என் மலர்
கோவில்கள்
நாகை மாவட்டம் திருக்கடையூரில் இருந்து சுமார் 8 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள தில்லையாடியில் சரணாகரட்சகர் கோவில் உள்ளது. இந்த கோவில் வரலாற்றை அறிந்து கொள்ளலாம்.
நாகை மாவட்டம் திருக்கடையூரில் இருந்து சுமார் 8 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது தில்லையாடி. இங்கே ஸ்ரீபெரியநாயகி சமேதராகக் கோவில் கொண்டிருக்கிறார் ஸ்ரீசரணாகரட்சகர்.
விக்ரம சோழனின் ஆட்சிக் காலம். அவனது மந்திரிகளில் ஒருவரான இளங்காரார். திருக்கடவூர் கோயில் திருப்பணிகளில் ஈடுபட்டிருந்தார். அதே நேரம், தில்லையாடி திருக்கோயிலையும் புதுப்பிக்க பொருளுதவி செய்து கொண்டிருந்தார். அந்த மந்திரி சிறிது காலம் கழித்தே மன்னனுக்கு இந்த விஷயம் தெரியவந்தது. உடனே மந்திரியை அழைத்து தில்லையாடி கோவிலின் திருப்பணிக்கான புண்ணிய பலனை தனக்கு தத்தம் செய்யும்படி கேட்டான். மந்திரி மறுத்தார்.
அதனால் கோபம் கொண்ட சோழ மன்னன். தன்னுடைய வாளால் மந்திரியின் கையை வெட்ட முயற்சித்தான். அப்போது பேரொளியுடன் அமைச்சருக்குக் காட்சி தந்தார் ஈஸ்வரன். ஆனால், அந்த திவ்விய தரிசனத்தைக் காண இயலாதவாறு மன்னணின் பார்வை பறிபோனது. தனது தவற்றை உணர்ந்த அரசன் கதறினான். இந்தக் தலத்துக்கு ஒடோடி வந்து, ஈஸ்வரனைச் சரண் அடைந்து, அவரை பூஜித்து வழிபட்டு, மீண்டும் பார்வை கிடைக்கப் பெற்றான்.

இதனால் இந்தக் தலத்தின் சிவனார். ஸ்ரீசரணாகரட்சகர் (சாந்தாரைக் காந்த ஸ்வாமி) என்று திருப்பெயர் பெற்றாராம். அற்புதமான இந்தக் கதையை விவரிக்கும் தலபுராணம் இந்த ஆலயத்தின் பழமை சுமார் 5000 வருடங்களுக்கு மேல் என்கிறது.சித்திரை வருடப்பிறப்பு துவங்கி மாதாந்திர விசேஷங்கள் அனைத்தும் இங்கே சிறப்புற நடைபெறுகின்றன.
ஆடிப்பூரத்தன்று சந்தானபரமேஸ்வரி ஹோமத்தில் கலந்து கொண்டு அம்பாளுக்கு வளையல் சார்த்தியும், அவளின் சன்னதியில் தொட்டில் கட்டியும் பிரார்த்தித்தால், குழந்தை பாக்கியம் கிடைக்கும் என்கிறார்கள். பிரார்த்தனை நிறைவேறியவர்கள் எடைக்கு எடை கற்கண்டு சமர்ப்பித்து நேர்த்திக்கடன் செலுத்துகின்றனர். அது போன்று புரட்டாசி நவராத்திரியின் போது அம்பாளுக்கு ராஜேஸ்வரி அலங்காரம் செய்து வழிபட, திருமணத் தடைகள் நீங்குமாம்.
சோமவார (திங்கட்கிழமைகளில்) நாளில் 108 சங்காபிஷேகம், கார்த்திகையில் முருகன் வீதியுலா, மார்கழி பஞ்சமூர்த்தி வீதியுலா, மாசி உற்சவம் ஆகிய வைபவங்களும் இங்கே விசேஷம்.
பங்குனி உத்திரத் திருநாளில்... 21 தட்டுகளில் பூ பழம், சேலை - வேட்டி என வரிசை வைத்து சுவாமிக்கும் அம்பாளுக்கும் நடைபெறும். திருக்கல்யாணத்தைக் காணக் கண்ணிரண்டு போதாது. மணப்பேறு வாய்க்கவும், மாங்கல்ய பலம் சித்திக்கவும் அவசியம் தரிசிக்க வேண்டிய வைபவம் இது.
கோவில் முகவரி :
அருள்மிரு சரணாகரட்சகர் திருக்கோவில்
திருக்கடையூர்,
தில்லையாடி,
நாகப்பட்டிணம்.

திருச்செந்தூர் அருகில் உள்ள மேலபுதுக்குடி என்ற ஊரில் செம்மண் நிறைந்த தேரி பகுதியில் வற்றாத நீர் சுரக்கும் நற்சுனையின் அருகில் பூரண, புஷ்கலா தேவியருடன் அருஞ்சுனை காத்த அய்யனார் அருள்பாலித்து வருகிறார்.
அய்யனார் ஒரு கிராம தெய்வம். சிவபெருமான், திருமால் ஆகியோரின் இருபெரும் சக்தியாக தோன்றியவர் அவர். ‘அய்யன்’ என்றால் ‘தலைவன்’ என்று பொருள். அய்யனார் வழிபாடு தமிழ்நாட்டில் திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டங்களில் பிரசித்தம்.
தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அருகில் உள்ளது மேலபுதுக்குடி என்ற ஊர். இங்கு செம்மண் நிறைந்த தேரி பகுதியில் வற்றாத நீர் சுரக்கும் நற்சுனையின் அருகில் பூரண, புஷ்கலா தேவியருடன் அருஞ்சுனை காத்த அய்யனார் அருள்பாலித்து வருகிறார். குளிர்ந்த தாயுள்ளத்துடன், பக்தர்களை காத்து அருளைச் சொரிவதால் இவர் ‘அருஞ்சுனை காத்த அய்யனார்’ என்று அழைக்கப்பட்டார். முற்காலத்தில் இவர் ஒற்றை தாழை மரத்தின் கீழ் இருந்ததால், ‘தாழையடி அய்யனார்’, ‘தாழைமுத்து அய்யனார்’ என்ற பெயர்களில் வணங்கப்பட்டார். வாழை, நாவல்மரங்கள் நிறைந்த பகுதியில் இவர் வீற்றிருப்பதால், ‘வாழையப்பன்’, ‘நாவற்கனியான்’ என்ற பெயரும் அவருக்கு உண்டு.
தல வரலாறு:
முன்னொரு காலத்தில் இங்குள்ள தேரிக்காட்டையும், அதை சுற்றியுள்ள பகுதிகளையும் சிங்கராஜன் என்ற மன்னன் ஆட்சி செய்தான். அந்தக் காலத்தில் மேலபுதுக்குடியில் உள்ள தடாகத்தில் இருந்து சுவையுள்ள நீரை மக்கள் குடிப்பதற்கு எடுத்துச் செல்வர். கனகமணி என்ற பெண் குடத்தில் நீர் எடுத்து வரும்போது கால் இடறி, அவர் சுமந்து வந்த குடம் ஒரு புற்றின் மீது விழுந்தது. கவுதம முனிவர் நீண்ட காலம் தவம் செய்ததால், அவரை சுற்றி வளர்ந்திருந்த புற்று அது.
குடம் விழுந்து தவம் கலைந்து எழுந்த முனிவர், ‘என் தவத்தை கலைத்ததால் நீ களங்கப்பட்ட பெண்ணாக மரணம் அடைவாய். உன் கையால் யார் தண்ணீர் வாங்கிக் குடித்தாலும் அவர்கள் இறந்து போவார்கள். இந்த உண்மையை நீ வெளியே சொன்னால், அடுத்த நொடியே நீ மரணிப்பாய்’ என்று அந்தப் பெண்ணுக்கு சாபம் கொடுத்தார்.
அறியாமல் செய்த தவறை பொறுத்தருள வேண்டும் என கனகமணி, முனிவரிடம் கண்ணீர் மல்க முறையிட்டாள். ஆனால் முனிவரோ, ‘கொடுத்த சாபத்தை மாற்ற முடியாது. நீ மரணம் அடையும் போது சொன்னது பலிக்கும். நீர் சொர்க்கம் செல்வாய்’ என்று கூறிவிட்டு அங்கிருந்து சென்றுவிட்டார்.
இதற்கிடையில் மன்னன் சிங்கராஜன், சிவபெருமானை நோக்கி தவம் இருந்தான். அவன் முன் தோன்றிய சிவபெருமானிடம், ‘எனக்கு பசியே இருக்கக் கூடாது. என் மக்களுக்கு எப்போதும் பணி செய்ய வேண்டும் என்பதே என் ஆசை’ என்று கேட்டுக்கொண்டான்.
அதற்கு சிவபெருமான், ‘அந்த வரத்தை கொடுக்க முடியாது. அதற்குப் பதிலாக வேறு வழி சொல்கிறேன்’ என்று கூறி, ஒரு மாய மரத்தை உருவாக்கினார். பின்னர் மன்னரிடம், ‘ இந்த மரத்தில் தினமும் ஒரே ஒரு கனி தோன்றும். உச்சி வேளையில் மூன்று நாழிகை மட்டுமே அந்தக் கனி மரத்தில் தங்கும். அந்த வேளையில் நீ உண்டு விட வேண்டும்.

மரத்தில் இருந்து கனி கீழே விழுந்துவிட்டால் மற்றவர்கள் கண்ணுக்கு தெரிந்துவிடும். ஆனால் அக்கனியை உன்னைத் தவிர வேறு யாராலும் உண்ண முடியாது. என்றாவது ஒருநாள் நீ கனியை சாப்பிட முடியாமல் போனால் மரத்தில் வேறு கனி தோன்றாது. நீ முதல்நாள் சாப்பிட்ட கனி மூன்று நாட்கள் உன் உயிரை காத்து நிற்கும். அதற்குள் நீ அடுத்த கனியை சாப்பிடாவிட்டால் 4-வது நாள் உன் உயிர் பிரிந்து விடும். அந்த மாயமரமும் மறைந்து விடும்’ என்று கூறி மறைந்தார்.
அந்த மாயமரம் காட்டில் இருந்ததால் மன்னன் தினமும் வேட்டைக்கு சென்று, மதிய வேளையில் அக்கனியை பறித்து உண்டு உயிர் வாழ்ந்து வந்தான். அந்த மரத்தை சுற்றிலும் காவலாளிகளை நியமித்தான். ஒருநாள் கனகமணி தண்ணீர் எடுத்து வரும்போது மாயமரத்தில் பழுத்து தொங்கிய கனி அவளது குடத்தினுள் விழுந்தது. அப்போது முனிவர்கள் வடிவில் வந்த குட்டி தெய்வங்கள் கனகமணியிடம் ‘தாகமாக இருக்கிறது. தண்ணீர் கொடு’ என்று கேட்டனர்.
தன் கையால் தண்ணீர் கொடுத்தால் முனிவர்கள் மாண்டு போவார்களே என்று நினைத்த கனகமணி, ‘பக்கத்தில் தடாகம் உள்ளது. அங்கு போய் குடித்துக் கொள்ளுங்கள்’ என்று கூறிவிட்டு சென்று விட்டாள். இதற்கிடையே கனியை காணாமல் பதறிய மன்னன் வீடுதோறும் சோதனை செய்ய உத்தரவிட, கனகமணியின் குடத்தில் மாயக்கனி கிடந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
அவள் ராஜதுரோகி என்ற குற்றத்துடன் மன்னன் முன் நிறுத்தப்பட்டாள். அப்போது கனகமணியிடம் தண்ணீர் கேட்ட குட்டி தெய்வங்கள் அங்கு வந்து, ‘குடத்திற்குள் கனி இருந்ததால்தான், நாங்கள் தண்ணீர் கேட்டபோது இவன் தர மறுத்திருக்கிறாள். இவள் குற்றவாளிதான்’ என்றனர்.
அப்போது ஒரு பெண் முனிவர், ‘மன்னா! பழம் குடத்தில் விழுந்தது பற்றி, கைது செய்யப்படும் வரை அவளுக்கு தெரியாது’ என்று கூறினார்.
அதைக் கேட்ட கனகமணி அந்தப் பெண் முனிவரை கட்டிப்பிடித்து, ‘நீ மட்டுமே உண்மை பேசியதால் இன்று முதல் நீ உண்மை பேசிய அம்மன் (பேச்சியம்மன்) என அழைக்கப்படுவாய்’ என்று வாழ்த்தினாள்.
மன்னன் கனகமணியை தீயிலிட்டு கொல்லும்படி உத்தரவிட்டான். அதன்படி வீரர்கள் கனக மணியை பிடித்து தூணில் கட்டி தீ மூட்டினர். சிறிது நேரத்தில் தீ அணைந்தது. உடல் முழுவதும் எரிந்த நிலையில் ‘தண்ணீர்.. தண்ணீர்..’ என்று புலம்பினாள் கனகமணி.
உண்மை பேசிய அம்மனுடன் வந்த அவளது அண்ணன் அய்யனார், தனது சூலாயுதத்தால் ஓங்கி பூமியில் குத்த அதிலிருந்து தண்ணீர் பீய்ச்சி அடித்தது. கனகமணி அந்த நீரைப் பருகினாள். ‘வலி, வலி’ என அவள் கதறி துடிக்க அய்யனார், கனகமணியின் உடலில் வெண்ணெய் பூசினார்.

