என் மலர்
முக்கிய விரதங்கள்
சபரிமலை ஐயப்பனுக்கு விரதம் இருக்கும் போது கவனிக்க வேண்டிய விதிமுறைகளை கீழே பார்க்கலாம்.
1. மாலை அணிவிக்கும் நாள்: கார்த்திகை மாதம் முதல் தேதியன்று மாலை அணிய வேண்டும். அன்று நாள் கிழமை பார்க்க வேண்டியதில்லை. அல்லது சபரிமலைக்கு செல்லும் தினத்திற்கு முன் 41 நாட்கள் விரதம் கடைப்பிடிக்கும் படியாக நல்ல நாள் பார்த்து மாலை அணிய வேண்டும்.
2. மாலை அணியும் முறை: 54 அல்லது 108 மணிகள் உள்ள துளசி மணிமாலை அல்லது ருத்திராட்ச மாலையை பல முறை சபரிமலை சென்று வந்த சாமியார் ஒருவரைக் குருவாகக் கொண்டு கோவிலிலோ, விளக்கின் முன்போ அல்லது குருநாதரை வணங்கி அணிய வேண்டும்.
3. கடை பிடிக்க வேண்டிய விரதங்கள்: (அ) நாள் தோறும் ஆலய வழிபாடு செய்ய வேண்டும். காலை மாலை இரு வேளைகளிலும் நீராடி பஜனை வழிபாடு செய்ய வேண்டும். (ஆ) பிரம்மச்சரிய விரதத்தை கட்டுப்பாடாக கடை பிடிக்க வேண்டும். (இ) காலை மாலை 108 சரணங்கள் துளசி, நாட்டுச் சக்கரை, பால் இவற்றுள் ஒன்றைச் சிறிது வைத்து நைவேத்தியம் செய்து வணங்க வேண்டும்.
4. தவிர்க்க வேண்டிய பொருட்கள், காரியங்கள்:
1. (அ) குடைப்பிடிப்பது (ஆ) காலணிகள் உபயோகிப்பது (இ) சவரம் செய்து கொள்வது (ஈ) புலால் உண்பது (உ) பொய்களவு, சூதாடுதல், போதை வஸ்துகள் கூடாது.
2. பகல் நேரத்தில் தூங்கக் கூடாது. இரவில் படுக்கை விரிக்காமல், தலையணை இல்லாமல் சிறு துண்டை மட்டும் விரித்து உறங்க வேண்டும்.
3. துக்ககாரியங்களில் ஜயப்பன்மாரும், அவர் குடும்பத்தவரும் கலந்து கொள்ளக் கூடாது அப்படி கலந்த கொள்ள நேரிட்டால்தான் அணிந்த மாலையை குருநாதர் மூலம் கழற்றி ஐயப்பன் படத்தில் மாட்டிய பின்னர்தான் கலந்து கொள்ள வேண்டும்.
4. குழந்தை பிறந்த வீட்டிற்கு அல்லது மஞ்சள் நீராட்டு விழா வீட்டிற்குச் செல்லக் கூடாது.
5. இரு முடி கட்டும் முறைகள்:
1. இரு முடிக்கட்டும் பூஜையை வீட்டிலேயோ அல்லது கோவிலிலோ நடத்த வேண்டும்.
2. இரண்டு அறை கொண்ட நீளமான பை ஒன்று செய்த அதில் பூஜை சாமான்கள், கற்பூரம் அபிஷேக, நைவேத்திய சாமான்கள், காணிக்கைப் பணம் இவைகளை முன் கட்டிலும் யாத்திரையின் போது தேவையான உணவுப் பண்டங்கள் பின் கட்டிலும் வைத்துக் கொண்டு பையைத் தலையில் எடுத்துச் செல்ல வேண்டும். இதுதான் இரு முடி எனப்படும்.
3. நைவேதியத்திற்கு பசுவின் நெய்யை உருக்கி ஒரு தேங்காயின் கண்ணைத்திறந்து இளநீரை எடுத்து விட்டு அதற்குள் காய்ச்சிய நெய்யை நிரப்பிக் கார்க்கினால் இறுக மூட வேண்டும்.
6. யாத்திரை செல்லும் முறை:
1. சாஸ்தா பூஜை அன்னதானம் செய்து யாத்திரை புறப்பட வேண்டும். இரு முடிச் சுமந்து வீட்டை விட்டுப் புறப்படும் போது எவரிடமும் விடை பெறக் கூடாது. திரும்பிக் கூடப் பார்ப்பது கூடாது.
2. கன்னி ஐயப்பன்மார்கள் யாத்திரை புறப்பட்டதிலிருந்து சன்னிதானம் அடையும் வரை தானே தலையிலிருந்து இரு முடியை இறக்கி வைக்கவோ ஏற்றி கொள்ளவோ கூடாது.
குருநாதர் மூலமே இறக்க வேண்டும். ஏற்ற வேண்டும்.
- ஆன்மிகம் பற்றிய உங்கள் கருத்துக்களை mmastronews@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.

சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு செல்லும் பக்தர்கள் புனித நீராடி மாலை அணிந்து விரதம் தொடங்கினார்கள்.
கார்த்திகை மாதம் இன்று பிறந்துள்ளது. இதையடுத்து சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு செல்லும் பக்தர்கள் புனித நீராடி மாலை அணிந்து விரதம் தொடங்கினார்கள்.
கன்னியாகுமரியில் இன்று காலை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் குவிந்தனர். அவர்கள் கடலில் புனித நீராடினர். பின்னர் பகவதியம்மன் கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்தனர்.
சபரிமலை செல்லும் பக்தர்கள், கன்னிசாமிகளுக்கு குருசாமிகள் மாலை அணிவித்தனர். அப்போது பக்தர்கள் சுவாமியே சரணம் ஐயப்பா என்ற பக்தி கோஷம் எழுப்பினர். வெளி மாவட்டங்களில் இருந்து ஏராளமான ஐயப்பப் பக்தர்கள் கன்னியாகுமரிக்கு வந்து மாலை அணிந்தனர்.
இன்று காலை ஏராளமான ஐயப்பப் பக்தர்கள் மாலை அணிந்தனர்.
10 வயதுக்குட்பட்ட சிறுமிகள் முதல் பெரியவர்கள் வரை மாலை அணிந்து விரதத்தை தொடங்கி உள்ளார்கள். நீலம், கருப்பு நிற உடை அணிந்து அவர்கள் வலம் வந்தனர். கார்த்திகை மாதம் பிறந்ததை அடுத்து இன்று மாவட்டம் முழுவதும் பல்வேறு கோவில்களில் சுவாமியே சரணம் ஐயப்பா என்ற பக்தி கோஷம் எதிரொலித்தது.
