என் மலர்
ஆன்மிகம்

துன்பங்களை போக்கும் ஒப்பிலாமணீஸ்வரர் திருக்கோவில்
நீலகண்ட முனிவர் என்பவரே, முதன் முதலில் இத்தலத்தில் வழிபட்டு பூஜைகள் செய்துள்ளார்.
தேவாரப் பாடல் பெற்ற நடுநாட்டுத் தலம், நீலகண்ட முனிவர், அரகண்ட தாதோர மகரிஷி ஆகியோர் வணங்கி பேறுபெற்ற தலம், திருஞானசம்பந்தர், திருவண்ணாமலை பதிகத்தைப் பாடிய திருக்கோவில், ரமண மகரிஷியின் தவம் தொடங்கிய ஆலயம், ஆட்சியாளர்கள் மற்றும் அலுவலர்களின் ஆபத்துக்களை நீக்கும் தலம் என பல்வேறு பெருமைகள் கொண்டது அரகண்டநல்லூர் ஒப்பிலாமணீஸ்வரர் திருக்கோவில்.
தலவரலாறு :
நீலகண்ட முனிவர் என்பவரே, முதன் முதலில் இத்தலத்தில் வழிபட்டு பூஜைகள் செய்துள்ளார். அதன்பிறகே இங்கு கோவில் எழுப்பப்பட்டது என தலவரலாறு கூறுகிறது. இந்த ஆலயத்தின் தொடக்கம், பல்லவர் கால குடைவரையில் தொடங்கியது. கல்வெட்டுகளின் அடிப்படையில் கோவில் கருவறையும், அர்த்தமண்டபமும் மூன்றாம் குலோத்துங்கன் காலத்தில் கி.பி. 1210–ம் ஆண்டில் கட்டப்பட்டதை கல்வெட்டின் வாயிலாக அறிய முடிகிறது. நிருத்த மண்டபம், இரண்டாம் ராஜராஜ சேதிராயனால் கட்டப்பட்டது.
இந்தக் கோவிலில் அமைந்துள்ள நடன மண்டபம், பழங்காலத்தைச் சேர்ந்தது என்று கூறப்படுகிறது. இந்த மண்டபத்தை கட்டி முடிக்க வேண்டும் என்ற நல்ல எண்ணத்தில், இளவெண்மதி சூடினான் என்பவன், அதற்கென தன் உயிரையும் தியாகம் செய்வதாக அறிவித்தான். அதன்படி நடன மண்டபம் கட்டி முடித்ததும், தன் இன்னுயிரை தியாகம் செய்தான் என தல வரலாறு கூறுகிறது. நவராத்திரி மண்டபம் முதலாம் குலோத்துங்கன் காலத்தில் கட்டப்பட்டுள்ளது.
160 அடி உயரம் கொண்ட கோவில் ராஜகோபுரம் 15–ம் நூற்றாண்டைச் சார்ந்தது. இது கோபு நாயக்கராயன், வாலு நாயக்கர், பொம்மனார், பாப்புநாயக்கராயன், நாகம நாயக்கன் மற்றும் பொம்ம நாயக்கன் ஆகியோரால் கட்டப்பட்டதென கல்வெட்டு குறிப்பிடுகிறது.
இந்த ஆலயம், கவின் கலை பண்பாட்டு மையமாகத் திகழ்வதை, முதலாம் ராஜராஜ சோழன் கால கல்வெட்டின் மூலம் அறிய முடிகிறது. இத்தலத்தில் பழங்காலத்தில் மாதந்தோறும் விழாக்கள் கொண்டாடப்பட்டு வந்ததையும், பல்வேறு மடங்கள் அமைந்திருந்ததையும் கல்வெட்டுகள் எடுத்துரைக்கின்றன.
தலத்தின் தனிச்சிறப்புகள் :
பல்லவர் கால விநாயகர், பலகைக் கல்லில் புடைப்புச் சிற்பமாக அமர்ந்த கோலத்தில் வீற்றிருக்கிறார். இவரின் கண்கள் இரண்டும் வலது, இடது என நாம் எந்த இடத்தில் நின்று நோக்கினாலும், அவர் நம்மை மட்டுமே பார்ப்பதாகக் காட்சி தருவது அதிசயமான நிகழ்வாகும். இந்த விநாயகர் பத்மாசனத்தில், மேல் இரு கரங்களில் ஒன்றில் யோக தண்டம் ஏந்தியும், மற்றொன்றில் ஜெப மாலை, கீழ் இரு கரங்களில் ஒன்றில் ஓலைச்சுவடியும், மற்றொன்றில் கரும்பும் ஏந்தி காட்சி தருகிறார். இவரின் பார்வை அதிசயத்தை இன்றும் வெளிநாட்டவரும் கண்டு வியந்து செல்கின்றனர்.
இத்தலத்து இறைவன் பெயர் ஒப்பிலாமணீஸ்வரர் என்பதாகும். எவருக்கும் ஒப்பு இல்லாத இறைவன் என்பதும், இந்தத் திருப்பெயரில் வீற்றிருப்பவர் இவர் ஒருவரே என்பதும் தனிச் சிறப்பாகும். வடக்கு நோக்கிய முருகப்பெருமான், ஆறு கரங்களுடன் ஒரு முகமாக காட்சி தருவதும், தெற்குநோக்கிய எழிலான துர்க்கையும் குறிப்பிடத்தக்கவை.
திருவண்ணாமலையில் லிங்கங்களாகவே இருக்கும் என்பதைக் குறிப்பால் உணர்ந்த திருஞானசம்பந்தர், இப்பாறை மீது நின்று, திருவண்ணாமலைப் பதிகம் பாடினார் என்பது வரலாறு. ரமணரின் முதல் தியானம் இந்தத் திருக்கோவிலில் இருந்தே தொடங்கியிருக்கிறது. இவரின் கல்திருமேனி கருவறை வெளிப்புறம் அமைந்துள்ளது. சனி பகவான் காகத்தின் மீது, ஒரு காலை ஊன்றி காட்சி தருகின்றார். இது ஒரு அபூர்வக் கோலமாகும்.
ஆலய அமைப்பு :
தென்பெண்ணையாற்றின் வடகரையோரம், எழிலான பாறையின் மீது தெற்கு நோக்கிய ஏழுநிலை ராஜகோபுரம் அமைந்துள்ளது. இங்கிருந்து ஆற்றின் அழகையும், தென்கரையில் அமைந்துள்ள வீரட்டேசுவரர் திருக்கோவிலையும், கபிலர் குன்றையும் காணலாம்.
ஆலயத்தின் வெளியே தென்புறம் ஐந்து குடைவரை அறைகள் அமைந்துள்ளன. இது சமணர்கள் குகை என வரலாற்று ஆய்வாளர்கள் கூறுகிறார்கள். என்றாலும், இதனை பஞ்சபாண்டவர் குகை என்று இந்தப் பகுதியில் அழைக்கின்றனர். இதனுள் அமைந்துள்ள சிறிய அறை திரவுபதிக்கானது என்றும் கூறப்படுகிறது. இங்குள்ள சுனை ‘பீமன் சுனை’ என்று அழைக்கப்படுகிறது. இதற்கு கட்டியம் கூறும் விதமாக இங்கே திரவுபதியம்மன் ஆலயமும் அமைந்துள்ளது.
கோவிலில் பலிபீடம், கொடிமரம் மேற்கு திசையில் அமைந்துள்ளன. அதன் அருகே திருஞானசம்பந்தரின் திருப்பாதங்கள் பீடத்தின் மீது பதிந்து திருவண்ணாமலையை நோக்கியவாறு அமைந்துள்ளது. மேற்கு நோக்கிய சன்னிதியில் நந்திதேவர் கிழக்கு பார்க்க, இறைவன் ஒப்பிலாமணீஸ்வரர் மேற்கு முகமாய்க் காட்சி தருகிறார். இவருக்கு அதுல்யநாதேஸ்வரர், அறையணிநாதர் என்ற பெயர் களும் உள்ளன.
அம்மன் சன்னிதி தனியே கிழக்கு முகமாய் இருக் கிறது. இது மூன்றாம் ராஜேந்திர சோழனால் உருவாக்கப்பட்டதாகும். அன்னை எழிலாக நின்ற கோலத்தில், எளிய வடிவில் அருள் வழங்குகின்றாள். அன்னை அழகிய பொன்னம்மை, அருள்நாயகி, சவுந்தர்ய கனகாம்பிகை என பலவாறு அழைக்கப்படுகிறாள். இதன் அருகே அண்ணமலையார், உண்ணாமுலை அம்மன் சன்னிதி தனியாக இருக்கிறது.
இத்தலம் அரசாங்கத்தில் ஏற்படும் குழப்பங்களைத் தீர்க்க வழிகாட்டும் தலமாகவும், அரசாள்வோர் ஆபத்துக்களை நீக்கி வெற்றிக்கு வழிகாட்டும் பரிகாரத் தலமாகவும் அமைந்துள்ளது. இதனை அண்மையில் ஆலயம் குறித்து கிடைத்துள்ள பழமையான ஓலைச்சுவடிகளின் மூலம் தெரியவந்துள்ளது. அரகண்ட தாதோர மகரிஷி என்பவர் இந்த ஆலயத்திற்கு அரூபமாக வாழ்ந்து வருவதாகவும், இவரையும் இத்தலத்து இறைவன் ஒப்பிலாமணீஸ்வரனையும் மனமுருகி வேண்டி வழிபாடு செய்தால் மேற்கூறியபடி அரசாள்வோருக்கு நன்மைகள் அனைத்தும் கிடைக்கும் என்றும் அந்தச் சுவடியில் கூறப்பட்டுள்ளது.
‘தலையினால் தொழுதோங்குவார் நீங்குவார் தடுமாற்றமே’ என்று இத்தலத்தின் திருஞானசம்பந்தர் பாடியுள்ள வரிகள் இதனை உறுதி செய்கின்றன. இதே போல, இத்தலம் தொழுவோரின் கர்ம வினைகள் அனைத்தையும் நீக்கும் என்பதை, ‘பரவுவார் பழி நீங்கிடப் பறையுந்தாஞ் செய்த பாவமே’ என்ற வரிகளும், ‘வாரமாய் நினைப்பார் கடம் வல்வினை அவை மாயுமே’ என்ற வரிகளும் உறுதிப்படுத்துகின்றன.
எனவே, அரசாள்வோருக்கு பயம், குழப்பம், நடுக்கம் உள்ளிட்ட ஆபத்துக்கள் ஏற்பட்டால், அவர்கள் இங்கு வந்து அரகண்ட தாதோர மகரிஷியையும், இறைவனையும் மனமுருகி பிரார்த்தனை செய்து வழிபட்டுச் சென்றால் தீர்வு கிடைக்கும். காலை 7 மணி முதல் 11 மணி வரையிலும், மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரையிலும் சுவாமி தரிசனம் செய்யலாம். இவ்வாலயம் இந்து சமய அறநிலையத்துறையால் நிர்வகிக்கப்பட்டு வருகிறது.
தொன்மைச் சிறப்பு :
இந்தத் திருத்தலத்திற்கு அறைகண்ட நல்லூர் என்பது தொன்மைப் பெயராகும். அறை என்பதற்கு ‘பாறை’ என்று பொருள் வழங்கப்படுகிறது. அறையணிநல்லூர் என்ற பெயரும் உண்டு. மேலும், இந்தப் பகுதியை ஆட்சி செய்த தெய்வீகமன்னன் என்பவன், தனது திருமணத்தின் போது, பல அறங்களைச் செய்தான். எனவே இத்தலம் அறங்கண்ட நல்லூர் என்று பெயர்பெற்றது என்றும் கூறுவர். அறங்கண்ட நல்லூரே மருவி, அரகண்டநல்லூராக அழைக்கப்படுகிறது.
தென்பெண்ணையாற்றின் தென்கரையில் அமைந்துள்ள திருக்கோயிலூரும், வடகரையில் அமைந்துள்ள அரகண்டநல்லூரும் ஒரே விதமான வரலாற்றுப் பின்னணி கொண்டதாகவே அமைந்துள்ளன. இங்குள்ள 96 கல்வெட்டுகள் இத்தலத்தின் வரலாற்றைத் தெளிவாக எடுத்துரைக்கின்றன. மலைநாடு என அழைக்கப்பட்ட இந்தப் பகுதி, ‘மலாடு’ என வழங்கப்பட்டது. சோழர், பாண்டியர், விஜயநகர மன்னர் என பல பெருவேந்தர்களின் ஆளுகையின்கீழ், குறுநில மன்னர்கள் பலர் இந்தப் பகுதியை ஆட்சி செய்துள்ளனர். இதில் குறிப்பிடத்தக்கவர்கள் மலையமான் திருமுடிக்காரி, தெய்வீகன், மெய்பொருள் நாயனார் முதலானோர் ஆவர்.
அமைவிடம் :
விழுப்புரம் மாவட்டம், திருக்கோயிலூர் வட்டத்தில் அரகண்டநல்லூர் அமைந்துள்ளது. விழுப்புரம்– திருவண்ணாமலை – காட்பாடி ரெயில் வழித்தடத்தில், திருக்கோயிலூர் ரெயில் நிலையம் எதிரே பாறை மீது அமைந்த கோவிலே அரகண்டநல்லூர் ஆலயமாகும். தென்பெண்ணையாற்றின் தென்கரையில் வீரட்டேசுவரர் தலமும், வடகரையில் இந்தத் தலமும் இருக்கின்றன.
விழுப்புரம் – திருக்கோயிலூர் சாலையில் திருக்கோயிலூருக்கு முன்பாக அரகண்ட நல்லூர் காவல் நிலையம் நிறுத்தம் இறங்கி, பின்புறம் நடந்தால் எளிய மலைப்பாதையின் மூலம் ஆலயத்தினை அடையலாம்.
சென்னையில் இருந்து தென்மேற்கே 200 கிலோமீட்டர் தொலைவிலும், விழுப்புரத்தில் இருந்து மேற்கே 40 கிலோமீட்டர் தூரத்திலும், திருவண்ணாமலையில் இருந்து வடகிழக்கே 40 கிலோமீட்டர் தொலைவிலும் இந்த திருத்தலம் இருக்கிறது.

Next Story