அப்போது கனகமணி ‘எனக்காக உண்மை பேசிய அம்மனும், என் தாகத்துக்கு தண்ணீர் தந்த அய்யனாரும் எங்கு போய் அமர்ந்தாலும் எனது மனமும், உடலும் குளிர்ந்தது போல, என் இதயமே ஒரு சுனையாகி அவர்கள் இருக்கும் இடத்தை குளிரச் செய்யும். அவர்களுக்கு அரணாக தாழையும், லட்சுமியும், சரஸ்வதியும் சுனை நீரில் தாமரையாக வீற்றிருப்பார்கள். உங்களை பவுர்ணமியில் மக்கள் வழிபடுவார்கள்’ என்று வாக்களித்தாள். இதையடுத்து கனகமணியின் உயிர் பிரிந்தது. அவளது ஆன்மாவை, தேவகன்னிகள் சொர்க்கத்துக்கு அழைத்துச் சென்றனர்.
காவல் தெய்வமான அய்யனார், அவரது வாகனமான குதிரையில் முன்னால் செல்ல, அவரது துணைவிகள் பூரணம், புஷ்கலா இருவரும் பின் தொடர்ந்தனர். அவர்களைத் தொடர்ந்து பேச்சியம்மன், காவல் தெய்வங்கள் வேலைக்காரியம்மன், கருப்பசாமி, சுடலைமாடன், வன்னிச்சி அம்மன், வன்னியராஜன், இருளப்பன் ஆகியோர் சென்றனர். அவர்கள் அனைவரும் தேரியில் ஒரு மருத மரத்தின் நிழலில் போய் அமர்ந்தனர். அங்கே கனகமணியின் இதயம் சுனையாக மாறி வற்றாத நீரை வழங்கிக் கொண்டிருந்தது.
அப்போது உண்மை பேசிய அம்மன், ‘அய்யனே! நாம் அமரும் இத்திருத்தலத்தில் அருஞ்சுனை உருவாகி உள்ளது. அதனைக் காக்கும் பொறுப்பு உங்களுக்கு உள்ளதால் இன்று முதல் இந்தத் திருத்தலம் அருஞ்சுனை காத்த அய்யனார் கோவில்’ என்று அழைக்கப்படும் என்றாள்.
உடனே அய்யனார், ‘பங்குனி உத்திர திருநாளில் நாம் இங்கே அமர்வதால், அன்றைய தினத்தில் இங்கு திருவிழாவாக பக்தர்கள் கொண்டாடு வார்கள். இத்தலத்தில் எனக்கு அடுத்ததாக, உண்மை பேசிய அம்மனான உனக்கே முதல் பூஜை நடக்கும். உண்மையான பக்தர்களுக்கு எப்போதும் அருள்பாலிக்கும் திருத்தலமாக நமது இருப்பிடம் விளங்கும்’ என்றார். உடனடியாக அந்த இடம் பூஞ்சோலையாக மாறியது.
இத்திருத்தலத்தில் பங்குனி உத்திர பெருந்திருவிழா வெகு விமரிசையாக 10 நாட்கள் கொண்டாடப்படுகிறது. இதில் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொள்வார்கள். விழாவில் சாமி வீதி உலா நடைபெறும்.
பக்தர்களுக்கு குழந்தை வரம், தொழிலில் மேன்மை, வேலைவாய்ப்பு, திருமண யோகம் வழங்கி அருஞ்சுனை காத்த அய்யனார் அருள் பாலித்து வருகிறார். கோவில் நுழைவு வாசலின் இடது பக்கம் அரசமரத்தடியில் 50-க்கும் மேற்பட்ட நாகர், குதிரை, யானை கற்சிலைகள் உள்ளன. அருகில் விநாயகருக்கு தனி சன்னிதி உள்ளது. வலதுபுறம் மருதமரம், தாழை செடிகள் சூழ்ந்த அருஞ்சுனை உள்ளது. கருவறையில் ‘என் மக்கள் எங்கிருந்தாலும் குறைவில்லா வாழ்வளிப்பேன்’ என அருளும் முகத்துடன் அருஞ்சுனை காத்த அய்யனார் பூரண, புஷ்கலா தேவியருடன் கருணாமூர்த்தியாக காட்சி அளிக்கிறார்.
அமைவிடம் :
திருச்செந்தூர்- திருநெல்வேலி நெடுஞ்சாலையில் 13 கிலோமீட்டர் தூரத்தில் அம்மன்புரம் என்ற ஊர் உள்ளது. இங்கிருந்து இடதுபுறம் செல்லும் சாலையில் 2 கிலோமீட்டர் தூரம் சென்றால் இந்த ஆலயத்தை அடையலாம். அம்மன்புரத்தில் இருந்து கோவிலுக்கு செல்ல ஆட்டோ வசதி உண்டு.

கோயம்பத்தூரில் உள்ள பேரூர் பட்டீஸ்வரர் திருக்கோயில் ஆயிரம் ஆண்டுகளுக்கும் மேற்ப்பட்ட தொன்மையுடையது. இக்கோயிலை பற்றி தெரிந்து கொள்வோம் வாருங்கள்.
தென்னாடுடைய சிவபெருமான் கொங்குநாட்டில் கம்பீரமாய் வீற்றிருக்கும் இடம் கோயம்பத்தூரில் உள்ள பேரூர் ஆகும். இங்கே பட்டீஸ்வரர் உமையாள் பச்சைநாயகியுடன் ஸ்வயம்பு லிங்கமாய் வீற்றிருக்கிறார். ஆயிரம் ஆண்டுகளுக்கும் மேற்ப்பட்ட தொன்மையுடைய இக்கோயிலை பற்றி தெரிந்து கொள்வோம் வாருங்கள்.
பின்னர் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு கரிகால் சோழன் கல்லால் ஆன சிறிய கருவறை ஒன்றை அமைத்து அதனுள் பட்டீஸ்வரர் லிங்கத்தை பிரதிர்ஷ்டை செய்திருக்கிறார். பின்னர் 16ஆம் நூற்றாண்டு காலத்தில் கொங்கு நாட்டின் மீது படையெடுத்து வந்த விஜயநகர அரசர்கள் மற்றும் பாளையக்காரர்கள் இக்கோயிலை விரிவுபடுத்தி தற்போதிருக்கும் தோற்றத்தை அளித்திருக்கின்றனர்.

இக்கோயிலினுள் சென்றால் நிச்சயம் பிரமிக்க வைக்கும் கட்டிடக்கலை நுட்பங்களை காணலாம். இங்குள்ள கோயில் மண்டபத்தில் உள்ள தூண்களில் சிவபெருமானின் பல்வேறு ரூபங்கள் அத்தனை நேர்த்தியாக வடிக்கப்பட்டுள்ளன. அதில் உள்ள ஒரு சிற்பம் இடது புறம் இருந்து பார்த்தால் கோபத்துடன் இருப்பது போலவும், வலது புறம் நின்று பார்த்தால் புன்னகிப்பது போன்றும் இருக்கும். அதே போன்று நடராஜர் சந்ததிக்கு அருகில் உள்ள கூரையில் கற்களால் ஆன சங்கிலியை காணலாம்.
நொய்யல் நதிக்கரைக்கு பக்கத்தில் அமைந்திருப்பதால் இறந்தவர்களுக்கு திதி கொடுக்கும் சடங்கும் இங்கு பரவலாக மேற்கொள்ளப்படுகிறது. ஆயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட கல்வெட்டுகளை காணமுடியும். மேலும் இக்கோயிலினுள் கோயில் யானை ஒன்றும், கோ சாலை ஒன்றும் இருக்கிறது. கோயம்பத்தூருக்கு வருபவர்கள் கட்டாயம் செல்லவேண்டிய கோயில் என்றால் அது இந்த பேரூர் பட்டீஸ்வரர் கோயில் தான்.

சேலம் மாவட்டம் பேளூரில் (நிலம்) அமைந்துள்ளது தான்தோன்றீஸ்வரர் கோவில். இன்று இந்த கோவில் பற்றிய வரலாற்றை விரிவாக பார்க்கலாம்.
‘ஓம் நமசிவாய’ என்னும் திவ்ய மந்திரம் இம்மைக்கு மட்டுமல்ல... மறுமைக்கும் உகந்த திருமந்திரம். உலகமெங்கும் நீக்கமற நிறைந்து இருக்கும் இறைவன் சிவபெருமானை வணங்கினால், தீவினை அகன்று நல்வினை சேர்ந்திடும். அவனது பேரருள் கடலினும் பெரிது என்பர் அடியவர்கள்.
நிலம், நீர், நெருப்பு, காற்று, ஆகாயம் இவை ஐந்தும் சேர்ந்ததே உலகம். எனவேதான் இவற்றை பஞ்சபூதங்கள் என்கிறோம். உயிர்கள் அனைத்தும் இந்த பஞ்சபூதங்களின் உருவாக்கமே. இதனை உணர்த்தும் வகையில் தான் இறைவன் பஞ்சபூத திருத்தலங்களில் கோவில் கொண்டு இருக்கிறார்.
காஞ்சீபுரத்தில் (நிலம்) ஏகாம்பரேஸ்வரராகவும், திருவானைக்காவலில் (நீர்) ஜம்புகேஸ்வரராகவும், திருவண்ணாமலையில் (நெருப்பு) அருணாசலேஸ்வரராகவும், காளஹஸ்தியில் (காற்று) காளத்தீஸ்வரராகவும், சிதம்பரத்தில் (ஆகாயம்) நடராஜராகவும் வீற்றிருந்து அருள்பாலித்து கொண்டிருக்கிறார். இந்த ஐந்து திருத்தலங்களும் தென்னிந்தியாவிலேயே அமைந்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
இதேபோல சேலம் மாவட்டத்திலும் பஞ்சபூத திருத்தலங்கள் உள்ளன. இவை வசிஷ்ட நதிக்கரையோர பஞ்சபூதத் திருத்தலங்கள் என்று அழைக்கப்படுகின்றன. சேலம் மாவட்டத்தில் தொடங்கி விழுப்புரம் மாவட்ட எல்லை வரையில் வசிஷ்ட நதிக்கரை ஓரத்தில் இந்த 5 ஆலயங்களும் அமைந்திருக்கின்றன. வசிஷ்ட மகரிஷி யாகம் செய்த நதிக்கரையோரம் என்பதால் இது வசிஷ்ட நதி என்று பெயர்பெற்றது.
சேலம் மாவட்டம் பேளூரில் (நிலம்) தான்தோன்றீஸ்வரராகவும், ஏத்தாப்பூரில் (நீர்) சாம்பமூர்த்தீஸ்வரராகவும், ஆத்தூரில் (நெருப்பு) காய நிர்மலேஸ்வரராகவும், ஆறகளூரில் (காற்று) காமநாதீஸ்வரராகவும், விழுப்புரம் மாவட்ட எல்லையில் உள்ள கூகையூரில் (ஆகாயம்) சொர்ணபுரீஸ்வரராகவும் சிவபெருமான் அருளாட்சி புரிகிறார்.
இந்த திருத்தலங்களில் தரிசனம் செய்தால் சகல ஐஸ்வரியங்களும் கிடைக்கும் என்பது ஐதீகம். வாருங்கள் இந்த வாரம் வசிஷ்ட நதிக்கரையோரம் உள்ள பஞ்சபூத தலங்களில் முதல் திருத்தலம் பற்றி பார்ப்போம்.
சேலம் மாவட்டம் பேளூரில் உள்ளது தான்தோன்றீஸ் வரர் கோவில். இந்த ஆலயம் பிருத்வி(நிலம்) தலமாக விளங்குகிறது. 63 நாயன்மார்களில் ஒருவரான கணம்புல்ல நாயனாரை, இறைவன் சோதித்து தம் திருவடியில் சேர்த்துக்கொண்ட புண்ணியத்தலம் இது.
பழமை வாய்ந்த இந்த ஆலயம், காசிக்கு நிகரானது என்று போற்றப்படுகிறது. வசிஷ்ட முனிவர் வேள்வி புரிந்ததால் ‘திருவேள்வியூர்’ என்றும், ‘வெள்ளூர்’ என்றும் அழைக்கப்பட்டு, நாளடைவில் ‘பேளூர்’ என்று மருவியதாக கூறுகிறார்கள். அதேபோல இங்கு ஓடும் வசிஷ்ட நதிக்கும் ‘வெள்ளாறு’, ‘சுவேதநதி’ என்ற பெயர்கள் உள்ளன.