மாலை அணிந்து விரதத்தை தொடங்கிய ஐயப்ப பக்தர்கள் தினமும் காலை, மாலை நேரங்களில் புனித நீராடி விட்டு கோவில்களில் சாமி தரிசனம் செய்வார்கள். ஏராளமான பக்தர்கள் கோவில்களிலேயே தங்கி இருந்து விரதம் மேற்கொள்வார்கள்.

சனி பகவானுக்கு உகந்த விரதங்களும் அதனை கடைபிடிக்கும் முறைகளையும் பார்க்கலாம்.
* சனிக்கிழமைகளில் பூரண உபவாசம் இருந்து காக்கைக்கும், ஏழைகளுக்கும் அன்னதானம் வழங்க வேண்டும்.
* சனிக்கிழமைகளில் ஒரு வேளை உணவுடன் விரதம் இருந்து சனிபகவான் ஸ்தோத்திரங்களை சொல்லி வழிபட வேண்டும்.
* சிறிது எள்ளை பொட்டலமாக கட்டி தினசரி இரவு படுக்கும்போது அதனை தலைக்கு அடியில் வைத்துக் கொண்டு படுத்து, காலையில் அதனை அன்னத்தில் கலந்து காகத்திற்கு 9 நாள் அல்லது 48 நாட்கள் அல்லது 108 நாட்களுக்கு அன்னமிடலாம்.
* சனிக்கிழமைகளில் சனிபகவான் கோவிலில் ஒரு தேங்காயை இரண்டு பகுதிகளாக ஆக்கி, அதில் நல்லெண்ணெய் விட்டு எள் முடிச்சிட்டு தீபமாக ஏற்றலாம்.
* சனிபகவானுக்கு நல்லெண்ணெய் அபிஷேகம் செய்து கருப்பு அல்லது நீல வஸ்திரம் சாத்தி, எள் சாதம், வடைமாலை செய்து வழிபாடு செய்து அனைத்தையும் அர்ச்சகர், அந்தணர், ஏழைகளுக்கு வழங்க வேண்டும்.
* சனிபகவானுக்கு நவக்கிரக சாந்தி ஹோமங்கள் செய்து அபிஷேக, ஆராதனைகளும் செய்து தொடர்ந்து மண்டல பூஜை செய்யலாம்.
* எள்ளை சுத்தம் செய்து, வறுத்து அதில் வெல்லம், ஏலக்காய் பொடி சேர்த்து இடித்து திலசூரணம் செய்து வெங்கடேசப்பெருமாளுக்கும், சனிபகவானுக்கும் படைத்து விநியோகம் செய்யலாம்.
* ஆஞ்சநேயர், தர்மராஜன், பிரஜாபதி முதலிய தேவதைகளையும் ஆராதனை செய்யலாம்.
* அவரவர்களது பிறந்த ஜன்ம நட்சத்திர தினத்தன்றோ அல்லது சனிபகவானுடைய பிறந்த நட்சத்திரமான ரோகிணி நட்சத்திரம் அன்றோ ஒவ்வொரு மாதமும் அல்லது ஒவ்வொரு சனிக்கிழமைகளிலும் அர்ச்சனைகள் செய்வது மிக மிக நன்மையான பலன்களை தரும்.

ஆறுமுக சாமிக்கு அபிஷேக ஆராதனை செய்து வழிபடுவதோடு விரதமும் இருந்து வழிபட்டால் அந்த முத்துக்குமரன் முத்தான வாழ்க்கையை வழங்குவார்.
கார்த்திகை மாதத்தில் கந்தவேலன் மீது நம்பிக்கை வைத்தால் பார்த்த இடங்களில் எல்லாம் பாராட்டும், புகழும் கூடும். நேர்த்தியோடு வாழலாம். நிம்மதியோடு இருக்க முடியும். சூழ்ச்சிகளிலிருந்து விடுபட சுப்ரமணியரை வழிபட வேண்டிய மாதமிது. அதனால்தான் சுக்குக்கு மிஞ்சிய மருந்துமில்லை. சுப்ரமணியருக்கு மிஞ்சிய தெய்வமுமில்லை என்றார்கள். அந்த முருகப்பெருமானை துதித்து வழிபட உகந்த நட்சத்திரம் கார்த்திகை நட்சத்திரமாகும்.
கார்த்திகை மாதத்தில் வரும் கார்த்திகைக்கு ஒரு மிகப்பெரிய பெருமை உண்டு. நட்சத்திரத்தின் பெயரும், மாதத்தின் பெயரும் ஒன்றாக அமைந்துள்ளது. மேலும் ‘கை’ என்ற எழுத்தில் முடியும் மாதமிது. வாழ்க்கை சிறப்பாக இருக்க நம்பிக்கை வைக்க வேண்டிய மாதம் கார்த்திகை மாதமாகும்.
ஒவ்வொரு மாதமும் கார்த்திகை நட்சத்திரம் வந்தாலும் கார்த்திகை மாதத்தில் வரும் கார்த்திகையைத்தான் ‘திருக்கார்த்திகை’ என்றும், ‘பெரிய கார்த்திகை’ என்றும் அடைமொழி சூட்டி அழைக்கின்றோம். ஊர்களுக்கு ‘திரு’ என்று அடைமொழி சேர்த்திருப்பதைப் பார்த்திருப்பீர்கள். திருமயம், திருப்பத்தூர், திருவாடானை, திருவாவடுதுறை, திருவாரூர், திருப்புங்கூர் போன்ற எண்ணற்ற ஸ்தலங்கள் ‘திரு’ என்ற அடைமொழியுடன் இருப்பதைக் காணலாம்.
சிறப்பான ஸ்தலங்கள் அமைந்த ஊர்களின் பெயர்களுக்கு ‘திரு’ என்ற அடைமொழி சேர்ந்திருப்பது போல நட்சத்திரத்திற்கு ‘திரு’ என்று சேர்த்துக் கொண்டாடுவது கார்த்திகை மாதம் மட்டும்தான். ஐப்பசி மாதக் கந்த சஷ்டியில் சூரனை வெற்றி கொண்ட வேலன் வெற்றிக்களிப்போடு இருக்கும் மாதம் இது.
இம்மாதத்தில் பிறந்தவர்களுக்கு ‘கார்த்திகேயன்’ என்றும், ‘கார்த்தி’ என்றும், ‘கார்த்திக்’ என்றும் பெயர் வைப்பது வழக்கம். ‘கந்தன்’ பெயரைச் சூட்டினால் எந்தநாளும் இனிய நாளாக அமையும். அப்படிப்பட்ட பெருமைக்குரிய திருக்கார்த்திகை அன்று பெரியசாமி, வேலுச்சாமி, கந்தசாமி என்று அழைக்கப்படும் பெருமைக்குரிய ஆறுமுக சாமிக்கு அபிஷேக ஆராதனை செய்து வழிபடுவதோடு விரதமும் இருந்து வழிபட்டால் அந்த முத்துக்குமரன் முத்தான வாழ்க்கையை வழங்குவார்.
