என் மலர்
கோவில்கள்
ஸ்ரீ ஆதிவராகப் பெருமாள்தான் இத்தனை பெருமைகளுக்கும் உரியவர். ஆம்! இந்த ‘ஆதிவராகப் பெருமாளுக்கு திருச்சியில் தனி ஆலயம் உள்ளது.
கல்விக் கண் திறப்பவர். உயர் கல்விக்கு உறுதுணையாக இருப்பவர். ஞானபிரான் என்று பக்தர்களால் பிரியமுடன் அழைக்கப்படுவர்.
யார் இவர்?
ஸ்ரீ ஆதிவராகப் பெருமாள்தான் இத்தனை பெருமைகளுக்கும் உரியவர். ஆம்! இந்த ‘ஆதிவராகப் பெருமாளுக்கு திருச்சியில் தனி ஆலயம் உள்ளது.
ஆலய அமைப்பு :
சாலையை விட்டு உள்ளடங்கி ஊரின் நடுநாயகமாக விளங்குகிறது இந்த அழகிய ஆலயம். சுற்றிலும் திருமதிற் சுவர்கள். முகப்பில் ராஜகோபுரம். உள்ளே நுழைந்ததும் விசாலமான அழகிய சிறப்பு மண்டபம்.
கருடகம்பம் என அழைக்கப்படும் நெடி துயர்ந்த ஸ்தூபி, பலி பீடம், கொடிமரம், இவற்றைக் கடந்ததும், கருடாழ்வார் சன்னிதி உள்ளது.
கருடாழ்வார் இறைவனின் கருவறையை நோக்கி பார்த்துக் கொண்டிருக்க, ஆலயம் கிழக்கு திசை நோக்கி அமைந்துள்ளது.
அடுத்தது மகாமண்டபம். இந்த மண்டபத்தின் மேல்புறம் ஆண்டாளின் நின்ற நிலை திருமேனி உள்ளது. வடக்கு புறம் ஆண்டாளின் தந்தை பெரியாழ்வார், நம்மாழ்வார், திருமங்கையாழ்வார், ராமானுஜர், மணவாள மாமுனி ஆகியோரின் திருமேனிகள் உள்ளன.
அடுத்துள்ள அர்த்த மண்டபத்தின் வடதிசையில் காலிங்கநர்த்தன கண்ணனின் திருமேனி இருக்கிறது. கருவறையில் ஆதிவராகப் பெருமாள் அமர்ந்த கோலத்தில் சேவை சாதிக்கிறார். கருவறை வாசலில் ஜெயன், விஜயன் என துவாரபாலகர்களின் சுதை வடிவங்கள் உள்ளன.
பெருமாளுக்கு நான்கு கரங்கள். வலது மேல் கரத்தில் சக்கரத்தையும், இடது மேல் கரத்தில் சங்கையும் தாங்கியிருக்கிறது. வலது கீழ் கரம் இறைவி பூமா தேவியின் பாதத்தை பிடித்துக் கொண்டிருக்க, இடது கீழ் கரம் மடியில் அமர்ந்திருக்கும் பூதேவியை அணைத்துக் கொண்டிருக்கிறது.
பெருமாளின் திருக்கோலம் அமர்ந்த திருக்கோலம். இவர் கிழக்கு திசை நோக்கி சேவை சாதிக்கிறார். இங்கு பெருமாளுக்கு உற்சவ மூர்த்தி கிடையாது. கருவறை ஆராதனை மட்டுமே மூலவருக்கு நடைபெறுகிறது. மற்றைய அனைத்தும் உற்சவ மூர்த்தியான ராமபிரானுக்கே நடைபெறுகிறது.
ராமபிரான், சீதாபிராட்டி, லட்சுமணன், அனுமன் ஆகியோர், பெருமாள் இருக்கும் கருவறையில் இருந்தபடியே பக்தர்களுக்கு அருள்புரிகிறார்கள்.
சுமார் 1,300 ஆண்டுகள் பழமையான ஆலயம் இது. ஆழ்வார்கள் பாடிய பாசுரங்கள் நிறைய ஆலயத்தின் சுவற்றில் எழுதப்பட்டுள்ளது.
ஆதியில் புற்று வடிவில் எழுந்தருளிய பெருமாளுக்கு, அதன் பிறகே வடிவம் கொடுத்து பிரதிஷ்டை செய்துள்ளனர். தினசரி காலை, உச்சி, சாயரட்சை என மூன்று கால பூஜைகள் இங்கு நடைபெறுகின்றன.
ராமபிரான் :
சித்திரை மாதம் உத்திராட்டதி நட்சத்திரத்தன்று காவேரி நதியில் இருந்து தண்ணீர் கொண்டு வந்து பெருமாளுக்கு சிறப்பு அபிஷேகம் செய்கின்றனர். அன்று இரவு ராமபிரான், சீதாதேவி, லட்சுமணன் ஆகியோர் வீதி உலா வருவார்கள்.

சித்திரை மாதம் ராம நவமி அன்று ராமபிரான் தன் துணைவி, தம்பியுடன் வீதி உலா வருவதுண்டு. அதே மாதம் பவுர்ணமி அன்று கஜேந்திர மோட்ச விழாவும், அன்று காலை 6 மணிக்கு ராமபிரான் சீதையுடன் பவனி வரும் நிகழ்வும் நடைபெறும்.
சித்திரை மாதப்பிறப்பன்று மூலவருக்கும், உற்சவமூர்த்தியான ராமபிரானுக்கும் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடக்கின்றன. அனைத்து உற்சவங்களும் இங்கு ராமபிரானுக்கே நடைபெறுவதால், ராமபிரானுக்கு மாதந்தோறும் திருவிழா நடைபெற்றபடியே இருக்கிறது.
ஆம்! இந்த ஆலயத்தில் மாதந்தோறும் திருவிழாக்கள் நடைபெறுவதும், அந்த விழாவின் போதெல்லாம் ராமபிரானும் சீதாபிராட்டியும் வீதியுலா வருவதும் சிறப்பம்சமாகும்.
சித்திரைப் பிறப்பு, வைகாசி விசாகம், ஆனி சுவாதி, ஆடி பூரம், ஆவணி கிருஷ்ண ஜெயந்தி, புரட்டாசி நவராத்திரி, விஜய தசமி, ஐப்பசி மூலம் மற்றும் தீபாவளி, கார்த்திகை, மார்கழி வைகுண்ட ஏகாதசி, தை சங்கராந்தி, மாசி புனர்பூசம், பங்குனி உத்திரம் ஆகிய நாட்களில் ராமபிரானுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெறுவதுடன், வீதியுலா காட்சியும் உண்டு.
திருவிழாக்கள் :
நவராத்திரி 10 நாட்களும் ஆலயம் விழாக்கோலம் பூண்டிருக்கும். புரட்டாசி மாதம் அனைத்து சனிக்கிழமைகளிலும் கருட சேவை நடைபெறுவதுடன், ராமர் வீதியுலா வருவார்.
கார்த்திகை மாதம் ஊஞ்சல் சேவையுடன் 10 நாட்கள் திருவிழா நடைபெறு கிறது. கார்த்திகை மாத கைசிக துவாதசி அன்று கருடகம்பத்திற்கு விசேஷ அபிஷேக ஆராதனை நடைபெறும்.
ஆலயப் பிரகாரத்தின் தென்புறம் சக்கரத்தாழ்வார் தனி சன்னிதியில் அருள்பாலிக்கிறார். ஆனி மாத சித்திரை நட்சத்திரத்தன்று சக்கரத்தாழ்வாருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெறுகின்றன.
ஆலயத்தின் வடக்கு பிரகாரத்தில் ஆஞ்சநேயருக்கு தனி சன்னிதி உள்ளது. அனுமன் ஜெயந்தி அன்று ஆஞ்சநேயருக்கு சிறப்பு பூஜைகளும் அபிஷேகங்களும் நடைபெறும்.
கல்வி கண் திறந்து, கல்வியில் உயர்நிலை அடைய இங்கு சேவை சாதிக்கும் ஆதி வராகபெருமாளை வேண்ட, அவரது அருள் அனைவருக்கும் கிட்டுவதாக பக்தர்கள் கூறுகின்றனர். தினமும் காலை 7.30 மணி முதல் 10.30 மணி வரையிலும், மாலை 5.30 மணி முதல் இரவு 8 மணி வரையிலும் ஆலயம் திறந்திருக்கும்.
திருச்சி மத்திய பேருந்து நிலையத்திலிருந்து 3 கி.மீ தொலைவில் உள்ள புத்தூர் அக்ரஹாரத்தில் உள்ளது இந்த ஆலயம்.

வாழ்க்கையில் ஏற்படும் இன்னல்களைத் தீர்த்து, இன்பமான வாழ்க்கைக்கு வழிகாட்டும் தலமாகக் கேரள மாநிலம், இளங்குன்னபுழா சுப்பிரமணிய சுவாமி கோவில் அமைந்திருக்கிறது.
தல வரலாறு :
கேரள மாநிலம், வல்லார்பாடம் பகுதியைச் சேர்ந்த விவசாயப் பணி செய்யும் பெண்கள் சிலர், அங்கிருந்த ஒரு இடத்திற்கு விவசாயப் பணி செய்வதற்காகச் சென்றனர். அவர்களில் ஒருத்தி, அங்கிருந்த மணலில் புதையுண்டு கிடந்த கல் ஒன்றில், தன் கையில் வைத்திருந்த அரிவாளைக் கூர்மைப்படுத்தினார். அப்போது, அந்தக் கல்லிலிருந்து ரத்தம் வெளியேறியது. கல்லில் இருந்து ரத்தம் வெளியேறியதைக் கண்டு அதிர்ச்சியடைந்த அவள் மயங்கி விழுந்தாள்.
அவளுடன் வந்த பெண்களும், கல்லிலிருந்து ரத்தம் வெளியேறியதைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர். அப்போது, மயங்கி விழுந்த பெண் எழுந்து, ‘இங்கிருப்பது சாதாரணக் கல் இல்லை, இது முருகப்பெருமானின் சிலை. இந்தச் சிலையை வெளியில் எடுத்துக் கோவில் கட்டி வழிபட வேண்டும்’ என்று சொல்லியபடி மீண்டும் மயக்கமடைந்தாள்.
அவள் சொன்னதைக் கேட்டு அந்த இடத்தை தோண்டிய போது, அங்கு முருகப்பெருமானின் சிலை இருந்தது. அதைக் கண்டு அங்கிருந்தவர்கள் அனைவரும் ஆச்சரியமடைந்தனர். அந்தச் சிலையின் மேற்பகுதி நன்றாக இருந்தது. ஆனால், சிலையின் இடுப்புப் பகுதிக்குக் கீழே மிகவும் சேதமடைந்திருந்தது.
அங்கே மயங்கிக் கிடந்த பெண்ணைச் சிலர் எழுப்பினர். அந்தப் பெண் எழுந்து, முருகப்பெருமான் சிலைக்கு ஒரு கோவில் அமைத்து வழிபட்டால், இந்தப்பகுதி மக்களுக்கு அனைத்து வளங்களும் கிடைக்கும் என்றாள். அங்கிருந்தவர்கள், அந்த முருகனின் சிலைக்கு எங்கே கோவிலமைப்பது? என்று கேட்டனர்.
அவள், இங்கிருந்து நான்கு திசைகளுக்கும் அம்புகளைச் செலுத்த வேண்டும். அந்த நான்கு அம்புகளும் விழுந்த இடத்திற்குள் இருக்கும் பகுதி முழுவதும் முருகப் பெருமானுக்குச் சொந்தமானதாகும். ஐந்தாவதாக ஒரு அம்பு செலுத்த வேண்டும். ஐந்தாவது அம்பு விழுமிடத்தில் முருகப்பெருமானின் சிலையை நிறுவிக் கோவிலமைக்க வேண்டும் என்று சொன்னாள்.
அவள் சொன்னபடி அம்புகள் செலுத்தப்பட்டன. நான்கு திசைகளில் செலுத்தப்பட்ட அம்புகள் விழுந்த இடம் முருகப்பெருமானுக்குரிய இடமாக்கப்பட்டது. ஐந்தாவது அம்பு விழுந்த இடத்தில் முருகப்பெருமான் சிலையை நிறுவுவதென முடிவு செய்யப்பட்டது.
இருப்பினும், அங்கிருந்த சிலர் குறைபாடுடைய சிலையினைக் கருவறையில் எப்படி நிறுவுவது? எனும் கேள்வியை எழுப்பினர். உடனே, அந்தச் சிலை நிறுவுவதற்காகப் பிரசன்னம் பார்க்கப்பட்டது.
அந்தப் பிரசன்னத்தில், தமிழ்நாட்டின் அறுபடை வீடுகளில் ஒன்றான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் கருவறையில் நிறுவப்பட்டிருந்த முருகப்பெருமானின் சிலை சேதமடைந்த நிலையில், கோவிலிலிருந்த அந்தச் சிலையை மாற்றிப் புதிய சிலை ஒன்று நிறுவப்பட்டது. அதன் பின்னர், சேதமடைந்த சிலையைக் கடலில் கொண்டு போய் போட்டு விட்டனர். அந்தச் சிலை கடல் அலைகளால் அடித்துச் செல்லப்பட்டு, ‘வல்லார்பாடம்’ கரையில் ஒதுங்கி மணலில் புதைந்து போய்விட்டது. அந்தச் சிலைதான் அந்தப் பெண் மூலம் வெளியில் தெரிந் திருக்கிறது என்று கண்டறியப்பட்டது.

மேலும் பிரசன்னத்தில், சிலையின் இடுப்பு வரையிலான பகுதி கற்சிலையாகவும், சேதமடைந்த கீழ்ப்பகுதியினை பஞ்சலோகச் சிலையாகவும் அமைத்து நிறுவும்படியும் சொல்லப்பட்டது.
இதையறிந்த கொச்சி மகாராஜா கோவில் கட்டுமானப்பணிகளுக்கு பல்வேறு உதவிகளைச் செய்தார். அதனால், விரைவாகக் கோவில் கட்டி முடிக்கப்பட்டது. அந்தச் சிலையின் சேதமடைந்த பகுதி பஞ்சலோகத்தால் செய்யப்பட்டது.
சிலை அமைப்பு :
கோவில் கருவறையில் நிறுவப்பட்டிருக்கும் அந்தச் சிலை பீடத்துடன் சேர்த்து ஐந்தரை அடி உயரமாக இருக்கிறது. அச்சிலையில் நான்கு கரங்கள் இருக்கின்றன. கீழ்ப்பகுதியிலிருக்கும் இரு கரங்களில் வலது கரம் ஆசி வழங்கும் அபய முத்திரையிலும், இடது கை இடுப்பில் ஊன்றியபடியும் இருக்கின்றன. மேல் பகுதியிலிருக்கும் இரு கரங்களில் சக்தி ஆயுதமும், ஜெப மாலையும் இடம் பெற்றிருக்கின்றன.
கொச்சி தேவஸ்தான நிர்வாகத்தின் கீழ் செயல்பட்டு வரும் இக்கோவில் வளாகத்தில், சிவபெருமான், பார்வதி, விநாயகர், விஷ்ணு, சாஸ்தா ஆகியோருக்கும் தனிச் சன்னிதிகள் அமைக்கப்பட்டிருக்கின்றன.
இக்கோவிலில் தினசரி வழிபாடுகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. வைகாசி விசாகம், ஆடிக்கிருத்திகை, தைப்பூசம், பங்குனி உத்திரம், கந்தசஷ்டி என்று முருகப்பெருமானுக்கு உரியதாகக் கருதப்படும் அனைத்து நாட்களிலும் சிறப்பு வழிபாடுகள் செய்யப்படுகின்றன. தமிழ்நாட்டிலுள்ள முருகன் கோவில்களில் பக்தர்களால் செய்யப்படும் காவடி வழிபாடு, பால்குட வழிபாடு போன்ற முருகன் வழிபாட்டு முறைகள் அனைத்தும் இங்கும் செய்யப்படுகின்றன.
இக்கோவிலில் இருக்கும் சுப்பிரமணிய சுவாமியை வழிபடுபவர் களுக்கு, அவர்களது இன்னல்கள் அனைத்தையும் நீக்கி இன்பம் நிறைந்த இனிய வாழ்க்கை கிடைக்கும் என்பது இங்கு வந்து வழிபடும் பக்தர்களின் நம்பிக்கையாக இருக்கிறது.
அமைவிடம் :
கேரளா மாநிலம் எர்ணாகுளத்திலிருந்து 17 கிலோமீட்டர் தொலைவில் எடப்பள்ளி எனுமிடத்திற்கு அருகில் இளங்குன்னபுழா கிராமப் பஞ்சாயத்தில் அமைந்திருக்கும் இக்கோவிலுக்கு எர்ணாகுளத்திலிருந்து கேரள அரசுப் பேருந்து வசதிகள் செய்யப்பட்டிருக்கின்றன.