தல வரலாறு
பஞ்சபாண்டவர்களில் ஒருவரான அர்ச்சுனன், ஒரு முறை தீர்த்த யாத்திரை மேற்கொண்டிருந்தான். அதன் ஒரு பகுதியாக இங்குள்ள தீர்த்த மலைக்கு வந்தான். அப்போது கிருஷ்ணன், அர்ச்சுனனிடம் ‘உனது பாணத்தை இப்பகுதியில் செலுத்துவாயாக’ என்றார். உடனே சிவனை நினைத்து, பிறை வடிவமான பாணத்தை மலை அடிவாரத்தில் செலுத்தினான் அர்ச்சுனன். இதனால் சிவன் மகிழ்ந்து, அர்ச்சுனனுக்கு பாசுபத அஸ்திரத்தை வழங்கினார். மேலும் தனது திருமுடியில் இருந்து கங்கையின் ஒரு பகுதியை இங்கே ஓடச் செய்தார். அந்த நதியே ‘வெள்ளாறு’ என்று பெயர் பெற்றது.
ஒரு முறை இறைவனின் திருவுளப்படி, வசிஷ்ட முனிவர், இந்த நதிக்கரையில் தங்கி வேள்வி செய்தார். வசிஷ்டரின் வேள்வியில் மிஞ்சிய சாம்பலே குன்றாக மாறி, ‘கோட்டை மேடு’ என்ற பெயரில் விளங்குவதாக கூறப்படுகிறது. அந்த குன்று மண்ணே, இந்த ஆலயத்தின் பிரசாதமாக வழங்கப்படுகிறது.
வசிஷ்டர் உலக நலனுக்காக தவம் செய்ய முன்வந்தார். அப்போது குபேரன், தாமரை பீடத்தில் எழுந்தருளிய சிவபெருமானை வணங்கி பொன் மாரி பொழிந்தார். இதனை நினைவுறுத்தும் வகையில், தாமரையில் எழுந்தருளியுள்ள குபேரலிங்கத்தை ஆலயத்தில் தரிசிக்கலாம்.
கோவில் அமைப்பு :
மூலவரான தான்தோன்றீஸ்வரர் சுயம்புலிங்கமாக கிழக்குநோக்கி காட்சி தருகிறார். இவரை வணங்கினால் கல்வி, செல்வம், உத்தியோக உயர்வு கிடைக்கும் என்பது பக்தர்கள் நம்பிக்கை. ஆண்டுதோறும் சித்திரை 3-ந் தேதி முதல் 10-ந் தேதி வரை, சூரியன் தனது ஒளிக்கதிர்களால் மூலவரை வழிபடுவது சிறப்புக்குரியது. அம்பாள் ‘அறம் வளர்த்த நாயகி’ என்ற பெயரில் ஈசனின் சன்னிதிக்கு இடதுபுறம் தனிச்சன்னிதியில் வீற்றிருக்கிறார். மா, பலா, இலுப்பை மூன்றும் இணைந்த அதிசய மரம் இங்கு தல விருட்சமாக இருக்கிறது. தீர்த்தம் வசிஷ்ட நதி.
இந்த ஆலயம் 97 அடி உயர ராஜகோபுரத்துடன் கம்பீரமாக காட்சியளிக்கிறது. கோவிலின் முன்பகுதியில் உள்ள பதினாறு கால் மண்டபத்தில், யாழி மற்றும் குதிரைவீரன் சிற்பங்கள் கலை நுணுக்கத்துடன் அழகாக செதுக்கப்பட்டுள்ளன. மேலும் பஞ்சபூத லிங்கங்கள், அறுபத்து மூவர், குபேரலிங்கம், தட்சிணாமூர்த்தி, சகஸ்ரலிங்கம், ஆறுமுகசாமி, கஜலட்சுமி, ஜேஷ்டாதேவி, துர்க்கை, பிச்சாடனர், காலபைரவர் போன்ற சன்னிதிகளும் உள்ளன. வன்னி மரத்தடியில் நவக்கிரகங்கள் வீற்றிருக்கின்றன. சனீஸ்வரர் காகம் வாகனத்தில் ஒற்றைக்காலுடன் நின்றபடி காட்சி தருவது சிறப்பம்சமாகும்.
இங்கு தமிழ் புத்தாண்டு, சித்ரா பவுர்ணமி, திருவாதிரை, பங்குனி உத்திரம், ஆடிப்பெருக்கு, ஆடி அமாவாசை, ஆருத்ரா தரிசனம், சிவராத்திரி, நவராத்திரி போன்ற விழாக்கள் சிறப்பாக கொண்டாடப்படுகிறது.
இந்த ஆலயம் தினமும் காலை 6 மணி முதல் பகல் 1 மணி வரையும், மாலை 4.30 மணி முதல் இரவு 8 மணி வரையும் பக்தர்கள் தரிசனம் செய்வதற்காக திறந் திருக்கும்.

கல்யாண விநாயகர் :
இந்தக் கோவிலில் வலம்புரி விநாயகர், இடம்புரி விநாயகர் என இரட்டை விநாயகர்கள் உள்ளனர். இவரை கல்யாண விநாயகர்கள் என்று அழைக்கிறார்கள். சங்கடஹர சதுர்த்தியின் போது இந்த இரட்டை விநாயகரை வழிபட்டு அபிஷேகம், அர்ச்சனை செய்து அருகு அல்லது வெள்ளெருக்கு மாலை அணிவித்தால் விரைவில் திருமண பாக்கியம் கிடைக்கும். இந்த விநாயகர் சன்னிதி முன்பாக திருமணங்கள் நடைபெறும். இந்த தலத்தில் வசிஷ்டரும், அருந்ததியும் நேரடியாக இருந்து ஆசீர்வதிப்பதால், இங்கு நடக்கும் திருமணங்களில் அம்மி மிதித்து, அருந்ததி பார்ப்பது கிடையாது.
உளுந்தாக மாறிய மிளகு :
முன்னொரு காலத்தில், இந்தப் பகுதியில் மாணிக்கம் செட்டியார் என்பவர் வசித்து வந்தார். மிளகு வியாபாரியான இவர் மிளகு செட்டியார் என்றே அழைக்கப்பட்டார். அவர் தினமும் மிளகு மூட்டைகளை மாட்டு வண்டியில் ஏற்றிச்சென்று சந்தையில் விற்று வருவார். ஒரு நாள் களைப்பு காரணமாக, அடர்ந்த காட்டுப் பகுதியில் தங்கினார். அப்போது சமையல் செய்ய, சுண்டைக்காய்களை ஒரு கல்லில் நசுக்கும்போது ‘எனக்கு கல்லடி பட்டு தலை வலிக்கிறது. உன் மிளகை அரைத்து பற்றுப்போடு’ என்று ஒரு குரல் கேட்டது. இதனால் பயந்துபோன அவர் ‘என்னிடம் உளுந்துதான் இருக்கிறது’ என்று கூறியபடி, அங்கிருந்து அவசரமாக ஊருக்கு திரும்பினார். வீட்டிற்கு சென்றதும் மிளகு மூட்டைகளை திறந்து பார்த்தபோது அதிர்ச்சி.. மிளகு முழுவதும் உளுந்தாக மாறி இருந்தது.
பதறிப்போன அந்த வியாபாரி அசரீரி ஒலித்த இடத்திற்குச் சென்று இறைவனை வேண்டினார். அப்போது, ‘நீ சுண்டைக்காய் நசுக்கிய இடத்து மண்ணை எடுத்து, உளுந்தின் மீது தூவு’ என்று குரல் ஒலித்தது. அதன்படியே செய்ய, உளுந்து மீண்டும் மிளகாக மாறியது. இதையடுத்து அந்த வியாபாரி தான் சுண்டைக்காய் நசுக்கிய கல்லை பார்த்தபோது, அது சுயம்புலிங்கம் என தெரியவந்தது. இதையடுத்து மிளகு செட்டியார் அந்தப் பகுதியில் இந்தக் கோவிலை கட்டியதாக தல வரலாறு தெரிவிக்கிறது.
அமைவிடம் :
சேலம் மாநகரில் இருந்து 30 கிலோமீட்டர் தூரத்திலும், வாழப்பாடியில் இருந்து வடக்கில் 6 கிலோமீட்டர் தூரத்திலும், அயோத்தியாப்பட்டணத்தில் இருந்து கிழக்கே 18 கிலோமீட்டர் தூரத்திலும் உள்ள பேளூரில் இந்த ஆலயம் அமைந்துள்ளது.

சோழநாட்டு திருத்தலங்களில் தேவாரப் பாடல் பெற்ற தலங்களில் திருப்பாம்புரம் பாம்புரேஸ்வரர் கோவில் முக்கியமானது. இந்த கோவிலின் வரலாற்றை விரிவாக பார்க்கலாம்.
10-4-2017 அன்று கோவில் கும்பாபிஷேகம்
சோழநாட்டு திருத்தலங்களில் தேவாரப் பாடல் பெற்ற தலங்களில் திருப்பாம்புரம் பாம்புரேஸ்வரர் கோவில் முக்கியமானது. இக்கோவில் ராகு, கேது தோஷ நிவர்த்தி பரிகார தலமாகும். ஆதிசேஷன் தனது தோஷம் நீங்க வழிபட்டதால் இத்தலம் பாம்பு+புரம்= திருப்பாம்புரம் என்றானது. அப்பர், சம்பந்தர், சுந்தரர் ஆகிய மூவரால் பாடல் பெற்றது.
இத்தல இறைவன் சன்னிதி, மகா மண்டபம், அர்த்த மண்டபம், கருவறை ஆகிய மூன்று பகுதிகளை கொண்டது. மகா மண்டபத்தில் தென்புறம் சோமாஸ்கந்தருக்கு தனி இடம் உள்ளது. இம் மண்டபத்தில் நடராஜரும் நடனம் புரிகிறார். இங்குள்ள முருகன், வள்ளி- தெய்வானையுடன் கையில் வேல் தாங்கி இடது காலால் மயிலை மிதித்தவாறு காட்சி தருகிறார்.
கருவறையில் பாம்புரேஸ்வரர் லிங்க வடிவில் எழுந்தருளியுள்ளார். ஆதிசேஷன் (உற்சவர்) ஈசனை தொழுத வண்ணம் கருவறையில் எழுந்தருளியுள்ளார். கருவறையை சுற்றிலும் அகழி உள்ளது. இறைவன் சன்னிதிக்கு இடதுபுறமாக அம்மன் ‘வண்டுசேர் குழலி’யின் சன்னிதி அமைந்துள்ளது. அம்மை ஒரு கையில் தாமரையும், ஒரு கையில் ருத்திராட்ச மாலையும் கொண்டு வரத ஹஸ்தம், அபய ஹஸ்தம் விளங்க தோற்றம் அளிக்கிறார்.
ராகுவும், கேதுவும் ஈசனை நெஞ்சில் நிறுத்தி ஏக சரீரமாகி அருள் பெற்றதாக புராண வரலாறு. ராகுவும், கேதுவும் கோவிலில் ஈசானிய மூலையில் தனி சன்னிதியில் எழுந்தருளியுள்ளனர். சிவனுக்கும், அம்பாளுக்கும் ராகு காலத்தில் அர்ச்சனை, அபிஷேகம் செய்து வணங்குபவர்களுக்கு பாவங்கள் நீங்குவதாக ஐதீகம். மேலும் நினைத்த காரியம் நிறைவேறும்.
தல வரலாறு :
முன்னொரு காலத்தில் ஆதிசேஷனுக்கும், வாயு பகவானுக்கும் தங்களில் யார் பெரியவர் என்ற போட்டி ஏற்பட்டது. வாயு பகவான் மலைகளை எல்லாம் தம் வலிமையால் புரட்டி வீசினார். ஆதிசேஷன் அதை தனது வலிமையால் காத்து நின்றார். இருவரும் சமபலம் காட்டி நின்றனர். திடீரென்று வாயு பகவான் உயிர் களுக்கு வழங்கும் பிராண வாயுவை நிறுத்தி விட உயிர்கள் அனைத்தும் சோர்ந்தன. இந்திரன் மற்றும் தேவர்கள் வேண்டுகோளுக்கு இணங்க ஆதிசேஷன் போரில் இருந்து ஒதுங்கி நின்றார். வாயு பகவான் வெற்றிக் களிப்புடன் மலைகளை புரட்டி வீசினார்.
இதனால் கோபமுற்ற சிவபெருமான், வாயு பகவானையும், ஆதிசேஷனையும் பேயுருவாக போகும் படி சபித்தார். இருவரும் தங்கள் குற்றங்களை பொறுத்தருளும்படி வேண்டி நின்றனர். வாயு பகவானை வைகை நதிக்கு வடக்கிலும், மதுரைக்கு கிழக்கிலும் பூஜை செய்து வரவும், ஆதிசேஷனை திருப்பாம்புரத்தில் 12 ஆண்டுகள் தம்மை பூஜை செய்து வரவ உத்தரவிட்டார். அதன்படி ஆதிசேஷன் திருப்பாம்புரம் வந்து தீர்த்தம் ஏற்படுத்தி வழிபட்டு சாப விமோசனம் பெற்றதாக தல புராணம் கூறுகிறது.
கயிலாயத்தில் ஒரு முறை விநாயகர் சிவபெருமானை வழிபடும் போது இறைவன் கழுத்தில் இருந்த பாம்பு, விநாயகர் தன்னை வணங்குவதாக நினைத்து கர்வம் கொண்டது. இதை ஞான திருஷ்டியால் உணர்ந்த சிவன், நாக இனம் முழுவதும் தேவசக்தியை இழக்கும் படி செய்தார். அதனால் உலகைத்தாங்கும் ஆதி சேஷனும், ராகு, கேது மற்ற நாக இனங்களும் தங்கள் சக்தியை இழந்து துன்பப்பட்டன.

