மெய்பூசிய வேதியன்
சிந்தைநின்ற வருள் நல்கிய செல்வந்தன்
கந்தமெளவல் கமழும் கருகாவூர் எம்
எந்தை வண்ணம் எரியும் எரிவண்ணமே’.
என்பது சம்பந்தரின் தேவார வெள்ளத்தில் ஒரு தேன் துளியாகும். சிவனை செந்தீ வண்ணத்தானாகவே, சம்பந்தர் காணும்போது, அப்பர் மட்டும் சும்மா இருப்பாரா? ‘குருகு, வைரம், அமிர்தம், பாலின் நெய் பழச்சுவை, பரஞ்சோதி’ என அவர் பங்குக்கு இத்தல இறைவனை புகழ்கின்றார்.
குழந்தைச் செல்வம் :
உலக மக்களுக்கு எவ்வளவு செல்வம் இருந்தாலும், மழலைச் செல்வம் இல்லை என்றால் அது வெற்று வாழ்க்கை ஆகிவிடும். ஏழையாக இருந்தாலும், பணக்காரராக இருந்தாலும் அந்தக் குடும்பத்துக்கு குழந்தைப் பேறுதான் முதன்மையானதாக கருதப்படுகிறது. திருமணமாகி பல ஆண்டு களாகியும் கருத்தரிக்காதவர்கள், கருத்தரித்தாலும் உடனுக்குடன் அது தங்காமல் சிதைந்து போவது, தாய்க்கும், குழந்தைக்கும் பிரச்சினை ஏற்படுவது.. இப்படி எத்தனையோ உள்ளன.
மருத்துவ உலகம் இதில் எவ்வளவோ முன்னேறி இருக்கிறது என்றுதான் சொல்ல வேண்டும். இருப்பினும் அத்தகைய மருத்துவத் துறையைச் சேர்ந்த மருத்துவர்களே, சில நேரங்களில் மனித சக்தி, மருத்துவ சக்தியை விட தெய்வ சக்தி ஒன்றுள்ளது என்று நம்புகிறார்கள். தம்மை நம்பி வந்தவர்களுக்கும் வழிகாட்டுகிறார்கள். அப்படி தெய்வ சக்தியை நம்பும் மக்களுக்கு, பலனளிக்க எத்தனையோ ஆலயங்கள் இருப்பினும், திருக்கருகாவூர் கருக்காத்த நாயகி அம்மன் கண்கண்ட தெய்வமாக விளங்குகிறாள்.
இந்தத் திருக்கோவில் அமைந்திருக்கும் ஊரில் வசிக்கும் பெண்களுக்கு, கருச்சிதைவு ஏற்பட்டதில்லை என்று உறுதியுடன் சொல்கிறார்கள். குழந்தைப் பேறு வேண்டியும், சுகப்பிரசவம் நடைபெற வேண்டியும் தமிழகம் மட்டுமின்றி, பிற மாநிலங்களில் இருந்து பக்தர்கள் வந்து போகிறார்கள்.
குழந்தைப் பேறு இல்லாதவர்கள் இங்கு வந்து, அம்பிகையில் திருப்பாதத்தில் வைத்து மந்திரித்துக் கொடுக்கப்படும் நெய்யை, 48 நாட்கள் தொடர்ந்து இரவில் சாப்பிட்டு வந்தால் நல்ல பலன் உண்டு. அதே போல கருவுற்ற பெண்கள் சுகப் பிரசவம் அடைய, அம்பிகையின் அருள்பெற்ற விளக்கெண்ணெயை, அடிவயிற்றில் தடவிக்கொள்வது உரிய பலனைத் தரும் என்பது நம்பிக்கை.
திருமணம் நடப்பதற்கும், திருமணமாகி கருத்தரிப்பதற்கும் பெண்கள் இந்தத் திருக்கோவிலுக்கு நேரில் வந்து, அம்பாள் சன்னிதியில் உள்ள வாசல்படியை நெய்யால் மெழுகி கோலமிட்டு அர்ச்சனை செய்து வழிபட்டுச் செல்கிறார்கள். நேரில் வர இயலாதவர்களுக்கு, தபால் மூலம் பிரசாதம் அனுப்பும் திட்டமும் கோவில் நிர்வாகத்தால் செயல்படுத்தப்படுகிறது.
நன்றிக் கடன் :
பக்தர்களின் பிரார்த்தனை பலித்ததும், தம்பதி சமேதராகவும், தாய் தனது குழந்தையை ஏந்திக் கொண்டும் ஆலயத்திற்கு வருகிறார்கள். பின்னர் அம்பாளின் சன்னிதிக்கு வந்து தங்களின் சக்திக்கேற்ப கற்கண்டு, வாழைப்பழம், பணம், சர்க்கரை போன்றவற்றை எடைக்கு எடை துலா பாரம் தருகிறார்கள். மேலும் அம்பாளுக்கு அபிஷேக, ஆராதனை செய்வதும், புடவை சாத்துவதும் திருக்கோவிலில் நாளும் காணக்கூடிய அற்புதமான காட்சிகளாகும். அம்பிகை சன்னிதியிலேயே ஒரு துலாக் கோல் இருக்கிறது.
சுயம்புவான முல்லைவன நாதருக்கு, புனுகு சட்டம் சாத்தி வழிபட்டால், தோஷம் நிவர்த்தியாகும். குறிப்பாக தோல் நோய் நீங்கும் என்பதும் அனுபவப்பட்டவர்களின் வாக்கு.
அமைவிடம் :
தஞ்சாவூரில் இருந்து கும்பகோணம் செல்லும் சாலையில், பாபநாசத்தில் இருந்து தெற்கே 6 கிலோமீட்டர் தொலைவிலும், தஞ்சாவூர்– நாகப்பட்டினம் நெடுஞ்சாலையில் சாலியமங்கலத்திற்கு வடக்கே 10 கிலோமீட்டர் தொலைவிலும், விருத்த காவிரி என்னும் வெட்டாற்றின் கரையில் அமைந்துள்ளது திருக்கருகாவூர் திருத்தலம். பஞ்ச ஆரண்யத் தலங்களில் முதன் முதலில் தரிசிக்க வேண்டிய தலமாகவும், சனத்குமார முனிவரால், நாரதருக்கு எடுத்துச் சொல்லப்பட்ட பெருமைக் குரியத் தலமாகவும் இந்த ஆலயம் விளங்குகிறது.

இவ்வாலயத்தில் மகாவிஷ்ணு குளத்தின் மையப் பகுதியில் பின்னி பிணைந்த நிலையில் உள்ள 11 தலை ஆதி சேஷனில் சயன கோலத்தில் காட்சி அளிக்கிறார்.
நேபாள தலைநகர் காத்மண்டுவில் உள்ள மிகவும் பிரபலமான ஆலயம் ஸ்ரீ அனந்த சயன நாராயணர் ஆலயமாகும். இது புத்த நீலகண்டர் ஆலயம் மற்றும் ஜல் நாராயணர் ஆலயம் என்றும் இங்குள்ள மக்களால் அழைக்கப்படுகிறது.
இவ்வாலயத்தில் மகாவிஷ்ணு குளத்தின் மையப் பகுதியில் பின்னி பிணைந்த நிலையில் உள்ள 11 தலை ஆதி சேஷனில் சயன கோலத்தில் காட்சி அளிக்கிறார். இயற்கை நீரூற்றின் மீது துயில் கொள்ளும் அனந்த சயன நாராயணர் தன்னை நாடி வரும் பக்தர்களுக்கு மனதில் அமைதியை வழங்குவதற்காக இவ்வாறு காட்சி அளிப்பதாக பக்தர்கள் கூறுகின்றனர்.
காத்மண்டுவில் இருந்து சுமார் 8 கிலோ மீட்டர் தொலைவில் சிவபுரி மலை தொடரின் அடிவாரத்தில் இக்கோயில் அமைந்துள்ளது. இக்கோயிலின் மையப் பகுதியில் அமைந்துள்ள பிரம்மாண்ட குளத்தில் 5 மீட்டர் நீளமுள்ள கருங்கல்லால் ஆன பாம்புகளின் மீது புத்தநீலகண்டர் சேவை சாதிக்கின்றார்.
இந்த மகாவிஷ்ணு சிலை ஒரே கருங்கல்லால் வடிவமைக்கப்பட்டதாகும். ஒரு சமயம் வயதான கணவன் மனைவி இருவரும் தங்களின் விவசாய நிலத்தில் உழுது கொண்டிருந்த போது பூமிக்கு அடியில் இருந்து இந்த பிரம்மாண்ட சிலை வெளிப்பட்டுள்ளது. ஊர்காரர்களை அழைத்து வந்து காட்ட முயன்ற போது அச்சிலை மாயமாக மறைந்து விட்டதாம்.
பின்னர் சிறிது நாட்களுக்கு பிறகு மீண்டும் அந்த விவசாயி தனது நிலத்தை உழுது தொண்டிருந்த போது மீண்டும் பூமிக்கு அடியில் இருந்த வெளிப்பட்ட சிலையில் இருந்து ரத்தம் வழியத் துவங்கியதாக இக்கோயில் குறித்த வரலாறு கூறப்படுகிறது. இருப்பினும் இக்கோயிலில் அமைந்துள்ள மகாவிஷ்ணு சிலை சுமார் 1000 ஆண்டுகள் பழமையானதாக இருக்கும் என நம்பப்படுகின்றது. இவ்வளாகத்தில் ருத்ராக்ஷ மரமும் உள்ளது.