திருவனந்தபுரத்தில் இருந்து கோவளம் செல்லும் சாலையில் அம்பலத்தரா என்ற இடத்தில் இருக்கிறது பழஞ்சிறை தேவி கோவில். இந்த கோவிலின் வரலாற்றை தெரிந்து கொள்ளலாம்.
ஆக்கல், காத்தல், அழித்தல் என்னும் முத்தொழில்களையும் ஒரு சேர செய்து வருபவர் பரமேஸ்வரன். பிரம்ம தேவனாலும், மகாவிஷ்ணுவாலும் அடி முடி காண முடியாத ஜோதியாக நின்றவர். அத்தகைய ஈசனின், சரிபாதியாகவும், சக்தியாகவும் விளங்குபவர் பார்வதிதேவி. உயிர்களைப் பேணிக் காத்து, துன்பம் ஏற்படுகின்றன போது உயிர்களின் துயர் துடைத்து காப்பது இந்த அன்னையே.
பழங்காலத்தில் எங்கு பார்த்தாலும் மலைகளும், ஆழங்களும் நிறையப்பெற்றதாக இருந்தது ‘மலையாளம்’ என்னும் பகுதி. இந்தப் பகுதியில் இருந்த திருவனந்தபுரம் என்ற இடம் காடாகக் கிடந்தது. இதனை ‘அனந்தன் காடு’ என்று அழைத்தனர். இந்த அனந்தன் காடு வழியாக பாய்ந்தோடிய நீலாற்றங்கரையில் யோகீஸ்வரர் என்ற முனிவர், பார்வதிதேவியை நினைத்து கடும் தவம் இருந்தார். அனைத்து உயிர்களும் நலமுடன் வாழ்ந்திடவும், ஆன்மிகம் தழைத்து வளர்ந்து செழித்திடவும், தான் முக்தி அடைந்திடவும் வேண்டி அந்த தவத்தை அவர் செய்து வந்தார்.
அவரது தவத்தை மெச்சிய பார்வதி தேவி, முனிவரின் கண் முன் தோன்றி அருள்பாலித்தாள். ‘இந்த இடத்திலேயே என்னை பிரதிஷ்டை செய்து வழிபடுவோர், அனைத்து நலனும் பெற்றிடுவர்’ என்று ஆசி கூறி மறைந்தாள்.
முனிவரும் அம்பாள் தனக்கு எந்த வடிவில் காட்சி கொடுத்தாளோ, அதன்படியே தேவியின் சிலையை வடித்து வடதிசை நோக்கி பிரதிஷ்டை செய்து வழிபட்டார். பின் முக்தியடைந்தார்.
நாளடைவில் காடு அழிக்கப்பட்டது. பழைய இடமான அங்கு சிறைச்சாலை அமைந்தது. காலநிலை மாற்றத்தினாலும், பழமையை அழித்து புதுமையை புகுத்தும் ஆர்வத்தாலும் சிறைச்சாலையும் அழிந்துவிட்டது. இந்தப் பகுதி பழஞ்சிறை என்று அழைக்கப்பட்டது. அருள் சுரக்க தயங்காத அம்மனின் ஆலயம் அங்கே அழகாக அமைந்தது. கோவிலை உருவாக்கிய யோகீஸ்வரரின் சிலை, அம்பாள் முன்பாக இருப்பதைக் காணலாம். இங்கு வீற்றிருக்கும் பழஞ்சிறை தேவியானவள், கொடுங்கல்லூர் பகவதி அம்மனின் அம்சமாக பார்க்கப்படுகிறாள்.

பழஞ்சிறை தேவியின் ஆலயம் அழகான சிற்பங்களால் அமைக்கப்பட்டுள்ளன. அன்னையின் கர்ப்பக்கிரகத்தை 17 யானைகளும், 6 சிங்கங்களும் சுமந்திருப்பது போன்று சிற்பங்கள் வடிக்கப்பட்டுள்ளன. கர்ப்பக்கிரகத்தின் மேல் பகுதியில் மும்மூர்த்திகளும் தேவியருடன் இருப்பது போன்றும், கங்கையுடன் ஈசன் இருப்பது போன்றும் சிற்பங்கள் உள்ளன. கோவில் பிரகாரத்தில் தசாவதார சிற்பங்கள் வடிக்கப்பட்டுள்ளன. இதுதவிர நவக்கிரகங்கள், ரத்த சாமுண்டி, பிரம்மராட்சசன், மாடன் ஆகியோரது திருமேனிகள் இருக்கின்றன.
இந்த ஆலயத்தில் பங்குனி மாதம் மிருகசீரிஷம் நட்சத்திரத்தன்று ஆரம்பமாகும் திருவிழா சிறப்புக்குரியதாகும். இந்த திருவிழாவின் ஒவ்வொரு நாளும் சில பக்தர்கள், ‘தோற்றப்பாட்டு’ என்னும் பாடலைப் பாடுகின்றனர். அன்னைப் பார்வதி தேவியின் மகிமை இந்தப் பாடலில் வர்ணிக்கப்படுகிறது. இந்தப் பாடலைப் பாடும் பக்தர்கள், 41 நாட்கள் விரதம் இருக்கின்றனர். இந்தப் பாடலைக் கேட்டாலே நமது பாவங்கள் நீங்கும் என்று கூறப்படுகிறது.
இதே போல் மாசி மாதத்தின் ஆறாவது நாளில் இரவு ‘அத்தாழ பூஜை’ என்ற வழிபாடு நடக்கிறது. இதை கன்னியர் பூஜை என்கின்றனர். அம்மன் சிறு வயது தோற்றத்தில் அழகாக காட்சியளிப்பது போல், பெண் குழந்தைகள் வேடமிட்டுக் கொண்டு இந்த பூஜையில் பங்கேற்பார்கள். அதே நேரத்தில் சுமங்கலிப் பெண்கள் தங்களது தாலி பாக்கியத்திற்காக சிறப்பு மாங்கல்ய பூஜையை நடத்துகிறார்கள்.
அன்றைய தினம் நள்ளிரவு 1 மணிக்கு பூதபலி பூஜை என்ற நிகழ்வு நடைபெறும். அம்மன் அருள்பெற்ற அர்ச்சகர், தனது பாதங்களில் சிலம்பு அணிந்து, கரங்களில் திரிசூலம் ஏந்தி, மூவர்ண புதுப்பட்டு உடுத்தி, வாளுடன் பின்நோக்கி நடனமாடியபடி சென்று பூதகணங்களுக்கு நேரடியாக காலத்திற்கேற்றபடி பலி நடத்தி அம்மனை வழிபடுவார். இந்த பூதகண பூஜையில் ஆண்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள்.
பஞ்ச பூதப் பொங்கல் :
மாசித் திருவிழாவின் 7-வது நாள் பூரம் நட்சத்திரத்தன்று, பஞ்சபூத பொங்கல் விழா நடத்தப்படுகிறது. பூமியின் கிடைக்கக்கூடிய மண்ணினால் (நிலம்) உருவாக்கப்பட்ட பானையில் கைகுத்தல் அரிசியை போடுகின்றனர். பானையில் தண்ணீர் (நீர்) விட்டு, மூன்றாவது பஞ்ச பூதமான நெருப்பைக் கொண்டு பொங்கல் தயாரிக்கப்படுகிறது. வாயு தத்துவத்தை உணர்த்தும் வகையில், அம்மனின் வாழ்த்தொலி, குரவையொலி போன்றவை எழுப்பப்படுகிறது. நெருப்பு கொண்டு தயாரிக்கப்படும் பொங்கல் வானத்தை (ஆகாயம்) நோக்கியபடி பொங்கி வழிகிறது. இதில் பஞ்ச பூதங்களும் அடங்கியிருப்பதால், இதனை ‘பஞ்சபூத பொங்கல்’ என்கிறார்கள்.

நவராத்திரி காலத்தில் இந்த அம்மனுக்கு விசேஷ பூஜைகள் நடைபெறும். அந்த ஒன்பது நாட்களில் கோவில் முன்பு சண்டி ஹோமம் இடைவிடாது நடத்தப்படும். இது தவிர மார்கழி மாதத்தில் தேவிக்கு பஞ்சாமிர்த அபிஷேகம், சித்திரை விஷு வழிபாடு போன்றவையும் சிறப்பாக நடத்தப்படுகிறது.
இந்த தலத்தில் உள்ள நாகர் சிலைக்கு பால் அபிஷேகம் செய்து வழிபட்டால் ராகு-கேது தோஷம் நீங்கும் என்பது நம்பிக்கையாக உள்ளது. இந்தக் கோவிலுக்கு வந்து வழிபட்டால் திருமணத் தடை நீங்கும் என்பது ஐதீகம். இந்த வழிபாட்டின் போது தேவிக்கு மாங்கல்யம் வாங்கி அணிவித்தால், மாங்கல்ய பாக்கியம் ஏற்படுவதாக கூறுகிறார்கள்.
பழஞ்சிறை தேவிக்கு வஸ்திரம் அணிவித்து, அரளிப்பூ மாலை சாத்தி வழிபாடு செய்வதும் சிறப்பான பலனைத் தரும். இந்த அம்மனுக்கு தினமும் பொங்கல் வைத்து வழிபாடு செய்யப்படுகிறது. பழஞ்சிறை அம்மனை வழிபடுபவர்களுக்கு இன்னல்கள் எதுவும் ஏற்படாது என்பதுடன், அவர்களுக்கு மறு பிறவி என்பது இல்லை என்றும் கூறப்படுகிறது. இந்த ஆலயம் தினமும் காலை 5.30 மணி முதல் 10.30 மணி வரையும், மாலை 5.30 மணி முதல் இரவு 8.30 மணி வரையும் திறந்திருக்கும்.
அமைவிடம் :
திருவனந்தபுரத்தில் இருந்து கோவளம் செல்லும் சாலையில் அம்பலத்தரா என்ற இடத்தில் இருக்கிறது பழஞ்சிறை தேவி கோவில்.

சேலம் மாவட்டம் ஆத்தூரில் இருக்கும் பழமையான கோட்டையினுள் காயநிர்மலேஸ்வரர் கோவில் உள்ளது. இந்த கோவிலின் வரலாற்றை தெரிந்து கொள்ளலாம்.
சேலம் மாவட்டம் ஆத்தூரில் இருக்கும் பழமையான கோட்டையினுள் காயநிர்மலேஸ்வரர் கோவில் உள்ளது. வசிஷ்ட நதிக்கரையோரம் அமைந்துள்ள மூன்றாவது பஞ்சபூத திருத்தலமான இது, அக்னி தலமாகும். இந்தப் பகுதியில் வசிஷ்டநதி, சுவேதநதி, மலையாறு, சிற்றாறு என பல நதிகள் இருந்தன. இதனால் இந்த ஊர் ‘ஆற்றூர்’ என்றழைக்கப்பட்டது. இதுவே நாளடைவில் ‘ஆத்தூர்’ என மருவியது.
மகரிஷியான வசிஷ்டர் இந்தத் திருத்தலத்தில் யாகங்கள் நடத்தியதால், இங்குள்ள இறைவனுக்கு ‘வசிஷ்டேஸ்வரர்’ என்ற பெயரும் உண்டு. அதேபோல இந்த ஊரை அனந்தன் என்னும் அரசன் ஆண்டு வந்ததால் இத்தல இறைவன் ‘அனந்தேஸ்வரர்’ என்றும் அழைக்கப்படுகிறார். இந்த ஊருக்கும் அனந்தகிரி, வசிஷ்டபுரம் என பெயர்கள் உண்டு.
தல வரலாறு :
வசிஷ்ட மகரிஷி ஒரு சமயம் இந்தப் பகுதிக்கு வந்து தவம் செய்தார். அப்போது அவரது தவத்திற்கு அசுரர்களால் பல இடையூறுகள் வந்தன. இதனால் அவர் நாரதரின் யோசனைப்படி சிவபூஜையில் ஈடுபட்டார். இதற்காக தமது தவவலிமையால் ‘வசிஷ்டநதி’ என்ற தீர்த்தத்தை உருவாக்கினார். பின்னர் பூஜை செய்ய தகுந்த இடம் தேடினார்.
அப்போது மேடான ஓரிடத்தில் அவரது கால் பட்டு இடறியது. இதனால் அதிர்ச்சி அடைந்த வசிஷ்டர் அந்த இடத்தைப் பார்த்தபோது, சுயம்பு லிங்கம் ஒன்று இருப்பதைக் கண்டார். அவரது கால் பட்டு லிங்கத்தின் ஒருபகுதி சேதமடைந்து இருப்பதை கண்டு கலங்கினார். பழுதுபட்ட லிங்கத்தை சிவபூஜைக்கு பயன்படுத்தலாமா? எனத் தயங்கினார். அந்த நேரத்தில் இறைவன் அசரீரியாக, ‘வசிஷ்டரே! நீர் தயங்காமல் பூஜை செய்யும். நிறைவாக தீபம் காட்டுகையில் ஓர் அதிசயம் நிகழும்’ என்று கூறினார்.
ஜோதி சொரூபமாக :
இதனால் மகிழ்ந்த வசிஷ்டர், அந்த சிவலிங்கத்தை பிரதிஷ்டை செய்து அர்ச்சனை, ஆராதனைகள் செய்தார். நிறைவாக சிவலிங்கத்துக்கு அவர் தீபாராதனை காட்டியபோது ஜோதி சொரூபமாய் பிரகாசமான ஒளி தோன்றியது. அதன் பிரகாசத்தை தாங்கமுடியாமல் வசிஷ்டர் கண்களை ஒரு விநாடி மூடித் திறந்தார்.
அப்போது பழுதடைந்து இருந்த லிங்கமேனி, குறை ஏதும் இல்லாத பளபளப்பான லிங்கமாக மாறி இருந்தது. வசிஷ்டர் தாம் ஏற்றி வைத்த தீபஒளியே லிங்கத்தின் மீது பட்டு பேரொளியாய் திகழ்வதை கண்டு பிரமித்தார். அவர் பார்த்துக்கொண்டிருந்த போதே அந்த ஒளி வசிஷ்டரின் தவத்திற்கு இடையூறு செய்த அசுரர்களை அழித்தது.
‘காயம்’ என்றால் ‘உடல்’ என்று பொருள். ‘நிர்மலம்’ என்றால் ‘பழுது இல்லாதது’ என்று அர்த்தம். லிங்கத் திருமேனியில் இருந்த குறையை நீக்கி வசிஷ்டருக்கு காட்சி தந்ததால், இங்குள்ள இறைவன் ‘காயநிர்மலேஸ்வரர்’ என்று அழைக்கப்பட்டார். மேலும் இறைவன் வசிஷ்டருக்கு ஜோதி சொரூபமாய் அருள்பாலித்ததால் இந்த திருத்தலத்தை ‘அக்னி ஸ்தலம்’ என்றும், லிங்கத்தை ‘தேயுலிங்கம்’ (நெருப்பு) என்றும் அழைக் கிறார்கள்.
கனவில் வந்த இறைவன் :
கி.பி.905-945 வரை தஞ்சையை ஆண்ட முதல் பராந்தக சோழன், இந்தக் கோவிலில் கர்ப்பக்கிரகம், அர்த்த மண்டபம், மகாமண்டபம் ஆகியவற்றை கட்டியதாக கூறுகிறார்கள். பல ஆண்டுகளுக்கு பின் கெட்டி முதலி என்ற குறுநில மன்னன் இந்தப் பகுதியை ஆட்சி செய்தான். அவன் தினமும் எம்பெருமானை வணங்கிய பிறகே எந்தச் செயலையும் செய்வான்.
ஒருநாள் அவனது கனவில் இறைவன் காட்சி தந்ததாகவும், இறைவனது திருமேனி அழகை கண்டு வியப்புற்று கெட்டி முதலி எம்பெருமானுக்கு ‘காயநிர்மலேஸ்வரர்’ என பெயர் சூட்டியதாகவும் கூறுகிறார்கள். கெட்டி முதலி காலத்தில்தான் ஆத்தூர் கோட்டை, மதிற்சுவர், அகழி, மூன்று நெற்களஞ்சியங்கள், அரண்மனை நீராழிமண்டபம் ஆகியவை அமைக்கப்பட்டது.
ஆலய அமைப்பு :
ஆத்தூர் கோட்டையில் கிழக்கு நோக்கியவாறு ஐந்து நிலை ராஜகோபுரத்துடன் இந்தக் கோவில் கம்பீரமாக காட்சி அளிக் கிறது. முகப்பு மண்டபம், அர்த்த மண்டபத்தை அடுத்து நந்தி முன் இருக்க, கருவறையில் மூலவர் காயநிர்மலேஸ்வரர் பிரகாசமாக அருள்பாலிக்கிறார். கருவறை பிரகாரத்தில் விநாயகர் அநேக வடிவங்களில் விதவிதமான பெயர்களுடன் அருள்பாலிக்கிறார்.
சிவ-பார்வதி, பாலமுருகன், வள்ளி-தெய்வானை சமேத முருகப்பெருமான், லட்சுமிதேவி, சரஸ்வதிதேவி, லிங்கோத்பவர், துர்க்கை, பிரம்மா, ஐயப்பன், சூரியபகவான், சனிபகவான், ஆஞ்சநேயர், நாகர்கள், நாககன்னி ஆகியோரும் அருள் பாலிக்கின்றனர். இங்கு சதுர்புஜ பைரவர், அஷ்டபுஜ பைரவர், ஸ்வர்ண ஆகர்ஷண பைரவர் என வெவ்வேறு வடிவங்களில் பைரவர் வீற்றிருக்கிறார். தனியாக நவக்கிரக சன்னிதியும் உள்ளது.
சுவாமிக்கு வலது பின்புறத்தில் கிழக்கு நோக்கியபடி தாயார் அகிலாண்டேஸ்வரி தனி சன்னிதியில் எழுந்தருளியுள்ளார். அம்பிகை நான்கு திருக்கரங்களுடன் உலக உயிர்களை காக்கும் வகையில் கருணை மிளிர காட்சி தருகிறார். கர்ப்பிணி பெண்கள் இத்தல அம்மனை வழிபட்டு, குங்குமத்தை நெற்றில் இட்டுக் கொண்டால் சுகப்பிரசவம் ஆகும் என்பது நம்பிக்கையாக உள்ளது. கோவில் தலவிருட்சம் மகிழமரம் ஆகும். காயநிர்மலேஸ்வரர் கோவில் எதிரே, ஆத்தூர் கோட்டை பிரசன்ன வெங்கடேச பெருமாள் கோவிலும் அமைந்துள்ளது.
திருவிழாக்கள் :
இந்த தலத்தில் தமிழ் புத்தாண்டு, மாதாந்திர கிருத்திகை, ஆனி திருவாதிரை, ஆடிப்பூரம், நவராத்திரி, கந்தசஷ்டி, கார்த்திகை தீபம், வைகுண்ட ஏகாதசி, ஆருத்ராதரிசனம், தைப் பூசம், மாசி சிவராத்திரி, பங்குனி உத்திரம் ஆகியவை சிறப்பாக கொண்டாடப்படுகிறது. ஆலயம் தினமும் காலை 7 மணி முதல் பகல் 11.30 மணி வரையும், மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரையும் திறந்திருக்கும்.