நாக இனங்கள் சாப விமோசனம் வேண்டி ஈசனை துதிக்க இறைவனும் மனம் இரங்கி பூவுலகில் சேஷபுரி என்ற திருப்பாம்புரத்தில் சிவராத்திரி அன்று தன்னை வழிபட்டால் சாப விமோசனம் அடையலாம் என அருளினார். அதன்படி ராகு, கேது மற்றும் ஆதிசேஷன், வாசுகி, தட்சன், கார்க்கோடகன், சங்க பாலன், குளிகன் பத்மன், மகா பத்மன் ஆகிய அஷ்டமாநாகங்கள் திருப்பாம்புரம் வந்தன. அங்கு ஆல மர விழுதை நாராக கொண்டு அத்திப்பூவை அதில் தொடுத்து பூஜை செய்து வந்தன.
மகா சிவராத்திரி அன்று ஆதிசேஷன் தலைமையில் நாகங்கள் முதல் ஜாமத்தில் கும்பகோணம் நாகேஸ்வரரையும், இரண்டாம் ஜாமத்தில் திரு நாகேஸ்வரம் நாகேஸ்வரரையும், மூன்றாம் ஜாமத்தில் திருப்பாம்புரம் பாம்புரேஸ்வரரையும், நான்காம் ஜாமத்தில் நாகூர் நாகநாதரையும் வழிபட்டு சாப விமோசனம் பெற்றன.
பரிகார முறை :
ராகு, கேது தோஷ நிவர்த்தி பரிகாரம் செய்து கொள்ள விரும்புபவர்கள் செவ்வாய், வெள்ளி, ஞாயிற்றுக்கிழமைகளில் ராகு காலத்தில் கோவிலுக்கு வந்து ஆதிசேஷன் தீர்த்தத்தில் நீராடி, விளக்கு ஏற்ற வேண்டும். சுவாமி, அம்பாளுக்கு தங்கள் பெயரில் அர்ச்சனை செய்து கொள்ள வேண்டும்.
ராகு, கேது சன்னிதியில் அமர்ந்து பூவும், குங்குமமும் வைத்து அர்ச்சனை செய்து கொள்ள வேண்டும். பின்னர் அதனை வீட்டுக்கு எடுத்து வந்து பூஜை அறையில் வைத்து 48 நாட்கள் பூஜை செய்ய வேண்டும். பிரார்த்தனை நிறைவேறியதும் மஞ்சள் துணியில் வைத்து எடுத்து வந்து அதை கோவில் உண்டியலில் போட வேண்டும்.
தினமும் கோவிலில் 4 கால பூஜை நடைபெறும். புதன்கிழமை காலை 6.30 மணி முதல் மதியம் 1.30 மணி வரையிலும், வியாழக்கிழமை மதியம் 1.30 மணி முதல் மாலை 3 மணி வரையிலும் பூஜை நடைபெறும். மாசிமகம், ராகு, கேது பெயர்ச்சி, மகா சிவராத்திரி போன்ற விழாக்கள் நடைபெறும்.
அமைவிடம் :
திருவாரூர் மாவட்டம் குடவாசல் அருகே அமைந்துள்ள திருப்பாம்புரத்துக்கு சென்னையில் இருந்து வருபவர்கள் மயிலாடுதுறை வரை ரெயிலில் வந்து அங்கிருந்து பஸ், காரில் கோவிலுக்கு வரலாம். திருவாரூர் செல்லும் வழியில் கொல்லுமாங்குடி சாலையில் திருநாகேஸ்வரம், திரு நீலக்குடி வழியாக பயணித்தால் திருப்பாம்புரத்தை அடையலாம்.

மயிலாப்பூரில் ஏழு சிவாலயங்கள் அருகருகே அமைந்திருக்கின்றன. இந்த 7 சிவாலயங்களையும் தரிசித்தால் முக்தி பேறு கிடைக்கும் என்பது நம்பிக்கை.
‘மயிலையே கயிலை.. கயிலையே மயிலை’ என்ற சிறப்பு பெற்றுள்ளது, மயிலாபுரி என அழைக்கப்பட்ட மயிலாப்பூர் திருத்தலமாகும். சென்னையின் மையப்பகுதியாக இது திகழ்கிறது. மயிலாப்பூரில் ஏழு சிவாலயங்கள் அருகருகே அமைந்திருக்கின்றன.
அவை: கபாலீசுவரர் ஆலயம், வெள்ளஸ்வரர் ஆலயம், வாலீஸ்வரர் ஆலயம், காரணீஸ்வரர் ஆலயம், மல்லீஸ்வரர் ஆலயம், விருபாட்சீஸ்வரர் ஆலயம், தீர்த்தபாலீஸ்வரர் ஆலயம் ஆகியவையாகும். இந்த 7 சிவாலயங்களையும் தரிசித்தால் முக்தி பேறு கிடைக்கும் என்பது நம்பிக்கை.
இந்த 7 சிவாலயங்களைப் பற்றியும் சிறிய குறிப்புகளாக இங்கே பார்க்கலாம்.
கபாலீஸ்வரர் ஆலயம் :

மயிலையின் மத்திய பகுதியில் இந்த ஆலயம் அமைந்துள்ளது. இந்த ஆலயம் முன்பு கடற்கரையில் இருந்ததாக கல்வெட்டின் மூலம் அறிய முடிகிறது.
பிரம்மா, ஈஸ்வரருக்கு சரியான மரியாதை செய்யாததால் ஈஸ்வரர் பிரம்மனின் ஒரு தலையைக் கொய்தார். அந்த கபாலம் கையில் ஒட்டியதால் கபாலீஸ்வரர் என்ற திருநாமம் வந்ததாக கூறப்படுகிறது. பிறகு பிரம்மா இந்த தலத்தில் ஒரு சிவலிங்கத்தை பிரதிஷ்டை செய்து வணங்கி ஈசனை மகிழ்வித்தார். பார்வதி தேவி, மயில் வடிவில் இங்கு ஈசனை பூஜித்ததால் மயிலாபுரி என்ற பெயர் கொண்ட இத்தலம், தற்போது மயிலாப்பூர் என அழைக்கப்படுகிறது.
ஏழாவது நூற்றாண்டில் பல்லவ மன்னர்கள் நிர்மாணம் செய்த ஆலயம் இது. கடற்கரை ஆலயம் போர்த்துக்கீசியரால் அழிக்கப்பட்ட பிறகு 16-வது நூற்றாண்டு முடிவில் தற்போதுள்ள ஆலயம் கட்டப்பட்டதாக குறிப்புகள் தெரிவிக்கின்றன. 120 அடி உயர 7 நிலை ராஜகோபுரம் கொண்டது இந்த ஆலயம்.
திருஞான சம்பந்தரால் பாடல் பெற்ற திருத்தலம். சிவனேசன் என்ற சிவபக்தரின் மகள் பூம்பாவையை, திருஞானசம்பந்தர் உயிர்ப்பித்த தலம் இது. சிங்கார வேலர் சன்னிதிக்கு கொடிமர அமைப்பு இருப்பது ஒரு சிறப்பான அம்சமாகும். ஒரு குறிப்பிட்ட இடத்திலிருந்து பார்த்தால் ஒரு சேர எல்லா விமானங்களையும் தரிசிக்கலாம்.
இறைவனின் திருநாமம் கபாலீஸ்வரர், இறைவியின் திருநாமம் கற்பகாம்பாள்.
ஆலயம் காலை 5.30 மணி முதல் பகல் 12 மணி வரையிலும், மாலை 4 மணி முதல் இரவு 9 மணி வரையிலும் பக்தர்களின் தரிசனத்திற்காக திறந்திருக்கும்.
வெள்ளஸ்வரர் ஆலயம் :

கபாலீஸ்வரர் ஆலயத்திற்கு அருகிலும், தெற்கு மாட வீதியின் பிரதான சாலையிலும் வெள்ளஸ்வரர் கோவில் இருக்கிறது. வெள்ளி என்பது சுக்ரனைக் குறிக்கும். சுக்ரனின் பிரதான தலமானதால் இவ்வாலயம் (வெள்ளி + ஈஸ்வரர்) வெள்ளஸ்வரர் ஆலயமென பெயர் பெற்று விளங்குகிறது. அசுர குல குருவான சுக்ராச்சாரியார் இந்த ஆலய ஈசனை வழிபட்டு, இழந்த தன்னுடைய கண் பார்வையை அடைந்தார் என்கிறது தல வரலாறு.
இறைவனின் திருநாமம் வெள்ளஸ்வரர், இறைவியின் திருநாமம் காமாட்சி. இவ்வாலயத்தில் ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் ராகு காலத்தில் சரபேஸ்வரருக்கு சிறப்பு பூஜைகள் நடைபெறுகின்றன. பக்தர்கள் கண் நோய் தீர, சுக்ரேஸ்வரருக்கு சிறப்பு பூஜைகள் செய்கின்றனர்.
கோவில் ராஜகோபுரம் சுதைச் சிற்பங்களுடன் சிறப்பாக வடிவமைக்கப்பட்டுள்ளது.
காலை 6 மணி முதல் 11 மணி வரையிலும், மாலை 5 மணி முதல் இரவு 8.30 மணி வரையிலும் ஆலயம் திறந் திருக்கும்.
விருபாட்சீஸ்வரர் ஆலயம் :

காரணீஸ்வரர் ஆலயத்திற்கு அருகில்தான் இந்த விருபாட்சீஸ்வரர் ஆலயமும் அமைந்திருக்கிறது. ஈசனின் மூன்றாவது கண், இயற்கை ஓட்டத்திற்கு எதிர்மாறாக அமைந்ததாக சொல்லப்படுகிறது. நாம் இவ்வுலகில் ஈடுபட்டு செய்யும் காரியங்களுக்கு ஏற்ப, கர்ம பலன் அமைகிறது. மனதையும் எண்ண ஓட்டங்களையும் தவறான பாதையில் செல்லாதவாறு, சரணடைந்தவர்களை காப்பவரே விருபாட்சீஸ்வரர் ஆவார்.
இறைவனின் திருநாமம் விருபாட்சீஸ்வரர், இறைவியின் திருநாமம் விசாலாட்சி. ஆலயம் தினமும் காலை 6.30 மணி முதல் 11 மணி வரையிலும், மாலை 4.30 மணி முதல் இரவு 8.30 மணி வரையிலும் திறந் திருக்கும்.
காரணீஸ்வரர் ஆலயம் :

மயிலையில் கச்சேரி சாலையில் செல்கையில், பஜார் சாலையின் உள்ளே நடு மையத்தில் பிரதான சாலையில் காரணீஸ்வரர் ஆலயம் அமைந்துள்ளது.
எல்லாவற்றிற்கும் மூல காரணமாகவும், உலகம் இயங்குவதற்கு காரணமாகவும் இருந்து ஈஸ்வரன் இந்த ஆலயத்தில் அருள்பாலிக்கிறார். எனவேதான் (காரணம்+ ஈஸ்வரன்) காரணீஸ்வரர் என்று பெயர் ஏற்பட்டது.
பல நூற்றாண்டுகளை கடந்த பழமையான ஆலயம். இங்குள்ள சிவலிங்கத் திருமேனி, திருக்கடையூர் மற்றும் காலஹஸ்தி தலங்களில் உள்ள சதுர வடிவ லிங்கத் திருமேனி போல் காட்சி தருகிறது.
நோய் நொடிகள் தீர, வாழ்வில் வளம் பெருக பக்தர்கள் இத்தல இறைவனை வணங்கி பலனடைகின்றனர். இவ்வாலயம் வந்து இறைவனை வழிபட்டால் மன அமைதி கிடைப்பதாக பக்தர்கள் கூறுகின்றனர்.
இறைவனின் திருநாமம் காரணீஸ்வரர், இறைவியின் திருநாமம் சொர்ணலதாம்பிகை (பொற்கொடி அம்பிகை) என்பதாகும். காலை 6.30 மணி முதல் 11 மணி வரையிலும், மாலை 4.30 மணி முதல் இரவு 8.30 மணி வரையிலும் ஆலயம் திறந்திருக்கும்.
தீர்த்தபாலீஸ்வரர் ஆலயம் :

மயிலையிலிருந்து திருவல்லிக்கேணி செல்லும் வழியில் நடேசன் சாலையில் தீர்த்தபாலீஸ்வரர் ஆலயம் உள்ளது. மாசிமாத தீர்த்த நீராட்ட விழாவின் போது கடலுக்குள் ஏழு சிவாலயங்களில் இருந்து எழுந்தருளும் சுவாமிகளில், தீர்த்தபாலீஸ்வரருக்குத்தான் முதல் தீர்த்த வைபவம் நடைபெறுவதால், இந்த ஈஸ்வரருக்கு தீர்த்தபாலீஸ்வரர் என்ற திருநாமம் ஏற்பட்டது.
அகஸ்தியர் தனக்கு ஏற்பட்ட நோய் நீங்குவதற்காக, இந்த ஆலயத்திற்கு எழுந்தருளி இறைவன், இறைவியை வணங்கினார் என்பது தல வரலாறு. இறைவனின் திருநாமம் தீர்த்தபாலீஸ்வரர், இறைவியின் திருநாமம் திரிபுரசுந்தரி.
ஆலயம் திறந்திருக்கும் நேரங்கள்: காலை 6.30 மணி முதல் பகல் 11 மணி வரையிலும், மாலை 5.30 மணி முதல் இரவு 9 மணி வரை.
வாலீஸ்வரர் ஆலயம் :