மகாவிஷ்ணு சிலை,13 மீட்டர் நீளமுள்ள குளத்தில் 5 மீட்டர் நீளத்தில் கால்களை குறுக்காக வைத்தபடி சயன கோலத்தில் உள்ளது. நான்கு கைகளிலும் முறையே சங்கு, சக்கரம், கதை மற்றும் தாமரை மலர் ஆகியன உள்ளன. இந்த சிலை சுமார் 7 அல்லது 8ம் நூற்றாண்டை சேர்ந்ததாக இருக்கும் என தெரிவிக்கப்படுகிறது. சிவனைப் போன்று பழமையான நீல நிறம் கழுத்தில் காணப்படுவதால் இவர் புத்தநீலகண்டர் என்ற பெயரால் அழைக்கப்படுகிறார். இவ்வாலயத்தில் விநாயகருக்கு ஒரு தனி சன்னதி உள்ளது. மற்றும் திறந்த வெளி பசுபதி நாதர் மேடையும் உள்ளது.
காத்மாண்டுவில் உள்ள ஆலயங்கள் அனைத்திலும், ஏன் பல வீடுகளிலும் கூட கதவுகள் அருமையான மர வேலைப்பாடுகளுடன் காணப்படுகின்றன. எல்லா கதவுகளிலும் சூரிய சந்திரர்களையும், புத்த மதத்தினரின் எட்டு மங்கலப்பொருள்களையும் காணலாம்.
இந்த ஜல் நாராயணர் திறந்த வெளியில் தான் உள்ளார். மேற்கூரை எதுவும் இல்லை. ஒரு மஞ்சள் விதானம்தான் இவரை சூரியனிடமிருந்து காப்பாற்றுகின்றது. பக்தர்கள் இவரது திருவடிகளில் நின்று இவரை வணங்குகின்றனர்.

ஜாதகத்தில் வாகன விபத்து கண்டங்கள் உள்ளவர்கள் இத்தலத்து இறைவனை வணங்கி வழிபடின் விபத்து கண்டங்களிலிருந்து இறைவனால் காக்கப்படுவர் என்பது திண்ணம்.
வேலூர் மாவட்டத்தில் பாலாற்றங்கரையில் அமைந்த மற்றொரு சிவத்தலம் விரிஞ்சிபுரம். இது ஷீரமாநதி (ஷீரம் என்பதற்கு வடமொழியில் பால் என்று பொருள்) என்றழைக்கப்படும் பாலாற்றின் தென்கரையில் அமைந்துள்ளது. சுமார் 1000 ஆண்டுகள் பழமையானது. இதன் புராணப்பெயர்கள் திருவிரிஞ்சிபுரம், கரபுரம்.
தல சிறப்பு :
மேற்கே சுமார் 12 கி.மீ தொலைவில் சென்னை - பெங்களுரு தேசிய நெடுஞ்சாலைக்கு அருகில் அமைந்துள்ளது. கோவில் தேசிய நெடுஞ்சாலையிலிருந்து சுமார் 1 கி.மீ வடக்கில் அமைந்துள்ளது. அருகிலேயே பாலாறு அமைந்துள்ளது. தேவாரப்பாடல் பெற்ற தலம் என்ற சிறப்பினை உடையது.
இறைவன் : மார்க்கபந்தீஸ்வரர், மார்க்க சகாயர், வழித்துணைநாதர்.
இறைவி : மரகதாம்பிகை.
தல மரம் : பனை மரம்
தீர்த்தம் : பாலாறு, சிம்மதீர்த்தம்
இத்தலம் மிக்க பழமையான ஒன்று. அடி முடி காணும் போட்டியில் பொய் கூறிய பிரம்மாவின் தலை கொய்யப்பட்டவுடன் அவர் இறைவியை வேண்ட, இறைவி இத்தலத்து இறைவனை நோக்கி தவமியற்ற பிரம்மனுக்கு அறிவுரை வழங்கினார். பிரம்மனும் இறைவனை நோக்கி தவமியற்ற பிரம்மனின் சாபம் போக்க பிரம்மனை மனிதனாய் பிறக்க வைக்கிறார் இறைவன். பிரம்மன், சிவசர்மன் என்ற பெயரில் மனிதனாய் பிறக்க தக்க தருணத்தில் வந்து இறைவனே பிரம்மனுக்கு உபதேசம் செய்து ஆட்கொண்டார்.
பிரம்ம உபதேச தலம் :
சிவசர்மன் சிறுவனாக இருந்ததால் லிங்கத்திற்கு (லிங்கம் உயரமாக இருந்ததால்) நீருற்ற முடியவில்லை. சிவசர்மனாக பிறந்த பிரம்மன் தன் ஊழ்வினை தவற்றை உணர்ந்து, இறைவனிடம் முடியை காண இயலவில்லை என்று வேண்ட அவரும் தனது முடியை சாய்ந்து கொடுக்கிறார். அண்ணாமலையில் இறைவனின் முடியை காணாத பிரம்மா இத்தலத்தில் தான் இறைவனின் முடியை கண்டார். லிங்கம் சுயம்பு லிங்கமாக சற்று முன்னோக்கி சாய்ந்துள்ளது. பிரம்மா உபதேசம் பெற்ற தலம்.
தல பெருமைகள் :
இத்தலத்து இறைவனை வணங்கிடில் கல்வி, கேள்விகளில் சிறந்து விளங்குவர் என்பது திண்ணம். இத்தலத்து இறைவன் சிவசர்மனாகிய பிரம்மனுக்கு உபநயனம் செய்வித்து ஒரு முகூர்த்த காலத்தில் 4 வேதங்கள், 6 சாஸ்த்திரங்கள், 18 புராணங்கள் மற்றும் 64 கலைகளையும் போதித்து ஆட்கொண்டவர். பிரம்மனுக்கு சிவபெருமானே சிவ தீட்சை அளித்த தலம் என்ற சிறப்புடையது இத்தலம். நாமும் இத்தலத்தில் சிவ தீட்சை பெற்றால் அதை விட பெரிய பேறு இவ்வுலகில் இல்லை.
இத்தலத்து இறைவன் அறிவின் சிகரம். இத்தலத்து இறைவன் பிரம்மனுக்கு போதித்து வழிகாட்டியதால் மார்க்க சகாயர் என்றழைக்கப்படுகிறார். இத்தலத்து இறைவன் மிளகு வணிகருக்கு வழித்துணையாக சென்றதால் வழித்துணை வந்த நாதர் என்றும் அழைக்கப்படுகிறார்.
மைசூர் நகர வணிகர் ஒருவர் காஞ்சி மாநகர் சென்று மிளகு விற்பது வழக்கம். அவ்வாறு விற்க செல்லும் வேளையில் இத்தலத்தில் அந்த வணிகர் இரவு தங்க நேரிட்டது. இத்தலத்து இறைவனை வழித்துணையாக வரும் படி வேண்ட, இறைவனும் வேடன் வடிவில் வணிகரை பின் தொடர்ந்து சென்று திருடர்களிடமிருந்து காத்தார்.
அதற்கு காணிக்கையாக மூன்று மிளகு பொதிகளை விற்ற பணத்தை காணிக்கையாக செலுத்தினார் அந்த வணிகர். வணிகரின் கனவில் இறைவன் தனது திருவிளையாட்டை எடுத்துரைக்க இறைவனின் அருளில் நெகிழ்ந்தார் வணிகர். இப்போதும் அதன் நினைவாக ஒவ்வொரு ஆண்டும் “பார் வேட்டை” என்ற பெயரில் கோவிலில் இச்சம்பவத்தை நடித்துக் காட்டுவர். எனவே தான் இத்தலத்து இறைவனுக்கு மார்க்கபந்தீஸ்வரர் என்ற பெயரும், வழித்துணை வந்த நாதர் என்ற பெயரும் ஏற்பட்டது.
அழகிய தோற்றம் :
இத்தலத்து வடக்கு பக்க கோபுர வாயில் எப்போதும் திறந்தே இருக்கும். இதன் வழியாக தேவர்கள் தினமும் இறைவனை வழிபடுவதாக செய்தி. திருவாரூர் தேரழகு. திருவிரிஞ்சை மதிலழகு. கோவிலின் மதில் சுவர்கள் உயரமானவை, அழகானவை. இத்தலத்தில் மூன்று பைரவர்கள் அருள் பாலிக்கின்றனர். இத்தலத்து பைரவர்கள் பற்றி தனியே ஒரு பதிவு வெளியிடப்படும். இத்தலத்து கோவிலில் அழகிய சிற்ப வேலைப்பாடுகள் அமைந்த மண்டபங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
தல மரம் :
இக்கோவிலில் 108 லிங்கங்கள் ஒரே லிங்கத்திலும், 1008 லிங்கங்கள் ஒரே லிங்கத்திலும் செதுக்கப்பட்டுள்ளன. இவற்றை வழிபடின் ஒரே நேரத்தில் 108 மற்றும் 1008 லிங்கங்களை வழிபட்ட புண்ணியம் கிடைக்கும். இத்தலத்தின் மரம் பனை மரம். இம்மரம் ஒரு ஆண்டில் வெண்மையான காய்களையும், மறு ஆண்டில் கருமையான காய்களையும் காய்ப்பது தனி சிறப்பு. தொண்டை மண்டத்தில் பனை மரம் தல விருட்சமாக இருக்கும் தலங்கள் இரண்டு. அதில் ஒன்று விரிஞ்சிபுரம்.