ஒளிரும் சிவலிங்கம் :
திருவண்ணாமலைக்கு இணையாக கருதப்படும் இந்தக் கோவிலில், வெளியே எவ்வளவுதான் பனி, மழை இருந்தாலும் கருவறை எப்போதும் வெப்பமாகவே இருப்பதை உணரலாம். மூலவரான காயநிர்மலேஸ்வரருக்கு அபிஷேகம் முடிந்து தீபாராதனை காட்டும் போது, அந்த தீபத்தின் ஒளி பல மடங்காக பிரகாசித்து ஒளிர்வது அதிசயமான ஒன்றாகும். காயநிர்மலேஸ்வரரை வணங்குவோர் வாழ்க்கை ஒளி விட்டு பிரகாசிக்கும் என்பது ஐதீகம். மேலும் இந்த ஒளியால்தான் அன்னை அகிலாண்டேஸ்வரியே பிரகாசிப்பதாக கூறப்படுகிறது. இதனால் அன்னையின் சிலையில் ஒருவித ஈர்ப்பு உள்ளதை இன்றும் காணலாம். அம்பிகை இன்முகத்தோடு, கருணை ததும்ப காட்சி அளிப்பது தத்ரூபமாக இருக்கும்.
தலையாட்டி பிள்ளையார் :
ஆத்தூர் காயநிர்மலேஸ்வரர் கோவிலுக்கு வெளியே ‘தலையாட்டி பிள்ளையார்’ சன்னிதி உள்ளது. முன் காலத்தில் சோழ அரசுக்கு கட்டுப்பட்ட சிற்றரசன் வானவராயன் இந்தப் பகுதியை ஆண்டுள்ளான். இந்தக் கோவிலை அவன் புனரமைத்து கட்டிய போது, இந்த விநாயகரிடம் உத்தரவு கேட்டு விட்டுத்தான் பணியைத் தொடங்கினான். இந்த விநாயகரே இத்தலத்தின் பாதுகாவலர். கோவில் வேலைகள் முடிந்தபிறகு இந்த விநாயகரிடம் வந்த மன்னன், ‘பணிகளை சிறப்பாக முடித்திருக்கிறேனா?’ என்று கேட்டானாம். அதற்கு பிள்ளையார் ‘நன்றாக கட்டியிருக்கிறாய்’ என்று சொல்லும்விதமாக தனது தலையை ஆட்டினாராம். எனவே இவருக்கு ‘தலையாட்டி பிள்ளையார்’ என்று பெயர் வந்தது. இந்த விநாயகர் தனது தலையை இடப்புறமாக சற்றே சாய்த்தபடி இருப்பதைக் காணலாம்.
அதிசய தட்சிணாமூர்த்தி சன்னிதி :
இந்தக் கோவில் வளாகத்தில் தட்சிணாமூர்த்தி தனி சன்னிதியில் எழுந்தருளியுள்ளார். பொதுவாக எல்லா சிவாலயங்களிலும் தட்சிணாமூர்த்தி மரத்தின் அடியில் அமர்ந்து சனகர், சனாதனர், சனந்தனர், சனத்குமாரர் ஆகிய நான்கு பேருக்கு வேத ஞானத்தை அருளும் வகையில் காட்சி அளிப்பார். ஆனால் ஆத்தூர் காயநிர்மலேஸ்வரர் கோவிலில், குரு தட்சிணாமூர்த்தி ரிஷப வாகனத்தில் அமர்ந்து சப்தரிஷிகள் 6 பேருக்கு வேதத்தை அருள்வது போன்று காட்சி தருகிறார். இவர்களில் 3 பேர் அமைதியாகவும், 3 பேர் தங்களது சந்தேகங்களை கேட்டு அதற்கு விளக்கம் பெறும் விதமாகவும் இந்த சிலை வடிக்கப்பட்டுள்ளது. தட்சிணாமூர்த்தியின் இந்த கோலம் மிகவும் அதிசயமான ஒன்றாக கருதப்படுகிறது.
காயநிர்மலேஸ்வரரையும், அகிலாண்டேஸ்வரியையும் வழிபட்டால் திருமணம் ஆகாதவர்களுக்கு மணமாலையும், திருமணம் ஆனவர்களுக்கு குழந்தை வரமும் தேடி வரும். நாள்பட்ட நோய்கள் தீரும்.
சேலத்தில் இருந்து 52 கிலோமீட்டர் தூரத்தில் ஆத்தூர் உள்ளது. ஆத்தூர் பஸ்நிலையத்தில் இருந்து ஒரு கிலோமீட்டர் தூரத்தில் கோட்டை என்னும் பகுதியில் காயநிர்மலேஸ்வரர் ஆலயம் இருக்கிறது.

ராஜஸ்தான் மாநிலம் பிகானேர் மாவட்டத்தில் தேஷ்னோக் என்ற கிராமத்தில் உள்ள கர்ணி மாதா ஆலயம் என்கிற ‘எலிகளின் ஆலயம்’ பிரசித்திப் பெற்றதாக விளங்குகிறது.
ராஜஸ்தான் மாநிலம் பிகானேர் மாவட்டத்தில் உள்ளது தேஷ்னோக் என்ற கிராமம். இங்கு கர்ணி மாதா கோவில் இருக்கிறது. இந்த அம்மன் துர்க்கையின் அவதாரம் என்று கருதப்படுகிறது. கர்ணி மாதா ஆலயம் என்பதை விட ‘எலிகளின் ஆலயம்’ என்ற பெயரே இந்த ஆலயத்தை பிரசித்திப் பெற்றதாக விளங்கச் செய்துள்ளது. இந்த ஆலயத்தில் சுமார் 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட எலிகள் இருப்பதே இதற்குக் காரணம்.
மத்திய மற்றும் மேற்கிந்திய பகுதி மக்களின் ஆன்மிகச் சுற்றுலாத் தலங்களில் இந்த ஆலயம் முதலிடம் பிடிக்கிறது. சலவைக் கற்களால் ஆன இந்த ஆலயத்தை பிகானேர் பகுதியை ஆட்சி செய்த ‘கங்கா சிங்’ என்ற மன்னர் கட்டியதாக கூறப்படுகிறது. இந்த ஆலயத்தின் கட்டிட அமைப்பானது முகலாய கட்டிடக்கலை மற்றும் ராஜபுத்திரக் கட்டிடக் கலையுடன் கூடியதாக இருக்கிறது.
சரண் என்னும் பழங்குடி இனத்தைச் சேர்ந்தவர் கர்ணி. இவர் 14-ம் நூற்றாண்டின் இடைப்பட்ட காலத்தில் ஜோத்பூர் அருகில் உள்ள ஒரு கிராமத்தில் பிறந்தார். இவருக்கு திருமணப் பருவம் எட்டியதும் மணம் முடிக்க முடிவு செய்யப்பட்டது. மணமகனும் தேர்வு செய்யப்பட்டார். திருமணத்திற்கு முன்பு ஊர்வலம் நடந்தபோது, ஓரிடத்தில் ஊர்வல பல்லக்கு நிறுத்தப்பட்டது. அப்போது மணமகளைப் பார்க்கும் ஆவலில் மணமகன் தான் இருந்த பல்லக்கின் திரையை விலக்கி, மணமகள் பல்லக்கைப் பார்த்தார்.

அப்போது மணமகளின் பல்லக்கில் சிம்ம வாகிணியாக துர்க்கையின் அவதாரத்தில் கர்ணி மாதா அமர்ந்திருந்தார். பின்னர் அந்த உருவம் மறைந்து கர்ணி தோன்றினார். அவர் தனக்கு கணவனாக வரப்போகிறவரிடம், தன்னுடைய அவதார நோக்கத்தைக் கூறி, தனது தங்கையை அவருக்கு இல்லறத் துணைவியாக்கினார். பின்னர் நாடோடியாக பல ஊர்களுக்குச் சென்று பல அற்புதங்களை நிகழ்த்தினார். தேஷ்னோக் என்ற வனப்பகுதியை அடைந்த கர்ணி மாதா, அங்கேயே ஒரு குகையைத் தேர்வு செய்து தவம் இருந்தார்.
இந்த நிலையில் ராவ் ஜோதா என்ற மன்னன், மற்றொரு மன்னனால் விரட்டப்பட்டு, வனத்தில் இருந்த கர்ணி மாதாவை சரணடைந்தான். 10 ஆண்டுகளுக்கும் மேலாக அன்னைக்கு சேவை புரிந்தான். பின்னர் கர்ணி மாதாவின் ஆலோசனைப்படி தகுந்த நேரத்தில் தன்னுடைய எதிரியோடு போரிட்டு வெற்றி பெற்றான். அவன் வெற்றி பெற்ற பகுதியே பின்னாளில் ஜோத்பூர் என்று அழைக்கப்பட்டது. ராவ் ஜோதாவின் மகன் ராவ் பீகா, தன்னுடைய தந்தையிடம் இருந்து பிரிந்து, கர்ணி மாதாவின் சொல்படி ஒரு அழகிய நகரை நிர்மாணித்தான். அதுவே ‘பீகானேர்’ என்றானது.
இந்து மத ஐதீகப்படி ஒரு பிறவியின் முடிவு என்பது, அடுத்தப் பிறவின் தொடக்கமாக பார்க்கப்படுகிறது. கர்ணி மாதா ஆலயம், கபாஸ் எனப்படும் 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட எலிகளுக்கு வாழ்விடமாக திகழ்ந்து வருகிறது. இந்த எலிகள் அனைத்தும் கர்ணி மாதாவின் எதிர்கால குழந்தைகளின் ஆன்மாக்களை சுமந்து திரிவதாக இந்தப் பகுதி மக்கள் நம்புகிறார்கள். ஆலயங்களுக்கு வரும் பக்தர்கள் ஆலயத்திற்குள் சிறிய குகை போல் அமைந்த இடத்தில் வீற்றிருக்கும் கர்ணி மாதாவை முதலில் வழிபடுகின்றனர்.

இந்த அன்னையின் மூலவர் சிலை 75 செ.மீ. உயரமே இருக்கிறது. இந்த சிலையானது ஜெய்சல்மர் மற்றும் ஜோத்பூரில் கிடைக்கும் ஒரு வகை சிவப்புக் கல்லில் வடிக்கப்பட்டுள்ளது. தலையில் கிரீடம், வலது கையில் சூலம், இடது கையில் கபாலம், பின் புறம் சிம்ம வாகனம் என துர்க்கையின் கோலத்தில் கர்ணி மாதா காட்சி தருகிறார். இவரது விக்கிரகம் குங்குமத்தால் மூடப்பட்ட நிலையில் காட்சியளிக்கிறது. இந்த விக்ரகத்தின் முன்பாக பெரிய தட்டில் லட்டு பிரசாதங்கள் வைக்கப்பட்டுள்ளன. இதனை ஏராளமான எலிகள், பக்தர்களின் கூட்டத்தை சிறிதும் கண்டுகொள்ளாமல் கொறித்துக் கொண்டிருக்கின்றன.
கர்ணி மாதாவிற்கு அடுத்தபடியாக பக்தர்கள் வழிபடுவது இந்த எலிகளைத்தான். அவர்கள் தங்களோடு, தங்கள் கிராமத்தில் வாழும் சக குடிமக்களாகவே இந்த எலிகளை கருதுகின்றனர். அந்த எலிகளுக்கு பால், இனிப்பு பொருட்களை வைத்து வழிபாடு செய்கிறார்கள். பெரும்பாலான எலிகள் கருப்பு நிறம்தான், ஒரு சில வெள்ளை எலிகளும் தென்படுகின்றன. வெள்ளை எலிகளை கண்ணால் கண்டால், அதிர்ஷ்டம் வந்து சேரும் என்பதும் ஒரு நம்பிக்கையாக நிலவுகிறது.
இங்கு ஒரு அதிசயம் என்னவென்றால் எலிகள் அனைத்தும் ஒரே அளவிலான தோற்றம் கொண்டவையாகவே காணப்படுகின்றன. குட்டி எலிகள் ஒன்றைக் கூட காண முடிவதில்லை. இவை இனப்பெருக்கம் செய்கின்றனவா? அப்படியானால் குட்டி எலிகள் ஒன்றுகூடவா தென்படாமல் போய்விடும்? என்பது பக்தர்களின் ஆச்சரியக் கேள்வியாக இருக்கிறது.