கோலவிழியம்மன் ஆலயத்திற்கு அருகில் வாலீஸ்வரர் ஆலயம் இருக்கிறது. மிகவும் சிறப்பு வாய்ந்த இந்தத் தலம், வாலி வழிபட்ட தலமாகும்.
பராக்கிரமசாலியான வாலி, தனது தாய் சொற்படி இங்கு ஈசனை வணங்கி வந்தார். ஈசன், வாலியின் பக்தியில் மகிழ்ந்து, வரங்கள் நல்கியதோடு இனிமேல் இந்த லிங்கத்திருமேனி வாலீஸ்வரர் என்ற திருநாமத்துடன் அழைக்கப்படுமென கூறி அருள்புரிந்தார்.
மிகவும் பழமை வாய்ந்த ஆலயம் இது. கருவறை மண்டபம் கல் கட்டிடமாக கட்டப்பட்டுள்ளது. இவ்வாலயத்தில் விசேஷ பீடத்தில் விநாயகர் வீற்றிருக்கிறார். இந்த விசேஷ அமைப்பு இந்த ஆலயத்தின் சிறப்பான ஒன்றாக விளங்குகிறது. பஞ்சலிங்க சன்னிதியின் விமானம், வடக்கே உள்ள காசி ஆலய கோபுரத்தை ஒத்துள்ளது.
பஞ்சலிங்கத்திற்கு மாதுளம் பழ முத்துக்களால் அர்ச்சனை செய்வது, இந்த ஆலயத்தில் சிறப்பான வழிபாடுகளில் ஒன்றாகும். பிரகார சுற்றுச் சுவரில் பல்லியின் உருவ புடைப்புச் சிற்பத்தை காணலாம். இதனை பக்தர்கள் மஞ்சள் சந்தனம் பூசி வழிபடுகின்றனர்.
இறைவனின் திருநாமம் வாலீஸ்வரர், இறைவியின் திருநாமம் பெரியநாயகி.
ஆலயம் தினமும் காலை 6 மணி முதல் பகல் 12 மணி வரையிலும், மாலை 4 மணி முதல் இரவு 9 மணி வரையிலும் திறந்திருக்கும்.
மல்லீஸ்வரர் ஆலயம் :

காரணீஸ்வரர் ஆலயத்திற்கு அருகில் இந்த ஆலயம் இருக்கிறது. முன்னொரு காலத்தில் மல்லிகை மலர்கள் நிறைந்த இவ்வனத்தில், ஈசன் எழுந்தருளியிருந்ததால் இத்தல இறைவனுக்கு மல்லீஸ்வரர் என பெயர் ஏற்பட்டது.
வேம்பு மற்றும் அஸ்வத (அரசு) மரம் இணைந்து ஒரு மரமாக வளர்ந்துள்ளது ஆலயச் சிறப்பாகும். இருப்பினும் இந்த ஆலயத்தின் தல மரம் மல்லிகை மரமே. பிப்ரவரி மாதக் கடைசியில் தொடர்ச்சியாக 15 நாட்கள், இத்தல இறைவனின் மீது சூரிய கதிர்கள் விழுவது கண்கொள்ளாக் காட்சியாகும்.
இறைவனின் திருநாமம், மல்லீஸ்வரர், இறைவியின் திருநாமம் மரகதாம்பாள். ஆலயம் திறந் திருக்கும் நேரங்கள்: காலை 6 மணி முதல் 11.30 மணி வரையிலும், மாலை 4.30 மணி முதல் இரவு 8.30 மணி வரை.

வேலூர் மாவட்டம் காவேரிபாக்கத்தை அடுத்த திருப்பாற்கடல் கிராமத்தில் உள்ளது பிரசன்ன வெங்கடேச பெருமாள் கோவில். இந்த கோவில் வரலாற்றை பார்க்கலாம்.
வேலூர் மாவட்டம் காவேரிபாக்கத்தை அடுத்த திருப்பாற்கடல் கிராமத்தில் உள்ளது பிரசன்ன வெங்கடேச பெருமாள் கோவில். சைவம் மற்றும் வைணவத்தை ஒருங்கிணைக்கும் ஆலயமாக இது விளங்குகிறது. இந்த ஆலயத்தில் எங்கும் இல்லாத புதுமையாக சிவலிங்கம் இருக்கும் ஆவுடையாரின் மீது பெருமாள் நின்ற கோலத்தில் காட்சி தருகிறார். இந்தத் திருத்தலம் 108 திவ்ய தேசங்களில், 107-வது தலமாக திகழ்கிறது.
புண்டரீக மகரிஷி ஒவ்வொரு ஏகாதசி அன்றும் பெருமாளை தரிசித்த பிறகுதான் உணவு உண்பார். ஒரு முறை ஏகாதசி நாளில் மகரிஷி என்றும் வழிபடும் ஆலயத்திற்கு செல்ல தாமதமாகிவிட்டது. எனவே அருகில் இருந்த அவணி நாராயண சதுர்வேதிமங்கலம் என்ற கிராமத்தில் இருந்த ஆலயத்திற்கு சென்றார். ஆனால் அந்த ஆலயத்தில் சிவலிங்கம் இருந்தது. பெருமாளை வழிபட்டு விரதம் முடிக்க வந்த மகரிஷி வருத்தத்தில் ஆழ்ந்தார். ஆலயத்தை விட்டு வெளியேறினார்.
அவர் முகத்தில் இருந்த வருத்தத்தை பார்த்த ஒரு முதியவர், அதுபற்றி விசாரித்தார். மகரிஷியும், தான் பெருமாளை தரிசிக்க வந்தது பற்றியும், உள்ளே சிவலிங்கம் இருப்பது பற்றியும் கூறியதும், பெருமாளை வழிபட்டு விரதத்தை முடிக்க முடியாத வருத்தத்தை வெளிப்படுத்தினார்.
உடனே அந்த முதியவர், ‘உள்ளே பெருமாள் தானே இருக்கிறார். நீங்கள் சரியாக கவனிக்கவில்லையா?’ என்றபடி மகரிஷியை மீண்டும் ஆலயத்திற்குள் அழைத்துச் சென்றார்.
கருவறையில் இப்போது ஆவுடையாரின் மீது நின்ற கோலத்தில் வெங்கடேசப் பெருமாள் காட்சி தந்தார். இதைக்கண்டு மகிழ்ந்த மகரிஷி, தன் அருகில் நின்ற முதியவரை தேடியபோது அவரைக் காணவில்லை. அப்போது ஒரு அசரீரி ஒலித்தது. ‘மகரிஷியே! சிவனும், விஷ்ணுவும் வேறு வேறு அல்ல. பேதம் எதுவும் தேவையில்லை. திருப்பாற்கடலில் உள்ள என்னை வழிபட்ட பலன் இத்தலத்திற்கு வந்து வழிபட்டாலே கிடைக்கும். இந்த திருத்தலம் இனி திருப்பாற்கடல் என்றே அழைக்கப்படும்’ என்று அருளினார். அதைத் தொடர்ந்து மகிரிஷிக்கு அமர்ந்த கோலத்திலும், கிடந்த கோலத்திலும் பெருமாள் காட்சி கொடுத்தார்.

புண்டரீக மகரிஷிக்காக பிரசன்னம் ஆனதால், இத்தல இறைவன் ‘பிரசன்ன வெங்கடேசப் பெருமாள்’ என்று அழைக்கப்படுகிறார். ஆலயத்தின் தல விருட்சம் வில்வமும், துளசியும் ஆகும். ஆலயத்தில் பாமா- ருக்மணியுடன் நவநீதகிருஷ்ணன், பக்த ஆஞ்சநேயர், ஒன்பது நாக தேவதைகள், அஷ்ட நாக கருடாழ்வார் ஆகியோர் சன்னிதிகள் உள்ளன.
இந்த ஆலயம் திருவோண நட்சத்திரக்காரர்களுக்கு பரிகார தலமாக உள்ளது. ஒரு முறை, சந்திர பகவான் பெற்ற சாபத்தினால் அவரது ஒளியும், அவரது கலைகளும் மறையத் தொடங்கின. இதைக் கண்டு வேதனையடைந்த சந்திரனின் மனைவிகளில் ஒருவரான திருவோண நட்சத்திர தேவி, இந்த தலம் வந்து பெருமாளை வணங்கி, தவம் செய்தாள். இதையடுத்து பெருமாள் நேரில் காட்சி தந்து, சந்திர பகவானுக்கு சாபவிமோசனம் அளித்து அருள்புரிந்தார். அது முதற்கொண்டு இந்த தலம், திருவோண நட்சத்திரக்காரர்களுக்கு பரிகார தலமாக உள்ளது. இங்கு தரிசிப்போருக்கு நட்சத்திர தோஷங்கள், செவ்வாய் தோஷங்கள் நிவர்த்தியாகும் என்பது ஐதீகம்.
இக்கோவிலில் உள்ள பெருமாளை ஏகாதசி, திருவோணம், பிரதோஷம், சனிபிரதோஷம், பவுர்ணமி, அமாவாசை ஆகிய திதிகளில் தரிசனம் செய்வது நலம் பயக்கும். மேற்கண்ட நாட்களில் தீபத்திற்கு நல்லெண்ணெய் அல்லது நெய்யை தானமாக வழங்கலாம். வில்வம், துளசியால் இறைவனை அர்ச்சனை செய்து வழிபட்டால் பாவங்கள் நீங்கும். நினைத்த காரியம் நிறைவேறும் என்பது தல மகிமையாகும். மகாளய அமாவாசை அன்று இங்கு முன்னோர்களுக்கு திதி கொடுத்தால், முன்னோர்களால் ஏற்பட்ட சாபங்கள் நிவர்த்தி ஆகும். அன்று கோவிலுக்கு பச்சரிசி தானமாக அளிப்பது விசேஷம்.
இங்கு அலமேலுமங்கை தாயார் அமர்ந்த நிலையில் ஸ்ரீசக்கரத்தில் வீற்றிருக்கிறார். திருமணமாகாதவர்கள் இந்த தாயாருக்கு 108 மஞ்சளை மாலையாக கட்டி சாத்துவதுடன், நெய் தீபம் ஏற்றி 108 தாமரை அல்லது வில்வத்தினால் அர்ச்சனை செய்து, 108 முறை வலம் வந்து தாயாரை வழிபட்டால் விரைவில் திருமணம் நடைபெறும். தாயார் சன்னிதி படியில் நெய்யால் மெழுகி, சர்க்கரையால் இருதயகமல கோலத்தை வரைந்து, 1008 செந்தாமரை பூவால் சகஸ்ரராம அர்ச்சனை செய்வதும், அங்கப்பிரதட்சணம் செய்தால் புத்திர பாக்கியத்தை அடையலாம் என்பது பக்தர் களின் நம்பிக்கை. இந்த ஆலயம் தினமும் காலை 7.30 மணி முதல் பகல் 12 மணி வரையும், மாலை 4.30 மணி முதல் இரவு 7.30 மணி வரையும் திறந்திருக்கும்.
வேலூரில் இருந்து சென்னை செல்லும் நெடுஞ்சாலையில் காவேரிப்பாக்கத்தின் தெற்கே மூன்று கிலோமீட்டர் தூரத்தில் திருப்பாற்கடல் திருத்தலம் அமைந்துள்ளது. காஞ்சீபுரத்தில் இருந்து வருபவர்கள் வேலூர் செல்லும் பஸ்சில் ஏறி, காவேரிபாக்கத்தில் இறங்கி ஆட்டோவில் கோவிலுக்கு போகலாம்.

திருவனந்தபுரம் பத்மநாப சுவாமி கோவிலின் வடமேற்கு திசையில், பார்வதி புத்தனாற்றின் கரையில் அமைந்துள்ளது கரிக்ககம் சாமுண்டி கோவில். இந்த கோவிலின் வரலாற்றை பார்க்கலாம்.
பாண்டிய மன்னர்களும், சோழ மன்னர்களும் போட்டியிட்டு பல திருக்கோவில்களை அமைத்து வழிபட்டு வந்தனர். பாண்டிய மன்னர்கள் சிற்ப கலைஞர்களை பல்வேறு இடங் களில் இருந்து அழைத்து வந்து, பொன்னையும், பொருளையும் வாரி வழங்கி திருக்கோவில் களையும், அதில் கோபுர சிற்பங்களையும் வியக்கும் வகையில் அமைத்தனர்.
சேர நாடு மன்னனும், பாண்டிய நாட்டு மன்னர்களின் துணை கொண்டு சேர நாட்டில் சில சிவன் திருக்கோவில்களை அமைத்து வழிபட்டார். இந்த நிலையில் பிற்காலத்தில் மகாவிஷ்ணுவின் அவதாரம் என்று கூறப்படும் பரசுராமர் 108 சிவாலயங்களையும், சக்தி சொரூபிணியான பரமேஸ்வரியின் 108 பகவதி கோவில்களையும் அமைத்தார்.
பிற்கால சேர நாடு பரசுராமரின் கேரளநாடு என்று அழைக்கப்பட்டது. பிற்கால சேரர்கள் சிவன் கோவில்களுடன், அன்னை பராசக்தியை பகவதியாக, அம்மனாக, சாமுண்டி தேவியாக பல இடங்களில் நிறுவி, அந்த அம்மன்களை இடத்தின் பெயருடன் சேர்த்து அழைத்து வழிபட்டு வந்தனர்.
கரிக்ககத்தம்மன் :
இவ்வாறு கரிக்ககம் என்ற இடத்தில் உருவானதுதான், ‘தேவி கரிக்ககத்தம்மா’ என்று அழைக்கப்படும் கரிக்ககம் சாமுண்டி ஆலயம். சேர மன்னனான அனுஷம் திருநாள் ராமவர்மா காலத்தில் உருவான இந்த ஆலயம், சக்திமிக்க கோவிலாக திகழ்ந்து வருகிறது. இவ்வாலயத்தில் உக்கிர சொரூபிணியாக வீற்றிருக்கும் ரத்த சாமுண்டி அம்மன், சத்தியத்தை நிலை நாட்டும் தெய்வமாக அருள்பாலித்து வருகிறார்.
சேர மன்னன் ஒருவனின் ஆட்சி காலம் நடந்து கொண்டிருந்தது. ஒரு நாள் அரசியின் விலை மதிப்பு மிக்க காதணி ஒன்று காணாமல் போய்விட்டது. அப்போது காவல் பணியில் ஈடுபட்டு காவலர் ஒருவரின் மீது சந்தேகம் கொண்டு, அவனை சிறையில் அடைத்து விட்டனர். சிறையில் அடைக்கப்பட்ட காவலனுக்கு காதலி ஒருத்தி இருந்தாள். அவள் அதே அரண்மனையில் அரசியின் தோழியாக இருந்தாள். அவள் அரசியிடம் ஓடிச் சென்று, ‘என் காதலருக்கு பதிலாக என்னை சிறையில் அடைத்து விட்டு, அவரை விடுவித்து விடுங்கள்’ என்று கூறினாள்.
காவலனோ, ‘அவளை விட்டு விடுங்கள். நான்தான் குற்றவாளி. என்னை தண்டியுங்கள்’ என்றான்.
காதலர்களை காப்பாற்றிய அம்மன் :
மன்னனுக்கு வியப்பு ஏற்பட்டது. யார் குற்றவாளி என்று கண்டுபிடிக்க முடியாமல் தடுமாறினான். அமைச்சரின் ஆலோசனைப்படி உண்மைக் குற்றவாளியைக் கண்டுபிடிக்க முற்பட்டான். கரிக்ககம் கோவிலில் ரத்த சாமுண்டி சன்னிதானத்தில் சத்தியம் செய்வித்து, உண்மையை கண்டுபிடிக்க முடிவானது. பொய் சத்தியம் செய்பவர்களுக்கு அம்மன் தண்டனை வழங்குவார் என்பது திண்ணம். காவலரும், அவரது காதலியும் ஆலயக் குளத்தில் நீராடி, ஈர உடையுடன் ரத்த சாமுண்டி சன்னிதி முன்பாக வந்து நின்றனர்.