மற்றொன்று திருவண்ணாமலை மாவட்டத்தில் அமைந்திருக்கும் செய்யாறு என்றழைக்கப்படும் திருவத்திபுரம். பண்டைக் காலத்தில் இத்தலமானது 'நைமி சாரண்யம்' என்றழைக்கப்பட்ட முனிவர்கள் கூடும் புண்ணியத்தலமாக விளங்கியது. இறைவன் இறைவியிடம், அம்பிகை கறுப்பு நிறமாய் இருப்பதால் 'ஹே சங்கரீ' என விளையாட்டாக அழைக்க இதனால் கோபமுற்ற இறைவி பாலாற்றின் வடகரையில் பொற்பனங்காட்டினுள் ஐந்து வேள்விக் குண்டங்களை அமைத்து அதன் நடுவே ஒற்றைக்காலில் நின்று தவமிருந்தாள்.
அத்தவத்தின் முடிவில் சிம்மகுளத்தில் நீராடி தனது கருமை நிறம் நீங்கி பொன்னிறம் கொண்ட மரகதவல்லியாக இறைவனின் இடப்பாகத்தில் இடம் கொண்டாள். இதனால் தான் இத்தலத்து மரம் பனை மரமாக உள்ளது. பிரம்மன் சாப விமோசனம் பெற்ற நாள் கார்த்திகை மாதம் இறுதி ஞாயிற்றுக்கிழமை. ஒவ்வொரு ஆண்டும் அதே நன்னாள் இரவில் பெண்கள் அம்பிகை, பிரம்மன் ஆகியோர் நீராடிய சிம்ம குளத்தில் நீராடி ஈர ஆடையுடன் கோவில் மண்டபத்தில் படுத்து உறங்குவர்.
நீராடி ஈர ஆடையுடன் உறங்கும் பெண்களுக்கு எவ்வித குளிரும் தாக்குவது இல்லை என்பது கண்கூடு. இறைவன் இவ்வாறு நீராடிய பெண்களின் கனவில் வந்து பூக்கள், பழங்கள், புத்தாடைகள் ஆகியவற்றினைத் தாங்கியபடி முதியவர் கனவில் காட்சி தந்தால் அப்பெண்கள் விரைவில் கருத்தரிக்கும் பாக்கியத்தினை அடைவர் என்பது திண்ணம். இத்தலத்தின் தீர்த்தம் சிம்ம தீரத்தம் ஆகும். இதில் ஆதிசங்கரர் பீஜாட்சர யந்திரத்தினை அமைத்துள்ளார். இதில் நீராடினால் நீராடுபவர்களை பற்றிய தீய சக்திகள் விலகும் என்பது நம்பிக்கை.
மேலும் ஜாதகத்தில் வாகன விபத்து கண்டங்கள் உள்ளவர்கள் இத்தலத்து இறைவனை வணங்கி வழிபடின் விபத்து கண்டங்களிலிருந்து இறைவனால் காக்கப்படுவர் என்பது திண்ணம். இத்தலத்து இறைவனின் பெருமையை உணர்ந்த வட இந்திய மக்கள் இத்தலத்தை கண்டுபிடித்து வந்து இறைவனை வணங்கி செல்கின்றனர். அடிக்கடி வெளியூர் பயணம் செய்பவர்கள் வணங்கி பயணம் இனிதாக அமைய வேண்ட இறைவன் கண்டிப்பாக வழித்துணையாக வருவான் என்பது திண்ணம்.
போக்குவரத்து வசதி :
தொடர்வண்டி மூலம் வருபவர்கள் காட்பாடி சந்திப்பிலிருந்து இறங்கி புதிய பேருந்து நிலையம் வந்து பின்பு சென்னை - பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் செதுவாலை என்ற இடத்தில் இறங்கி 1 கி.மீ வடக்காக சென்றால் இத்தலத்தை அடையலாம்.
பேருந்து மூலம் வருபவர்கள் புதிய பேருந்து நிலையத்திலிருந்து ஆம்பூர் வழியாக செல்லும் பேருந்துகளில் பயணம் செய்து சென்னை - பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் செதுவாலை என்ற இடத்தில் இறங்கி 1 கி.மீ வடக்காக சென்றால் இத்தலத்தை அடையலாம்.
பழைய பேருந்து நிலையத்திலிருந்து நகர பேருந்துகள் இத்தலத்திற்கு நேரடியாக இயக்கப்படுகின்றன. ஆனால் அவை குறைந்த எண்ணிக்கையில் தான் இயக்கப்படுகின்றன.

இத்தலத்திற்கு அரங்கம், கோவில், போகமண்டபம், பூலோக வைகுண்டம் என்னும் பெயர்களும் உண்டு.
ஆற்றின் நடுவில் அமைந்த இடை குறை துருத்தி (துருத்தி என்றால் ஆற்றின் இடையில் உள்ள தீவு என்று பொருள்படும் ) என வழங்கப்படும். வட மொழியில் இதனை ரங்கம் என்பர். இந்த ஊர் சிறந்த வைணவ தலம். இத்தலம் காவிரி ஆற்றுக்கும், கொள்ளிடம் ஆற்றுக்கும் இடையில் இருப்பதால் திருவரங்கம் என்ற பெயர் பெற்றது.
கோவிலில் எழுந்தருளிய எம்பெருமான் அரங்கநாதர். எம்பெருமான் திருநாமத்தால் திருவரங்கம் என்று பெயர் பெற்றது என்றும் கூறுவர். இத்தலத்திற்கு அரங்கம், கோவில், போகமண்டபம், பூலோக வைகுண்டம் என்னும் பெயர்களும் உண்டு. கல்வெட்டில் இத்திருதலம் வீங்கு நீர் துருத்தி என்று குறிப்பிடப்படுகிறது.
இந்தக் கோயில் எப்பொழுது தோன்றியது என்று எவராலும் சொல்ல முடியவில்லை. சோழர்கள், பாண்டியர்கள், நாயக்க மன்னர்கள், சரபோஜிகள் என்று பலபேர் திருப்பணி செய்த அற்புதமான இடம் இந்த ஸ்ரீரங்கம்.
இந்த கோயிலில் மஹாவிஷ்ணு ரங்கநாதர் என்று பெயர்தரித்து பாம்பணையில் பள்ளி கொண்டிருக்கிறார். அவர் மட்டுமே தனியாக சாய்ந்தபடி படுத்து ஆதிசேஷன் மீது உறங்கி கொண்டிருக்கிறார்.
அது என்ன பாம்பின் மீது படுக்கை? ஏன் கடவுள் பாம்பின் மீது படுக்க வேண்டும்?
சேஷம் என்றால் எஞ்சியது என்று பொருள். எல்லாவற்றையும் ஒதுக்கி கடைசியில் என்ன மிஞ்சுகிறது என்று பார்த்தால் அந்த இடத்திலே இருப்பவர்தான் இறைவன் என்பதே இதன் பொருள்.
உங்களுக்குப் புரியவில்லையா? மறுபடி சொல்கிறேன். நீங்கள் உங்கள் குணம், உங்கள் தொழில், உங்கள் பெயர், உங்கள் குடும்பம், உங்கள் உடம்பு என்பதெல்லம் தள்ளி தான் யார் என்று மனதுக்குள் தேடி, இனி தேட ஒன்றுமில்லை. தேட எதுவுமில்லை என்று சுருண்டு கிடக்கிற மனோபாவம் வந்து, அந்த சுருண்டு கிடக்கிற சக்தியிலே மனம் லயிக்கும்போது அந்த சுருண்டு கிடக்கும் சக்தியின் நடுவே இருக்கின்ற ஒரு சக்தியின் பெயர்தான் இறைவன். இதைக் குறிப்பால் உணர்த்தும்படியாக உவமையாய் சொல்லும்படியாக இந்த திருவுருவம் அமைக்கப்பட்டிருக்கிறது.
பொன்வேய்ந்த அழகிய விமானத்தின் கீழ் காயத்ரி மண்டபத்துக்கு முன்பு கருவறையில் நெய் தீபங்களுக்கு நடுவே அரங்கன் பள்ளி கொண்டிருக்கிறான். அங்கே இறைவன் உறங்குவது போல காட்சி தருகிறான்.
ஆனால் அது தூக்கமல்ல. அது ஒரு யோக நிலை. அரங்கன் அமைதியாக இருக்கிறான். உங்கள் எல்லோரையும் ஆழ்ந்து கவனித்துக் கொண்டு இருக்கிறான். என்ன நடக்கிறது என்று புன்னகை தவழும் முகத்தோடு பார்த்துக் கொண்டிருக்கிறான்.