அந்த இனிய நாள் திருக்கார்த்திகை, கார்த்திகை மாதம் 27-ந் தேதி திங்கட்கிழமை (12.12.2016) அன்று வருகின்றது. பாவங்கள் போக்கும் பரணி தீப வழிபாட்டினையும் மேற்கொள்ளுங்கள். பாவங்கள் அதிகரிக்கும் யுகம் தான் கலியுகம். மனதால் கூட பாவம் செய்யக்கூடாது. பிறருக்கு தீங்கு நினைக்கக் கூடாது என்று முன்னோர்கள் சொல்லி வைத்தனர்.
அங்ஙனம் செய்த பாவங்களுக்கும், பரிகாரம் செய்யத் தினமும் தீபம் ஏற்றி வழிபாடு செய்ய ஆலயங்களை நோக்கி அடியெடுத்து வைக்கின்றார்கள். தெரிந்தோ, தெரியாமலோ செய்த பாவங்கள் அகல திருக்கார்த்திகைக்கு முந்தைய நாளான பரணி நட்சத்திரமன்று (11.12.2016 ஞாயிற்றுக்கிழமையன்று) மாலையில் இல்லம் எங்கும் விளக்கேற்றி வைத்தால் உள்ளம் மகிழும் வாழ்க்கை அமையும்.
திருவிளக்கு வழிபாட்டை முடித்து மறுதினம் திருக்கார்த்திகையன்று வீடு முழுவதும் மெழுகி, கழுவிச் சுத்தம் செய்து முருகப்பெருமானை வரவேற்க வேண்டும். இல்லத்துப் பூஜையறையில் விநாயகப் பெருமான் படத்தோடு அருகில் முருகப்பெருமான் படத்தையும் வைத்து அதற்கு மாலை அணிவித்து வழிபாடு செய்து வந்தால் வாழ்க்கை வளமானதாக அமையும். காலையில் விரதமிருப்பது நல்லது. இரவு விரதத்தைப் பூர்த்தி செய்யலாம்.
கார்த்திகையன்று விரதமிருந்து முத்துக்குமரனை வழிபட்டு வந்தால் முத்தான வாழ்க்கை அமையும். பெண்களுக்கு நல்ல கணவன் அமையவும், ஆண்களுக்கு நல்ல மனைவி அமையவும் குழந்தைச்செல்வம் பெறவும், பெற்ற குழந்தைகள் கல்விச் செல்வம் பெறவும், அறிவு வளரவும் இந்த விரதம் பலன் தருகின்றது.
இந்த விரதத்தின் மூலம் தான் அருணகிரிநாதர் முருகப்பெருமானின் அருளைப் பெற்றார். இரவு வரை விரதமிருக்க முடியாதவர்கள் ஒரு நேரம் மட்டும் விரதமிருப்பதும் உகந்ததாகும். அமாவாசை விரதம் போல, கார்த்திகை விரதமன்றும் காக்கைக்கு உணவளிக்க வேண்டும். அதன் பிறகே நாம் விரதத்தைப் பூர்த்தி செய்ய வேண்டும். பகலில் பசும்பால் மட்டும் அருந்தலாம். பழம் சாப்பிடலாம். அன்று மாலை பால், பழம், பருப்பு பாயசம் சாப்பிடலாம்.
மறுநாள் பச்சரிசி சாதம், பருப்பு, வாழைக்காய் அவியல், கூட்டு ஆகியவற்றை உட்கொள்வது நல்லது. கந்தனுக்குப் பிடித்த கந்தரப்பம், இனிப்பு உருண்டைகளை நைவேத்தியமாக வீட்டில் வைத்து கந்த சஷ்டி கவசம், சண்முக கவசம் போன்ற கவசங்களை பாராயணம் செய்வது நல்லது. அருகில் உள்ள சிவாலயத்திற்குச் சென்று கந்தன் சன்னிதியில் கைகூப்பித் தொழுவது நல்லது.
ஜோதியை வலியுறுத்தும் விதத்தில் ஜோதி வடிவான இறைவனை வழிபட சொக்கப்பனை ஏற்றி வழிபாடு செய்கின்றோம். திரிசங்கு மன்னன் முதல் எண்ணற்ற மன்னர்கள் இழந்த நாட்டைக் கூடத் திரும்பப் பெற்றதாகப் புராணங்கள் கூறுகின்றன.
எனவே இழப்புகளை ஈடுசெய்யும் ஆற்றல் இந்த விரதத்திற்கு உண்டு.
‘கந்தன் பேரைக் கார்த்திகையில் சொல்லிப் பாருங்க-நம்
கவலையெல்லாம் தீருமிது உண்மைதானுங்க!
செந்தில்வேலன் புகழ்படித்தால் செல்வம் சேருங்க!
தேசமெல்லாம் கொடிபறக்கும் வாழ்வைப் பாருங்க!
என்று கவிஞர்பெருமக்கள் கந்தன் புகழைப் பாடிவைத்துள்ளனர்.
நாமும் கந்தனை வணங்கி அருள் பெறுவோம்.

லட்சுமி குபேர விரத வழிபாட்டை முறையாக கடைபிடித்து வந்தால் வாழ்வில் குறைவில்லா செல்வத்தை பெறலாம்.
திருப்பதி ஏழுமலையான் திருமணத்துக்கு கடன் கொடுத்தவர் குபேரன் என்று புராணங்கள் கூறுகின்றன. சிவபெருமான், குபேரன் மீது கருணை கொண்டு, வடக்கு திசைக்கு அதிபதியாக்கி, சங்கநிதி, பத்ம நிதியை காக்கும் பொறுப்பை இவரிடம் ஒப்படைத்தார். இதனால் ‘வாழப்பிறந்தவனுக்கு வடக்கு’ என்ற பழமொழி உருவானது. குபேரன் நீங்காத செல்வத்தை அள்ளித் தருபவர். ஆனால் செல்வத்துக்கு கடவுள் மகாலட்சுமி. செல்வத்தை பக்தர்களுக்கு முறையாக பகிர்ந்து அளிக்க அவர் பணித்தார். எனவே தான் குபேரன் ‘லட்சுமி குபேரன்’ என்று அழைக்கப்படுகிறார்.
குபேரன் தனக்கு ஏற்பட்ட சாபத்தினால் நாடு, நகரம், பொன், பொருள் அனைத்தை யும் இழந்து நின்ற போது, லட்சுமி தேவியை வணங்கினார். அவரிடம் இருந்து எந்திரத்தை பெற்றார். அந்த எந்திரத்தை பயன்படுத்தி எளிய பூஜையை செய்தால் நல்லது கிடைக்கும். பொன், பொருள், செல்வம் நிறையும். வியாபாரம், தொழிலில் அபிவிருத்தி ஏற்படும்.
தீபாவளி அன்று இரவில் குபேரனை விசேஷமாக, நாணயங்களை வைத்து வழிபட வேண்டும். சிவபெருமானின் உற்ற தோழரான குபேரனுக்கு என்று ஒரு மந்திர சதுக்கம் உண்டு. எந்தப்பக்கம் கூட்டினாலும் 72 வரும். இந்த சதுரம் குபேரனுக்கு உரியதாக நெடுங்காலமாக வழிபட்டு வருகிறது.