அப்போது அரசியின் துணிகளை சலவை செய்யும் பெண் ஒருத்தி, அங்கு ஓடோடி வந்தாள். சலவைக்குப் போடப்பட்ட துணியில் அரசியின் காதணி இருப்பதைக் கண்டேன். அப்போது விண்ணில் கரிக்ககம் சாமுண்டி தேவியின் வாக்கு ஒலித்தது. அதன்படி இந்த காதணியை உங்களிடம் ஒப்படைக்க வந்தேன். காவலரும், அவரது காதலியும் நிரபராதிகள். அவர்களை விடுவிக்க வேண்டும். இதோ காதணி’ என்று கூறி மன்னனிடம் அதை சமர்ப்பித்தாள்.
மன்னன் தன் தவறுக்கு வருந்தினான். பின் காதணி கிடைத்ததால் மகிழ்ச்சியுற்றான். காவலரையும், அவரது காதலியையும் விடுவித்தான். அரசி தன் இரு காதணிகளையும் தேவிக்கு சமர்ப்பணம் செய்தாள்.
இந்த ஆலயத்தில் ஜாதி, மத வேறுபாடின்றி சில சிக்கலான வழக்குகளுக்கு இங்கு தீர்வு காணப்படுகின்றன. குற்றம் சாட்டியவரும், குற்றவாளியும் தீபச்சுடரில் அடித்து சத்தியம் செய்கிறார்கள். இதன் மூலம் நிச்சயம் உண்மை வெளிப்படும் என்பது அனைவரின் நம்பிக்கையாகும். சாமுண்டிதேவியின் தண்டனைக்கு பயந்தே அனைவரும் உண்மையை ஒப்புக்கொள்வார்கள்.
திருவிதாங்கூர் மன்னனின் படையில் களரிச் சண்டை பயின்ற நிபுணர்களின், களரிக்களமாக இவ்விடம் விளங்கியது. அந்த பெயரே தற்போது மருவி கரிக்ககம் என்று அழைக்கப்படுவதாக கூறப்படுகிறது. திருவனந்தபுரம் பத்மநாப சுவாமி கோவிலின் வடமேற்கு திசையில், பார்வதி புத்தனாற்றின் கரையில் அமைந்துள்ளது கரிக்ககம் சாமுண்டி கோவில்.
சிறுமியாக வந்த அம்பாள் :
வேத விற்பன்னரும், தெய்வீக அருள் பெற்றவருமான ஒரு அந்தணர், பராசக்தியின் தீவிர பக்தனாக இருந்தார். அவர் மந்திர, தந்திரங்களை நன்கு கற்று தேர்ந்திருந்த ஒரு குடும்பத் தலைவரான யோகீஸ்வரன் என்பவரை தன் சீடனாக ஏற்றுக்கொண்டார். அவருக்கு உபதேசமும், அருள்வாக்கும் அருளினார். யோகீஸ்வரனும், தன் குருவைப் போலவே பராசக்தியின் மீது அதிக பக்தி கொண்டிருந்தார். இருவரின் பக்தியை மெச்சிய அம்பிகை, ஒரு நாள் சிறுமி உருவில் இருவர் முன்பாகவும் தோன்றி காட்சியளித்தார்.
யோகீஸ்வரரும், அவரது குருவும் அன்னைக்கு பூலோகத்தில் சிறப்பு மிக்க ஒரு ஆலயத்தை அமைக்க திட்டமிட்டனர். அதற்கான இடம் தேடி கரிக்ககம் என்ற பகுதிக்கு வந்தனர். உடன் சிறுமி உருவில் இருந்த அம்பிகையும் வந்தார். கரிக்ககத்தில் ஒரு இடத்தில் பச்சை பந்தல் அமைத்து, அம்மனை குடியிருத்தினர். அம்பிகையும், அவர்களுக்கு அருளாசி வழங்கி அங்கிருந்து மறைந்தாள்.
இதையடுத்து யோகீஸ்வரன், குருவின் அறிவுரைப்படி அம்மனுக்கு ஒரு சிலை செய்து அங்கு பிரதிஷ்டை செய்தார். அதுதான் இன்றைய சாமுண்டியாக அனைவரும் வழி படும், அருள் சுரக்கும் கரிக்ககத்தம்மா ஆகும். காத்து அருள்புரிவதிலும், அநீதி இழைப்பவர்களை தண்டிப்பதிலும் நிகரில்லாதவளாக, சாமுண்டிதேவி திகழ்கிறாள்.
கரிக்ககம் கோவிலில் ராஜ கோபுரம் கம்பீரமாக நிற்கிறது. ஆலயத்தில் சாஸ்தா, குரு பகவான், யோகீஸ்வரன், நவக்கிரகங்களுக்கு தனிச் சன்னிதிகள் உள்ளன. ஆயிரம் வல்லி என்ற பெயரில் மேலும் ஒரு அம்மன் சன்னிதியும் உள்ளது.
இந்த ஆலயத்தில் ஆண்டு தோறும் நடைபெறும் பொங்கல் திருவிழா பிரசித்தி பெற்றதாகும். இந்த ஆண்டுக்கான திருவிழா நாளை (1-ந் தேதி) தொடங்கி, 7-ந் தேதி (வெள்ளிக்கிழமை) வரை நடைபெற உள்ளது. இறுதிநாளான 7-ந் தேதி அன்று ஆலயத்தில் பொங்கல் வைக்கும் வைபவம் நடைபெறும்.
மூன்று வடிவில் அம்மன் :
இந்த ஆலயத்தில் வீற்றிருந்து அருள்பாலிக்கும் கரிக்ககம் தேவியை, ‘பராசக்தி’ என்றும், ‘பகவதி’ என்றும், ‘பரமேஸ்வரி’ என்றும் பல பெயர்களில் அழைத்து மக்கள் வழிபாடு செய்கின்றனர். ஒரே தேவியை மூன்று வடிவங்களில் வழிபடுவது இந்த ஆலயத்தின் சிறப்புகளில் முக்கியமானதாகும். ஆம்.. இந்த ஆலய அம்மனை, சாமுண்டி தேவி, ரத்த சாமுண்டி தேவி, பால சாமுண்டி தேவி என்று மூன்று வடிவங்களில் அழைத்து பக்தர்கள் வழிபடுகிறார்கள். இந்த மூன்று தேவியர்களில் சாமுண்டி தேவிக்கு மட்டுமே சிலை வடிவம் உள்ளது. ரத்த சாமுண்டி, பால சாமுண்டி ஆகிய அம்மனின் உருவங்களை, தனிச் சன்னிதிகளில் சுவர் சித்திரமாகவே நாம் காண முடியும்.

இறைவன் முதியவர் வேடமிட்டு திருவோட்டைக் கையில் எடுத்துக் கொண்டு வீடு வீடாகச் சென்று பிச்சை பெற்று வந்து சுந்தரரின் பசியை ஆற்றினார். இது செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள திருக்கச்சூரில் நடந்த திருவிளையாடல்.
இறைவன் பூத கணங்களுக்கு நடுவே கயிலாசத்தில் மட்டும் இருப்பதில்லை. பூவுலகிலும் அவ்வப்போது மக்களோடு மக்களாகக் கலந்து தனது அற்புதத் திருவிளையாடல்களை நிகழ்த்திய செய்திகள் ஓராயிரம்.
மதுரையம்பதியில் வைகை நதியில் நீர் பெருக்கெடுத்தது. அந்த ஆற்றின் கரையை அடைப்பதற்காக பாண்டிய மன்னன் ஊர் மக்கள் அனைவரையும் வீட்டிற்கு ஒருவராக நியமித்தான். வந்தி என்ற கிழவி தந்தை பிட்டை சாப்பிட்டு விட்டு, அவருக்கு பதிலாக ஈசனே பணிக்கு சென்றார் என்பது திருவிளையாடல் புராணக் கதைகளுள் ஒன்று.
ஒரு முறை சுந்தரர் பசியால் வாடியபோது, இறைவன் முதியவர் வேடமிட்டு திருவோட்டைக் கையில் எடுத்துக் கொண்டு வீடு வீடாகச் சென்று பிச்சை பெற்று வந்து சுந்தரரின் பசியை ஆற்றினார். இது செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள திருக்கச்சூரில் நடந்த திருவிளையாடல்.
தினை விளைந்த கதை :
அதே போல இறைவன் ஒரு சிற்றூருக்குள் நுழைகிறார். வயல் நிறைந்த பகுதிக்குள் சென்றவுடன், அங்கு உழுது கொண்டிருக்கும் பெரியார் என்ற ஒரு விவசாயியிடம், ‘எனக்கு பசிக்கிறது.. உணவு இருந்தால் கொடு!’ என்கிறார். வயோதிகனாக வந்தது இறைவன் என்று அறியாத உழவன், ‘இங்கேயே காத்திரு!’ என்று சொல்லி விட்டு தன் குடிசைக்குச் சென்று பழைய சோறு எடுத்து வந்தார்.
உணவுடன் வயல் பகுதிக்கு வந்தபோது, உழுது கொண்டிருந்த நிலத்தில் முழுவதும் தினை விளைந்திருந்தது. கதிர்கள் முற்றி தொங்கிக்கொண்டிருந்த அற்புதக் காட்சியைக் கண்டு அந்த முதியவர் ஆச்சரியத்தில் ஆழ்ந்து போனார். அந்த முதியவருக்கு, இறைவன் அருட்காட்சி காட்டி மறைந்து போனார்.
தேவருக்கும், ஞானிகளுக்கும் கூட அவ்வளவு எளிதில் கிட்டாத சிவபெருமானின் தரிசனம், மண்ணுலகில் ஏழை, பணக்காரன், உயர்சாதி, கீழ்சாதி என்ற பேதம் இல்லாமல் கிடைத்த இறைவனின் திரு விளையாடலை எண்ணினால் வியப்பு மேலிடாமல் இல்லை. அதை நினைக்கும் போதெல்லாம் நம் உடலும், உள்ளமும் உருகுகிறது.
சரி இறைவனால் ஒரு சில நிமிடங்களில் தினை விளைந்த ஊர் எங்கே இருக்கிறது...