ஸ்ரீரங்கம் சாதாரண மடமல்ல. அது கோவிலும், கோவில் சார்ந்த பகுதிகளும் கொண்ட கட்டுமஸ்தான மிகப்பெரிய ஒரு நகரம். கோட்டை சுவர்களுக்கு நடுவேயும், உள்ளேயும் சித்திர வீதி, உத்தர வீதி என்று சதுரம் சதுரமாக நகரம் அமைந்திருக்க, இந்த நகருக்கு நடுவே கோயில் இருக்கிறது. சுற்றிலும் வீதிகள், நகரம், நடுவே கோயில் என்று ஸ்ரீரங்கம் மிகச்சிறப்பாக அமைந்திருக்கிறது.
கோயிலுக்குள் நுழைந்ததும் தடதடவென்று உள்ளே ஓடி விடவேண்டாம். கோயிலுக்குள் நுழைய, மண்டபத்தின் இடப்பக்கம் அழகிய கிருஷ்ணர் கோயில் இருக்கிறது. இது சமீபத்தியது. ஆனால் அதிலுள்ள சிற்பங்கள் மிக மிக அற்புதமானவை. உங்கள் கேமராவுக்கு விருந்து படைக்கும் தன்மை உடையவை. அந்த கிருஷ்ணர் கோயிலுக்கு அருகே ஒரு மாடிப்படி இருக்கிறது. அந்த மாடிப்படியில் ஏறிப் போனால் நீங்கள் ஒரு சமதளத்திற்கு வருவீர்கள். அந்த சமதளத்திலிருந்து பார்த்தால், நாலுபக்க கோபுரங்களும், மிகப்பெரிய கோயிலின் மேற்பரப்பும், பொன்வேய்ந்த விமானமும் சூரியவெளிச்சத்தில் தகதகத்து காட்சிதரும்.
மாடியிலிருந்து கீழே இறங்கினால் இடதுபக்கம் சக்கரத்தாழ்வார் சந்நிதி. வலது பக்கம் ராமானுஜருடைய சந்நிதி. சக்கரத்தாழ்வார் இறைவனின் ஆயுதம். தீய சக்திகள் இங்கு உள்ளே நுழைய முடியாது. சக்கரத்தாழ்வாரை வணங்கி நிற்க, நமக்கு தீவினை செய்தவர்கள் அழிந்து போவார்கள். ஏவல், பில்லி சூனியங்கள் விலகிப்போய்விடும் என்று இங்குள்ள மக்கள் நம்புகிறார்கள்
வலதுபக்கம் உள்ள ராமானுஜர் சந்நிதி மிக அற்புதமானது. இங்கே ஒரு சுதை உருவம் நகங்களோடும், கண் புருவங்களோடும், இமைகளோடும், நாசித்துவாரங்களோடும், வடிந்த உதடுகளோடும் அமர்ந்திருக்கிறது. ராமானுஜர் உள்ளே உலோகச் சிலையாய் தன் உடம்பை மாற்றிக்; கொண்டு அமர்ந்துவிட அதன் மீது குங்குமப்பூவால் சாந்து எழுப்பி அவரை பந்தனம் செய்திருக்கிறார்கள் என்று சொல்லப்பட்டாலும், அதை இல்லையென்று மறுக்கிறவர்களும் இருக்கிறார்கள்.
சிலை எப்படி இருப்பினும் ஸ்ரீராமானுஜர் மிகப்பெரிய மரியதைக்குரியவர். இந்து மதத்தின் புரட்சிக்காரர். ஈரமான மனம் உடையவர். இந்துக்களில் எல்லா ஜாதியினரும் வைணவரே என்று ஜாதி, மதபேதமற்று. தான் அறிந்த ஙநமோ நாராயணாங என்ற மந்திரத்தை கோபுரத்தில் ஏறி சகலருக்கும் சொன்ன வள்ளல். ஸ்ரீரங்கம் கோயில் எப்படி நடத்தப்பட வேண்டும் என்று எழுதிவைத்த அற்புதமான ஒரு மகான்.
இவருடைய சரித்திரம் மிக சுவாரஸ்யமானது. இவருடைய சீடர்களின் சரித்திரம் மிக அற்புதமானது. குருபக்திக்கு ஸ்ரீராமானுஜருடைய சீடர்களின் சரித்திரம் நல்ல உதாரணம்.
இந்த இரண்டு சந்நிதிகளையும் தரிசித்து உள்ளே போனால் அற்புதமான கருடமண்டபம் இருக்கிறது. மிக உயரமான கருடர் சிலை இருக்கிறது. அந்த சிலை சுதையால் ஆனது. பெரிய விழிகளும், கூர்மையான மூக்கும், கூப்பிய கைகளும், படபடக்கும் இறக்கையும் கொண்டது. இந்தச் சிலையை உற்றுப் பார்க்க லேசாய் ஒரு பயம் வருவது இயல்பு. இந்த இடத்தில் தத்தை முனி என்பவர் சமாதி கொண்டிருக்கிறார் என்று சொல்லப்படுவதும் உண்டு. அந்த மண்டபம் முழுவதும் அரசர்களின் சிலைகளும், சேனாதிபதிகளின் சிலைகளும் நிறைந்திருக்கும். அங்கிருக்கும் அரசர்களுடைய உருவங்களையும், உடைகளையும், தொப்பிகளையும் வியப்போடு பார்த்தவண்ணம் நீங்கள் இன்னும் உள்ளே நுழையலாம்.
உள்ளே நுழைய வலது பக்கம் பத்து படிக்கட்டுகளுக்கு மேல் ஒரு சிறிய ஆஞ்சநேயர் சிலை அமர்ந்து கைகூப்பிய நிலையில் இருக்கிறது. அந்த ஆஞ்சநேயர் மிகப்பெரிய வரம். எது கேட்டாலும் தருகின்ற சக்தி உடையவர். படிகள் ஏறி அந்த ஆஞ்சநேயரை வலம் வந்து, நமஸ்கரித்து, உங்களுடைய வேண்டுதல்களை அவரிடம் நீங்கள் தெரிவித்துவிட்டு வரலாம்.
கொடிமரம் தாண்டி இடது பக்கம் திரும்பினால் அங்கே கருப்புசாமி சிலை இருக்கும். கருப்புசாமி சிலை மரத்தாலானது. நான்கு மனைவியரோடு பீச்சாங்குழல் கையில் தாங்கி, அவர்களோடு நீர் அடித்து விளையாடுகின்ற இந்தச் சிலை சற்று பின்னப்பட்டிருந்தாலும் அந்த இடத்தின் அதிர்வுகள் மிக அற்புதமானது. அங்கே ஒரு கணம் நின்று கருப்புசாமியை தரிசித்துவிட்டு திரும்ப கோவிலுக்குள் புகுந்து, மண்டபத்தைச் சுற்றிக்கொண்டு வரிசைவழியே நகர்ந்து ரங்கநாதரை தரிசிக்க உள்ளே போனால் காயத்ரி மண்டபம்.
காயத்ரி மண்டபம் தாண்டி ரங்கநாதர் இருக்கின்ற அழகிய கருவறை. ரங்கநாதர் பாதம் முதல் உச்சந்தலை வரை அமைதியாய் தரிசித்துவிட்டு ரங்கா, ரங்கா, ரங்கா, என்று இடையறாது சொல்லி விட்டு பிரகாரத்தை வலம் வந்து கிளி மண்டபத்தில் சற்று நேரம் உட்கார்ந்துவிட்டு, அந்த கிளிமண்டபத்திலிருந்து தெரிகின்ற விமான ரங்கநாதரையும் பார்த்துவிட்டு வெளியே வந்து வெளிச்சுற்று பிரகாரம் வழியாக தாயார் சந்நிதிக்கு நடந்துபோக வேண்டும்.
தாயார் சந்நிதிக்கு நடந்து போகிற வழியில்தான் மிகப்பெரிய யுத்தங்கள் நடந்திருக்கின்றன. அந்நியர்கள் உள்ளே புகுந்து, எவர் எதிர்பட்டாலும் வெட்டிக் கொன்று ரத்தக்களரியான இடம் அது. அந்த இடத்தைத் தாண்டி போகும்போது வழியில் தன்வந்திரியின் சந்நிதி இருக்கிறது.
தன்வந்திரி இந்துமதத்தின் வைத்தியசாஸ்திர நிபுணர். தேவ வைத்தியர். அவரை நமஸ்கரிக்கும்போது உங்கள் உடற்குறை அறவே தீருகிறது. அவரை நமஸ்கரித்து உங்கள் உடல்பிணியை அவருக்கு எதிரே சொல்லி நோய் தீர்க்க வேண்டிக் கொள்ளலாம் அந்த தன்வந்திரியின் வலதுகையில் ஒரு அட்டைப்பூச்சியின் உருவம் இருக்கும். அந்தக் காலத்தில் ரத்தத்தைச் சுத்தம் செய்ய அட்டையை உடம்பில்விட்டு கடிக்கச்செய்து ரத்தத்தை வெளியேற்றுவார்கள். அப்படி கெட்ட ரத்தம் வெளியேற்றுகிறபோது உள்ளே புது இரத்தம் ஊறி உங்கள் உடம்பு சௌக்கியமாவது நிதர்சனம். ஆகவேதான் தன்வந்திரி கையில் மருந்தோடு அட்டையும் வைத்திருக்கிறார்.