வியாழக்கிழமை மற்றும் பூரம் நட்சத்திரம் கூடிய நாளில் இந்த குபேர சக்கரத்தை அல்லது எந்திரத்தை பிரதிஷ்டை செய்வது நல்லது.
லட்சுமி குபேர பூஜை செய்ய தீபாவளி திருநாள் உகந்தது. மேலும் சித்திரை, வைகாசி, ஆனி, ஆவணி, கார்த்திகை மாதங்களில் பூராட்டாதி நட்சத்திரம் வரும் நாளில் பூஜை செய்வது மிகுந்த பலன்களை தரும். ஒவ்வொரு வாரமும் வியாழக்கிழமை மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரை குபேர காலமாகும். இந்த நேரத்தில் கடன் தொல்லை, வியாபாரத்தில் நஷ்டமடைந்தோர் 5 வியாழன் மாலை, குபேர தீபம் ஏற்றி லட்சுமி குபேர நாமம் செய்தால் பலன் கிடைக்கும்.
இந்த பூஜை சிறப்பு மிக்கது. குபேரன் தனது செல்வம் அனைத்தையும் இழந்து நின்ற போது லட்சுமி தேவியை வணங்கி எந்திரத்தைப் பெற்றான். அந்த எளிய குபேர பூஜையை விரதம் இருந்து செய்ய நலம் விளையும். இதை செய்வதால் கடன்கள் தீரும். செல்வம் பெருகும். ஆண்டுக்கு 2 முறை செய்தால் பணத்தட்டுப்பாடு இருக்காது.
குபேர எந்திரபூஜையை மேற்கொள்ளும் போது ஒரே மாதிரியான நாணயங்களை எடுத்து வைத்து கொள்ள வேண்டும். பூஜை அறையில் கோலம் போட வேண்டும். எண்களை வெள்ளை அரிசி மாவினாலும், கட்டங்களை சிவப்பு குங்குமத் தினாலும், வார்த்தைகளை மஞ்சள் பொடியினாலும் போட வேண்டும். ஒவ்வொரு கட்டத்துக்கும் நாம் ஏற்கனவே சேர்த்து வைத்துள்ள நாணயத்தை வைத்து தொடர்ந்து 9 வெள்ளிக்கிழமைகள் அல்லது 9 பவுர்ணமி என விரதமிருந்து பூஜிக்க வேண்டும். அதே தினங்களில் 9 நாட்கள் தொடர்ந்து பூஜை செய்ய வேண்டும். அந்த எண்களின் பக்கத்தில் எழுத்துகள் அழியாமல் இருக்குமாறு பார்த்துக் கொள்ள வேண்டும். அந்த நாணயங்களை கட்டத்துக்குள் வைக்க வேண்டும்.
குபேர எந்திர கோலம் போட்டு நாணயங்களை அதில் வைத்து முடித்ததும், எந்திரத்தின் முன் சிறிய விளக்கு ஏற்றி வைத்து பூஜையை தொடங்க வேண்டும். ‘மகாலட்சுமி தாயே! என் கடன்கள் விரைவில் தீர வேண்டும். எனக்கு லாபம் கிடைக்க வேண்டும்’ என கூறிவிட்டு ஒவ்வொரு கட்டத்திலும் உள்ள நாணயத்தின் மீதும், பூக்களை போட வேண்டும். அப்படி பூக்களை போடும் போது எழுத்துக்கள் அழிந்து விடாமல் இருக்குமாறு கட்டத்தில் வைத்துள்ள நாணயம் மீதே பூக்களை போட வேண்டும்.
அப்படி 9 முறை வேண்டிக் கொண்டு ஒவ்வொரு கட்டத்திலும் பூவை வைத்து பின் எந்திரத்துக்கு கற்பூரம் காட்டிய பின் அந்த கோலத்தை வணங்கி விட்டு பூஜையை முடிக்க வேண்டும். பூஜை முடிந்த பின்னர் உடனே கோலத்தை அழித்து விடக்கூடாது. மறுநாள் துணியால் துடைத்து எடுக்க வேண்டும்.
மறுநாள் வரை அந்த கோலம் நாணயத்துடன் அப்படியே இருக்க வேண்டும். எந்திரத்தின் மீது நேரடியாக விளக்கு மாற்றால் பெருக்கக்கூடாது. கோலத்தை துடைக்கும் முன்னே 9 நாணயங்களையும் எடுத்து தனியாக வைத்து விட வேண்டும். ஒன்பது நாட்களும் உபயோகிக்கும் 81 நாணயங்களையும் பத்திரமாக எடுத்து வைத்து கொள்ள வேண்டும். அது லட்சுமி தேவிக்கு பூஜிக்கப்பட்ட நாணயம் ஆகும்.
அன்று மாலைக்குள் ஒன்பது சுமங்கலி பெண்களுக்கு வெற்றிலை, பாக்கு, பழம் தர வேண்டும். 9 நாட்களும் பூஜித்த நாணயங்களை லட்சுமி தேவியின் உண்டியலில் போட வேண்டும். அதை போடும் முன்பு தான் அவளுக்கு செலுத்தும் அந்த காணிக்கைகளை போல் தனக்கும் பல மடங்கு செல்வம் தரவேண்டும் என லட்சுமி தேவியை மனமார வேண்டிக் கொள்ள வேண்டும். இந்த பூஜையை செய்பவரால் தொடர்ந்து செய்ய முடியாத நிலை ஏற்பட்டால் வீட்டில் உள்ள வாரிசுகள் செய்யலாம். இதை செய்தால் வீட்டில் அமைதி நிலவும். செல்வம் நிலைக்கும்.

மகாலட்சுமி அருள் கடாட்சம் என்றும் நிலைபெற வேண்டுமா? இப்ப இந்த விரதங்களை தொடர்நது கடைபிடித்து வாருங்கள்.
1. ஹோமம்: ஸ்ரீஸுக்தம் ஹோமம் செய்ய வேண்டும். ஸ்ரீஸுக்தம் என்பது வேதம் என்னும் உத்யானத்தில் பாரிஜாத மரம் போன்றது. வாக்குகளுக்கு அப்பாற்பட்ட லட்சுமியின் பெருமைகளை உணர சாதுக்களுக்கு ஸ்ரீஜுக்தம் கண்களாக அமைந்திருக்கின்றது என்கிறார் மகாகவி வேங்கடாத்ரீ. ஸ்ரீஸுக்தத்தில் லட்சுமி தன்னிடம் வந்திருக்க வேண்டும் என்று வேண்டப் பெறுகிறது. இது வேள்வியின் மூலம் மகாலட்சுமியின் அருளைப்பெறும் வழியை காட்டுகிறது. இது செய்ய இயலாதவர்கள் பாராயணம் செய்யலாம்.