திருத்தினை நகர் :
அந்த ஊருக்குப் பெயரே ‘திருத்தினை நகர்’ என்பதாகும். நாளடைவில் பேச்சு வழக்கில் தீர்த்தனகிரி என்று பெயர்மாறி அழைக்கப்பட்டு வருகிறது. இவ்வூர் கடலூரில் இருந்து புவனகிரி செல்லும் சாலையில் மேட்டுப்பாளையம் என்றொரு ஊர் வரும். அங்கிருந்து உள்ளே சுமார் 5 கிலோமீட்டர் தூரம் சென்றால் வயல் பகுதிகளின் நடுவே உள்ள சாலையில் பெண்ணையாற்றின் வடகரைப் பகுதியில் இருக்கிறது திருத்தினை நகர் என்ற தீர்த்தனகிரி கிராமம்.
சுந்தரமூர்த்தி நாயனாரின் தேவராப் பாடல் பெற்ற நடுநாட்டுத் திருத்தலமாக இந்த ஆலயம் விளங்குகிறது.
நீறுதாங்கிய திருநுதலானை
நெற்றிக் கண்ணனை நிரைவளை மடந்தை
கூறுதாங்கிய கொள்கையி னானைக்
குற்றம் இல்லியைக் கற்றை அம்சடை மேல்
ஆறு தாங்கிய அழகனை அமரர்க்கு
அரிய சோதியை வரிவராய் உக்ளும்
சேறுதாங்கிய திருத்தினை நகருள்
சிவக்கொழுந்தினைச் சென்றடை மனளே!
என்பது அவரது முதற்பாடல்.
ஆலய அமைப்பு :
மூன்று நிலை ராஜகோபுரம், பழமையான ஆலயம் என்பதை பறைசாற்றுகிறது. கருவறையில் சதுரமான பாணத்தின் மீது உயர்ந்த சுயம்பு லிங்கமாக இறைவன் காட்சி தருகிறார். மூலவர் சிவக்கொழுந்தீஸ்வரர் தினை விளைவித்தவர் என்பதால், இவருக்கு தினையமுது படைக்கப்படுகிறது.
மற்ற சிவாலயங்களைப் போலவே, திருச்சுற்றில் விநாயகர், சுப்பிரமணியர், நால்வர், பைரவர், சூரியன், நடராசர், பிரம்மா , திருமால், துர்க்கை சண்டேசுவரர் எழுந்தருளியுள்ளனர்.
இத்திருத்தலத்தில் உள்ள தென்முகக் கடவுள் யோக தட்சிணாமூர்த்தியாக அருள்கிறார். வழக் கம் போல ஒரு காலை மடித்து மறுகாலை தொங்க விட்டுக் கொண்டிருக்கும் கோலம் இங்கே இல்லை. மாறாக இருகால்களையும் மடக்கிக் கொண்டு சுகாசனத்தில் தட்சிணாமூர்த்தி அமர்ந் திருப்பது எங்குமில்லாச் சிறப்பாகச் சொல்லப்படு கிறது. இந்த ஆலயத்தில் சண்டேசுவரர் மனைவியுடன் காட்சி தருவது மற்றொரு சிறப்பாகும். நவக் கிரகங்கள் வெளியே வடகிழக்கு மூலையில் இருக்கின்றன.
வெளியே கொடிமரம் அருகே தெற்கு நோக்கிய சன்னிதியில் அகன்ற கடுமையான பெரிய விழிகளுடன், கருந்தடக் கண்ணி என்ற பெயரில் நின்ற நிலையில் அம்பாள் அருளாட்சி செய்கிறார். அம்பிகைக்கு, ஈஸ்வரனைப் போலவே மூன்று கண்கள் இருப்பது பெரும் சிறப்பாகும்.
முருகப்பெருமான் சன்னிதி அருகே வடமேற்கு பகுதியில் தல விருட்சமான சரக்கொன்றை மரம் மஞ்சள் பூக்களுடன் மலர்ந்து நிற்கிறது. ஷாம்பவ தீர்த்தம் என்னும் குளத்தில் நீராடி சுவாமிக்கு அபிஷேகம் செய்து வழிபட்டால் நோய்கள் தீரும். குறிப்பாக சருமநோய்கள் நீங்கும் என்பது நம்பிக்கை. இந்த ஆலயம் தினமும் காலை 7 மணி முதல் பகல் 11 மணி வரையும், மாலை 5 மணி முதல் இரவு 7 மணி வரையும் திறந்திருக்கும்.

முருகப்பெருமானின் சாபத்தால் மயிலே, மலையாகிப்போனதாகவும், அந்த மலைமீதுதான் முருகப்பெருமான் வீற்றிருப்பதாகவும் தல புராணம் கூறுகிறது.
குன்றிருக்கும் இடமெல்லாம் குமரன் இருக்கும் இடம் என்பார்கள். அவற்றுள் குன்றக்குடி முருகப் பெருமான் கோவில் மிகவும் பெருமை வாய்ந்ததாகவும், பிரார்த்தனை தலங்களில் மேன்மை பெற்றதாகவும் விளங்குகிறது. இந்த ஆலயத்தில் காவடி வழிபாடு மிகவும் சிறப்பு வாய்ந்ததாகும். மயில் உருவம் கொண்ட மலை மீது இந்த மூலவரான சண்முகநாதர் வீற்றிருந்து அருள்பாலிக்கிறார். முருகப்பெருமானின் சாபத்தால் மயிலே, மலையாகிப்போனதாகவும், அந்த மலைமீதுதான் முருகப்பெருமான் வீற்றிருப்பதாகவும் தல புராணம் கூறுகிறது.
ஒரு முறை அசுரர்கள், தேவர்களை அழிக்கும் நோக்கில் செயல்பட்டனர். அப்போது முருகப்பெருமானின் மயிலிடம் அசுரர்கள், ‘நான்முகனின் வாகனமான அன்னமும், திருமாலின் வாகனமான கருடனும் நாங்கள்தான் மயிலை விட சக்தி படைத்தவர்கள், வேகமாக பறக்கக் கூடியவர்கள் என்று கூறுகின்றன’ என்று பொய் கூறினர். இதைக் கேட்டு கண் மூடித்தனமாக கோபம் கொண்ட மயில், பிரம்மாண்ட உருவம் எடுத்து, கருடனையும், அன்னத்தையும் விழுங்கிவிட்டது.
இதுபற்றி பிரம்மனும், திருமாலும், முருகப்பெருமானிடம் சென்று முறையிட்டனர். அவர்களின் வேண்டுதலை ஏற்ற முருகப்பெருமான், மயிலிடம் இருந்து அன்னத்தையும், கருடனையும் மீட்டுக் கொடுத்தார். மேலும் தவறான வார்த்தைகளைக் கேட்டு, கண்மூடித்தனமாக நடந்துகொண்ட மயிலை, மலையாக மாறிப்போகும்படி சாபமிட்டார். மயிலும் தன் தவறை உணர்ந்து அரச வனத்துக்கு (குன்றக்குடி) வந்து மலையாகிப்போனது. மலையாக இருந்த படியே முருகப்பெருமானை நோக்கி தவம் இருந்தது. தவத்தில் மகிழ்ந்த முருகப்பெருமான், மயிலுக்கு சாபவிமோசனம் அளித்தார். பின்னர் மயில் உருவத்தில் இருந்த அந்த மலை மீதே எழுந்தருளி அருள்புரிந்தார்.
இந்த ஆலயம் அருணகிரிநாதரின் பாடல் பெற்ற தலமாகும். இங்கு முருகப்பெருமான், சண்முகநாதர் என்ற திரு நாமத்துடன், ஆறுமுகங்களோடும், பன்னிரு கரங்களோடும் எழுந்தருளியுள்ளார். செட்டி முருகன், மயூரகிரிநாதர், மயில் கலைக்கந்தன், குன்றை முருகன், குன்றையூருடையான், தேனாறுடையான் என்பது இந்தல முருகனின் வேறு பெயர்களாகும். இங்கு முருகன், வள்ளி, தெய்வானை மூவரும் தனித்தனி மயில் மீது அமர்ந்து காட்சி தருகின்றனர்.

குன்றக்குடி மலையின் மேல்பகுதியில் முனிவர்கள், ஞானிகள் வாழ்ந்ததற்கு ஆதாரமாக கற்படுக்கைகளும், பிராமிக் கல்வெட்டுகளும் உள்ளன. இந்த ஆலயத்தில் குடைவரைக் கோவில் சன்னிதிகள் நிறைய காணப்படுகின்றன. கண்ணபிரான், நான்முகன், இந்திரன், வசிஷ்ட முனவர், விசுவாமித்திரர், நாரதர், கருடன், சூரியன், மன்மதன், அகத்தியர், பாண்டவர்கள் போன்றோர் இத்தல முருகப்பெருமானை வழிபட்டு பேறுபெற்றுள்ளனர்.
சுமார் 2 ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்த இந்த ஆலயத்தின் தல மரம் அரச மரமாகும். தல தீர்த்தம் தேனாறு. சரவணப் பொய்கை, மயில் தீர்த்தம் போன்றவையும் உள்ளன. 10 நாட்கள் நடைபெறும் பங்குனி உத்திர விழா மற்றும் 10 நாட்கள் நடைபெறும் தைப்பூசத் திருநாள் போன்றவை இந்த ஆலயத்தின் மிகப்பெரிய திருவிழாக்களாகும். இது தவிர சித்திரையில் பால் பெருக்கு விழா, வைகாசி விசாகம், ஆனி மகாபிஷேகம், ஆடி திருப்படி பூஜை, ஆவணி மூலம் அன்று பிட்டுத் திருவிழா, புரட்டாசியில் அம்பு போடும் திருவிழா, ஐப்பசியில் கந்தசஷ்டி போன்றவை சிறப்பாக நடைபெறும்.
இந்த ஆலயத்தில் காவடி எடுத்தல் மிகவும் விசேஷமானது. பால் குடம் எடுத்தல், உடல்பிணி தீர அங்கபிரதட்சணம் செய்வது, அடிப் பிரதட்சணம் போன்றவை நினைத்ததை நிறைவேற்றும் நேர்த்திக்கடன்களாகும். வெள்ளியில் ஆன உடல் அங்கங்களை காணிக்கையாக செலுத்தி வழிபட்டால் தோல் வியாதிகள் தீரும் என்பது நம்பிக்கை. இங்குள்ள சரவணப்பொய்கையிலும், இடும்பம் சன்னிதியிலும் உப்பு, மிளகு போட்டு வழிபடுவதும் வழக்கத்தில் உள்ளது. இன்னும் சிலர் அரிசி கொண்டு வந்து மலைப் படிகளில் தூவுகின்றனர். இந்த ஆலயம் காலை 6 மணி முதல் பகல் 11 மணி வரையும், மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரையும் திறந்திருக்கும்.
மலையின் கீழ் பகுதியில் தேனாற்றுநாதர் கோவில் உள்ளது. இந்த இறைவன் சுயம்பு மூர்த்தியாவார். அகத்திய முனிவரால் வழிபாடு செய்யப்பட்டவர் இந்த சிவபெருமான் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த ஆலயம் தேனாற்றங்கரையில் அமைந்துள்ளதால், இறைவனுக்கு தேனாற்றுநாதர் என்ற பெயர் வந்தது. இத்தல அம்பாள் அழகே வடிவாக அருட்சக்தி என்ற நாமத்துடன் எழுந்தருளியிருக் கிறார்.
சிவகங்கை மாவட்டத்தில் உள்ள காரைக்குடியில் இருந்து 10 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது குன்றக்குடி திருத்தலம்.

கும்பகோணத்தில் திருச்சேறை என்ற இடத்தில் உள்ளது சாரபரமேஸ்வரர் திருக்கோவில். இந்த கோவிலின் வரலாற்றை பற்றி விரிவாக தெரிந்து கொள்ளலாம்.
திருச்சேறை என்ற இடத்தில் உள்ளது சாரபரமேஸ்வரர் திருக்கோவில். இந்த ஆலய இறைவன் பெயர் சாரபரமேஸ்வரர். செந்நெறியப்பர், உடையவர் என்பன இறைவனின் பிற பெயர்கள். இறைவியின் பெயர் ஞானாம்பிகை.
ஆலய அமைப்பு :
இந்தக் கோவில் கிழக்கு நோக்கி அமைந்துள்ளது. முகப்பில் மொட்டை கோபுரமும், அதையடுத்து விசாலமான வெளிப் பிரகாரமும் உள்ளன. வெளிப் பிரகாரத்தின் வடக்குப் பகுதியில் இறைவியின் சன்னிதியும், ஆலய தல விருட்சமான மாவிலங்கை மரமும் உள்ளது. இந்த விருட்சத்தை மகாலிங்க மரம் என்றும் சொல்வதுண்டு.
மொட்டை கோபுரத்தின் உள்ளே நுழைந்ததும் வலதுபுறம் சிவபெருமான், பார்வதியின் சுதை வடிவ திருமேனிகள் உள்ளன. அடுத்துள்ள ராஜகோபுரத்தைத் தாண்டியதும், சிறப்பு மண்டபமும் மகாமண்ட பமும் உள்ளன. அடுத்துள்ள அர்த்த மண்டப நுழைவாசலில் துவார பாலகர்கள் அருள்பாலிக்க, அடுத்துள்ள கருவறையில் இறைவன் சாரபரமேஸ்வரர் லிங்கத் திருமேனியில் அருள்பாலிக் கிறார். தேவாரப் பாடல் பெற்ற 274 தலங்களில், காவிரியின் தென்கரையில் அமையப்பெற்ற 127 தலங்களில் 95-வது தலமாக விளங்குகிறது திருச்சேறை.
இந்த ஆலயத்தில் மூன்று தீர்த்தங்கள் உள்ளன. முதல் தீர்த்தம் ‘பிந்து சுதா தீர்த்தம்’. இது கோவிலின் உள்ளே அமைந்துள்ள கிணறு ஆகும். அமுதத்தில் ஒரு துளி விழுந்ததால் ஏற்பட்ட தீர்த்தம் இது. இரண்டாவது ‘ஞான தீர்த்தம்’. இது ஆலயத்தின் எதிரே உள்ள திருக்குளம் ஆகும். மூன்றாவது தீர்த்தமாக ‘மார்க்கண்டேய தீர்த்தம்’ விளங் குகிறது. இது ஆலய தெப்பக்குளம் ஆகும்.
கருவறை தேவக் கோட்டத்திலும் பிரகாரத்திலும் விநாயகர், ஜூரஹர லிங்கேஸ்வரர், நடராஜர், தட்சிணாமூர்த்தி, அமிர்தகடேஸ்வரர், அபிராமி, மிருகண்டு மகரிஷி, சப்த கன்னிகள், சமயக்குரவர்கள், பால சுப்பிரமணியர், மகாலட்சுமி, வாயுலிங்கம், ஜேஷ்டா தேவி, மூன்று துர்க்கைகள், சண்டிகேஸ்வரர், சூரியன், காளீஸ்வரர், நாகராஜர், நவக்கிரக நாயகர்கள் ஆகியோர் அருள்பாலிக்கின்றனர்.
மகரிஷி மோட்ச தலம் :
மகாபாரதத்தில் எரியும் அரக்கு மாளிகையில் இருந்து பாண்டவர்கள் வெளியேற யுத்திகள் கூறியவரும், குந்திதேவிக்கு உபதேசம் செய்தவருமான தவுமிய மகரிஷி இத்தலத்தில் மோட்சம் பெற்றதாக வரலாறு.

ஞானம் இருந்தால் மட்டுமே ஒரு மனிதன் முழு மனிதன் ஆவான். எவ்வளவு செல்வம் இருப்பினும் அதை காக்க அறிவு என்ற ஞானம் வேண்டும். தன்னை வணங்கும் பக்தர்களுக்கு ஞானத்தை அள்ளித் தருவதால், இத்தல இறைவி ஞானாம்பிகை என அழைக்கப்படுகிறாள்.
இத்தலத்தில் பரிகார தெய்வமாக ‘ரிண விமோசன லிங்ககேஸ்வரர்’ விளங்கு கிறார். மார்க்கண்டேய முனிவர் தன்னுடைய ஆசிரமத்தில் ஒரு லிங்கத்தை பிரதிஷ்டை செய்து பூஜை செய்து வந்தார். அந்த மார்கண்டேய முனிவரால் பிரதிஷ்டை செய்யப்பட்ட அவரின் ஆத்மார்த்த லிங்கமே ரிண விமோசன லிங்கேஸ்வரர்.
பொதுவாக மனிதனாகப் பிறந்தவருக்கு பிறவிக்கடனும், இப்பிறவியில் பொருள் கடனுமாக இரண்டு கடன் உண்டு. ரிண விமோசன லிங்கேஸ்வரரை முறையோடு வழிபட்டால், இந்த இரண்டு கடன்களிலிருந்து விடுபடலாம். எனவே இவர் கடன் நிவர்த்தீஸ்வரர் என போற்றப்படுகிறார். தொடர்ந்து 10 திங்கட்கிழமைகள் இவருக்கு அர்ச்சனை செய்து, 11-வது வார முடிவில் சிவபெருமானுக்கு அபிஷேகம் செய்தால் உரிய பலன் கிடைக்கும்.
இங்குள்ள பைரவரை தொடர்ந்து எட்டு அஷ்டமி திதியில் அர்ச்சனை செய்து வழிபட்டு, ஒன்பதாவது அஷ்டமி திதி அன்று பைரவருக்கு வடை மாலை சாத்தி வழிபட்டால் வேண்டியது நிறைவேறும்.
மூன்று துர்க்கைகள் :
வேறு எந்த ஆலயத்திலும் இல்லாத வகையில் சிவதுர்க்கை, விஷ்ணு துர்க்கை, வைஷ்ணவி துர்க்கை என்று மூன்று துர்க்கை சன்னிதிகள் இந்த ஆலயத்தில் ஒரே இடத்தில் அமைந்துள்ளது. ராகு கால நேரத்தில் இந்த மூன்று துர்க்கை களையும் வழிபடுவது நல்ல பலனைத்தரும்.
இந்த ஆலயத்தில் ஆடிப்பூரம், நவராத்திரி, கந்த சஷ்டி, கார்த்திகை, பிரதோஷம், அஷ்டமியில் பைரவர் சகஸ்ரநாம அர்ச்சனை ஆகியவை சிறப்பாக நடைபெறுகின்றன.
மாசி மாதம் 13,14,15 தேதிகளில் சூரிய கதிர்கள் மூலவர் மேல் விழுகிறது. இறைவனுக்கு சூரிய பூஜை செய்து முடித்து சில மணி நேரங்களில் இறைவியின் திருப்பாதங்களில் சூரிய ஒளி படுவதைக் கண்டு நாம் சிலிர்க்காமல் இருக்க முடியாது.
கும்பகோணம் - திருவாரூர் சாலையில் கும்ப கோணத்தில் இருந்து 15 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது திருச்சேறை திருத்தலம். இங்கு செல்ல கும்பகோணத்தில் இருந்து பேருந்து வசதி உள்ளது.

வீரபத்திர சுவாமி திருக்கோவில்களை நாம் அபூர்வமாக சில இடங்களில் மட்டுமே காண முடியும். ஆம்! அப்படிப்பட்ட ஒரு ஆலயம் திருச்சி திருவானைக்காவலில் உள்ளது.
பிரம்மதேவன் தான் செய்து வரும் படைப்புத் தொழிலை பெருக்க பத்து புதல்வர்களை பெற்றான். அப்புதல்வர்களுள் ஒருவனே தட்சன். இவன் சிவபெருமானைக் குறித்து ஆயிரம் ஆண்டுகள் கடுமையாக தவம் புரிந்து ஏராளமான வரங்களைப் பெற்றவன். அந்த வரங்களுள் ஒன்று உமா தேவியைத் தனது மகளாக அடைந்து அவளை சிவபெருமானுக்கே திருமணம் செய்து கொடுக்க வேண்டும் என்பது.
அந்த வரத்தின் படி இமயமலை சாரலில் காலிந்தி நதியில் ஒரு வலம்புரி சங்கு உருவில் தவம் புரிந்து கொண்டிருந்த உமா தேவியை தட்சன் கண்டான். அவன் அந்த சங்கினைக் கையில் எடுத்த மறுகணம் சங்கு வடிவம் நீங்கி அழகிய பெண் குழந்தையானாள் உமா தேவி.
அவளை எடுத்து வந்து தாட்சாயணி என்ற பெயரை சூட்டி அன்புடன் வளர்த்து வந்தான் தட்சன். தனது ஆறாவது வயது முதலே சிவ பெருமானை தனது கணவனாய் அடையும் நோக்குடன் ஊருக்கு வெளியே ஒரு தவமாடத்தை அமைத்து சிவபெருமானைக் குறித்து கடுமையாக தவம் இருக்கத் தொடங்கினாள். அவளது தவத்திற்கு மெச்சிய சிவபெருமான் கூடிய விரைவில் அவளை மணம்புரிவதாய்க் கூறி மறைந்தார்.
அவர் கூறியது போல தட்சன் கன்னிகா தான மந்திரங்களைக் கூறி அம்பிகையின் கரத்தை சிவபெருமானின் கரத்தில் வைத்து தத்தம் செய்தான். அடுத்த கணம் சிவபெருமான் திடீரென மறைந்தார். அதனால் கடும் கோபம் கொண்ட தட்சன் சிவனை கொடிய வார்த்தைகளால் தூற்றினான். பின்னர் உமா தேவி முன்னிலும் கடுமையான தவம் புரிந்ததால் மனம் இளகிய சிவபெருமான் அவள் முன் தோன்றி அவளை தனது பக்கத்தில் அமர்த்திக் கொண்டு மறைந்தார்.
இதனைக் கண்ட சேடிப் பெண்கள் நடந்தவற்றை தட்சனிடம் சென்று உரைத்தனர். தந்தையரான தனக்குத் தெரியாமல் தனது மகளை களவு கொண்டவன் என்றும் தம் குலத்திற்கே இழிவைத் தேடியவன் என்றும் சிவபெருமானை பலவாறாக இகழ்ந்தான் தட்சன்.
பின் ஒரு சமயம், அவன் தனது மகளைக் காண கயிலையங்கிரிக்கு சென்ற போது வாயிலில் காவல் புரிந்து கொண்டிருந்த பூத கணங்கள் அவனை உள்ளே செல்லவிடாமல் சிவபெருமானை இகழ்ந்தக் காரணத்தால் தடுத்தனர். அதனால் கோபம் கொண்ட தட்சன் தன் இடத்திற்கு திரும்பினான்.
தட்சன் செய்த யாகம் :
பின்னர் ஒரு சமயம் கங்கை ஆற்றின் கரையில் கனகலகம் எனும் இடத்தில் வேள்விச் சாலை அமைத்து பெரிய யாகம் ஒன்றை நடத்த தீர்மானித்த அவன் கனகாதியர் நால்வர, சப்த ரிஷிகள் மற்றும் கின்னர், கிம்புருட, அசுரர் ஆகியோரை அழைத்துவிட்டு சிவபெருமானை மட்டும் புறக்கணித்தான்.
தந்தை தட்சன் செய்யும் யாகத்தினை நாரத முனி மூலம் கேள்வியுற்ற தாட்சாயணி அவனது தவறை எடுத்துக் கூறி திருத்தும் நோக்குடன் சிவபெருமானிடம் மன்றாடி அனுமதி பெற்றுக் கொண்டு வேள்விச் சாலையை அடைந்தாள். அவளைக் கண்டதும் கோபம் தலைக்கேற கொடிய வார்த்தைகளால் இகழ்ந்தான் தட்சன்.

இதனால் கோபம் அடைந்த தேவி கயிலைக்கு திரும்பினாள். தட்சனுக்கு அறிவு புகட்டும் வகையில் அந்த வேள்வியை அழிக்கும் படி சிவபெருமானிடம் வேண்டினாள். நீண்ட நேர சிந்தனைக்கு பின் தட்சனது யாகத்தை அழிக்க ஒப்புக்கொண்டார் இறைவன்.
அவரது கண்டத்திலிருந்த கருத்த விஷத்தின் ஒரு கூறு அவரது நெற்றிக் கண் வழியாக குமாரனாக வெளிபட்டது. அந்தக் குமாரன் ஆயிரம் முகங்களும் இரண்டாயிரம் கரங்களும் அவற்றிற்கு உரிய ஆயுதங்களையும் உடையவனாய் இருந்தான். மணி மலைகள், ஆமை ஓட்டு மாலைகள், பன்றிக் கொம்பு மாலைகள், கபால மாலைகள் ஆகியவற்றை அணிந்திருந்தான். சிங்கமுகங்களைக் கோர்த்த மாலையுடன் பாம்பாலான கச்சம் அணிந்திருந்தான். அவனே வீரபத்திரன்!.
சிவபெருமானின் மகனான வீரபத்திரனின் மனைவி பராசக்தியால் உருவாக்கப்பட்டவள் பத்ரகாளி. இவ்விருவரும் தட்சனின் யாகத்தை அழித்தனர்.
ஆலய அமைப்பு :
வீரபத்திர சுவாமி திருக்கோவில்களை நாம் அபூர்வமாக சில இடங்களில் மட்டுமே காண முடியும். ஆம்! அப்படிப்பட்ட ஒரு ஆலயம் திருச்சி திருவானைக்காவலில் உள்ளது.
ஆலயம் கிழக்கு திசை நோக்கி அமைந்துள்ளது. ஆலய முகப்பைத் தாண்டி உள்ளே நுழைந்ததும் மகாமண்டபம் உள்ளது. அடுத்துள்ள அர்த்த மண்டப நுழைவுவாசலில் இரு துவார பாலகர்கள் கம்பீரமாக நின்று கொண்டிருக்க அடுத்துள்ள கருவறையின் முகப்பில் இடது புறம் விநாயகரும் வலது புறம் முருகனும் அருள்பாலிக்கின்றனர்.
உள்ளே கருவறையில் இறைவன் அருள்மிகு வீரபத்திரசுவாமி நின்ற கோலத்தில் அருள் பாலிக்கிறார். இறைவனின் தேவக்கோட்டத்தின் தென்புறம் தட்சிணாமூர்த்தியும், மேற்கில் லிங்கோத்பவரும், வடக்கில் விஷ்ணு துர்க்கையும் அருள்பாலிக்கின்றனர்.
பல தெய்வங்கள் வீராவேசம் கொண்ட போர்த் தெய்வங்களாகவும் வெற்றிக் கடவுளாகவும் இருப்பினும் இவருக்கு மட்டுமே வெற்றிலை படல் உற்சவமும் வெற்றிலை படலும் உரியனவாக உள்ளன.
இவரது ஆலயங்கள் பெரும்பாலும் வடக்கு நோக்கியே அமைந்துள்ளன. மேற்கரங்களில் வில்லும், அம்பும் ஏந்தி கீழ் வலது கரத்தில் வாளும், இடது கரத்தில் பெரிய கேடயத்தையும் கொண்டு காட்சி தரும் இவரின் சிரசின் முன் உச்சியில் சிவலிங்கம் திகழ்கிறது.
வழிபாடுகள் :
ஐப்பசி மாதம் வளர்பிறை அஷ்டமியில் நோற்கப்படும் விரதம் மகாஷ்டமி விரதம். இது வீரபத்திரரையும் பத்ரகாளியையும் குறித்து நோற்கப்படும் விரதம் ஆகும். இந்த நாளில் தும்பை, நந்தியாவட்டை முதலான வெண்மையான மலர்களாலும் வெண்பட்டாலும் இவரை அலங்கரித்து வழிபடுகின்றனர்.
இந்த ஆலயத்தில் அருள்பாலிக்கும் வீரபத்திரரை தும்பை பூ மாலை அணிவித்து வழிபட்டால் எதிரிகளால் உண்டாகும் துன்பங்கள் நீங்கி நல்வாழ்வு பெறலாம். வெற்றிலை மாலை சூட்டி அர்ச்சனை செய்து இவரை வழிபட்டால் நினைத்த காரியங்கள் நடைபெறும்.
திருச்சி மாவட்டம் திருவானைக்காவல் அருள்மிகு அகிலாண்டேஸ்வரி ஆலயத்தின் மேற்கு ராஜ கோபுரத்திற்கு அருகே உள்ளது இந்த ஆலயம்.