தன்வந்திரியின் சந்நிதி தாண்டி உள்ளே போனால் மிக அழகான பெரிய மண்டபம். அங்கே நிறைய பேர் பூ விற்றுக் கொண்டிருப்பார்கள். உள்ளே நுழைந்தால் தாயாரின் சந்நிதி எதிர்ப்படும்.
தாயார் ரங்கநாயகி பொலிவும் அழகும் மிக்கவள். சுடற்தெரிக்கும் ஆபரணங்கள் கொண்டவள். பின்னப்பட்ட பழைய சிலை பின்னால் இருக்க, முன்னே ஒரு சிலை இருக்கும். அதைத் தாண்டி உற்சவருக்குத்தான் கற்பூர ஆரத்தி காண்பிப்பார்கள். உற்சவரை வணங்கி செல்வம் நிறைய வேண்டுமென்று வணங்கிக் கொண்டு வெளியேவந்தால், சிறிய மண்டபம் ஒன்று இருக்கும். உலகத்தினுடைய அற்புதமான காப்பியமான கம்பராமாயணம் அங்குதான் அரங்கேற்றப்பட்டது. கம்ப நாட்டாழ்வார் அங்கு நின்று, தன் பாட்டை உரக்கச் சொல்லி விளக்கியிருப்பார் என்று நினைக்கிற போது அந்த இடத்தை விழுந்து வணங்க உங்களுக்குத் தோன்றும்.
அங்கிருந்து வலமாகச் சுற்றி சந்தன புஷ்கரணி தாண்டிப் போனால் ஈசான்ய மூலையில் ராமருடைய சந்நிதி இருக்கிறது. மிக அழகிய வர்ணங்களால் அந்த சந்நிதியை அலங்கரித்திருக்கிறார்கள். அங்கே எப்பொழுதும் இடையறாது வேதபாராயணம் நடந்து கொண்டிருக்கிறது. சந்நிதியின் உள்ளுக்குள்ளே வரிசையாக பத்து அவதாரங்களையும் சிலைகளாக வைத்திருக்கிறார்கள். எல்லா அவதாரங்களிலும் ஆதிசேஷன் குடைபிடித்துக் கொண்டு இருக்கிறான். மூர்த்திகள் மிக ரம்மியமாக, பார்ப்பதற்கு பரவசத்தை ஏற்படுத்தும் வண்ணம் இருக்கும்.
இந்த ராமர் சந்நிதி மிக முக்கியமான இடம். கோவிலில் வேறு எங்கு தியானம் செய்ய முடியுமோ, முடியாதோ இந்த இடத்திலே நீங்கள் அமைதியாக உட்கார்ந்து நிச்சயம் தியானம் செய்ய முடியும். அருகில் ஒரு தனி அறையும் இருக்கிறது. நீங்கள் கூடுதலாக ஆழ்ந்து தியானம் செய்ய வேண்டுமென்றால் அந்த அறையைத் திறந்து விடுகிறார்கள்.
இல்லையெனில் வேத பாராயணம் செய்யும் இடத்தில்கூட நீங்கள் அமர்ந்து தியானம் செய்யலாம். அடிக்கடி வேள்விகள் நடக்கும் இடமென்றபடியால், தினமும் வேத பாராயணம் செய்கின்ற இடமென்றபடியால் அந்த இடத்தில் கூடுதலாக ஆழ்ந்து தியானம் செய்து உங்களால் ஒரு நல்லநிலைக்குப் போகமுடியும்.
திருச்சி ஜங்ஷனிலிருந்து 10 கி.மீ தூரம். பேருந்து வசதி உள்ளது ஸ்ரீ ரங்கம் இரயில் நிலையத்திலிருந்து 1 கி.மீ தூரத்தில் உள்ளது.

சென்னையில் இருந்து செங்கல்பட்டு செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் சிங்கப்பெருமாள் கோவிலில் இருந்து சுமார் 8 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது சாஸ்திரம்பாக்கம் என்ற திருத்தலம்.
சென்னையில் இருந்து செங்கல்பட்டு செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் சிங்கப்பெருமாள் கோவிலில் இருந்து சுமார் 8 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது சாஸ்திரம்பாக்கம் என்ற திருத்தலம். இங்கு சிவபெருமான் ‘வைத்தீஸ்வரன்’ என்ற திருநாமத்துடன் வீற்றிருந்து அருள்பாலித்து வருகிறார். அம்பாளின் திருநாமம் தையல்நாயகி என்பதாகும்.
ஆலய வரலாறு :
பல ஆண்டுகள் பழமை வாய்ந்த இந்த ஆலயம் காலப்போக்கில் சிதிலமடைந்து, மண் மூடி போய்விட்டது. முட்புதர்கள் அதிகமாக வளர்ந்து பாம்புகள் நடமாடும் இடமாக மாறிப்போனது. இந்த நிலையில் அந்தப் பகுதியில் வாழ்ந்த மனநோய் பாதிக்கப்பட்ட ஒரு இளைஞர், இறைவனின் சக்தியால் மனநோய் தீர்ந்து தீர்க்கமான இளைஞனாக மாறினார். இதையடுத்து அந்த வாலிபர், மண் மூடிப்போயிருந்த சிவலிங்கத்தை வெளியே எடுத்து அபிஷேகம், ஆராதனை செய்து வந்தார்.
இதனைக் கண்ட அந்தப் பகுதி மக்கள், மனநோயால் பாதிக்கப்பட்ட இந்த வாலிபனின் செய்கையைக் கண்டு திகைத்தனர். அவனிடம் இதுபற்றிக் கேட்டபோது, தான் முழு குணம் அடைந்து விட்டதாகவும், அதற்கு இந்த இறைவனே காரணம் என்றும் தெரிவித்ததாக கூறப் படுகிறது. இதையடுத்து அதே இடத்தில் இறைவனுக்கு குடில் அமைத்து தினமும் வழிபாடு செய்து வந்தனர். தற்போது கோவில் கொஞ்சம், கொஞ்சமாக வளர்ந்து வருகிறது.
ஆலய அமைப்பு :
ஆலயம் கிழக்கு நோக்கியபடி அமைந்துள்ளது. ஆலயத்தின் உள்ளே நுழைந்ததும், முற்றிலும் செங்கல்லால் கட்டப்பட்ட 16 கால் மண்டபம் காணப்படுகிறது. ஆலயத்தின் உள்ளே கருவறையில் கிழக்கு நோக்கிய படி மூலவர் வட வைத்தீஸ்வரன் அருள்பாலித்து வருகிறார்.
இறைவனின் இடது பக்கத்தின் தனிச் சன்னிதியில் மாங்கல்ய பலம் தரும் அன்னையாக தையல்நாயகி அம்மன், கமல பீடத்தில் வீற்றிருந்து அருள்பாலிக்கிறார். அம்பாளின் சன்னிதி அருகே, இறைவனின் சன்னிதியை நோக்கியபடி காலத்தை நிர்ணயிக்கும் கால பைரவர், நாய் வாகனத்துடன் அற்புதமாக காட்சியளிக்கிறார். மூலவருக்கு முன்பாக நந்தியம்பெருமான் வீற்றிருக்கிறார். இத்தல இறைவன் வந்த பிணி, வரும் பிணிகளை நீக்கும் சக்தி படைத்தவராக விளங்குகிறார். இதனாலேயே இவரை வட வைத்தியநாதர் என்று அழைக்கின்றனர்.
இங்குள்ள இறைவன் சன்னிதியில் துவார பாலகர்களாக விநாயகப் பெருமானும், முருகப்பெருமானும் வீற்றிருக்கின்றனர். ஆலயத்தைச் சுற்றி பிரகார வலம் வரும்போது, பரிகார தெய்வங்களான தட்சிணாமூர்த்தி, நர்த்தன கணபதி, லிங்கோத்பவர், பிரம்மதேவர், துர்க்கை, சண்டிகேஸ்வரர் ஆகியோர் உள்ளனர்.
புதிதாக குபேர மூலையில் லட்சுமி, கணபதிக்கு தனி சன்னிதி, வாயு மூலையில் வள்ளி– தெய்வானை சமேத சண்முகநாதர் ஆகியோருக்கு சன்னிதிகள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த ஆலயத்தில் நவக்கிரகங்கள் இல்லை. கொடிமரமும் இல்லை. ஆலயத்தின் தல விருட்ச மாக விலா மரமும், அரச மரமும் உள்ளன. இவற்றில் தற்போது அரச மரம் மட்டுமே உள்ளது.
சித்தர்கள் வழிபாடு :
ஒவ்வொரு பவுர்ணமி அன்றும், கருங்குருவி வடிவிலும், வண்டு வடிவிலும் சித்தர்கள், இத்தல இறைவனை வழிபாடு செய்வதாக நம்பிக்கை தெரிவிக்கப்படுகிறது. ஒவ்வொரு சிவராத்திரி அன்றும் காலை 6.10 மணி முதல் 6.25 மணி வரை, சூரியனின் கதிகள் இத்தல இறைவனின் லிங்கத் திருமேனியில் விழுவது காணக்கிடைக்காத அற்புதக் காட்சியாகும். பழமை வாய்ந்த இந்த ஆலயம் பல்லவர் காலத்தில் கட்டப்பட்டதாக கூறப்படுகிறது. சாஸ்திரம், ஜாதகம் பார்ப்பதில் அற்புத அந்தணர்கள் இந்த இடத்தில் வாழ்ந்து வந்ததாகவும், பல்லவர்கள் சாஸ்திரம் பார்க்க வந்தபோது இந்த ஆலயத்தை நிர்மாணித்ததாகவும் செவி வழிச் செய்திகள் தெரிவிக்கின்றன.