2. பாராயணம்: கனகதாரா தோத்திரம் ஸ்ரீஸ்துதி போன்ற திருவருளும் தேவியின் பெருமை பேசும் திருநூல்களை தினமும் பாராயணம் செய்து வரலாம். பாராயணம் செய்யவும் இயலாதவர்கள் ஜபம் செய்யலாம்.
3. ஜபம்: வில்ல மரத்தடியில் அமர்ந்து ஹக்ரீவ மந்திரத்தை ஜபித்தாலும் திருவருளைப் பெறலாம்.
4. விரதங்கள்: சில விரதங்களை மேற்கொண்டும் மகாலட்சுமியின் அருட்கண்ணோக்கம் பெறலாம். அவையாவன:
சம்பத் கவுரி விரதம் மங்ளகவுரி விரதம்
கஜ கவுரி விரதம் விருத்தகவுரி விரதம்
லலிதா கவுரி விரதம் துளசிகவுரி விரதம்
கேதார கவுரி விரதம் பதரிகவுரி விரதம்
சவுபாக்ய கவுரி விரதம் லாவண்ய கவுரி விரதம்
சம்பா கவுரி விரதம் வரலட்சுமி விரதம்
மேலும் லட்சுமிக்கே உரியது வரலட்சுமி விரதம்.
வெள்ளிக்கிழமை தோறும் மகாலட்சுமிக்கு விரதம் இருப்பது சிறப்பு தரும்.
5. சாப்பிடுவதில் ஒழுங்கு: சாப்பிடுவதில் ஒழுங்கு வேண்டும். பசித்தபின் புசி, கூழானாலும் குளித்துக்குடி, பல்விளக்காமல் காபி குடிக்காதே, குறிப்பிட்ட நேரத்தில் குறைவாக சாப்பிட வேண்டும். தூய உணவை உட்கொள்ள வேண்டும். சாப்பிடுவதற்கு முன் நீர் குடி, உண்டபின் நீர் குடிப்பது நல்லது. சாப்பிடுவதற்கு முன் அதனை இறைவனுக்கு அர்ப்பணிக்க வேண்டும். கிழக்கு நோக்கி உண்டால் நலம் விளையும்.
காலை உணவை 8 மணிக்குள்ளும், மதிய உணவை 1 மணிக்குள்ளும், இரவு உணவை 7 மணிக்குள்ளும் சாப்பிட வேண்டும். உடன் உறங்க கூடாது. மூன்று வேளை உண்பவன் ரோகி, இரண்டு வேளை உண்பவன் போகி, ஒருவேளை உண்பவன் யோகி.
வாரம் ஒருமுறையேனும் உண்ணாதிருக்க வேண்டும். அடிக்கடி சாப்பிடுவது அஜிரணத்திற்கு வழி வகுக்கும். சமையல் அறையில் சுத்தம் தேவை. அங்கே அன்னலட்சுமி இருக்கிறாள்.
6. உடுத்துவதில் ஒழுங்கு: தூய எளிய ஆடைகளை உடுத்த வேண்டும். பெண்கள் பூச்சூடி பொட்டுடன் திகழ வேண்டும். ஆண்கள் உரிய முறையில் திருநீறு அல்லது திருமண் இட்டுக்கொள்ள வேண்டும். வில்வம், தும்பை, தாமரை ஆகியவற்றை ஆடவர், மகளிர் தலையில் சூடக்கூடாது. ஓராடையுடன் பூஜை செய்யக்கூடாது.
7. பேசுவதில் ஒழுங்கு: தேவையான விஷயங்களை மட்டும் தெளிவாகப்பேச வேண்டும். அளவுடன், ஆர்வத்துடன், இனிமையாகப் பேச வேண்டும். உண்மையை எண்ணிய பின் பேசுதல் வேண்டும், ஏற்புடைய முறையில் ஐயந்தீறக பேச வேண்டும். ஒத்துக் கொள்ளுமாறு, ஓசை குறைத்துபேச வேண்டும். இவை லட்சுமிகரமாகும்.
8. அன்றாடக் கடமைகள்: அன்றாடம் செய்ய வேண்டிய கடமைகளை செய்ய வேண்டும். காலையில் எழுதல், கடவுளை தொழுதல், கழிவினைக் கழிதல், பல் துலக்கல், குளித்தல், அனுஷ்டானம் செய்தல், பூஜை செய்தல், வேலையில் ஈடுபடுதல், சந்தியாவந்தனம் செய்தல், திருக்கோயிலுக்கு சென்று வருதல், உலவி வருதல், படித்தல், பாராயணம் செய்தல், கேட்டல், உரிய முறையில் உறங்கல் என நாட்கடமைகள் பல உள்ளன. அவற்றை உரிய நேரத்தில் உரிய முறையில் செய்பவர்களிடம் லட்சுமி என்றும் இருப்பாள்.
9. வாழ்நாள் கடமைகள்: மனிதனுக்குரிய வாழ்நாள் கடமைகள் பல. அவற்றுள் தென்புலத்தார். தெய்வம், விருந்து, சுற்றம், தான் என்று ஐந்திடத்தும் செய்ய வேண்டிய அறநெறியை வழுவாமல் செய்ய வேண்டும். தென்புலத்தார் என்போர் நம் மூதாதையர். இறந்துவிட்ட அவர்களுக்கு ஆற்ற வேண்டிய கடமைகளை செய்ய வேண்டும். தெய்வத்திற்கு உரிய கடன்களை செலுத்த வேண்டும். விருந்தினரை உபசரிக்க வேண்டும். சுற்றத்தினரைப் பேண வேண்டும். தன்னையும் நெறி வழுவாமல் காத்துக் கொள்ள வேண்டும். இந்த ஐந்தும் ஒரு மனிதனின் தலையாய வாழ்நாள் கடமைகள். இவற்றை முறையாக செய்து வந்தால் லட்சுமி நீங்காதிருப்பாள்.
10. உழைப்பே லட்சுமி நிலைத்திருக்க ஒரே வழி.
குந்தி தின்றால் குன்றும் மாளும் என்பது பழமொழி. ஆதலின் உழைக்க வேண்டும். திருமாலின் மார்பிலிருக்கும் லட்சுமி உழைப்பவரின் காலில் இருப்பாள்.

செல்வங்கள் தடை இல்லாமல் கிடைக்க கடைபிடிக்க வேண்டிய விரதத்தை பற்றி கீழே பார்க்கலாம்.
பத்ரச்ரவஸ் என்ற மன்னன், சுரசந்திரிகா தம்பதியரின் மகள் சியாமபாலா. பத்ரச்ரவஸ் மிகச்சிறந்த விஷ்ணு பக்தன். இவன் தனது மகளை சக்கரவர்த்தியான மாலாதரனுக்கு திருமணம் செய்து கொடுத்தான். ஒரு முறை மகாலட்சுமி வயதான சுமங்கலி வேடத்தில், சுரசந்திரிகா அரண்மனைக்கு வந்தாள்.