இங்குள்ள எலிகள் அனைத்தும் புனிதமாக கருதப்படுவதால், பக்தர்கள் இந்த எலிகளிடம் மிகுந்த மரியாதை கொண்டுள்ளனர். யாராவது தெரியாமல் எலிகளை மிதித்து விட்டால், வெள்ளியால் செய்யப்பட்ட எலியின் உருவத்தை வாங்கி வைத்து வழிபட்டு பரிகாரம் செய்து கொள்கின்றனர். இந்த எலிகளின் ஸ்பரிசம், பக்தர்களின் மேல் பட்டால் அவர்கள் நற்பேற்றைப் பெறுவதாக நம்பப்படுகிறது.
இந்த ஆலயம் காலை 4 மணிக்கே பக்தர்கள் தரிசனம் செய்வதற்காக திறக்கப்பட்டு விடும். இந்த ஆலயத்தில் இரண்டு முறை திருவிழா நடத்தப்படுகிறது. முதல் பெரிய திருவிழா, சித்திரை வளர்பிறை முதல் நாள் தொடங்கி 10 நாட்கள் நடைபெறும். இரண்டாவது திருவிழா நவராத்திரி காலத்தில் 10 நாட்கள் நடத்தப்படும்.
பீகானேர் என்ற இடத்தில் இருந்து சுமார் 30 கிலோமீட்டர் தொலைவில் தேஷ்னோக் கிராமம் இருக்கிறது.

இறைவனையும், இறைவியையும் சூரியன் ஏழுநாட்கள் ஒருசேர வழிபடும் சிறப்பு தலம், கண் கோளாறுகள் போக்கும் பரிகாரத் தலம் என பல்வேறு சிறப்பு கொண்டதாக திகழ்கிறது, விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள பனையபுரம் பனங்காட்டீஸ்வரர் திருத்தலம்.
தேவாரப் பாடல்பெற்ற நடுநாட்டுத் தலம், தக்கன் பேறு பெற்ற ஆலயம், சிபி சக்கரவர்த்தி முக்தி பெற்ற தலம், இறைவனையும், இறைவியையும் சூரியன் ஏழுநாட்கள் ஒருசேர வழிபடும் சிறப்பு தலம், கண் கோளாறுகள் போக்கும் பரிகாரத் தலம் என பல்வேறு சிறப்பு கொண்டதாக திகழ்கிறது, விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள பனையபுரம் பனங்காட்டீஸ்வரர் திருத்தலம்.
சூரியன் பேறுபெற்ற தலம்
சிவபெருமானை மதிக்காமல் யாகம் வளர்த்தான் தக்கன். அந்த யாகம் தோல்வியில் முடிந்தது. இந்த பழி பாவம் நீங்குவதற்காக பல சிவ தலங்களுக்குச் சென்று வழிபட்டான் தக்கன். அவன் வழிபட்ட தலங்களில் ஒன்று பனையபுரம் பனங்காட்டீஸ்வரர் கோவில். இதற்குச் சான்றாக ராஜகோபுரம் உள்ளே வடக்கு முகமாக ஆட்டுத் தலையுடன் தக்கன் வழிபடும் சிலை, புடைப்புச் சிற்பமாக அமைந்துள்ளது.
தக்கனின் யாகத்தில் கலந்து கொண்ட சூரியன், வீரபத்திரரால் தாக்கப்பட்டு, பற்களையும், தன் பலத்தையும் இழந்தான். அந்த சாபம் நீங்கி பழைய நிலையை அடைய, இத்தலத்து இறைவனை வழிபட்டுப் பேறு பெற்றான் என்கிறது தலபுராணம். இதனை உறுதிப் படுத்தும் வகையில், இத்தலத்தில் ஆண்டுதோறும் சித்திரையில், ஏழு நாட்கள் சூரிய பூஜை நடைபெறுகிறது. இந்த நாட்களில் இறைவனின் மீது சூரியன் ஒளி விழுவது கண்கொள்ளாக் காட்சியாகும்.
இத்தல இறைவனுக்கு ‘நேத்ரோதார சுவாமி’ என்ற பெயரும் உண்டு. இதன் பொருள் ‘கண் கொடுத்த கடவுள்’ என்பதாகும். பார்வைக் கோளாறு உள்ளவர்கள், இங்குள்ள இறைவனிடம் தஞ்சம் புகுந்தால், அவர்களது குறை நிவர்த்தி ஆகும் என்பது ஐதீகம்.
ஆலய அமைப்பு
இந்தக் கோவில் 73 சென்ட் நிலப்பரப்பில் எழிலுடன் அமைக்கப்பட்டுள்ளது. இந்த ஆலயத்தின் கருவறைச் சிற்பங்கள் முதலாம் ராஜேந்திரசோழன் காலத்தவை. இதற்கு தட்சிணாமூர்த்தி, பிரம்மா, துர்க்கை திருமேனிகள் சாட்சி கூறுகின்றன. ராஜகோபுரம் அறுபது அடி உயரத்தில் நான்கு நிலைகளைக் கொண்டு நிமிர்ந்து நிற்கின்றது. இதுவும், இதன் அருகே உள்ள சிங்கமுகத் தூண்களும் விஜயநகர காலத்தவை ஆகும்.
கருவறையில் மூலவர் வட்ட வடிவ ஆவுடையாரில் கிழக்கு முகமாக லிங்கத் திருமேனியில் காட்சி தரு கிறார். இவரின் வடிவம் எளிமையாக, அதே நேரத்தில் ஒளி பொருந்தியதாக அமைந்துள்ளது. இத்தல இறைவனை திருஞான சம்பந்தர், ‘புறவார் பனங்காட்டீசன்’ என்று அழைக்கிறார். இருப்பினும் இங்குள்ள கல்வெட்டு களில் இறைவனின் திருநாமம் ‘கண்ணமர்ந்த நாயனார், பரவை ஈஸ்வரமுடைய மகாதேவன், திருப் பனங்காட்டுடைய மகாதேவர்’ என பலவாறு குறிப்பிடப்பட்டுள்ளது.
சிவனின் இடப்புறத்தில் சற்றுத் தொலைவில் அம்பாள் தனிச் சன்னிதியில் வீற்றிருக்கிறார். இறைவியின் திருநாமம் மெய்யாம்பிகை என்பதாகும். அம்மனுக்கு புறவம்மை, சத்தியாம்பிகை என்ற பெயர்களும் வழக்கில் உள்ளன. அன்னையும் கிழக்கு முகமாய் நின்ற கோலத்தில் காட்சி தருகிறாள். மேல் இரு கரங்களில் தாமரை மலர்களைத் தாங்கியும், கீழ் இரு கரங்களில் அபய, வரத முத்திரைகளுடனும் அம்மன் அருள்பாலிக் கிறாள்.
கொடிமரம் அருகே பல்லவர் கால கற்பலகை விநாயகர், வள்ளி தெய்வானையுடன் ஆறுமுகர் சன்னிதி, 63 நாயன்மார்கள் சிலைகள் மற்றும் திருநீலகண்டர் தன் துணைவியுடன் கோல் தாங்கி நிற்கும் அரிய கோலம், ராஜகோபுரம் உள்புறம் விநாயகரைத் தொழும் தக்கனின் கோலம் ஆகியவை அமைந்துள்ளன. இவற்றிற்கெல்லாம் மகுடமாக இது சூரியத் தலமாக விளங்குவதால், சிவனின் சன்னிதி வளாகத்திற்குள், சூரியன் தனித்து நின்று காட்சி தருகிறார்.
ஊர் பஞ்சாயத்து
இவ்வூரில் தீராத பஞ்சாயத்து வழக்குகளில், அன்னை மெய்யாம்பிகை மீது சத்தியம் செய்யச் சொல்வது வழக்கம். தவறாக பொய் சத்தியம் செய்பவர், அடுத்து எட்டு நாட்களுக்குள் தண்டனை பெறுவது உறுதி என்பது இந்தப் பகுதி மக்களின் அசைக்க முடியாத நம்பிக்கை.
இத்தலத்தின் தலமரமாகப் பனை மரமும், தலத் தீர்த்தமாக பத்ம தீர்த்தமும் அமைந்துள்ளன. தலமரமான பனைமரம் ஆண் பனை உயரமாகவும், பெண்பனை குள்ளமாகவும் காலம் காலமாக காட்சி தருவது வியப்பான ஒன்றாகும். பெண் பனையிலிருந்து விழும் பழத்தை உண்பவர்களுக்கு மகப்பேறு கிடைக்கும் என்பது ஐதீகம்.
இந்த ஆலயத்தில் ஆண்டுதோறும் சித்திரை மாதம் முதல் நாளில் இருந்து தொடர்ந்து ஏழு நாட்கள் சூரிய உதயத்தின் போது, சூரியன் தன்னுடைய பொன்னிற ஒளிக் கதிர்களால், கருவறையில் உள்ள ஈசனை வணங்குவது சிறப்புக்குரியதாகும். அந்த 7 நாட்களும் பனங்காட்டீஸ்வரர் மீது சூரியன் ஒளி விழும். ஈசனின் தலையில் தொடங்கி பாதத்தைத் தொடும் சூரியக் கதிர், பின்னர் அம்பாளின் சிரசில் இருந்து பாதம் வரை வருகிறது. அத்துடன் அன்றைய சூரிய பூஜை நிறைவடையும். இப்படியே தொடர்ச்சியாக 7 நாட்கள் சூரிய வழிபாடு நடக்கிறது. சூரியன் வழிபட்ட தலம் என்பதால், சூரியக் கதிர் விழும் வகையில் இந்த ஆலயத்தின் கட்டிடம் வடிவமைக்கப்பட்டிருப்பது, நமது முன்னோர்களின் புத்திக்கூர்மைக்கும், ஆற்றலுக்கும் ஓர் எடுத்துக்காட்டாகும்.
இந்த ஆண்டுக்கான சூரிய வழிபாடு கடந்த 14-ந் தேதி தொடங்கியது. இந்த நிகழ்வு வருகிற 20-ந் தேதி (வியாழக்கிழமை) வரை நடக்கிறது.
அமைவிடம்
விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வட்டத்தில் அமைந்துள்ளது பனையபுரம். விழுப்புரத்திலிருந்து வடகிழக்கே 10 கி.மீ. தொலைவில், விக்கிரவாண்டி- தஞ்சாவூர், விழுப்புரம் - வழுதாவூர் சாலைகளின் சந்திப்பில் இந்த ஊர் இருக்கிறது. விழுப்புரத்திலிருந்து ஏராளமான பேருந்துகள் இவ்வூர் வழியாகச் செல்கின்றன.
இவ்வூரின் கிழக்கே 10 கி.மீ. தொலைவில் புகழ்பெற்ற திருவக்கரை வக்ர காளியம்மன் ஆலயமும், அருகே தொல்லியல் சிறப்பு வாய்ந்த அரிய கல் மரங்களும், மேற்கே சுமார் 5 கி.மீ. தொலைவில் தேவாரத் தலமான திருவாமாத்தூரும், வண்ணச்சரபம் தண்டபாணி சுவாமிகளின் கவுமார மடமும் உள்ளன.
- பனையபுரம் அதியமான்.

மத்தியபிரதேசத்தில் மிகப்பெரிய சுற்றுலா தலமாக கஜுராகோ கோவில்கள் மாறி இருக்கின்றன. இந்த கோவில் பற்றிய வரலாற்றை தெரிந்து கொள்ளலாம்.
கஜுராகோ கோவில் என்றதுமே இந்த கோவிலில் உள்ள ஆண்- பெண் உறவை சித்தரிக்கும் சிலைகள்தான் ஞாபகத்துக்கு வரும். எனவே, இது ஒரு ஆபாச கோவில் என்ற எண்ணமே எல்லோருக்கும் இருக்கிறது.
இந்த எண்ணம் மிக, மிக தவறானது. எல்லோரும் நினைப்பது போல் இந்த கோவிலில் அனைத்து சிலைகளும் தாம்பத்திய உறவை சித்தரிக்கும் சிலைகள் அல்ல. கோவிலில் உள்ள மொத்த சிலைகளில் 10 சதவீத சிலைகள் மட்டுமே இதுபோன்ற சிலைகள் ஆகும். மற்றவை எல்லாம் இந்தியாவின் கலாச்சாரத்தை சித்தரிக்கும் அரிய சிலைகளாக உள்ளன.
கஜுராகோ கோவில் மத்தியபிரதேசம் மாநிலம் சத்தர்பூர் மாவட்டத்தில் அமைந்துள்ளது. மத்திய பிரதேசத்தின் முக்கிய நகரங்களில் ஒன்றான ஜான்சியில் இருந்து 175 கிலோ மீட்டர் தூரத்தில் இருக்கிறது.
கி.பி. 900-ம் ஆண்டு வாக்கில் இந்த பகுதியை சந்தலா என்ற ராஜபுத்திர வம்சத்தினர் ஆண்டு வந்தனர். அவர்கள்தான் இந்த கோவிலை கட்டினார்கள். கி.பி. 950-ம் ஆண்டில் இருந்து கி.பி. 1050-ம் ஆண்டு வரை கோவில் கட்டுமான பணிகள் நடந்துள்ளன. அப்போதைய மன்னர்கள் யசோவர்மன், தன்கா ஆகியோர் கோவிலை கட்டியதாக வரலாற்று குறிப்புகள் உள்ளன.
கஜுராகோ கோவில் என்பது ஒரே கோவில் அல்ல. 85 கோவில்கள் கொண்டது. 12-ம் நூற்றாண்டில் இந்த வளாகத்தில் 85 கோவில்கள் இருந்துள்ளன.
முஸ்லிம் மன்னர்கள் ஒவ்வொரு முறை படையெடுத்து வரும் போதும் இங்கிருந்த கோவில்கள் இடிக்கப்பட்டன. மேலும் இயற்கையாகவும் பல கோவில்கள் இடிந்தன.
தற்போது 22 கோவில்கள் மட்டுமே எஞ்சியுள்ளன. இவற்றை ஒட்டு மொத்தமாக கஜுராகோ கோவில் என்று அழைக்கிறார்கள்.
கஜுரா என்றால் ஈச்ச மரம் என்று பெயர். இந்த பகுதியில் முன்பு ஏராளமான ஈச்ச மரங்கள் இருந்தன. எனவே, அங்கிருந்த கோவில்கள் கஜுராகோ கோவில்கள் என்று அழைக்கப்பட்டு வந்துள்ளன.
இந்த வளாகத்தில் இந்து கோவில்கள் மட்டும் அல்ல. சைன மத கோவில்களும் கட்டப்பட்டன. மொத்தம் உள்ள 85 கோவில்களில் இரு கோவில்களும் கலந்தே இருந்தன.
இப்போது எஞ்சி இருக்கும் 22 கோவில்களில் 18 இந்து கோவில்களும், 4 சைன கோவில்களும், இருக்கின்றன. 85 கோவில்களும் அழியாமல் இருந்த காலத்தில் 20 சதுர கிலோ மீட்டர் பரந்து விரிந்த பரப்பளவில் இருந்திருக்கிறது. தற்போது 22 கோவில்கள் மட்டுமே உள்ள நிலையில் 6 சதுர கிலோ மீட்டர் பரப்பளவில் இருக்கிறது.
அனைத்து கோவில்களும் இன்றும் இருந்திருந்தால் இந்தியாவில் மிகப்பெரிய கோவில்களில் ஒன்றாக கஜுராகோ இருந்திருக்கும். தற்போதுள்ள 22 கோவில்களில் 8 கோவில்கள் விஷ்ணுவுக்கு உரியதாகும். அடுத்து சிவனுக்கு 6 கோவில்களும், விநாயகர், சூரியனுக்கு தலா 1 கோவிலும், 4 சைன கோவிலும் இருக்கின்றன. மற்றவை தேவி மற்றும் பல்வேறு சாமி கோவில்கள்.

அனைத்து கோவில்களிலும் மிகப்பெரியது. காந்தரிய மகாதேவா கோவில். இது சிவனுக்குரிய கோவில். இது, 109 அடி நீளமும், 60 அடி அகலமும், 116 அடி உயரமும் கொண்டது.
இது, மொத்தம் 6,500 சதுரஅடி பரப்பளவில் அமைந்திருக்கிறது. இங்கு மட்டுமே 870 சிலைகள் உள்ளன. இவை ஒவ்வொன்றும் 1 மீட்டர் உயரமும், அதற்கும் மேல் உயரமும் கொண்டவை. மேலும் ஆயிரக்கணக்கான சிறு சிலைகளும் இருக்கின்றன. தாம்பத்திய உறவை சித்தரிக்கும் சிலைகளும் இவற்றில் அடங்கும்.
இந்த கோவிலில் அஸ்திவாரத்தில் கிரானைட் கற்களை பொருத்தி அதன் மேல் பகுதியில் கற்களால் கட்டி உள்ளனர். உள்ளே பொருத்தப்பட்டுள்ள அனைத்து தூண்களிலும், சுவர்களிலும் சிலைகளை செதுக்கி உள்ளனர்.
அனைத்து கோவில்களிலும் சேர்த்து பல்லாயிரக்கணக்கான சிலைகள் இருக்கின்றன. இங்கு மாதங்கேஸ்வரா என்ற இன்னொரு சிவன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் பிரமாண்ட லிங்கம் இருக்கிறது. இது 8.2 அடி உயரமும், 3.6 அடி குறுக்களவும் கொண்டது. 25 அடி உயர பீடத்தில் சிலை கம்பீரமாக அமைந்துள்ளது.
இந்தியாவில் 3 புகழ் பெற்ற சிவன் கோவில்களான கேதர்நாத், காசி, கயா கோவில்களோடு சேர்ந்த 4-வது கோவிலாகவும் இது இருந்துள்ளது. இந்த கோவில் அமைந்த இடத்தில்தான் சிவனுக்கு திருமணம் நடந்ததாகவும், எனவே தான் அந்த இடத்தில் கோவில் கட்டி இருப்பதாகவும் கூறப்படுகிறது.
கோவில் அமைந்துள்ள இடத்தில் 64 புனித குளங்கள் இருந்துள்ளன. அவை மறைந்து மண்ணோடு மண்ணாகி போயிருந்த நிலையில் தற்போது 56 குளங்கள் அடையாளம் காணப்பட்டு தோண்டி எடுக்கப்பட்டுள்ளன.
இந்த வளாகத்தில் உள்ள ஒவ்வொரு கோவிலிலுமே வித்தியாசமான வடிவத்தில் உயரமான கோபுரங்களுடன் கட்டப்பட்டுள்ளன. நாகரா கட்டிட கலையை பயன்படுத்தி இதை கட்டி இருக்கிறார்கள்.
கட்டிடங்கள் முழுவதுமே கற்களாலேயே கட்டப்பட்டு உள்ளன. ஒவ்வொரு கல்லிலும் அழகிய வேலைப்பாடுகளை செய்துள்ளனர். ஆண்- பெண் உறவு தொடர்பான சிற்பங்களை கூட மிக கலைநயத்துடன் செதுக்கி இருக்கிறார்கள்.
இந்த சிற்பங்கள் தவிர்த்து அந்த காலத்தில் வாழ்க்கை பற்றிய ஏராளமான சிற்பங்களும் தத்ரூபமாக செதுக்கப்பட்டுள்ளன. பெண்கள் அலங்காரம் செய்வது, விளையாடுவது, விவசாயம் செய்வது, மண்பாண்டம் செய்வது, முடி திருத்தம் செய்வது, நடனம் ஆடுவது, ஊர்வலம், போர் காட்சிகள் என பல வகை சிற்பங்கள் இருக்கின்றன.
இந்த கோவில்களின் கட்டுமான பணிகளில் மிக கைதேர்ந்த கலைஞர்களை பயன்படுத்தி இருக்கிறார்கள். ஆயிரக்கணக்கானோர் பணிகளில் ஈடுபடுத்தப்பட்டு இருக்க வேண்டும் என்று கருதப்படுகிறது.
சமீபத்தில் ‘ஹிஸ்ட்ரி’ டி.வி. சானலில் இந்த கோவில் வரலாற்றை பதிவு செய்து இங்கு படம் எடுத்தனர். அப்போது ஒரு நபர் 4 அடி சிலை ஒன்றை செய்வதற்கு எவ்வளவு நாட்கள் ஆகிறது என்று காட்டினார்கள். அந்த நபரால் அந்த சிலையை செய்து முடிக்க 60 நாட்கள் ஆனது.
அப்படி என்றால் இந்த கோவில் முழுவதும் உள்ள சிலைகள் மற்றும் பல்வேறு சிற்பங்களை செதுக்க எத்தனை நபர்கள், எத்தனை நாட்கள் உழைத்து இருப்பார்கள் என்று பார்க்கும் போது, மிகவும் ஆச்சரியமாக இருக்கிறது என்று அந்த சானல் வியந்து கூறியது.
தாம்பத்திய உறவு மனித வாழ்க்கையில் முக்கியமான அங்கம் என்றே அந்த காலத்தில் கருதப்பட்டது. இதனால்தான் தாம்பத்திய காட்சிகளையும் கூட கோவில்களில் சிலையாக செதுக்கி வைப்பது வழக்கமாக இருந்தது. அப்படித்தான் இங்கும் அதுபோன்ற சிலைகளை வைத்துள்ளனர்.

கஜுராகோ கோவிலில் 12-ம் நூற்றாண்டு வரை மட்டுமே பூஜை, வழிபாடுகள் எல்லாம் நடந்துள்ளது. அப்போது ஏராளமான சாமியார்களும், துறவிகளும் இந்த கோவிலில் இருந்துள்ளனர். பிரசித்தி பெற்ற கோவிலாகவும் இருந்துள்ளது.
இப்படி புகழ் பெற்று இருந்த நேரத்தில் 1022-ல் கஜினி முகமது இந்த கோவிலை தாக்க வந்தான். ஆனால், அப்போது அந்த பகுதி மன்னர் கஜினி முகமதுவுக்கு உரிய பணம், பொருட்கள் கொடுத்ததால் கோவிலை தாக்காமல் சென்று விட்டான்.
13-ம் நூற்றாண்டில் டெல்லியை ஆண்ட சுல்தான் குதுப்தின் அய்பக் இந்த கோவிலை தாக்கினார். அதில், பல கோவில்கள் இடிக்கப்பட்டன. அதன் பிறகு வந்த பல மன்னர்களும் கோவிலை இடித்தனர்.
இதனால் இங்கு வழிபாடு நடப்பது முற்றிலும் நின்று கோவில் கவனிப்பாரற்று போனது.
1495-ல் சிக்கந்தர் லோடி மத்தியபிரதேச பகுதியில் இருந்த பல கோவில்களையும் இடிக்க உத்தரவிட்டார். ஆனால், அந்த காலத்தில் கவனிப்பாரற்று கிடந்த கஜுராகோ கோவில் புல்லும், புதரும் மண்டிய பகுதியாக இருந்தது. இதனால் இடிக்க வந்தவர்களின் கண்ணில் கோவில் தென்படவில்லை.
எனவே, கோவில் தப்பியது. அப்போது மட்டும் இடித்து இருந்தால் அவர்கள் இதை முற்றிலும் தரைமட்டமாக்கி இருப்பார்கள். இப்படி ஒரு கலை பொக்கிஷம் இருந்ததே வெளி உலகுக்கு தெரியாமல் போய் இருக்கும்.
வெளி உலகுக்கு அறிமுகப்படுத்திய வெள்ளைக்காரர்கள்
சில கோவில்கள் இடிக்கப்பட்டதால் கோவில் வளாகமே முற்றிலும் கவனிப்பாரற்று 600 ஆண்டுகளுக்கு மேலாக கைவிடப்பட்டு இருந்தது. இதனால் கோவில் வளாகம் முழுவதும் மரம், செடிகள் வளர்ந்து அடர்ந்த காடாக மாறி இருந்தது. இப்படி ஒரு கட்டிடம் இருப்பதே பலருக்கு தெரியாமல் இருந்தது.
1830-ம் ஆண்டு ஆங்கிலேய என்ஜினீயர் டி.எஸ். பர்ட் இந்த பகுதியை ஆய்வு செய்து பிரமாண்ட கோவில் அடர்ந்த காட்டுக்குள் இருப்பதை கண்டுபிடித்தார். அதன் பிறகு அலெக்சாண்டர் கன்னிங்கன் என்ற வெள்ளைக்காரர் கோவில் முழுவதையும் சுற்றி பார்த்து அதில் இருக்கும் சிற்பங்கள், கலைகள் அனைத்தையும் பற்றி குறிப்புகள் எழுதி வெளியிட்டார்.
இதன்பிறகுதான் இதை பற்றிய தகவல் வெளி உலகுக்கு பரவியது. அதைத்தொடர்ந்து அங்கிருந்த புதர்கள் அனைத்தும் அகற்றப்பட்டு மறு சீரமைப்பு செய்தனர்.
இப்போது மத்தியபிரதேசத்தில் மிகப்பெரிய சுற்றுலா தலமாக கஜுராகோ கோவில்கள் மாறி இருக்கின்றன. ஒவ்வொரு ஆண்டும் பல லட்சம் சுற்றுலா பயணிகள் இதை பார்க்க வருகிறார்கள். வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் வருகையும் அதிகமாக உள்ளது.

கேரள மாநிலம், எர்ணாகுளம் மாவட்டம், அகவூர் திருவைராணிக்குளம் செல்லும் சாலையில் 1.5 கிலோ மீட்டர் தூரமும் என மூன்று கிலோ மீட்டர் தூரத்தில் இக்கோவில் அமைந்திருக்கிறது.
தல வரலாறு :
வெடியூர், அகவூர், வெண்மணி எனும் மூன்று உயர்வகுப்பினரின் குடும்பங்கள் கேரளப் பகுதியில் வசித்து வந்தனர். அகவூர் குடும்பத்தின் மூத்த நபருக்குத் ‘தம்பிரான்’ எனும் சிற்றரசர் பட்டமிருந்தது. அதனால், அந்தக் குடும்பத்தினருக்கு உதவியாளராக அகவூர் சாத்தன் என்பவர் நியமிக்கப்பட்டுப் பணியாற்றி வந்தார்.
அகவூர் தம்பிரான், அங்கிருந்த ஆற்றின் மறுகரையிலிருந்த மகாதேவர் கோவிலுக்குச் சென்று வழிபட்டுத் திரும்புவதை வழக்கமாகக் கொண்டிருந்தார். அகவூர் தம்பிரானுக்கு வயதாகி விட்ட நிலையில், ஆற்றைக் கடந்து சென்று, மகாதேவரை வழிபட்டு வருவது கடினமாக இருந்தது. அதைக் கண்ட அகவூர் சாத்தன், படகு ஒன்று செய்து, அதன் மூலம் எளிமையாக ஆற்றைக் கடந்து சென்று மகாதேவரை வழிபட்டுத் திரும்ப உதவி செய்தார்.
அகவூர் தம்பிரானுக்கு மேலும் வயதாகிய நிலையில், படகின் மூலம் ஆற்றைக் கடந்து சென்று வழிபாடு செய்து திரும்புவதும் கடினமாகிப் போனது. இதனால் வரும் காலத்தில் மகாதேவரை வழிபட முடியாத நிலை ஏற்பட்டு விடுமோ என்கிற அச்சம் அவருக்கு ஏற்பட்டது. இருப்பினும், அவர் தன் வழிபாட்டை இடைவிடாமல் தொடர்ந்து செய்து கொண்டிருந்தார்.
ஒரு நாள் அவர், மகாதேவரை வழிபட்டுத் திரும்பி வந்த போது, தன் கையில் வைத்திருந்த ஓலைக்குடை மிகவும் கனமாக இருப்பது போல் உணர்ந்தார். அவர் தனது உதவியாளரிடம், தனது வயது மூப்பால், இந்த ஓலைக்குடையைக் கூடத் தன்னால் சுமக்க முடியாமல் போய்விட்டதே என்று சொல்லி வருந்தினார்.
ஆற்றைக் கடந்து, படகை விட்டு இறங்கிய அவர், கரைப்பகுதியில் அந்த ஓலைக்குடையை வைத்துக் கொண்டு நடக்க முடியாமல் துன்பப்பட்டார். எங்காவது சிறிது நேரம் ஓய்வெடுத்துச் செல்ல நினைத்த அவர், அருகில் ஓரிடத்தில் தன் கையில் வைத்திருந்த ஓலைக்குடையை வைத்து விட்டுச் சிறிது நேரம் அமர்ந்து ஓய்வெடுத்தார்.
பின்னர், அங்கிருந்து எழுந்த அவர், தனது ஓலைக்குடையுடன் வீட்டை நோக்கி நடக்கத் தொடங்கினார். அப்போது அவருக்கு அந்த ஓலைக்குடை எப்போதும் போல் கனமில்லாமல் இருந்தது. ஓய்வுக்குப் பின்பு ஓலைக்குடை தற்போது இலகுவாக இருக்கிறது என்று உதவியாளர் சாத்தனிடம் தெரிவித்தார்.
சில நாட்களுக்குப் பிறகு, விவசாயக் குடும்பத்தைச் சேர்ந்த ஒரு பெண் தன் கையில் வைத்திருந்த கதிர் அரிவாளைக் கூர்மைப்படுத்துவதற்காக அங்கிருந்த கல் ஒன்றில் தீட்டினார். அப்போது, அந்தக் கல்லிலிருந்து ரத்தம் வெளியேறியது. இதைக் கண்டு அதிர்ச்சியடைந்த அந்தப் பெண் மயக்கமடைந்தார்.
அந்தப் பெண்ணுடன் வந்த சிலர், கல்லிலிருந்து ரத்தம் வெளியேறிக் கொண்டிருந்த தகவலையும், அந்தப் பெண் மயக்கமடைந்து விட்டதையும் தம்பிரானிடம் சென்று தெரிவித்தனர். தம்பிரான் தனது உதவியாளரான அகவூர் சாத்தனை அழைத்துக் கொண்டு அங்கு சென்றார்.
அந்த இடத்தைக் கண்ட அகவூர் சாத்தன், ‘தம்பிரானே, சில நாட்களுக்கு முன்பு, தாங்கள் மகாதேவரை வழிபட்டுத் திரும்பிய நிலையில், தங்கள் ஓலைக்குடையைச் சுமக்க முடியாமல், இங்கு வந்து சிறிது நேரம் அமர்ந்து ஓய்வெடுத்துச் சென்றீர்களல்லவா? அந்த இடத்தில்தான் இப்போது கல்லிலிருந்து ரத்தம் வந்து கொண்டிருக்கிறது’ என்றார்.
அதைக் கேட்ட தம்பிரானுக்கு அன்று நடந்த நிகழ்வுகளெல்லாம் நினைவுக்கு வந்து சென்றன. அன்று, மறுகரையிலிருக்கும் மகாதேவர், தனது ஓலைக்குடையில் அமர்ந்து, தன்னுடன் வந்து இந்த இடத்தில் இறங்கிக் கொண்டிருக்கிறார். தற்போது சுயம்புவாக இங்கே தோன்றியிருக்கிறார் என்பதும் அவருக்குத் தெரிந்தது.
உடனே அவர் தனது உதவியாளரான சாத்தனிடம், “என்னுடைய வயது மூப்பால் எனக்கு ஏற்பட்ட இயலாமையை அறிந்து, என்னுடனே வந்து இங்கு சுயம்புவாகத் தோன்றியிருக்கும் மகாதேவருக்கு நான் கோவில் அமைத்துச் சிறப்பு செய்வேன்” என்றார். அதனைத் தொடர்ந்து, இங்கு மகாதேவருக்குப் புதியதாகக் கோவில் அமைக்கப்பட்டது.
சன்னிதிகள் :
இக்கோவிலில் வட்டவடிவமான கருவறைப் பகுதியில் முன்புறம் மகாதேவரும், பின்புறம் பார்வதி தேவியும் இருக்கின்றனர். இக்கோவில் வளாகத்தில் சதிதேவி, தர்மசாஸ்தா, பெருமாள், யட்சி ஆகியோர்களுக்குத் தனிச் சன்னிதிகளும் அமைக்கப்பட்டிருக்கின்றன. கோவிலுக்கு அருகில் பெரிய தெப்பக்குளம் ஒன்றும் அமைக்கப்பட்டுள்ளது.
பார்வதி சன்னிதி :
இக்கோவிலில் இருக்கும் பார்வதி சன்னிதி ஆண்டுக்கு 12 நாட்கள் மட்டுமே திறந்து வைக்கப்படுகிறது. இதற்குக் காரணமாக ஒரு கதை சொல்லப்படுகிறது.
தொடக்கக் காலத்தில், இங்கு பார்வதி தேவியே மகாதேவருக்கு உணவு தயாரித்து வழிபாடுகளைச் செய்து வந்தாராம். இதனால், கோவிலில் உணவு தயாரிக்கும் இடத்திற்கு (மடப்பள்ளி) யாரும் செல்ல மாட்டார்களாம். ஒரு நாள் கோவிலின் நிர்வாகப் பணியைக் கவனித்து வந்த ஒருவர், பார்வதி தேவி எப்படி உணவு தயாரிக்கிறார் என்பதைத் தெரிந்து கொள்ள வேண்டும் என்கிற ஆவலுடன் உணவு தயாரிக்குமிடத்திற்குச் சென்றாராம்.
அங்கு பார்வதி தேவி உணவு தயாரித்துக் கொண்டிருந்ததைக் கண்டு வியந்து, ‘பார்வதித் தாயே’ என்று பக்தியுடன் சத்தமாக அழைத்து விட்டார். அதைக் கேட்டுக் கோபமடைந்த பார்வதி தேவி, ‘நான் உணவு தயாரிக்குமிடத்திற்கு வரக்கூடாது என்று தெரிந்திருந்தும், இங்கு வந்து என்னைப் பார்த்து விட்டதால், இனி, நான் இங்கிருக்க மாட்டேன்’ என்று சொன்னபடி கிளம்பினார்.
தனது தவறை உணர்ந்த கோவிலின் நிர்வாகி, ‘தாயே, தங்களைக் காணும் ஆவலுடன் நான் இங்கு வந்து பெரும் தவறு செய்து விட்டேன். என்னை மன்னித்து விடுங்கள், எனது தவறுக்காக, இக்கோவிலுக்கு வரும் பக்தர்களைத் தண்டிக்க வேண்டாம். எனக்கு என்ன தண்டனை வேண்டுமானாலும் கொடுங்கள். நான் ஏற்றுக் கொள்கிறேன்’ என்றார்.

அவரது வேண்டுதலுக்கு மனமிரங்கிய பார்வதி தேவி அவரை மன்னித்து, ‘சிவபெருமானுக்கு மிகவும் பிடித்த நாளான மார்கழி மாதம் திருவாதிரை நாளில், மாலை வேளைக்குப் பின்பு முழு அலங்காரத்தில் இங்கு வந்து அருள் தருவேன். அன்றிலிருந்து 12 நாட்களுக்கு மட்டும் என்னை இக்கோவிலில் காணமுடியும்’ என்றார்.
அன்றிலிருந்து ஒவ்வொரு ஆண்டும் மார்கழி மாதம் திருவாதிரை நாளில் மாலை வேளையில் பார்வதி தேவி சன்னிதி வழிபாட்டுக்காகத் திறக்கப்படுகிறது. 12 நாட்களுக்குப் பின்பு மீண்டும் சன்னிதி மூடி வைக்கப்படுகிறது. மற்ற நாட்களில் இச்சன்னிதியிலிருக்கும் சாளரத்தின் வழியாகப் பக்தர்கள் பார்வதி தேவியை வேண்டிச் செல்கின்றனர்.
வழிபாடு :
இக்கோவிலில் தினசரி காலை 4.30 மணி முதல் 11 மணி வரையிலும், மாலை 5 மணி முதல் 7.30 மணி வரையிலும் மகாதேவருக்குத் தினசரி வழிபாடுகள் செய்யப்படுகின்றன. இங்கு, சிவராத்திரி, பிரதோசம் போன்ற சிவபெருமானுக்குரிய அனைத்துச் சிறப்பு நாட்களிலும் மகாதேவருக்குச் சிறப்பு வழிபாடுகள் செய்யப்படுகின்றன.
மார்கழி மாதத்தில் வரும் திருவாதிரைத் திருநாளில் தொடங்கி எட்டு நாட்கள் இங்கு சிறப்பு விழா ஒன்றும் நடைபெறுகிறது. இவ்விழாவில் நடைபெறும் ஆறாட்டு விழா மிகவும் சிறப்புடையதாக இருக்கிறது. இவ்விழா நாட்களில் நடைபெறும் அன்னதானத்தில் கலந்து கொண்டு, உணவு உண்பவர்களுக்கு வயிறு தொடர்புடைய அனைத்து நோய்களும் நீங்கிவிடும் என்பது இங்கு வந்து செல்லும் பக்தர்களின் நம்பிக்கையாக இருக்கிறது.
இக்கோவிலில் இருக்கும் பார்வதி தேவி சன்னிதி திறந்திருக்கும் பன்னிரண்டு நாட்களில் இங்குள்ள பார்வதி தேவியைத் திருமணத்தடை உடையவர்கள் வழிபட்டுச் சென்றால், அவர்களுக்குத் திருமணத்தடை நீங்கி விரைவில் திருமணம் நடைபெறும். குழந்தைப்பேறு இல்லாதவர் களுக்குக் குழந்தைப்பேறு கிடைக்கும். பிரிந்திருக்கும் தம்பதியர்களில் யாராவது ஒருவர் இங்கு வந்து வேண்டிக் கொண்டால், அவர்களுக்கிடையிலான கருத்து வேறுபாடுகள் மறைந்து, அவர்களிருவரும் ஒன்றாகச் சேர்ந்து வாழ்வர் என்றும் கோவிலுக்கு வரும் பக்தர்கள் தெரிவிக்கின்றனர்.
கோவில் சிறப்புகள் :
திருவைராணிக்குளம் கோவிலில் இருக்கும் சிவபெருமானின் சடை முடி பின்பகுதியில் விரிந்து கிடக்கிறது என்று இக்கோவிலுக்கு வரும் பக்தர்கள் நம்புகின்றனர். இதனால், இக்கோவிலில் அடையாளமிட்ட பகுதியைக் கடக்காமல் திரும்பி வந்து விட வேண்டும். இதன் காரணமாக, இங்கு கோவிலை முழுமையாகச் சுற்றி வர முடியாது.
இக்கோவிலில் பார்வதி தேவி சன்னிதி 12 நாட்கள் மட்டும் வழிபாட்டுக்காகத் திறந்து வைக்கப்படும். மற்ற நாட்களில் சாளரம் வழியாக வழிபட்டுக் கொள்ள வேண்டும்.
கோவில் பிரகாரத்தில் பழமையான அரசமரம் ஒன்றும், நெல்லிமரம் ஒன்றும் மேடையமைத்து வைக்கப்பட்டிருக்கிறது.
இக்கோவிலில் திருமணம் வேண்டி மலர் வழிபாடு செய்பவர்களுக்கு பழக்கலவை சிறப்புப் பிரசாதமாக வழங்கப் படுகிறது.
அமைவிடம் :
கேரள மாநிலம், எர்ணாகுளம் மாவட்டம், ஆலுவாவிலிருந்து அங்கமாலி செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் ஸ்ரீமூலநகரம் சென்று, அங்கிருந்து வல்லோம் சாலையில் 1½ கிலோ மீட்டர் தூரமும், அங்கிருந்து அகவூர் திருவைராணிக்குளம் செல்லும் சாலையில் 1.5 கிலோ மீட்டர் தூரமும் என மூன்று கிலோ மீட்டர் தூரத்தில் இக்கோவில் அமைந்திருக்கிறது. ஆலுவா, காலடி ஆகிய ஊர்களிலிருந்து திருவைராணிக்குளத்திற்குக் கேரள அரசுப் பேருந்துகள் இயக்கப்படுகின்றன.

சோழவளநாட்டின் காவிரி தென்கரையில் திருத்துறைப்பூண்டி- மன்னார்குடி இடையில் கோட்டூர் கொழுந்தீஸ்வரர் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலின் வரலாற்றை பார்க்கலாம்.
சோழவளநாட்டின் காவிரி தென்கரையில் திருத்துறைப்பூண்டி- மன்னார்குடி இடையில் கோட்டூர் கொழுந்தீஸ்வரர் கோவில் அமைந்துள்ளது. மூர்த்தி, தலம், தீர்த்தம் ஆகிய மூன்று பெருமைகளுடையது இத்தலம். ‘கொந்துலாமலர் விரிபொழிற் கோட்டூர் நற்கொழுந்தினை’ என்று திருஞானசம்பந்தரால் பாடப்பெற்ற ஆலயம் இது. இந்த தலத்தில் கொழுந்துநாதர் என்ற பெயரில் இறைவன் அருள்பாலித்து வருகிறார். இறைவியின் திருநாமம் தேன்மொழிப் பாவை என்பதாகும்.
ஒரு சமயம் இந்திரனின் சபையில் ரம்பை, திலோத்தமை, மேனகை, ஊர்வசி, கெற்பை, பரிமளை, சுகேசி ஆகிய ஏழு தேவலோக மங்கைகள் நடனமாடி, தேவர்களை மகிழ்வித்துக் கொண்டிருந்தனர். நடனம் முடிந்ததும் ரம்பை அருகில் இருந்த பூஞ்சோலையில் படுத்து உறங்கினாள். நடனமாடிய களைப்பில் உறங்கிய அவளது ஆடை சற்று விலகியிருந்தது.
அப்போது அந்த வழியாக வந்த நாரத மகரிஷி, இதனைக் கண்டு கோபம் அடைந்தார். ஒரு பெண் தன் ஆடை விலகியிருப்பதைக் கூட கவனிக்காதபடி தூங்குவதை சகிக்க முடியாத அவர், ரம்பையை பூலோகத்தில் மானிடப் பெண்ணாக பிறக்கும்படி சபித்தார்.
கண் விழித்த ரம்பை நடந்தவற்றை அறிந்து, நாரதரை வணங்கினாள். தன்னுடைய சாபத்தை நீக்க வேண்டும் என்று மன்றாடினாள்.
இதையடுத்து நாரதர், ‘பூலோகத்தில் சிவபூஜை செய்தால் சாபம் நீங்கும்’ என்று கூறிவிட்டு அங்கிருந்து அகன்றார்.
பூமிக்கு வந்த ரம்பை, முதலில் பாலியாற்றங்கரையில் அமர்ந்து நீண்ட காலம் தவம் புரிந்தாள். அவளுக்கு சிவனருள் கிடைக்கவில்லை. அதன் பிறகு அந்த பகுதியில் இருந்த ரோமச மகரிஷியை வணங்கி தன்னுடைய நிலையை கூறினாள்.
அவரது வழிகாட்டுதலின்படி இத்தலத்தில் உள்ள கொழுந்தீசரை வணங்கினாள். வன்னி வனமாக இருந்த இந்த இடத்தில் சிவனை பூஜித்த ரம்பை, சிவ வழிபாட்டிற்காக ஒரு தீர்த்தத்தையும் உண்டாக்கி, ஒற்றைக் காலில் நின்றபடி தவம் செய்தாள்.
இதற்கிடையில் ரம்பை இல்லாததால் தேவலோகம் பொலிவிழந்தது. நடந்ததை அறிந்த இந்திரன், ரம்பையை அழைத்து வருவதற்காக சித்திரசேனன் என்னும் கந்தர்வனை பூலோகம் அனுப்பினான். அவன் வந்து அழைத்தும், ‘சிவனருள் பெறாமல் தேவலோகம் வரமாட்டேன்’ என்று ரம்பை மறுத்து விட்டாள்.
இதைக் கேட்டு கோபம் கொண்ட இந்திரன், தனது வாகனமான ஐராவதத்தை அனுப்பி, ரம்பையை தூக்கி வரும்படி பணித்தான். பூலோகம் வந்த ஐராவதம் யானை, ரம்பையை தனது துதிக்கையால் வளைத்து தூக்க முயன்றது. அதைக் கண்டு அஞ்சிய ரம்பை, சிவலிங்கத்தைத் தாவி அணைத்துக் கொண்டாள். இதனால் கோபமுற்ற ஐராவதம், ‘இந்தச் சிவலிங்கத்தோடு உன்னை இந்திரலோகம் கொண்டு செல்வேன்’ என தனது தந்தத்தால் சிவலிங்கத்தைச் சுற்றிலும் தோண்டத் தொடங்கியது. ரம்பையின் அளவற்ற அன்பினால் நெகிழ்ந்த பரமன், லிங்கத்தில் இருந்து வெளிப்பட்டு, ஐராவதத்தை ஓங்கி உதைத்தார். அதன் உடல் பலவாறாக சிதறிட, அது ஓலமிட்டவண்ணம் உயிரைவிட்டது.

ரம்பைக்கு தரிசனம் தந்த இறைவன் அவளுக்கு, வரங்கள் பல தந்து மறைந்தார். ரம்பை சிவபூஜையை தொடர்ந்து செய்து வந்தாள். ஐராவதத்திற்கு ஏற்பட்ட நிலையை அறிந்த இந்திரன், சிவ பாதகம் செய்ததற்காக அஞ்சி, வன்னிவனம் அடைந்து, ரம்பை வழிபட்ட லிங்கத்தை அவளோடு இணைந்து வழிபட்டு வந்தான். பரமேஸ்வரன் அவர்கள் முன் தோன்றி, ஐராவதத்தை உயிர்பித்ததோடு, ரம்பையையும் இந்திரனுக்கு பணி செய்ய பணித்தார். ஐராவதத்தின் கொம்புகளாகிய கோட்டால், அகழப்பட்டதால் இத்தலம் ‘கோட்டூர்’ எனப் பெயர் பெற்றது.
ஊரின் நடுவில் அமைந்துள்ளது மேற்கு பார்த்த ஆலயம். உள்ளே கொடிமரம், பலிபீடத்திற்கு அடுத்தாற்போல் நந்தியெம்பெருமாள் வீற்றிருக்கிறார். இரண்டாம் வாசலின் மேல் மூன்று நிலை சிறிய ராஜகோபுரம் கட்டப்பட்டுள்ளது. உள்ளே மேற்குத் திருமாளிகைப் பத்தியில் வலப்புறம் வல்லப கணபதி சன்னிதி உள்ளது. பக்கத்தில் உற்சவர் அறை. அதன் வலது பக்கத்தில் சூரியன், இடதுபுறம், சந்திரன், விஷ்ணு லிங்கம், மூவர், வீரப்பத்திரர், ரம்பை, அணைத்தெழுந்தநாதர், அர்த்தநாரீஸ்வரர், பிரதோஷ நாயகர், பிரயோக சக்கர விஷ்ணு துர்க்கை என வரிசையாக தெய்வத் திரு மேனிகள் உள்ளன. சுப்ரமணியர், மீனாட்சி சுந்தரேசர் மற்றும் கஜலட்சுமிக்கு தனித்தனியே சன்னிதிகள் அமைந்துள்ளன.
ஒரே பிரகாரத்தைக் கொண்டு, நடுவில் மூடுமண்டப தளத்துடன் சுவாமி மற்றும் அம்பாள் சன்னிதிகள் உயரிய பீடத்தின் மீது அமையப் பெற்றுள்ளன. முதலில் கிழக்கே திருமுகம் கொண்டு, சுவாமிக்கு எதிராக அபிமுகம் காட்டி, தனிச் சன்னிதியுள் அருள்புரிகின்றாள் அன்னை மதுர பாஷிணி. மேலிரு கரங்களில் ருத்ராட்சம், தாமரை மலரும் ஏந்தியிருக்கும் அன்னை, கீழிரு கரங்களில் அபயவரமளித்து, புன்னகை முகம் காட்டுகிறாள். அன்னையை தேனார்மொழியாள், மதுர வசனாம்பிகை என்றும் அழைக்கிறார்கள். லட்சுமி கடாட்சங்களை அருளுபவள் இவ்வன்னை! அம்பிகையை உளமார வணங்கி, பின் சுவாமி சன்னிதிக்கு செல்ல வேண்டும்.
சிறிய அர்த்த மண்டபத்தையடுத்து கருவறையில் ரம்பை பூஜித்து வரம் பெற்ற ஈசன் அருள்பாலிக்கிறார். முதலில் ‘ரம்பேஸ்வரர்’ என போற்றப்பட்டு வந்த இறைவன் தற்போது கொழுந்தீஸ்வரர் என்று அழைக்கப்படுகிறார். அருளால் அணைக்கும் அரனாரை வணங்கினால் நினைத்தது அனைத்தும் நிறைவேறும்.
அம்பாள் சன்னிதிக்கு அருகே தென்முகம் கொண்ட பள்ளியறையும், ஈசானத்தில் நவக்கிரகங்களும் அருகே அமுதக்கிணறும் அமைந்துள்ளன. ஐராவதம் அலறி வீழ்ந்த போது, அதன் தலைப் பகுதி வீழ்ந்த இடம் குளமானது. இக்குளமே ‘மண்டை தீர்த்தம்’ என்று பெயர் பெற்று விளங்கு கிறது. ஐராவதம் இங்கே மணலால் லிங்கம் பிடித்து, பூஜை செய்து தன் பழைய நிலையை அடைந்தது. ரம்பை தன் பெயரால் உண்டாக்கிய ரம்பை தீர்த்தம், இப்போது ‘கருப்பட்டியான் குளம்’ என வழங்கப்படுகிறது. ரம்பையின் தவக் கோல வடிவினை இந்த ஆலயத்தில் கண்டு மகிழலாம்.
திருக்கோவிலுக்கு முன்னே உள்ள தீர்த்தத்தில், அமுதகுடம் வைத்த பூஜித்து, உஷத் காலத்தில் தீர்த்தம் வழங்கியுள்ளார் தேவேந்திரன். இதனால் இத்தீர்த்தம் ‘அமுதகூபம்’ என வழங்கப்படுகிறது.
இங்குள்ள அம்பிகை உடனான பிரதோஷ மூர்த்தியை, பிரதோஷ காலத்தில் வழிபட்டால் சகல பாவ தோஷங்களும் நீங்கும் என்பது நம்பிக்கை. மேலும் இத்தலத்தில் உள்ள அர்த்தநாரீஸ்வரர் மற்றும் உமாமகேஸ்வரர் சிலாரூபங்கள் தம்பதி ஒற்றுமைக்கு எடுத்துக்காட்டாக விளங்குகின்றன. எனவே இவர்களை பவுர்ணமி நாளில் வழிபட்டால் தம்பதியர் ஒற்றுமை கூடும். விஷ்ணு துர்க்கைக்கு ஆடி மற்றும் தை வெள்ளிக்கிழமைகளிலும், ராகு காலத்திலும் எலுமிச்சைப்பழம் தீபமேற்றி வழிபட்டால், திருமணத் தடை நீங்கும். அனைத்துவித கஷ்டங்களும் தீரும்.
தினமும் 6 கால பூஜை நடைபெறும் இந்த ஆலயம் காலை 6 மணி முதல் பகல் 12 மணி வரையிலும், மாலை 4 மணி முதல் இரவு 8.30 மணி வரையிலும் திறந்திருக்கும்.
திருவாரூர் மாவட்டத்தில், மன்னார்குடி- திருத்துறைப்பூண்டி செல்லும் சாலையில் கோட்டூர் உள்ளது.

சேலம் மாவட்டம் ஏத்தாப்பூரில் வசிஷ்ட நதிக் கரையோரம் அமைந்த திருத்தலம் சாம்பமூர்த்தீஸ்வரர் கோவில். இந்த கோவில் வரலாற்றை பார்க்கலாம்.
சேலம் மாவட்டம் ஏத்தாப்பூரில் வசிஷ்ட நதிக் கரையோரம் அமைந்த இரண்டாவது திருத்தலம் சாம்பமூர்த்தீஸ்வரர் கோவில். இந்த ஆலயம் பஞ்சபூத லிங்கங்களுள் அப்புலிங்கம் (நீர்) என்பார்கள். பஞ்சபூதங்களும், நான்கு மறைகளும் வழிபட்ட பெருமைக்குரியது இந்தக் கோவில்.
தல வரலாறு :
முன்னொரு காலத்தில் பார்வதி தேவியின் தந்தையான தட்சன் தன்னலம் கருதி யாகம் ஒன்றை நடத்தினான். அந்த யாகத்திற்கு சிவபெருமானை அழைக்காதது மட்டுமின்றி, அவருக்குரிய அவிர்பாகத்தையும் தர மறுத்தான். ஆனால் அந்த யாகத்திற்கு ஈசனின் உத்தரவை மீறி பார்வதி தேவி சென்றார். இதனால் அவர் மீது சிவபெருமான் கடும் கோபம் கொண்டார். தனது உத்தரவை மீறியதால் ‘தன்னை விட்டு பிரிந்து வாழக் கடவாய்’ என்று சக்திக்கு சாபமும் கொடுத்தார். பின்னர் சக்தியை விடுத்து, தனியாக இத்தலம் வந்து லிங்க உருவில் வில்வ மரத்தடியில் தங்கினார்.
இறைவனை பிரிந்த பார்வதி தேவி எங்கு தேடியும் இறைவனை காணாது துயரத்தில் ஆழ்ந்தார். அப்போது சிவபெருமான் அசரீரியாக, தான் பூலோகத்தில் வில்வ விருட்சத்தின் அடியில் சிவலிங்க திருமேனியாக இருப்பதாகவும், தம்மை சூரியன் தினமும் வழிபட்டு கொண்டிருப்ப தாகவும், அப்போது நீ வந்து எம்மை வழிபடு’ என்றார்.
அதன்படியே பார்வதி தேவி, தனது தமையன் பெருமாளுடன் இந்த திருத்தலத்துக்கு வந்து இறைவனை வழிபட்டார். இறைவனும் அருள்பாலித்து சக்திக்கு தன்னுடலில் சரிபாதி தந்து ஏற்றுக்கொண்டார்.
மனைவியை பிரிந்த கவுதம மகரிஷி :
ஒருமுறை இந்திரன் ஹோம பூஜை செய்ய நினைத்தான். அவனுக்கு கவுதம மகரிஷி அதி அற்புதமான அமிர்த நேரம் ஒன்றை குறித்துக் கொடுத்தார். ‘பலகோடி யுகங்களுக்கு ஒருமுறை வருகின்ற இந்த அமிர்த நேரத்தை, சுயநலமின்றி இறை பணிகளுக்கு மட்டுமே பயன்படுத்த வேண்டும்’ என இந்திரனுக்கு அறிவுரையும் வழங்கினார். கவுதமர் குறித்து கொடுத்த அமிர்தநேரம் வந்ததும், இந்திரன் மனம் மாறியது. தானே எப்போதும் இந்திரப் பதவியில் இருக்க வேண்டும் என்ற சுயநலம் அவனுள் எழுந்தது.
இந்திரனின் எண்ணத்தை தனது ஞானத்தால் உணர்ந்த கவுதமர், ஓர் அழகிய மலரை படைத்து இந்திரன் மனைவியான இந்திராணியிடம் கொடுத்தார். இந்திராணி அந்த மலரின் அழகில் மயங்கிப்போனதால், அமிர்த நேரத்திற்குள் அவளால் ஹோமத்திற்கு வர இயலாமல் போய்விட்டது. மனைவியின் துணையின்றி ஹோமபூஜையை செய்ய இயலாத இந்திரனின் எண்ணம் தோல்வியடைந்தது. தன் எண்ணத்தை நிறைவேறவிடாமல் செய்த கவுதம மகரிஷி மீது இந்திரனுக்கு கோபம் ஏற்பட்டது.
‘என் மனைவியை ஹோமபூஜையில் கலந்துகொள்ள விடாமல் பிரித்தது போலவே, உமது மனைவியையும் பிரிந்து வாழக்கடவாய்’ என கவுதமருக்கு சாபமளித்தான் இந்திரன். இந்த சாபத்தின் மாயையால் கவுதமர் தனது மனைவி அகலிகையை ‘கல்லாகக் கடவது’ என சாபமிட்டார். பின்னர் கவுதமர் இந்த சாப நிவர்த்திக்காக சிவபெருமானை வேண்டினார்.
அப்போது ஈசன், ‘ஏத்தாப்பூரில் சூரியன் என்னை வழிபடும் வேளையில் வந்து தரிசனம் செய்தால் நீ உன் மனைவியுடன் சேர்ந்து வாழ்வாய்’ என்று திருவாய் மலர்ந்தார்.
அதன்படியே, கவுதமர் இந்த திருத்தலத்துக்கு வந்து சாம்பமூர்த்தீஸ்வரரை வணங்கி வழிபாடு செய்ய, இறைவனின் திருவுளப்படி ராமபிரானின் திருப்பாதம் பட்டு அகலிகை சாபவிமோசனம் பெற்றார். அதைத் தொடர்ந்து கவுதமர் தனது மனைவி அகலிகையுடன் இணைந்தார் என தல வரலாறு கூறுகிறது.
கி.பி. 8-ம் நூற்றாண்டுக்கு முன்பு வரை இந்த ஆலயம், கட்டிடம் இல்லாமல் வில்வ மரத்தின் அடியில் லிங்கத் திருமேனி மட்டும் இருந்துள்ளது. ஒரு நாள் மைசூர் மகாராஜாவின் கனவில் தோன்றிய இறைவன், தனக்கு கோவில் கட்டுமாறு பணித்தார். அதன்படி மகாராஜா உத்தரவின்படி அவரது மந்திரிகளில் ஒருவரான சேஷய்யர் என்பவர் இங்கு வந்து கோவில் கட்டும் பணியைச் செய்தார். கோவில் அமைக்கும் பணிக்காக ஏரி ஒன்று வெட்டப்பட்டது. அப்போது பூமியில் இருந்து பெருமாள் சிலை வெளிப்பட்டது.
சிவபெருமானுக்கு கோவில் அமைக்கும் பணியின் இடையிலேயே, அந்தப் பெருமாளுக்கும் தனி கோவில் கட்டப்பட்டது. அந்தக் கோவில் சாம்பமூர்த்தீஸ்வரர் கோவிலுக்கு பின்புறம் ‘லட்சுமி கோபால பெருமாள் கோவில்’ என்ற பெயரில் இருக் கிறது.
இதனை அறிந்த மைசூர் மகாராஜா, மந்திரி சேஷய்யரை அழைத்து பாராட்டி, முதல் கும்பாபிஷேகம் பெருமாளுக்கும், பின்னர் சிவனுக்கும் செய்ய உத்தரவிட்டார். இன்றும் முதல் பூஜை பெருமாளுக்கும், அதன்பிறகே சிவனுக்கு விசேஷ பூஜைகளும் நடைபெற்று வருகின்றன.
ஆலய அமைப்பு :
இந்த ஆலயம் அர்த்தமண்டபம், மகாமண்டபம், கருவறை என மூன்று பிரகாரங்களுடன் அமைக்கப்பட்டுள்ளது. கோபுரம் மூன்று நிலைகளுடன் கிழக்கு நோக்கி அமைந்துள்ளது. கருவறையில் மூலவரான சாம்பமூர்த்தீஸ்வரர் கிழக்கு நோக்கி சுயம்பு லிங்கமாக வீற்றிருக்கிறார். இந்த லிங்க மூர்த்தியின் மீது ஐப்பசி மாதம் 9-ந்தேதி முதல் 15-ந் தேதி வரையும், மாசி மாதம் 1-ந் தேதி முதல் 7-ந் தேதி வரையும் சூரிய கதிர் விழும் அதிசயத்தைக் காணலாம்.
இவரை வழிபட்டால் சர்ப்ப தோஷம் நீங்கும், மகப்பேறு கிடைக்கும். குடும்ப பிரச்சினைகள், நோய்கள் தீரும் என்பது நம்பிக்கை. கோவில் பிரகாரத்தில் உள்ள வில்வமரத்தை பிரிந்த தம்பதியர் வலம் வந்து வழிபாடு செய்தால் பிரிந்தவர்கள் ஒன்று சேருவதுடன், சகல செல்வங்களுடன் வாழ்வார்கள் என்று கூறப்படுகிறது. உற்சவர் உமா மகேஸ்வரர். அம்பாள் திருநாமம் மனோன்மணி என்பதாகும். இவர் தெற்கு நோக்கியவாறு தனி சன்னிதியில் எழுந்தருளியுள்ளார். தலவிருட்சம் வில்வம். தீர்த்தம் வசிஷ்டநதி.
கருவறை சுற்று பிரகாரத்தில் விநாயகர், தட்சிணாமூர்த்தி, பிரம்மன், துர்க்கை, முருகன் ஆகியோர் உள்ளனர். இதையடுத்து அஷ்டதிக்கு பாலகர்கள், பைரவர், அறுபத்துமூன்று நாயன்மார்கள் வீற்றிருக்கின்றனர். இங்கு அதிசய சண்முகர் சிலை உள்ளது. முன்புறம் மூன்று முகம், பின்புறம் மூன்று முகங்களுடன் இந்த சண்முகர் காட்சி தருகிறார். இந்தக் கோவிலின் மடப்பள்ளி அருகே தென்மூலையில் நான்கு லிங்கங்கள் உள்ளன. இதற்கு ‘சதுர்வேத லிங்கம்’ என்று பெயர். கோவில் கருவறையின் பின்புறம் 10 லிங்கங்கள் உள்ளது சிறப்பம்சம். பஞ்சலிங்கங்கள், சேஷ்டாதேவி ஆகியோர் தனித்தனி சன்னிதியில் உள்ளனர்.
இந்த கோவிலில் சித்ரா பவுர்ணமி, வைகாசி விசாகம், ஆடிப்பூரம், ஆவணிஅவிட்டம், நவராத்திரி, ஐப்பசி அன்னாபிஷேகம், திருக்கார்த்திகை தீபம், மார்கழி ஆருத்ரா தரிசனம், தை பிரம்மோற்சவம், மாசிமகம், பங்குனிஉத்திரம் ஆகியவை சிறப்பாக கொண்டாடப்படுகிறது. இந்த ஆலயம் தினமும் காலை 7 மணி முதல் பகல் 12 மணி வரையும், மாலை 4 மணி முதல் இரவு 7 மணி வரையும் திறந்திருக்கும்.
சேலம்-சென்னை தேசிய நெடுஞ் சாலையில் 37 கிலோமீட்டர் தூரத்தில், வாழப்பாடியை அடுத்து, புத்திரகவுண்டன்பாளையம் எனும் ஊருக்கு வடக்கே 2 கிலோமீட்டர் தொலைவில் வசிஷ்டநதியின் வடகரையோரம் இந்த ஆலயம் இருக்கிறது. ஆத்தூர் மற்றும் வாழப்பாடியில் இருந்து பஸ் வசதி உள்ளது.
சமாதானப் பெருமாள் :
சாம்பமூர்த்தீஸ்வரர் ஆலயத்தின் பின்புறம் லட்சுமி கோபாலபெருமாள் ஆலயம் இருக்கிறது. இங்குள்ள பெருமாள் சிலை, சிவன் கோவில் அமைப்பதற்காக ஏரி ஒன்று வெட்டப்பட்டபோது, அதன் அடியில் இருந்து கிடைத்தது. இதையடுத்து அந்த பெருமாளைக் கொண்டு தனிக் கோவில் அமைக்கப்பட்டது.
சிவபெருமானுடன், தனது தங்கயான பார்வதி தேவியை சேர்த்து வைப்பதற்காக பெருமாளும் அம்பாளுடன் இத்தலம் வந்தார். தங்கைக்காக சிவனை சமாதானப்படுத்தி இருவரையும் சேர்த்து வைக்க வந்ததால், இவர் ‘சமாதானப் பெருமாள்’ என்றும் அழைக்கப்படு கிறார். இந்த பெருமாளின் திருமேனிதான் தற்போது லட்சுமிகோபால பெருமாள் கோவிலில் உள்ளது.
சாபவிமோசனம் அடைந்த காமதேனு:
தேவலோகத்தில் உள்ள காமதேனு எனும் தெய்வீக பசு, சகல ஐஸ்வரியங்களும் நிறைந்தது. கேட்டதை எல்லாம் தரும் சக்தி உடையது. அமைதியே வடிவான இந்த காமதேனு, ஒரு முறை மாயையினால் ஆட்கொள்ளப்பட்டு கடும் பசிக்கு ஆளானது. பசியின் கொடுமையால் மாமிசத்தை உண்ணத் தொடங்கியது. இதனால் இறைவனின் சாபத்திற்குள்ளாகி புலியாக மாறியது. தனது தவறுக்கு மனம் வருந்திய புலி வடிவம் கொண்ட காமதேனு, சாபநிவர்த்தி அடைவதற்காக ஏத்தாப்பூர் வந்து இங்குள்ள சாம்பமூர்த்தீஸ்வரரை வழிபட்டு பழைய சுயஉருவத்தை அடைந்தது. காமதேனு, புலி வடிவம் கொண்டு இங்கு வழிபட்டதால், இந்த ஊர் ‘ஏய்ச்சரம்’ என அழைக்கப்பட்டதாகவும் கூறுவார்கள்.
அடுத்த வாரம் அக்னி தலமாக விளங்கும் ஆத்தூர் காயநிர்மலேஸ்வரர் கோவிலைப் பற்றிப் பார்க்கலாம்.

சேலம் மாவட்டம் இடைப்பாடி அருகே கொங்கணா புரம் ஒன்றியத்தில் உள்ள தங்காயூர் வேலம்மாள் வலசு என்ற பகுதியிலிருந்து 4 கி.மீ. தொலைவில் உள்ளது ஒற்றை மலை.
சேலம் மாவட்டம் இடைப்பாடி அருகே கொங்கணா புரம் ஒன்றியத்தில் உள்ளது தங்காயூர் வேலம்மாள் வலசு என்ற பகுதி. இங்கிருந்து மேலும் 4 கி.மீ. சென்றால் சூரியமலை தென்படும். இந்த மலையைத்தான் அந்தப் பகுதியைச் சேர்ந்தவர்கள் ஒற்றை மலை என்று குறிப்பிடுகின்றனர். இந்த மலை ஊரை விட்டு சற்று ஒதுக்குப்புறமாக இருக்கிறது. இந்த மலையில் ஒரு மர்மக் குகை இருப்பதாகவும், அதற்கு பல மர்மங்கள் புதைந்திருப்பதாகவும் அங்குள்ளவர்கள் சில அமானுஷ்ய தகவல்களைத் தெரிவிக்கின்றனர்.
‘பாதாள குகைக்குள் விஷப்பூச்சிகள் அதிகம். அதனால் யாரும் நுழைய முடியாது. இந்தக் குகையில் கொங்கண சித்தர் என்ற முனிவர் வாழ்ந்ததாகவும், அவர் பல சித்து விளையாட்டுகளை செய்து வந்ததோடு, மருத்துவ மூலிகைகளை பயன் படுத்தி எந்தப் பொருளையும் தங்கமாக மாற்றும் வித்தையை கற்றவர்’ என்கின்றனர் இந்தப் பகுதியைச் சேர்ந்தவர்கள்.
மலையை குடைந்து உருவாக்கப்பட்ட மர்மமான அந்த பாதாள குகையில் 2 அறைகள் உள்ளன. முதல் அறை சற்று பெரியதாக காணப்படுகிறது. 2-வது அறை சிறியது. இந்த அறையில் தான், படுத்தபடி நுழையும் அளவுக்கு மிகச்சிறிய துவாரம் காணப்படுகிறது. அதனுள் மைதானம் போன்ற இடமும், அதில் அமைக்கப்பட்ட நாலு கால் மண்டபத்தில் தங்கப் புதையலும் இருப்பதாகவும், அந்தப் புதையலை இன்றைக்கும் அந்த சித்தர்தான் பாதுகாத்து வருவதாகவும் இந்தப் பகுதி மக்கள் நம்புகிறார்கள். ஒரு சிலர் இன்னும் ஒரு படி மேல போய், ‘அந்த குகைக்குள் தங்க ஊஞ்சலில் அமர்ந்தபடி சித்தர் ஓய்வெடுத்து வருகிறார்’ என்கிறார்கள்.

‘குகைக்குள் என்னதான் இருக்கிறது என்று பார்த்துவிடுவோமே..’ என்ற அசட்டு தைரியத்தில் சில அசகாய சூரர்கள் முயற்சி செய்தும் பார்த்துள்ளனராம். ஆனால் அவர்களால் அந்த துவாரத்தின் வழியே சிறிது தூரம் கூட செல்ல முடியவில்லை. மூச்சுத் திணறல் ஏற்பட்டு, போன வேகத்திலேயே பின்வாங்கிவிட்டார்களாம்.
குகைக்கு வெளியே மலைப் பாறையில் மேடை போல செதுக்கப்பட்டு, அதில் மூலிகைகளை அரைப்பதற்கு உரல் போல ஒரு துளை உள்ளது. அந்த இடத்தில் தியானம் செய்வதற்கு ஏற்ப சிறிய மேடை போன்ற அமைப்பும் இருக்கிறது. இவையெல்லாம் கொங்கண சித்தர் அங்கு வாழ்ந்ததை உறுதிப்படுத்தும் சான்றுகளாகவே அந்தப் பகுதி மக்கள் பார்க்கின்றனர்.
பாதாள குகைக்கு முன்பு 100 அடி தூரத்தில் கொங்கண சித்தரின் சிலை, விநாயகர் சிலை உள்ளிட்ட பல சிலைகளும் வைக்கப்பட்டுள்ளன. பவுர்ணமி மற்றும் வெள்ளி, சனிக்கிழமைகளில் இங்கு பக்தர்கள் தவறாமல் வழிபாடு செய்து வருகின்றனர்.

திருவண்ணாமலையில் தான் முதன் முதலில் லிங்க வழிபாடு தோன்றியது.திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவில் பற்றிய வரலாற்றை கீழே விரிவாக பார்க்கலாம்.
தல வரலாறு :
பிருங்கி முனிவர் அம்பாள் பார்வதியை வணங்காமல் சிவனை மட்டுமே வணங்கி வந்தார். அவருக்கு, சிவமும் சக்தியும் ஒன்று என்பதை உணர்த்துவதற்காக சிவன் அம்பிகையை பிரிவது போல ஒரு லீலை நிகழ்த்தினார். அவள் இத்தலத்தில் அவருடன் மீண்டும் இணைய வேண்டிய தவமிருந்தாள்.
அவளுக்கு காட்சி தந்த சிவன், தனது இடது பாகத்தில் ஏற்று, அர்த்தநாரீஸ்வரராக காட்சி கொடுத்தார். சக்தியும் சிவமும் ஒன்றே என்று உண்மையை பிருங்கி உணர்ந்தார். இவ்வாறு சிவன் அர்த்தநாரீஸ்வர வடிவம் எடுத்த பெருமையை உடைய தலம் இது. பிரம்மாவும், விஷ்ணுவும் நெருப்பாக நின்ற சிவபெருமானின் அடிமுடி காண முயன்றனர். அந்த நெருப்பு மலையாக மாறியது. அதுவே கோவிலின் பின்னணியிலுள்ள திருவண்ணாமலையாகும்.
கிழக்குப் பக்கத்தில் வானளாவ நின்று காட்சியளிக்கும் கோபுரம்- ராஜகோபுரம் எனப்படுகிறது. இது 217 அடி உயரமுடையது. பதினொரு நிலைகளை - மாடங்களையுடையது. மாநகருக்குச் சிறப்பு கோவில் கோபுரம். மேற்குக் கோபுரம் பேய்க் கோபுரம் என அழைக்கப்படுகிறது. மேலக் கோபுரம் என்பது மேக்கோபுரமாகி அது நாளடைவில் பேய்க் கோபுரமாக மருவியது.
தெற்குக் கோபுரம் திருமஞ்சன கோபுரம் என்ற பெயரைத் தாங்கி மங்கலமாக நிற்கிறது. வடக்குக் கோபுரம்- அம்மணி அம்மன் கோபுரம் அம்மணி அம்மாள்- இவர் திருவண்ணாமலைக்கு மேற்கில் உள்ள செங்கம் வட்டம் சென்ன சமுத்திரத்தை சேர்ந்த இவர் வீடு தோறும் சென்று பொருள் ஈட்டி வடக்குக் கோபுரத்தைக் கட்டி முடித்தார். அதனால் இவ்வம்மையார் பெயரால் அம்மணி அம்மன் கோபுரம் என்று விளங்குகிறது.
வடக்குத் தெற்காக உள்ள கோவில் மதில் சுவரின் நீளம் 700 அடிகள். தென் மதில் 1479 அடி நீளம். வடக்கு மதில் 1590 அடி நீளம்.
தெற்கு, மேற்கு, வடக்கு ஆகிய திசைகளில் இரண்டு இரண்டு கோபுரங்களாக உள்ளன. ராஜ கோபுரம் மட்டும் ஒற்றையாய் அமைந்துள்ளது.
பிரமாண்டமான மணிகள் :
திருவண்ணாமலை ஆலயத்தில் மிகப் பிரமாண்டமான 3மணிகள் உள்ளன. அதில் 2 மணிகள் அண்ணாமலையார் சன்னதி மண்டபத்தில் உள்ளது. மற்றொரு மணி உண்ணாமுலை அம்மன் சன்னதியில் கட்டப்பட்டுள்ளது. இந்த மூன்று மணிகளையும் அடிக்கும் போது அதன் சத்தம் நீண்ட தொலைவுக்கு கேட்குமாம். இந்த மூன்று மணிகளும் நூற்றாண்டை கடந்தவை என்பது குறிப்பிடத்தக்கது.

அம்பாளை பாதுகாக்கும் நந்தி :
ஆலயங்களில் அம்பாள் சன்னதி முன்பு சிம்மம்தான் அமைக்கப்பட்டிருக்கும். ஆனால் திருவண்ணாமலை ஆலயத்தில் உண்ணாமுலை அம்மன் சன்னதியில் நந்தி உள்ளது. அம்பாளுக்குரிய சிம்மம் அங்கு இல்லை. ஈசனிடம் கோபித்துக் கொண்டு பூலோகத்துக்கு வந்த பார்வதி இத்தலத்தில் தவம் இருந்தாள். அவளுக்கு பாதுகாப்பாக நந்தியும் வந்து விட்டார். இதை பிரதிபலிக்கவே உண்ணாமுலை அம்மன் சன்னதி முன்பு நந்தி உள்ளது.
ஆலய கட்டமைப்பு அதிசயங்கள்:
அண்ணா மலையார் ஆலயம் எத்தனையோ ஆச்சரியங் களையும், அதிசயங்களையும் கொண்டது. இந்த ஆலயம் சுமார் 25 ஏக்கர் பரப்பளவில் பரந்து விரிந்துள்ளது. தமிழ்நாட்டில் உள்ள மிகப்பெரிய ஆலயங்களில் தனித்துவம் கொண்டதாக இந்த ஆலயம் திகழ்கிறது. இந்த ஆலயத்துக்கு 7 பரிகாரங்கள் உள்ளன. 9 பெரிய கோபுரங்கள் உள்ளன. 40-க்கும் மேற்பட்ட சன்னதிகள் அமைந்துள்ளன. இதில் 4 விநாயகர் சன்னதிகளும், 4 முருகர் சன்னதிகளும் அடங்கும்.
சிலைகள் என்று கணக்கிட்டால் ஆலயம் முழுவதும் 200-க்கும் மேற்பட்ட சிலைகள் உள்ளன. 2-ம் பிரகாரத்தில் 63 நாயன்மார்களுக்கு கற்சிலைகளும், வெண்கல சிலைகளும் உள்ளன. 2-ம் பிரகாரத்தில் திரும்பும் திசையெல்லாம் லிங்கங்களை காணலாம்.
தினசரி பூஜை காலங்கள் :
நடை திறப்பு : காலை 5.00 மணி
கோ பூஜை : காலை 5.15 மணி
பள்ளியெழுச்சி பூஜை : 5.30 மணி
உஷாகால பூஜை : 6.00 மணி
காலசந்தி பூஜை : 8.30 மணி
உச்சிகால பூஜை : 11.00 மணி
நடைசாற்றுதல் : நண்பகல் 12.30 மணி
நடை திறப்பு : 3.30 மணி
சாயரட்சை பூஜை : மாலை 5.30 மணி
இரண்டாம் கால பூஜை : இரவு 7.30 மணி
அர்த்தஜாம பூஜை : 9.00 மணி
பள்ளியறை பூஜை : 9.15 மணி
நடைசாற்றுதல் : 9.30 மணி
360 தீர்த்தங்கள் :
இத்தலத்தில் அம்பிகை, கணேசர், முருகன், வயிரவர், பிரம்மன், திருமால், இலக்குமி, கலைமகள், சூரியன், சந்திரன், சப்த கன்னிகைகள், அஷ்ட வசுக்கள் முதலியோர் அமைந்தனவும், மூழ்கிப்பேறு பெற்றனவுமாகிய அவரவர் பெயரால் வழங்கப்பெறும் முன்னூற்று அறுபது புண்ணிய தீர்த்தங்கள் உள்ளன. அவற்றுள் மிகச் சிறந்தவை சிவகங்கையும், பிரம்ம தீர்த்தமும், சக்கர தீர்த்தமும், இந்திர தீர்த்தமும் அக்கினி தீர்த்தமும் ஆகும். இந்திர தீர்த்தத்தில் தெப்போற்சவம் நடைபெறும்.

அபிதகுசாம்பாள் சன்னதி :
இத்திருக்கோவிலில் சதுர் புஜத்துடன் வீற்றிருக்கும் அபிதகு சாம்பாள் வேறெங்கும் இல்லாத அளவிற்கு சுமார் 6 அடி உயரத்தில் நின்ற கோலத்தில் காணப்படுகிறாள்.இந்த அம்பிகை தெற்கு முகமாக வீற்றிருந்து சாந்தமாக தினம் ஒரு விதமான முகத் தோற்றத்துடன் பக்தர்களுக்கு அருள் பாலிப்பது குறிப்பிடத்தக்கது.
ஒவ்வொரு பவுர்ணமி அன்றும் பகல் வேலையில் சிறப்பு பூஜையும், அபிஷேகமும், திருவிளக்கு பூஜையும் மகளிரால் செய்யப்படுகிறது. வெள்ளிக் கிழமை மற்றும் செவ்வாய் கிழமைகளில் ராகு காலத்தில் சிறப்பு வழிபாடும், கூட்டுப் பிரார்த்தனையும், கோ பூஜையும் வெகு விமரிசையாக நடைபெற்று வரப்படுகிறது.
அவ்வப்போது அம்பாளுக்கு பூச்சொரிதல், சந்தனகாப்பு, 108 பால்குட அபிஷேகம், நிறை பணி காட்சி போன்ற வைபவங்கள் பக்தகோடிகளால் செய்து வரப்பட்டு அம்மனின் பரிபூர்ண அருளை பெற்றுவருவதாக நம்பப்படுகிறது.
காஞ்சி ஸ்ரீலஸ்ரீ சங்கராச்சாரிய சுவாமிகள் 1967-ல் இத்தலத்துக்கு வருகை புரிந்து ஸ்ரீ சக்கரத்தினை அபீதகு சாம்பாள் சன்னதியில் பிரதிஷ்டை செய்துள்ளார்கள்.
வியாபாரத்திலும், தொழி லிலும் சிறந்த லாபங்களை பெற்று வளமடைய அதிர்ஷ்ட தேவியாக இத் திருத்தலத்தில் உள்ள அம்பாள் விளக்குகிறாள்.
இந்த அம்பாளை மனம் உருகி வழிபட்டால் மாணவர்கள் கல்வியில் மேம்படவும், குடும்பத்தில் அதிர்ஷ்டம், ஐஸ்வர்யம், லட்சுமி கடாட்சம் முதலிய னவற்றை பெறலாம்.
மலைக்குள் இயங்கும் மர்ம உலகம் :
அண்ணாமலை முழுவதும் கருங்கல் வடிவமல்ல, மலைக்குள் பிரும்மலோகம் உள்ளதென்பது ஐதீகம். சுமார் 50 ஆண்டுகளுக்கு முன் அண்ணாமலையில் ஒரு இரவு முழுவதும் தியானித்திருந்த சுஜாதாசென் என்கிற ஆங்கிலேய பெண் மலைக்குள் ஒரு பெரிய உலகத்தையே தாம் கண்டதாகக் கூறி இருக்கிறார்.
அப்போது இதனை யாரும் நம்பவில்லை. சுமார் 40 ஆண்டுகளுக்கு முன் எஸ்.என்.டாண்டன் என்பவருக்கு பல அற்புதக் காட்சிகள் காணக் கிடைத்தன. அவர்தாம் கண்டதாகக் கூறிய பலவும் ஆங்கில அம்மையார் கண்டவற்றை ஒத்திருந்தது குறிப்பிடத்தக்கது.
எட்டுக்கை கால பைரவர் :
திருவண்ணாமலை கோவிலின் பிரம்ம தீர்த்தக் கரையில் கால பைரவர் சந்நிதி இருக்கிறது. இவரது சிலையை திருவாசியுடன் ஒரே கல்லில் சுமார் 6 அடி உயரத் துக்கு வடித்திருக்கின்றனர். எட்டு கைகளில் ஆயுதங்கள் ஏந்தி, கபால மாலையுடன் காட்சி தருகிறார். தலையில் பிறைச்சந்திரன் இருக்கிறது. திருஷ்டி, பயம் நீங்க இவரிடம் வேண்டிக் கொள்கிறார்கள். தேய்பிறை அஷ்டமி நாளிலும் ஞாயிறு ராகு காலத்திலும் இவரை வழிபடுவது சிறப்பு.
இந்தியாவில் உள்ள கால பைரவர் சிலைகளில் இந்த சிலையே உயரமானது.