இந்த ஆலயம் இருந்த இடம் முன்பு தர்ப்ப வனமாக இருந்துள்ளது. ஆகவே இந்த ஆலயத்திற்கு வந்து தர்ப்பை ஆசனம் செய்து, அதில் அமர்ந்து,
‘த்ர்யம்பகம் யஜாமஹே
ஸூகந்திம் புஷ்டிவர்தனம்
ஊர்வாருகமிவ பந்தனான் ம்ருத்யோர்
முஷிய மாம்ருதாத்’
என்ற சுலோகத்தைச் சொல்லி இறைவனை வழிபட்டால் நோய்கள் நீங்கும் என்பது ஐதீகம்.
இங்குள்ள கல்வெட்டுகள் பலவும் சிதிலமடைந்து விட்ட காரணத்தால், பல குறிப்புகளைக் கண்டறிய முடியவில்லை. ஒரு சில குறிப்புகளே கிடைத்துள்ளது. இறைவனின் பெயர் ‘மிருத்யூஞ்ஜிஸ்வரர்’ என்றும், இறைவியின் திருநாமம் பாலாம்பிகா என்ற பவரோக விநாசினி என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. மக்கள் மனக் கஷ்டத்தையும், பணக் கஷ்டத்தையும் போக்கும் தலமாக இந்த ஆலயம் விளங்குகிறது. சிதம்பரம் நடராஜர் ஆலயத்திற்கு நிகரான தலம் இது என்று கூறப்படுகிறது. மேலும் குழந்தைப் பேறு கிடைக்கச் செய்யும் ஆலயமாகவும் இந்தத் தலம் திகழ்கிறது.
இத்தல இறைவன் விஸ்வாமித்திர முனிவரின் கண் நோயைத் தீர்த்தவர் என்று கூறப்படுகிறது. ஒரு முறை விஸ்வாமித்திர முனிவர், சாஸ்திரப்பாக்கத்தின் அருகே உள்ள திருக்கச்சூர் சிவபெருமான் கோவிலுக்கு சென்று வழிபட்டார். அப்போது ‘ராவணனை அழிப்பதற்காக, ராமபிரான் மனிதனாக அவதரித்துள்ளார். உலக மக்களைக் காக்கும் பொருட்டு, மகாவிஷ்ணு எடுத்துள்ள இந்த அவதாரத்தில், ராவணனை எதிர்த்து ஜெயிக்கும் வரை ராமனுக்கு நோய்கள் எதுவும் வராமல் பார்த்துக் கொள்ளும்படி, திருக்கச்சூர் தலத்தில் உள்ள இருள்நீக்கி அம்மனிடம் விஸ்வாமித்திரர் வேண்டுகோள் விடுத்தார். அதற்கு இருள்நீக்கி அம்பாள், ‘நோயைத் தடுக்கும் பலை, அதிபலை என்ற மூலிகையின் பெயரைச் சொன்னாலே ராமன் உள்பட பூலோகத்தார் அனைவரும் நோயில் இருந்து தப்பி பயன்பெறுவார்கள்’ என்று அருளினார்.
அந்த தலத்தில் வழிபட்டு திரும்பும் வேளையில்தான் விஸ்வாமித்திரர் கண் நோயால் பாதிக்கப்பட்டார். இதையடுத்து அவர் அருகில் உள்ள சாஸ்திரப்பாக்கம் திருத்தலத்தில் வீற்றிருக்கும் வடவைத்தியநாதர் பெருமாளை வழிபட்டு தன்னுடைய கண் நோய் நீங்கும் அற்புதத்தைப் பெற்றார் என்று தல வரலாறு கூறுகிறது.
பெயர்க்காரணம் :
முன்காலத்தில் இந்தப் பகுதியில் அதிகமான அந்தணர்கள் வாழ்ந்ததாகவும், அவர்கள் சாஸ்திரம், ஜாதகம் பார்ப்பதில் சிறந்து விளங்கியதாகவும் கூறப்படுகிறது. அது பல்லவர்கள் ஆட்சிகாலம் என்பதால், பல்லவ மன்னர்கள் மற்றும் ஜமீன்தார்கள் பலரும் இங்கு வந்து சாஸ்திரம் பார்த்துச் சென்றுள்ளனர். இதன்காரணமாக இத்தலம் ‘சாஸ்திரம்பாக்கம்’ என்று பெயர் பெற்றதாக சொல்லப்படுகிறது.
தற்போது ஒரு வேளை மட்டுமே பூஜை நடைபெறும் இந்த ஆலயம் காலை 9.30 மணி முதல் 10.30 மணி வரை மட்டுமே திறந்திருக்கும்.
இந்த ஆலயத்திற்குச் செல்ல பஸ்வசதி குறைவாக உள்ளது. சிங்கப்பெருமாள் கோவிலில் இருந்து ஆட்டோ வசதி உள்ளது.

ஏழு உலக அதிசயங்களுள் ஒன்றாக தேர்வு செய்யப்படவிருந்த கோவில் இது.
ஏழு உலக அதிசயங்களுள் ஒன்றாக தேர்வு செய்யப்படவிருந்த கோவில் இது. அருள்மிகு மீனாட்சி அம்மன் திருக்கோவில் மதுரை மாநகரில் அமைந்துள்ளது. இக்கோவிலின் மூலவர் சுந்தரேஸ்வரர் ஆவார். சிவபெருமானுக்கு உகந்தது சிதம்பரம் கோவில் என்றால், மீனாட்சி அம்மனுக்கு பெருமை சேர்ப்பது மதுரை.
இந்தக் கோவில் 1600 ஆண்டு கால பழமை வாய்ந்தது. மேலும் சிவபெருமான் நடராஜராக நடனம் ஆடிய கோவில்களுள் இதுவும் ஒன்று. இது ரஜத(வெள்ளி) சபையாகும். இக்கோவில் நடராஜர் வெள்ளியால் செய்யப்பட்டவர். பல இடங்களில் இடது கால் தூக்கி ஆடிய சிவபெருமான், மதுரையில் பாண்டிய மன்னனுக்காக வலது கால் தூக்கி ஆடினார்.
இக்கோவிலின் தல விருட்சம் கடம்ப மரம். தீர்த்தம் பொற்றாமரை குளமும், வைகை நதியும். இக்கோவிலில் சிறப்பு வாய்ந்த முக்குருணி விநாயகர் சந்நிதியும் உள்ளது.
தல வரலாறு :
மலயத்துவச பாண்டியனும் அவன் மனைவி காஞ்சனமாலையும் புத்திர யாகம் செய்த போது, அக்னியில் இருந்து பார்வதி தேவி குழந்தையாகத் தோன்றினாள். முன்ஜென்மத்தில் காஞ்சனமாலைக்கு செய்து கொடுத்த சத்தியத்தின் காரணமாக பார்வதி தேவி அக்னியில் இருந்து வெளிப்பட்டதாக சிலர் கூறுவர்.
அக்னியில் இருந்து தோன்றிய பார்வதிக்கு மூன்று மார்பகங்கள் இருந்தன, இதனைக் கண்டு அதிர்ச்சியுற்றான் பாண்டிய மன்னன். அப்போது ஒரு குரல் ஒலித்தது. அவள் எப்போது தன் கணவனை காண்கிறாளோ அப்போது அந்த மூன்றாவது மார்பு மறைந்துவிடும் என்று அந்த குரல் கூறியது. பாண்டியன் மன்னன் மனமகிழ்ச்சியுடன் அந்த குழந்தைக்கு தடாகை என்று பெயரிட்டு வளர்த்து வந்தான்.
அக்குழந்தை போர்க்கலை, சிற்பக்கலை, குதிரையேற்றம் முதலான ஆய கலைகள் அறுபத்து நான்கையும் கற்று வளர்ந்தாள்.
தடாகைக்கு முடிசூட்ட நினைத்தான் பாண்டிய மன்னன். அக்கால வழக்கப்படி அவள் மூவுலகிலும் எட்டுத்திசையிலும் போரிட்டால்தான் மூடிசூட்டிக்கொள்ளமுடியும். எனவே போருக்கு சென்று தடாகை, பிரம்மன் வீற்றிருக்கும் சத்தியலோகத்தையும், திருமால் வீற்றிருக்கும் வைகுந்த்தத்தையும் வென்றாள்.
கைலாசத்துக்கு சென்ற போது அங்கிருந்த சிவபெருமானைக் கண்டு வெட்கப்பட்டாள், அவளுடைய மூன்றாவது மார்பு மறைந்துவிட்டது. இதன் காரணத்தை அறிந்த தடாகை, தான் பார்வதியின் மறுவடிவம் என்பதை உணர்ந்து கொண்டாள். சிவபெருமானுடன் மதுரை வந்து மூடிசூட்டிக்கொண்ட பின்னர் சிவபெருமானையே மதுரையில் திருமால் தலைமையில் திருமணம் செய்துகொண்டாள்.