சுரசந்திரிகாவிடம் வரலட்சுமி விரதத்தைப் பற்றி விரிவாக கூறி அதை கடைப்பிடிக்கும் படி கூறினாள். மகளை பிரிந்த ஏக்கத்தில் இருந்த சுரசந்திரிகா, லட்சுமி தேவியை யாரோ என்று கருதி விரட்டி விட்டாள். லட்சுமி தேவியை விரட்டியதால், சுரசந்திரிகாவும், பத்ரச்ரவஸ் மன்னனும் செல்வங்களை இழந்து, நாட்டையும் இழந்து வறுமை நிலைக்குச் சென்றனர்.
இதைக்கேள்வி பட்ட சியாமபாலா, லட்சுமி தேவியை சமாதானப்படுத்தி, அவரிடம் இருந்து வரலட்சுமி விரத முறைகளை விரிவாக கேட்டு தெரிந்து கொண்டாள். பின்னர் பக்தியுடன் அந்த விரதத்தை கடைப்பிடித்தாள். விரத மகிமையில் அவள் செல்வச் சிறப்பை அடைந்தாள்.
லட்சுமி தேவியை அவமானப்படுத்திய அவளது பெற்றோரும், அந்த விரதத்தை கடைப்பிடித்தனர். அதன் பிறகு சுரசந்திரிகா தான் இழந்த செல்வங்களை மீண்டும் பெற்றாள்.

லட்சுமி குபேர விரதம் இருந்தால் உங்களுடைய லட்சியம் எல்லாம் ஈடேறும்.
அமிர்தயோகம் அல்லது சித்தயோகம் உள்ள (அஷ்டமி, நவமி இல்லாத) ஒரு வெள்ளிக்கிழமை இந்த விரதத்தை அனுஷ்டிக்கலாம். விரதம் கடைப்பிடிக்கும் தினத்துக்கு முதல் நாளே சில பூஜை பொருட்களை தயார் செய்து வைத்துக் கொள்ள வேண்டும். லட்சுமி படம், குபேரன் படம், குபேர யந்தரம் இப்படி லட்சுமி குபேரன் சம்மந்தமாக இருக்கின்ற அனைத்தையும் எடுத்து சுத்தம் செய்து கொள்ள வேண்டும்.
மஞ்சள் தூள், குங்குமம், தேங்காய், வெற்றிலை, பாக்கு, சந்தனம், பழம், பூ, சாம்பிராணி, கற்பூரம், நவதான்யம், தலைவாழை இலை இதெல்லாம் முதல் நாளே வாங்கி வைத்துக் கொள்வது நல்லது. விரதம் இருக்கும் வெள்ளிக்கிழமை அன்றைக்கு காலையிலே எழுந்து குளிச்சிட்டு, சுத்தமான உடை அணிந்து நெத்திக்கு பொட்டு வெச்சுக்கிட்டு தயாராக வேண்டும்.
நல்ல நேத்துல லட்சுமி குபேரன் படம், குபேர யந்தரம் இதை எல்லாம் எடுத்து மஞ்சள், குங்குமம் வெச்சு பூஜையில் வையுங்கள். குபேரன் யந்தரம், படம் மட்டும் இருந்தா வடக்கு திசையிலே வைக்க வேண்டும். படத்துக்கு முன்னால், தலைவாழை இலையை வைத்து அதுமேல் நவதானியத்தையும் ஒண்ணாக் கலக்காம சுத்திவர பரப்பி வைங்க. அதுக்கு நடுவுல ஒரு செம்பை வைத்து சுத்தமான தண்ணீரால் நிரப்பி அதுல கொஞ்சம் மஞ்சள் தூளைப் போட்டு வைக்க வேண்டும்.
செம்பு மேல மஞ்சள் பூசின ஒரு தேங்காயை வைத்து, சுற்றிலும் மாவிலையை சொருகி கலசம் மாதிரி அமைக்க வேண்டும். வெற்றிலை, பாக்கு, பழம், இதோட தட்சணை எல்லாத்தையும் கலசத்துக்கு முன்னால வைத்தல் வேண்டும். கொஞ்சம் மஞ்சள் தூள் எடுத்து சிறிது தண்ணீர் விட்டு சின்னதா பிள்ளையார் பிடிச்சு, வாழை இலையின் வலப்பக்கம் வைத்து குங்குமப் பொட்டு வைக்க வேண்டும்.
படம், யந்தரம், கலசம் மஞ்சள் பிள்ளையார் ஆகியவற்றிற்கு பூக்களை போட்டு ஊதுபத்தி ஏற்றி வைக்கவும். கிழக்கு பார்த்து அமர்ந்து, பிள்ளையார் மந்திரம் ஸ்லோகங்களைக் கூறவும். பின்னர் லட்சுமி ஸ்லோகம், துதியைக் கூறவும், குபேரனை பற்றிய ஸ்லோகம், மந்திரம், துதி ஆகியவற்றைக் கூறவும். எந்தத் துதியும் தெரியவில்லை என்றாலும் கவலைப்பட வேண்டாம்.
மனதிற்குள் கணபதி, லட்சுமி, குபேரனின் திருநாமங்களுடன் போற்றி சேர்த்துக் கூறவும். பின்பு தூப தீபம் காட்டி வாழைப்பழம், பசும்பால் (சர்க்கரை போட்டுக் காய்ச்சியது) பாயசம் என்று முடிந்த நிவேதனத்தை செய்து பகவானுக்கு படைக்கலாம். வெற்றிலை, பாக்கு, பழத்தை சுமங்கலிகளுக்கும், தட்சணையை ஏழைகளுக்கு கொடுக்கவும்.
நியாயமான தேவைகளை நிறைவேற்றிக்க தேவையான செல்வத்தையும் நிலையான சந்தோஷத்தையும், நிம்மதியையும், ஆரோக்கியத்தையும் எல்லோருக்கும் தா...! என்று குபேரனை மனசுக்குள்ளே நினைச்சுக்கிட்டு வேண்டிக் கொள்ள வேண்டும். உங்க வாழ்க்கையில் குறுக்கிடக் கூடிய இன்னல்கள், தடைகள் எல்லாவற்றையும் நீக்கி, வளமும் நலமும் உங்களை வந்தடைய குபேரன் நிச்சயம் அருள் புரிவார்.
இந்த விரதத்தை ஆண், பெண் குழந்தைகள் என்று யார் வேண்டுமானாலும் குறிப்பிட்ட காலம் என்று இல்லாமல் எப்போது வேண்டுமானாலும் கடைப் பிடிக்கலாம். லட்சுமி குபேர விரதம் இருந்தால் உங்களுடைய லட்சியம் எல்லாம் ஈடேறும்.

சிவபெருமானுக்கு உகந்த பிரதோஷ விரதத்தின் மகிமையை தெரிந்து கொள்ளுங்கள்.
மாதம் தோறும் இருமுறை பிரதோஷம் வருகிறது. வளர்பிறை மற்றும் தேய்பிறை திரயோதசி நாட்கள் பிரதோஷ தினங்களாகும். மாலை 4.30 மணி முதல் 6 மணி வரையான நேரமே ‘பிரதோஷ’ வழிபாட்டிற்கான காலமாகும்.
தேவர்களும், அசுரர்களும் அமிர்தம் பெறுவதற்காக திருப்பாற்கடலைக் கடைந்தனர். அப்போது கடலில் இருந்து பல பொருட்கள் வெளிவந்தன. அவற்றை திருமால், இந்திரன் முதலான தேவர்கள் ஏற்றுக்கொண்டனர். ஆனால் அதன்கூடவே கொடிய ஆலகால விஷமும் வெளிப்பட்டது.
இதைக் கண்ட தேவர்களும், முனிவர்களும் பயத்தில் நடுங்கினர். உலக உயிர்களைக் காப்பாற்றும் எண்ணத்தில், அந்த ஆலகால விஷத்தை உண்டார் சிவபெருமான். தன் கணவரின் உடலில் விஷம் பரவக்கூடாது என்பதற்காக, பார்வதிதேவி சிவபெருமானின் கழுத்தை தன் மலர் கரங்களால் பிடிக்க, ஆலகால விஷம் சிவபெருமானின் தொண்டைக் குழியிலேயே நின்றுபோனது.
இதன் காரணமாக ஈசன் ‘நீலகண்டர்’ என்று பெயர்பெற்றார். இறைவன் ஆலகால விஷத்தை உண்டு, ஆனந்த நடனம் ஆடிய நேரம் பிரதோஷ காலம் என்று வணங்கப்படுகிறது. இந்த ஐப்பசி மாதத்தில் வருகிற 12-ந் தேதி மற்றும் 26-ந் தேதிகளில் பிரதோஷம் வருகிறது. அதுவும் சனிக்கிழமைகளில் வரும் மகா பிரதோஷம் என்பது குறிப்பிடத்தக்கது.
சிவபெருமானுக்கு பிரதோஷ விரதம் மிகவும் சிறப்பு வாய்ந்தது. அதிலும் வருடத்திற்கு இருமுறை வரும் சனிப்பிரதோஷம் மிகவும் சிறப்பு வாய்ந்தது.
இந்த சனிக்கிழமைகளில் வரும் பிரதோஷத்திற்கு விரதமிருந்து சிவபெருமானை வழிபட்டால் வாழ்வில் ஏற்படும் துன்பங்களில் இருந்து தப்பலாம்.

ஸ்ரீ மகாலட்சுமி விரதத்தை மேற்கொள்பவர்களுக்கும், அதில் கலந்து கொள்பவர்களுக்கும் செல்வம் பெருகும். அஷ்ட ஐஸ்வர்யங்களும் உண்டாகும்.
ஸ்ரீ மகாலட்சுமி விரதத்தை மேற்கொள்பவர்களுக்கும், அதில் கலந்து கொள்பவர்களுக்கும் செல்வம் பெருகும். அஷ்ட ஐஸ்வர்யங்களும் உண்டாகும். நினைத்த காரியம் கை கூடும்.
மார்கழி மாதம் முதல் வியாழக்கிழமை ஆரம்பித்து ஒவ்வொரு வியாழனன்றும் விரதமிருந்து, கடைசி வியாழனன்று முடிக்க வேண்டும். பிறகு வருடம் முழுவதும் வியாழக்கிழமைகள் தோறும் கதையை மட்டும் படிக்க வேண்டும். இதுதான் குருவார மகாலட்சுமி விரதமாகும்.
நாள் முழுவதும் உபவாசம், இரவில் மட்டும் சாப்பாடு என்பது இவ்விரத கோட்பாடுகளில் ஒன்று. விரதம் முடியும் வியாழக்கிழமை அன்று ஏழு கன்னிப் பெண்கள் அல்லது சுமங்கலிகளை அழைத்து, பிரசாதம், தாம்பூலம், பழம் கொடுக்கலாம்.
பூஜை செய்யும் முறை :
சுத்தம் செய்யப்பட்ட இடத்தில் ஸ்வஸ்திக் அல்லது ஐஸ்வர்ய கோலம், போட்டு, அதன் மேல் பலகையை வைக்க வேண்டும். பலகையின் நான்கு மூலைகளிலும் கோலமிட்டு அதன் நடுவே அரிசி அல்லது கோதுமையை பரப்பி, அதன் மேல் மஞ்சள் மற்றும் குங்குமத்தால் கோலம் போட வேண்டும்.
கலசத்தில் சுத்தமான நீர்பரப்பி, அதனுள் சிறிது அருகம்புல், ஒரு கொட்டைப் பாக்கு மற்றும் ஒரு ரூபாய் நாணயம் போட வேண்டும். பின்னர் ஐந்து விதமான சிறு அளவிலான மரக்கிளைகளை (இலைகளுடன்) கலசத்திற்குள் சொருகவும், மா, பலா, கொய்யா, சப்போட்டா, அரசு, ஆல மரக்கிளைகளே பூஜைக்கு சிறந்ததாகக் கருதப்படுகிறது. இதில் ஏதேனும் ஐந்தை தேர்வு செய்து கொள்ளலாம்.
மேற்குறிப்பிட்ட மரக்கிளைகள் கிடைக்காதவர்கள் ஐந்து வித முள் இல்லாத பூச்செடிகளின் கிளைகளையும் வைக்கலாம். கலசத்திற்கு மஞ்சள், குங்குமத்தால் பொட்டிட்டு அலங்காரம் செய்ய வேண்டும். கலசத்தின் நடுவில் தேங்காயை வைக்க வேண்டும். மகாலட்சுமியின் படத்தையும், எந்திரத்தையும் கலசத்தின் முன்பு வைத்து சந்தனம் குங்குமமிட்டு முடிந்தளவு பூக்களால் அலங்கரிக்க வேண்டும். படத்தின் அருகே ஒன்றேகால் ரூபாய் நாணயம் வைக்க வேண்டும்.
கலசத்திற்கு முன் மஞ்சள் பிள்ளையார் பிடித்து வைக்க வேண்டும். பிறகு நிவேதனப் பொருட்களை கலசத்தின் முன் வைக்கவும். பிறகு ஆசமனம், சங்கல்பம் செய்து விநாயகர் பூஜையையும், ஸ்ரீ மகாலட்சுமி பூஜையையும் செய்ய வேண்டும். அவைகள் முறையே தியானம், பிராணாயாமம், சங்கல்பம், கலச பூஜை, கண்டா பூஜை, தியானம், மஞ்சள், குங்குமம், மலர்களால் வழிபாடு, தூப - தீப நமஸ்காரம், மற்றும் நைவேத்யம் செய்யப்பட வேண்டும்.
பிரசாதமாக வைக்கப்படுவதில் வாழை பழம், மற்ற பல பழ வகைகள் மற்றும் பால் அவசியம், முடிவில் புத்தகத்தில் உள்ள லட்சுமி அஷ்டோத்திரம், மகா லட்சுமியஷ்டகம், ஸ்ரீ மகாலட்சுமி துதி படித்து விட்டு ஸ்ரீலட்சுமி விரத கதை படிக்க வேண்டும். அதன் பின் ஆரத்தி பாடல்களை படித்து ஆரத்தி எடுக்க வேண்டும். இவையாவும் காலையில் செய்ய வேண்டியது. இரவு மீண்டும் பஞ்சோபசார பூஜை செய்து, மகா நைவேத்யம் அளிக்க வேண்டும். இவற்றிலிருந்து ஒரு வெற்றிலையையும் சிறிது நைவேத்தியத்தையும் தனியே எடுத்து வைத்து, அதை அடுத்த நாள் காலை பசு மாட்டிற்குக் கொடுக்க வேண்டும்.
மறுநாள் (வெள்ளிக்கிழமை) காலையில், கலசத்திற்கு ஆரத்தி எடுக்க வேண்டும். பிறகு கலச தீர்த்தத்தை, பூஜை செய்பவர் சிறிது உட் கொண்டு தெளித்து கொண்டு, வீடு முழுவதும் தெளித்து, வந்தவர்களுக்கும் தீர்த்தமாகக் கொடுத்து மீதியை செடியில் ஊற்ற வேண்டும். கீழ் உள்ள அரிசியை, தினமும் சமையல் செய்ய உபயோகப்படுத்தும் அரிசியுடன் சேர்த்து கொள்ளலாம். படத்தின் முன் வைக்கப்பட்டிருக்கும் நாணயத்தை தனியே எடுத்து வைத்துக் கொண்டு எல்லா வியாழக்கிழமைகளிலும் அதையே உபயோகிக்கவும். ஒன்றேகால் ரூபாயும், பூஜித்த பூக்களையும் ஒரு கவரில் போட்டு பத்திரமாக வைக்கவும்.
கடைசி வியாழனன்று பூஜை முடிந்தவுடன், ஒவ்வொரு வியாழனும் சேர்த்து வைத்த பூக்கள், பூஜித்த கலச தேங்காய், பாக்கு இவற்றை கிணற்றிலோ, கடலிலோ சேர்த்து விட வேண்டும். ஒன்றே கால் ரூபாயை பர்சிலேயே பத்திரமாக வைத்துக் கொள்ள வேண்டும்.
இந்த குருவார ஸ்ரீ மகாலட்சுமி விரதம் ஸ்ரீபத்ம புராணத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. பக்தியுடனும் நியமத்துடனும் இந்தப் பூஜை செய்யும் பெண்களை விட்டு மகாலட்சுமியானவள் என்றும் விலகாமல் காப்பாற்றுவாள்.
தனம், தான்யம், புகழ் மற்றும் பூரண அருள் கிடைக்கும். துக்கம், தரித்திரம் விலகும்.
பூரண கிருபை உண்டாகும், குலம் தழைக்கும், ஆசைகள் பூர்த்தியாகும்.

ஒவ்வொரு மாதமும் வளர்பிறை திரிதியை திதிகளில் விரதமிருந்து லட்சுமி பூஜை செய்வது, செல்வத்தைப் பெருக்கும்.
லட்சுமி அருள்பெற நாம் மேற்கொள்ளும் விரதங்களில் முதன்மை பெற்றது வரலட்சுமி விரதம். ஆடி மாத வளர் பிறை வெள்ளிக்கிழமையில் இந்த விரதத்தை கடைபிடிப்பார்கள்.
ஆவணி மாத வளர்பிறை அஷ்டமியும், லட்சுமி விரத நாளாகும்.
ஆவணி வளர்பிறை பஞ்சமியை “மகாலட்சுமி பஞ்சமி” என்று அழைக்கின்றனர். அன்று தொடங்கி அஷ்டமி வரை, நான்கு நாட்கள் இந்த விரதத்தை கடைபிடிக்க வேண்டும். இதற்கு, “மகாலட்சுமி நோன்பு” என்று பெயர்.
கார்த்திகை மாத பஞ்சமியை “ஸ்ரீபஞ்சமி” என்று அழைத்து, அன்று லட்சுமி பூஜை செய்கின்றனர்.
ஐப்பசி மாத பவுர்ணமியன்று மகாலட்சுமியை வழிபட்டால் செல்வம் பெருகும். ஐப்பசி அமாவாசையன்று அல்லது தீபாவளிக்கு அடுத்த நாள் மகாலட்சுமி பூஜை செய்வது குடும்பத்தில் செல்வத்தையும், மகிழ்ச்சியையும் ஒருங்கிணைத்து நமக்கு மேலும், மேலும் சிறப்பைத் தரும்.
புரட்டாசி மாத வளர்பிறை அஷ்டமி முதல் தேய்பிறை அஷ்டமி வரை 16 நாட்கள் விரதமிருந்து, மகாலட்சுமியை வழிபடுவது அஷ்டலட்சுமி விரதம் ஆகும். இந்த விரதத்தை கடைபிடிப்பவர்கள் 16 செல்வங்களையும் நிறைவாகப் பெற்று வாழலாம்.
ஒவ்வொரு மாதமும் வளர்பிறை திரிதியை திதிகளில் லட்சுமி பூஜை செய்வது, செல்வத்தைப் பெருக்கும். குறிப்பாக, அட்சய திரிதியை அன்று லட்சுமி வழிபாடு செய்வது பொன், பொருள் சேர்க்கையை விருத்தி அடையச்செய்யும்.

வெள்ளிக்கிழமை தோறும் மகாலட்சுமிக்கு விரதமிருந்து எப்படி பூஜை செய்ய வேண்டும் என்பதை விரிவாக பார்க்கலாம்.
வெள்ளிக்கிழமை தோறும் மகாலட்சுமி படத்தை அலங்கரிக்கவும். காலையில் ஸ்ரீமகாலட்சுமி படத்தை 12 அல்லது அதன் மடங்குகளில் வலம் வரவும். பால், பழம் அல்லது பாயாசம் நைவேத்தியம் செய்யவும். நெய் தீபம் ஏற்றவும். மகாலட்சுமி அஷ்டகம் அல்லது மகாலட்சுமி துதியை 3 முறை பாடவும்.
நைவேத்தியத்தை பெண் குழந்தைகளுக்கு பிரசாதமாக பகிர்ந்து கொடுக்கவும். இதையே ஆடி மாதம் செய்தால் அதன் பெயர்தான் வரலட்சுமி விரதம். ஆடி மாதம் செய்யும்போது வயதான சுமங்கலிகளை வரவழைத்து அவர்களை வணங்கி ஆசி பெறுவது நன்று.