கட்டிடக்கலை :
மதுரை மாநகரத்தின் மத்தியில் அமைந்துள்ள இந்தக்கோவிலுக்கு மொத்தம் நான்கு நுழைவாயில்கள் உள்ளன. கோவிலின் மொத்த பரப்பளவு, 45 ஏக்கர். இந்தக்கோவிலில் மொத்தம் 12 கோபுரங்கள் உள்ளன. அதில் நான்கு கோபுரங்கள் நான்கு திசைகளை நோக்கி உள்ள நுழைவாயில்கள். இந்த பன்னிரெண்டு கோபுரங்களுள் தெற்கு கோபுரம் மிக உயரமானது. ஒன்பது அடுக்குகளை உடைய தெற்கு கோபுரத்தின் உயரம் 52 மீ.
இங்குள்ள கோபுரங்கள் பல்வேறு மன்னர்களால் பல்வேறு காலங்களில் கட்டப்பட்டவை. கடைசியில் தேவகோட்டை நகரத்தாரால் பழுதுபார்க்கப்பட்டு புதுப்பிக்கப்பட்டது. மீனாட்சி அம்மன் கோபுரம் காளத்தி முதலியார் என்பவரால் கி.பி. 1570ல் கட்டப் பெற்று 1963 ஆம் ஆண்டில் சிவகங்கை அரசர் சண்முகத்தால் புதுப்பிக்கப்பட்டது.. சுவாமி கோபுரம் கி.பி. 1570 ஆம் ஆண்டில் கட்டப் பெற்று திருமலைகுமரர் அறநிலையத்தால் பழுதுபார்க்கப்பட்டது.மேலும் மூலவருக்காக இரண்டு கோபுரங்கள் உள்ளன, அவை இரண்டும் தங்கத்தால் வேயப்பட்டவை.
மேலும் இங்கு பொற்றாமரைக் குளமும் உள்ளது. இந்தக் குளத்தில் தங்கத் தாமரை உள்ளது. முன்னர் சிவபெருமான் ஒரு நாரைக்கு இங்கு கடல்வாழ் உயிரினங்கள் வாழாது என்று வாக்கு அளித்ததால் இந்தக் குளத்தில் மீன்கள் கூட வாழ்வது இல்லை. மேலும் இந்தக் குளம் நல்ல நூல்களை தேர்ந்தெடுக்கும் சக்தி படைத்தது என்றும் நம்புகிறார்கள். நூல்கள், ஓலைச்சுவடிகளை இந்தக் குளத்தில் போடவேண்டும், அவை நல்ல நூல்கள் என்றால் மிதக்கும் இல்லையேல் மூழ்கிவிடும்.
கோவிலில் உள்ள மண்டபங்கள் :
அஷ்ட சக்தி மண்டபம்
மீனாட்சி நாயக்கர் மண்டபம்
ஊஞ்சல் மண்டபம்
ஆயிரங்கால் மண்டபம்
வசந்த மண்டபம்
கம்பத்தடி மண்டபம்
கிளிக்கூடு மண்டபம்
மங்கையர்க்கரசி மண்டபம்
சேர்வைக்காரர் மண்டபம்
இங்கு உள்ள ஆயிரங்கால் மண்டபத்தில் 985 தூண்களும் நடுவில் நடராஜர் சிலையும் உள்ளது. இதை மதுரையை ஆண்ட திருமலை நாயக்கரானின் அமைச்சர் அரியநாத முதலியார் கட்டினார்.
சிற்பக்கலை :
ஆயிரங்கால் மண்டபத்தில் பல ஒலிகளைத் தரும் சிலைகள் தூண்களில் செதுக்கப்பட்டுள்ளன. வடக்கு கோபுரத்திற்கு அருகில் ஐந்து இசைத் தூண்கள் உள்ளன. அஷ்ட சக்தி மண்டபத்தில் கலைநயமிக்க எட்டு அம்மன் சிலைகள் உள்ள்ன. இதுமட்டுமல்லாமல் கோவில் கோபுரங்கள், தூண்கள் பலவற்றிலும் பாண்டிய சிற்பிகளின் சிற்பக்கலையை காணமுடியும்.
கிழக்கு கோபுரத்திற்கு அருகில் உள்ள புதுமண்டபத்தில் தலவரலாற்றை விளக்கும் சிற்பங்கள் செதுக்கப்ட்டுள்ளன. சுவாமி சந்நிதியை சுற்றியுள்ள பிரகாரத்தில் சிவபெருமானின் 64 திருவிளையாடல்களும் சிற்பங்களாக காட்சியளிக்கின்றன.
திருவிழாக்கள் :
இங்கு நடைபெறும் சித்திரைத் திருவிழா மிகப் பிரசித்தி பெற்றது. ஆனி மாதம் ஊஞ்சல் உற்சவம், ஆவணி மூலம், நவராத்திரி விழா, கார்த்திகை தீபத்திருவிழா, மார்கழி உற்சவம், தை தெப்பம், பங்குனி உத்திரம் ஆகிய திருவிழாக்கள் வெகு சிறப்பாக கொண்டாடப்படுகின்றன.
ஆவணி மாத திருவிழா, சிவபெருமானின் 64 திருவிளையாடல்களை கொண்டாடும் விழாவாகும். சித்திரைத் திருவிழா, கோவிலின் தலவரலாற்றை எடுத்துரைக்கும் திருவிழாவாகும்.
கோவில் திறந்திருக்கும் நேரம்:
காலை 5 மணி முதல் மதியம் 12.30 மணி வரை மற்றும் மாலை 4 மணி முதல் இரவு 10 மணி வரை.
கோவில் முகவரி :
மதுரை மீனாட்சி அம்மன் கோவில்
மதுரை மாவட்டம்
போன் நம்பர் : + 9104522344360
website : www.maduraimeenakshi.org

கண்ணன் பாதம் பட்டாலே புண்ணியம் என்று சொல்லுவார்கள். கண்ணன் இங்கே அரசனாக வாழ்ந்திருந்து மக்களிடையே கலந்து பழகியிருக்கிறார்.
தல வரலாறு :
கிருஷ்ணரின் தாய்மாமன் கம்சன் அவருடைய மாமனாராகிய ஜராசங்கு கிருஷ்ணன் மீது 16 முறை படையெடுத்து தோற்று போனார். 17வது முறை சண்டையிட்டபோது மதுரா நகரிலிருந்து மக்களை வெளியேற கிருஷ்ணர் ஆணையிட்டார். அப்போது கிருஷ்ணர் சௌராஷ்டிரா தேசம் மற்றும் ஜாம் நகர் அருகில் கடலோரத்தில் வாழ்ந்து வந்த ஒரு மகாராஜாவின் மகள் ருக்மணியை மணந்து 100 ஆண்டுகள் மன்னராக ஆட்சிபுரிந்தார்.
ஒரே நாளில் ஒரே இரவில் இப்பகுதியை தங்கத்தால் ஆன நகராக துவாரகாவை உருவாக்குகிறார். கண்ணன் பாதம் பட்டாலே புண்ணியம் என்று சொல்லுவார்கள். கண்ணன் இங்கே அரசனாக வாழ்ந்திருந்து மக்களிடையே கலந்து பழகியிருக்கிறார். பக்தர்கள் அவரை அரசனாகவும் போற்றுகிறார்கள். பகவானாகவும் துகிக்கிறார்கள்.
கம்சனைக் கொன்ற பிறகு மதுராவுக்கு உக்ரசேனனை அரசனாக்கினார் கிருஷ்ணன். கம்சனுடைய மாமனாரும்- மகத தேசத்து அரசனுமான ஜராசந்தனுக்குக் கோபத்தை உண்டாக்கியது. அவன் மதுராமீது போர் தொடுத்தான். ஜராசந்தனுடைய சேனையை எதிர்த்து நிற்க முடியாமல் யாதவ சேனை பின்வாங்கியது.
இதனிடையே யாதவர்களால் தன் தந்தை அவமானப்படுத்தப்பட்டதை நாரதர் மூலம் அறிந்த காலயவனன் என்ற அரசனும் பெரும்படையுடன் மதுராவைத் தாக்கினான். இரண்டு எதிரிகளை ஒரே சமயத்தில் சமாளிப்பது கஷ்டம் என்பதை உணர்ந்த கிருஷ்ணர் மீதமிருந்த யாதவ சேனைகளையும் மக்களையும் அழைத்துக் கொண்டு மேற்குக் கடற்கரைப் பக்கம் வந்து சமுத்திர ராஜனிடம் பன்னிரண்டு யோசனை தூரம் கடலில் இடம் கேட்டார்.
அதன் படி கடல் பன்னிரண்டு யோசனை தூரம் உள்வாங்கியது. கடல் கொடுத்த பூமியில் தேவதச்சன் விஸ்வகர்மாவின் உதவியுடன் ஒரு அற்புதமான நகரை நிர்மாணித்து யாதவ மக்களையும் மாடு- கன்றுகளையும் அங்கு குடியேற்றினார் கிருஷ்ணர். இப்படித் தோன்றியதுதான் துவாரகா.
கிருஷ்ணன் வாழ்ந்த காலத்திலிருந்த துவாரகா இப்போது இல்லை. கி.பி. 8 முதல் 10-ஆம் நூற்றாண்டுகளில் அந்நிய படையெடுப்பாளர்கள் அழித்துவிட்டனர். பின்னாளில் 15 மற்றும் 16-ஆம் நூற்றாண்டுகளில் குஜ்ராத்தை ஆண்ட சாளுக்கிய அரச பரம்பரையினர் கட்டியதுதான் இப்போதுள்ள கோவில் என்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.
இந்த துவாரகா கிருஷ்ணர் கோவில் மற்றும் சோமநாதர் கோவில் பாணியில் அமைந்திருப்பதை அதற்கு ஆதாரமாகக் கூறுகிறார்கள். துவாரகாதீஷ் கோவில் கோமதி நதிக்கரையை ஒட்டிய உயரமான இடத்தில் அமைந்துள்ளது. பல படிக்கட்டுகள் ஏறித்தான் உள்ளே செல்ல வேண்டும்.
இக்கோவில் கோபுர உயரம் 51.8 மீட்டர். நான்கு நிலைகளைக் கொண்ட கோபுரத்தின்மேல் உயர்ந்து நிற்கும் கூர்மையான கோபுரத்தைப் பார்த்தால் பிரமிப்பாக இருக்கிறது. 72 தூண்களைக் கொண்ட பெரிய நுழைவாயில் மண்டபமும் அற்புதமானது. கருவறையில் துவாரகாதீஷ் ஸ்ரீகிருஷ்ணன் சிரசில் கொண்டையுடன் நின்ற திருக்கோலத்தில் பக்தர்களுக்குக் காட்சியளிக்கிறார். இக்கோவிலை ஜெகத்மந்திர் என்றும் அழைக்கிறார்கள்.
தல சிறப்பு பெருமாளின் மங்களாசாசனம் பெற்ற 108 திவ்ய தேசங்களில் இது 101 வது திவ்ய தேசம்.கருப்புநிறம் கொண்ட கண்ணன் மேற்கு நோக்கி நின்ற கோலத்தில் காட்சியளிப்பது இத்தலத்தின் தனி சிறப்பு. இவ்வூர் ஒரு காலத்தில் சுதாமபுரி எனப்பட்டது. இங்கு தான் சுதாமர் எனப்படும் குசேலர் பிறந்தார். இவருக்கு தனிக்கோயில் இங்குள்ளது. சுதாமர் கோயில் என அழைக்கின்றனர். இத்தக் கோயில் ஐந்து மாடிகளைக் கொண்டது.
60 அழகிய சிற்பங்களுடன் கூடிய தூண்கள் இம்மாடிகளைத் தாங்குகின்றன. இங்குள்ள சிற்பங்களே சுற்றுலாப் பயணிகளைக் கவர்கின்றன. கீழே சன்னிதானமும் மேல்மாடியில் கோபுரமும் உள்ளன. இதன் உயரம் மட்டும் 172 அடி. கோயிலின் நடுவில் மிகப்பெரிய மண்டபம் உள்ளது. இந்தக் கோயிலைச் சுற்றி இன்னும் பல சிறிய கோயில்கள் உள்ளன. ஒவ்வொரு மாடியில் நின்றும் துவாரகையின் இயற்கை அழகை ரசிக்கலாம். துளசிக்கு சன்னதி இருப்பது இத்தலத்தின் சிறப்பம்சமாகும்.
தலபெருமை கிருஷ்ண ஜெயந்தி வெகு சிறப்பாக கொண்டாடப்படுகிறது. லட்சக்கணக்கான பக்தர்கள் கிருஷ்ணரை விதவித ஆடை அலங்காரம் செய்து வழிபடுவர். மேன்மை அடைவர். ஆதிசங்கரரால் உருவாக்கப்பட்ட சாரதா பீடம் உள்ளது. 5000 ஆண்டுகள் பழமையான திருத்தலம் இதுவே என்று ஸ்ரீமத் பாகவதம் கூறுகிறது.
கோமதி நதிக்கரையில், துவாரகா கிருஷ்ணர் கோயில் அமைந்துள்ளது. இந்த நதியில் நீராடினால் கங்கா ஸ்நானம் செய்த பலன் கிட்டும். 11 விதமான பதார்த்தங்கள் பிரசாதமாக கிருஷ்ணனுக்கு வழங்கப்படுகிறது. துர்வாச முனிவரின் கமண்டல நீரை ருக்மணி தேவி பருகியதால் துர்வாச முனிவர் இங்குள்ள பூமி உப்பாகும் என்றும் கடல்நீர் வற்றும் என சாபமிட்டார். பின்னர் துவாரகை வந்த கிருஷ்ணரை மண முடித்த பின் துர்வாச முனிவருக்கு கிருஷ்ணர் விருந்து படைத்தார்.
இதில் மனம் குளிர்ந்த துர்வாச முனிவர் சாபத்தை நீக்கி ஊர் செழிப்புறவும் கிருஷ்ணர் 100 ஆண்டுகள் ஆட்சி புரியவும் ஆசி வழங்கினார். இக்கோவில் கோபுரத்தின் உச்சியில் முக்கோண வடிவிலான- சிவப்புப் பட்டுத் துணியாலான சூரிய- சந்திர உருவங்கள் பதித்த 82 மீட்டர் நீளமுள்ள மிகப்பெரிய கொடி தினமும் மூன்று முறை ஏற்றி இறக்கப்படுகிறது. கொடியை ஏற்றியவுடன் கோபுர உச்சியிலேயே உள்ள வட்டமான இடத்தில் நெய் தீபம் ஏற்றப்படுகிறது. காலையில் பாலகிருஷ்ணனாகவும் பகலில் மகாராஜாவைப்போலவும் மாலையில் பூஜிக்கத்தக்க அலங்காரத்துடனும் துவாரகாதீஷ் பக்தர்களுக்கு காட்சி தந்து அருள்பாலிக்கிறார்.
துவாரகாவிலிருந்து சற்று தூரத்தில் துவாரகா தீவு உள்ளது. படகில்தான் அங்கு செல்ல வேண்டும். முதலில் ஸ்ரீகிருஷ்ணன் ஆட்சி செய்த துவாரகா கடலில் மூழ்கிய சமயம் அவர் விருப்பப்படி கடலில் மூழ்காமல் எஞ்சியிருந்த பகுதிதான் இது. இங்கே அவரது அரண்மனை அப்படியே உள்ளது.
இங்கும் ஒரு துவாரகாநாத் நின்ற நிலையில் காட்சியளிக்கிறார். இங்கு அவரது மற்ற மனைவியர்களின் ருக்மிணி தவிர கோவில்கள், தாய் தேவகி கோவில், கல்யாணராமர், திரிவிக்கிரமமூர்த்தி மற்றும் லக்ஷ்மி நாராயணர் கோவில்கள் உள்ளன. இங்கிருந்து மூன்று கிலோமீட்டர் தூரத்தில் சங்க தீர்த்தம் உள்ளது. இந்த தீவு துவாரகையிலேயே ருக்மிணிக்குத் தனிக்கோவில் உள்ளது. சிரித்த முகத்துடன் நின்ற நிலையில் காட்சியளிக்கிறார் ருக்மிணி.
துவாரகா கிருஷ்ணனிடம் ருக்மிணி ஏதோ காரணத்தால் கோபித்துக் கொண்டு இங்கு வந்ததாக கோவில் பூசாரி கூறுகிறார். அதாவது துவாரகா கோவிலிலுள்ள ஸ்ரீகிருஷ்ணரை நேருக்கு நேர் பார்த்தபடி இங்கு நிற்கிறாராம் ருக்மிணி. கோமதி நதி கடலில் சங்கமிக்கும் இடத்தில் துவாரகா கற்கள் கிடைக்கின்றன.
அவற்றின் மேல்பாகம் தேன் அடைபோல் இருக்கும். சில கற்களில் விஷ்ணுவின் சக்கரம் இருக்குமாம். இந்த கற்களில் நாராயண சின்னம் மற்றும் மகாலக்ஷ்மி சின்னம் பிரதீக் இருப்பதாக புராணங்கள் கூறுகின்றன. இந்த கற்களை எடுத்து வந்து பூஜிப்பவர்கள் மோட்சத்தை அடைகிறார்கள் என்று நம்பப்படுகிறது. இந்த தீவு துவாரகாவுக்கு அக்காலத்தில் சங்கோதரா மற்றும் ஸ்ரீதீர்த்தா என்று பெயர்.
இங்கு ஸ்ரீகிருஷ்ணன் ஆட்சி செய்த தர்ம சபையும் ஒரு மச்சாவதார பகவான் கோவிலும் தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. துவாரகாவிலும் தீவு துவாரகாவிலும் ஆண்டு முழுவதும் எல்லா விழாக்களும் சிறப்பாக நடக்கின்றன. தினமும் இந்தியா முழுவதிலுமிருந்து ஏராளமான பக்தர்கள் வந்து துவாரகாதீஷையும் ருக்மிணி தாயாரையும் தரிசனம் செய்கின்றனர். ஸ்ரீகிருஷ்ண ஜென்மாஷ்டமி மிகச் சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது.