என் மலர்
முக்கிய விரதங்கள்
செவ்வாய் தோஷம் காரணமாக திருமணம் தடைபடுபவர்கள் 41 செவ்வாய்க்கிழமைகளில் விரதம் இருந்தால் திருமணம் தடையின்றி விரைவாக நடைபெறும்..
செவ்வாய் தோஷம் காரணமாக சிலருக்கு திருமணம் நடைபெறக் காலதாமதம் ஏற்படக்கூடும். அதற்கு பரிகாரம் செய்ய வேண்டியது அவசியமாகும். செவ்வாய் தோஷ பரிகாரங்கள் பல வகைகளில் செய்யப்படுகின்றன.
செவ்வாய்க்கிழமைகளில் வரும் சதுர்த்தி திதி நாளில் விநாயகருக்கு அபிஷேக ஆராதனை செய்து விரதம் இருப்பதால் நல்லவை நடைபெறும். 41 செவ்வாய்க்கிழமை விரதம் இருக்க வேண்டும். விரதநாள் அன்று அதிகாலை எழுந்து நீராடி சிவந்த ஆடை உடுத்தி, செவ்வாய் கிரகத்திற்கு செண்பகப்பூ, சிவப்பு அலரி ஆகிய மலர்களால் அர்ச்சனை செய்ய வேண்டும்.
விரதம் பூர்த்தி செய்யும் நாள் ஐந்து பேருக்கு விருந்து அளிக்க வேண்டும். அவர்களுக்கு சிவப்பு நிறத்தில் ஆடைகள், செம்புச் சொம்பு, தம்ளர் மற்றும் தாம்பூலத்துடன் தட்சணையும் அளித்து அவர்களை வணங்கி ஆசிபெற வேண்டும்.
செவ்வாய் தோஷமுள்ள பெண்ணுக்கு திருமணம் தடங்கலாகிக் கொண்டே வந்தால் வளர்பிறையில் வரும் செவ்வாய்க்கிழமையில் பரிகாரம் செய்ய வேண்டும். அந்த பரிகாரத்தை நாமே நம் வீட்டிலேயே செய்து கொள்ளலாம். வளர்பிறை செவ்வாய்க்கிழமை அன்று அதிகாலை நீராடி சிவந்த ஆடை உடுத்தி மாங்கல்யத்தை தெய்வத்தின் முன் மஞ்சள் சரட்டில் கோர்த்து வைத்து வணங்கி எடுத்து கழுத்தில் கட்டிக் கொள்ள வேண்டும்.
செவ்வாய்க்கிழமை முழுவதும் மாங்கல்யத்தை அவிழ்க்க கூடாது. மறுநாள் காலை நீராடி நெற்றியில் குங்குமமிட்டு தெய்வத்தை வணங்கி மாங்கல்யத்தை அவிழ்த்து ஏதாவது ஓர் ஆலயத்தின் உண்டியலில் சிறிது காணிக்கை சேர்த்து சமர்ப்பித்து விட வேண்டும். சிவந்த ஆடையை யாருக்காவது தானம் செய்து விட வேண்டும்.
இவ்விதம் செய்தால் திருமணம் தடையின்றி விரைவாக நடைபெற்று விடும்.

சபரிமலை ஐயப்ப பக்தர்களின் விரத முறையில் கடைபிடிக்க வேண்டிய விதிமுறைகளை கீழே விரிவாக பார்க்கலாம்.
1. மாலை அணிவிக்கும் நாள்: கார்த்திகை மாதம் முதல் தேதியன்று மாலை அணிய வேண்டும். அன்று நாள் கிழமை பார்க்க வேண்டியதில்லை. அல்லது சபரிமலைக்கு செல்லும் தினத்திற்கு முன் 41 நாட்கள் விரதம் கடைப்பிடிக்கும் படியாக நல்ல நாள் பார்த்து மாலை அணிய வேண்டும்.
2. மாலை அணியும் முறை: 54 அல்லது 108 மணிகள் உள்ள துளசி மணிமாலை அல்லது ருத்திராட்ச மாலையை பல முறை சபரிமலை சென்று வந்த சாமியார் ஒருவரைக் குருவாகக் கொண்டு கோவிலிலோ, விளக்கின் முன்போ அல்லது குருநாதரை வணங்கி அணிய வேண்டும்.
3. கடை பிடிக்க வேண்டிய விரதங்கள்: (அ) நாள் தோறும் ஆலய வழிபாடு செய்ய வேண்டும். காலை மாலை இரு வேளைகளிலும் நீராடி பஜனை வழிபாடு செய்ய வேண்டும். (ஆ) பிரம்மச்சரிய விரதத்தை கட்டுப்பாடாக கடை பிடிக்க வேண்டும். (இ) காலை மாலை 108 சரணங்கள் துளசி, நாட்டுச் சக்கரை, பால் இவற்றுள் ஒன்றைச் சிறிது வைத்து நைவேத்தியம் செய்து வணங்க வேண்டும்.
4. தவிர்க்க வேண்டிய பொருட்கள், காரியங்கள்:
1. (அ) குடைப்பிடிப்பது (ஆ) காலணிகள் உபயோகிப்பது (இ) சவரம் செய்து கொள்வது (ஈ) புலால் உண்பது (உ) பொய்களவு, சூதாடுதல், போதை வஸ்துகள் கூடாது.
2. பகல் நேரத்தில் தூங்கக் கூடாது. இரவில் படுக்கை விரிக்காமல், தலையணை இல்லாமல் சிறு துண்டை மட்டும் விரித்து உறங்க வேண்டும்.
3. துக்ககாரியங்களில் ஜயப்பன்மாரும், அவர் குடும்பத்தவரும் கலந்து கொள்ளக் கூடாது அப்படி கலந்த கொள்ள நேரிட்டால்தான் அணிந்த மாலையை குருநாதர் மூலம் கழற்றி ஐயப்பன் படத்தில் மாட்டிய பின்னர்தான் கலந்து கொள்ள வேண்டும்.
4. குழந்தை பிறந்த வீட்டிற்கு அல்லது மஞ்சள் நீராட்டு விழா வீட்டிற்குச் செல்லக் கூடாது.
5. இரு முடி கட்டும் முறைகள்:
1. இரு முடிக்கட்டும் பூஜையை வீட்டிலேயோ அல்லது கோவிலிலோ நடத்த வேண்டும்.
2. இரண்டு அறை கொண்ட நீளமான பை ஒன்று செய்த அதில் பூஜை சாமான்கள், கற்பூரம் அபிஷேக, நைவேத்திய சாமான்கள், காணிக்கைப் பணம் இவைகளை முன் கட்டிலும் யாத்திரையின் போது தேவையான உணவுப் பண்டங்கள் பின் கட்டிலும் வைத்துக் கொண்டு பையைத் தலையில் எடுத்துச் செல்ல வேண்டும். இதுதான் இரு முடி எனப்படும்.
3. நைவேதியத்திற்கு பசுவின் நெய்யை உருக்கி ஒரு தேங்காயின் கண்ணைத்திறந்து இளநீரை எடுத்து விட்டு அதற்குள் காய்ச்சிய நெய்யை நிரப்பிக் கார்க்கினால் இறுக மூட வேண்டும்.
6. யாத்திரை செல்லும் முறை:
1. சாஸ்தா பூஜை அன்னதானம் செய்து யாத்திரை புறப்பட வேண்டும். இரு முடிச் சுமந்து வீட்டை விட்டுப் புறப்படும் போது எவரிடமும் விடை பெறக் கூடாது. திரும்பிக் கூடப் பார்ப்பது கூடாது.
2. கன்னி ஐயப்பன்மார்கள் யாத்திரை புறப்பட்டதிலிருந்து சன்னிதானம் அடையும் வரை தானே தலையிலிருந்து இரு முடியை இறக்கி வைக்கவோ ஏற்றி கொள்ளவோ கூடாது.
குருநாதர் மூலமே இறக்க வேண்டும். ஏற்ற வேண்டும்.

கார்த்திகை மாதம் கிருத்திகை நட்சத்திரம் கூடிய இந்நாள் சிறப்புடையது. இந்த நாளில் விரதமிருந்து இறைவனை வேண்டிக்கொண்டால் வாழ்வில் வசந்தம் வீசும்.
டிசம்பர்-12 (திங்கள்) கார்த்திகை திருநாள்:- இந்நாளில் விளக்கு வைத்து வீடு முழுவதும் அகல் விளக்குகள் ஏற்றிக் கடவுள் வழிபாடு செய்தல் வேண்டும்.
கார்த்திகை நோன்பு: கார்த்திகை மாதம் கிருத்திகை நட்சத்திரம் கூடிய இந்நாள் சிறப்புடையது. இன்று திருவண்ணாமலையில் தீப தரிசனம் சிறப்பாக நடைபெறும். எல்லா சிவத்தலங்களில் இன்று தீப ஜோதி ஏற்றுவர். சிலர் இந்நாளில் வீட்டில் கலசம் வைத்தோ அல்லது ஆலயங்களுக்குச் சென்றோ நோன்பு நோற்றுவருவர்.
இந்நாளில் வெற்றிலைப் பாக்கு, பழம், மஞ்சள் முதலியவைகளில் வகைக்கு 21 வீதம் தட்டி வைத்து குடும்பத்தில் உள்ளவர்களுக்கு உண்டான நோன்பு கயிறுகளையும் அத்துடன் வைத்துப் பெண்கள் நோன்பு நோற்று பின்னர் தினைமாவில் வெல்லத்தை போட்டுப் பிசைந்து அதை மாவிளக்காக்கி அதில் நெய் ஊற்றி ஏற்றிய பின்னர் கற்பூர ஆரத்தி செய்து அதன் பின்னர் நோன்புக் கயிறுகளை அணிந்து கொள்வர். பெண்கள் தங்கள் குடும்பம் சிறப்பாக விளங்க வேண்டுமென்றும் தாங்கள் தீர்க்க சுமங்கலியாக இருக்க வேண்டுமென்றும் இந்த நோன்பினை நோற்பர்.

பங்குனித் திங்கள் விரதம் பெண்களால் கடைப்பிடிக்கப்படுவது வழக்கம். அன்றைய தினம் ஆலயம் சென்று சிவனை வணங்கினால் பெண்களுக்கு மாங்கல்ய நலம் வரும்.
பங்குனித் திங்கள் விரதம் பெண்களால் கடைப்பிடிக்கப்படுவது வழக்கம். இந்நாளில் அம்பாளுக்கு அபிஷேக ஆராதனைகள் செய்து வழிபடுவார்கள். குறிப்பாக அம்மன் ஆலயங்களில் பங்குனி மாதம் பொங்கல் வழிபாடு நடைபெறுவது வழக்கம்.
அன்றைய தினம் பெண்கள் நோன்பிருந்து அபிராமி, அந்தாதி முதலிய பக்திப் பாடல்களை படித்து மறுநாள் உதயத்திற்கு முன் பாராயணம் செய்தால் நல்லது. இப்படிச் செய்தால் சகல செல்வங்களும் பெற்று வாழ்வர்.
உத்திரத்தன்று சிவாலயங்களில் சிறப்பு பூஜை, வழிபாடுகள் நடக்கும். ஆலயம் சென்று சிவனை வணங்கினால் பெண்களுக்கு மாங்கல்ய நலம் வரும். கணவர்களின் துன்பம், நீங்காத நோய்கள் தீரும். குடும்பத்தில் ஒற்றுமை ஓங்கி குதூகலம் ஏற்படும். கணவன்-மனைவி இடையே இருந்து வந்த கசப்புகள் நீங்கி அன்பு வளரும்.

கார்த்திகை மாதத்து கிருஷ்ணபட்சப் பிரதமையில் தொடங்கி, மார்கழி மாதத்து சுக்ல பட்ச சஷ்டி வரையிலான 21 நாட்கள் அனுஷ்டிக்கப்படும் விரதம் ‘விநாயகர் சஷ்டி விரதம்’ ஆகும்.
கார்த்திகை மாதத்து கிருஷ்ணபட்சப் பிரதமையில் தொடங்கி, மார்கழி மாதத்து சுக்ல பட்ச சஷ்டி வரையிலான 21 நாட்கள் அனுஷ்டிக்கப்படும் விரதம் ‘விநாயகர் சஷ்டி விரதம்’ ஆகும். விநாயகர் சதுர்த்தியை அடுத்து, விநாயகப்பெருமானை வழிபடக்கூடிய சிறப்பு மிக்க விரதத்தில் ஒன்று இது.
இந்த விரதத்தை மிகுந்த பயபக்தியோடு கடைப்பிடிக்க வேண்டியது அவசியம். ஒருமுறை விக்கிரமாதித்தனின் மனைவியான இலக்கண சுந்தரி, இவ்விரதத்தைக் கடைப்பிடித்தாள். ஆணவம் மிகுதியால், இடையில் நோன்பை கைவிட்டு, கையில் கட்டியிருந்த கயிற்றை கழற்றி எறிந்தாள். அதன் விளைவாக, அவளது கணவன் விக்கிரமாதித்தனால் துரத்தப்பட்டு, காட்டிலேயே சில காலம் வாழும் நிலைக்குத் தள்ளப்பட்டாள். பின்னர் காட்டில் இருந்தபடியே விநாயகர் சஷ்டி விரதத்தை கடைப்பிடித்து, பிரிந்த தனது கணவருடன் சேர்ந்தாள் என்பது புராணக் கதை.
இந்த விரதத்தை அனுஷ்டிப்பவர்கள், 21 இழையிலான நூல் காப்பை விரதத்தின் தொடக்க நாளில் கட்ட வேண்டும். இந்த நூலை ஆண்கள் தனது வலது கையிலும், பெண்கள் தங்களது இடது கையிலும் கட்ட வேண்டியது முக்கியம். மேலும் ஒரு நேரம் மட்டுமே உணவு உண்டு, அவரவர் வசதிக்கேற்ப விநாயகருக்கு விருப்பமான நைவேத்தியம் படைத்து வழிபாடு செய்யலாம்.
இளநீர், கடலை, அவல், பொரி, எள்ளுருண்டை போன்றவற்றை நைவேத்தியமாக படைக்கலாம். மேலும் அறுகம்புல், எருக்கம்பூ, பன்னீர்பத்திரம் ஆகியவற்றால் அர்ச்சனை செய்தும் இறைவனை வழிபடலாம். விநாயகர் சஷ்டி விரத நாட்களில், வீட்டில் இருந்தபடியோ அல்லது தினமும் ஆலயங்களுக்கு சென்றோ, விநாயகரின் கதையை வாசித்தும், அவரது துதிப் பாடல்களைப் பாடியும் விரதத்தை கடைப்பிடிக்க வேண்டும். இறுதி நாளான சஷ்டி அன்று முழு உபவாசம் இருந்து, மறுநாள் காலையில் கையில் கட்டியிருந்த நோன்புக் கயிற்றைக் கழற்றிய பின்னர், விநாயகரை பாராயணம் செய்து விரதத்தை முடிக்க வேண்டும்.
விநாயகருக்குப் பிரியமான மோதகத்தின் வெளித்தோற்றம் மாவு போன்று இருக்கும். ஆனால் உள் பாகத்தில் வெல்லமும், தேங்காயும் கலந்த சுவைமிக்க ‘பூரணம்’ என்ற பொருள் இருக்கும். மேலே உள்ள மாவுப் பொருள் தான் அண்டம். உள்ளே இருக்கும் சுவையான பொருள், பரிபூரணமாகிய பரம்பொருளைக் குறித்து நிற்பதாகும். சுவை மிகுந்த இறைவனின் நற்குணங்களை மா என்னும் மாயை மறைத்து நிற்கிறது. அந்த மாயையை உடைத்தெறிந்தால், பூரணத்துவமான நற்குணங்கள் வெளிப்படும் என்பதே இதன் பொருள்.
விநாயகர் சஷ்டி விரதத்தை அனுஷ்டிப்பதால் வாழ்வில் எல்லாப் பேறுகளும் கிடைக்கும். மேலும் கையில் எடுக்கும் காரியங்கள் வெற்றியாகும்.

சபரிமலை ஐயப்பனுக்கு 41 நாட்கள் விரதம் இருக்க வேண்டும் என்று சொல்வதற்கான காரணத்தை கீழே விரிவாக பார்க்கலாம்.
எந்த ஒரு விரதமும் நல்லபடியாக முடிய அனைத்துத் தேவர்களின் அருளாசியும் வேண்டும். 27 நட்சத்திரங்கள், 12 ராசிகள், நவகிரகங்களின் அருளும் வேண்டுமென்றால் (27+12+9) 48 நாட்கள், அதாவது ஒரு மண்டலம் விரதம் இருக்க வேண்டும் என்று கூறப்படுகிறது. ஆனால், சபரிமலை விரதத்தைப் பொறுத்தவரை ஒரு மண்டலம் என்பது 41 நாட்களையே குறிக்கிறது.
மலைக்கு மாலை அணிந்த நாள் முதல், தினமும் இரண்டு வேளை குளிர்ந்த நீரில் குளிப்பது, நெற்றியில் சந்தனமிட்டு, சாமியின் 108 சரணங்களைச் சொல்வது, உணவிலும் கட்டுப்பாட்டைக் கடைப்பிடிப்பது, தலையணையின்றி உறங்குவது, ஆசாபாசங்களைக் கட்டுப்படுத்திக்கொள்வது என எல்லாமே நமது சுயகட்டுப்பாடு, ஒழுங்குமுறைக்கான விரதங்கள்தான்.
அதனால் 41 நாட்கள் முழுமையாக விரதம் இருந்து மலைக்குச் செல்வது சிறப்பு. கடுமையான மலைப் பாதையில் சிரமம் இல்லாமல் ஏறுவதற்கு இது உதவியாக இருக்கும். சபரிமலைக்கு முதல் முறையாகச் செல்லும் கன்னிசாமிகள், கட்டாயம் 41 நாட்கள் விரதம் இருந்து செல்வதே நன்று.

சாதாரண பிரதோஷ வழிபாடு தரும் பலன்கள் போன்று ஆயிரம் மடங்கு பலன் தரக்கூடியது இந்த சனி பிரதோஷம். இன்று விரதம் அனுஷ்டிப்பது எப்படி என்பதை கீழே பார்க்கலாம்.
சாதாரண பிரதோஷ வழிபாடு தரும் பலன்கள் போன்று ஆயிரம் மடங்கு பலன் தரக்கூடியது இந்த சனி பிரதோஷம்.
சாதாரண பிரதோஷ வழிபாடு தரும் பலன்கள் போன்று ஆயிரம் மடங்கு பலன் தரக்கூடியது இந்த சனிப் பிரதோஷம். சனிக்கிழமையில் வரும் பிரதோஷம் சனி பிரதோஷம் என்று அழைக்கப்படுகிறது. இத்தகைய சிறப்பு வாய்ந்த சனி பிரதோஷம் இன்று சிறப்பாக அனைத்து கோவில்களிலும் கொண்டாடப்படுகிறது. சாதாரண பிரதோஷ வழிபாடு தரும் பலன்கள் போன்று ஆயிரம் மடங்கு பலன் தரக்கூடியது இந்த சனி பிரதோஷம்.
ஈஸ்வரனையும், சனிஸ்வரனையும் அன்று விரதமிருந்து வழிபடுவதால் சனி பிரதோஷத்துக்கு கூடுதல் சிறப்பு கிடைத்துள்ளது. சிவபெருமான் தேவர்களை காப்பாற்ற ஆலகால நஞ்சை உண்ட நாள் சனிக்கிழமை. எனவே, பிரதோஷ நேரம் சனிக்கிழமை அன்று வரும் சனி பிரதோஷம் என சிறப்பு பெறுகிறது. இத்தகைய சிறப்பு வாய்ந்த சனி பிரதோஷத்தன்று எவ்வாறு விரதம் இருக்க வேண்டும் என்று பார்க்கலாம்.
இன்று நாள் முழுக்க முழு விரதம் இருந்து, நீர் ஆகாரம் மட்டும் எடுத்து, மாலையில் பிரதோஷ வேளையில் சிவன் கோயிலுக்குச் செல்ல வேண்டும். ஒரு கைப்பிடி காப்பரிசி (வெல்லமும் அரிசியும் சேர்த்தது), ஒரு பிடி வன்னி இலை, ஒரு பிடி அருகம் புல் ஆகியவற்றை நந்தியின் கொம்புகளுக்கிடையில் அர்ப்பணித்து, விளக்கேற்றி நந்தியையும் சிவனையும் தொழுதால் சனி பகவானால் உண்டாகும் சகல துன்பங்களும் விலகிப் போகும்.
நந்திக்கும் சிவனுக்கும் வில்வ மாலை, திராட்சை மாலை அணிவித்தல் சிறப்புடையது. பிரசாதம் பெற்று விரதத்தை முடிக்கலாம். பிரதோஷ நாளான திரயோதசியன்று சூரிய அஸ்தமன நேரத்தில், அதாவது மாலை 4.30 முதல் 6.30 மணிக்குள் வழிபாடு செய்வதே முறை. இதற்கு மாறாக இரவு 8 மணி வரை இந்தவழிபாட்டைச் செய்வது தவறு.
பிரதோஷ நேரத்துக்குள் அபிஷேக ஆராதனைகள், ஸ்வாமி புறப்பாடு ஆகியவற்றைச் செய்தால்தான் பிரதோஷ பூஜையின் முழுமையான பலன்களைப் பெற முடியும். மாலை ஆறரை மணியுடன் பிரதோஷ காலம் முடிந்து விடுகிறது. அதன் பின்னர் செய்வது ‘அந்திபூஜை’யாக இருக்கும். அது பிரதோஷ பூஜையாகாது. பிரதோஷ நேரத்தில் மூலவரின் சக்தி, உற்சவ மூர்த்திக்கு வந்து விடுவதால், அப்போது மூலமூர்த்திக்கு எந்த வித வழிபாடும் செய்யக் கூடாது என்ற கருத்து, சரியல்ல.
பிரதோஷ காலத்தில் மூலமூர்த்திக்கு அபிஷேக, ஆராதனைகளைத் தொடர்ந்து செய்யலாம். சில இடங்களில் பிரதோஷ நேரத்தில் மூலவருக்கு முன்னாலுள்ள நந்தீஸ்வரருக்கு மட்டுமே முக்கியத்துவம் தருகின்றனர். பிரதோஷத்தின் போது பிரபஞ்சத்திலுள்ள அனைத்து நந்திகளின் திருக்கொம்புகளிடையேயும் சிவபெருமான் நடனமாடுவதால், ஆலயத்தின் அனைத்து நந்தி மூர்த்திகளுக்குமே வழிபாடு செய்வதுதான் முறை.
- ஆன்மிகம் பற்றிய உங்கள் கருத்துக்களை mmastronews@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.

சபரிமலைக்கு செல்லும் ஐயப்ப சுவாமிகள் பிரம்மச்சரிய விரதத்தை கடுமையாக அனுஷ்டிக்க வேண்டும். அது ஏன் என்பதற்கான காரணத்தை கீழே பார்க்கலாம்.
சபரிமலைக்கு செல்கிறவர்கள் பிரம்மச்சரிய விரதத்தை மிகக் கடுமையாக அனுஷ்டிக்க வேண்டும். இது ஏன் தெரியுமா?
மக்களை மிகவும் கொடுமைப்படுத்தி வந்த அசுரன் மகிஷனை தேவி சம்ஹரித்தவிவரம் தேவி மகாத்மியத்தில் வருகிறது. இந்த மகிஷாசுரனுக்கு மகிஷி என்ற ஒரு சகோதரி. இவள் பழிக்குப்பழி வாங்குவதாக சபதம் செய்து பிரம்மாவைக் குறித்து கடுமையான தவத்தை மேற்கொண்டாள்.
பிரம்மாவும் அவள் முன் தோன்றினார். அவரிடம் மகிஷி மூன்று வரங்களைக் கேட்டாள். முதல் வரத்தால் பதினான்கு உலகங்களையும் தன் வசமாக்கிக்கொண்டாள். தன் ரோமங்களிலிருந்து தன்னைப் போன்ற வீராங்கனைகள் தோன்ற வேண்டும் என்பது இரண்டாவது வரம். மூன்றாவது வரம் ஒரு ஆணுக்கும் ஆணுக்கும் பிறக்கும் ஒருவரால்தான் தனக்கு மரணம் உண்டாக வேண்டும் என்றும், அவர் 12 ஆண்டு காலம் மனித குலத்தில் வசித்து பிறகு பிரம்மச்சரிய பலத்தால்தான் தன்னை கொல்ல வேண்டும் என்றும் அவன் கேட்டுப் பெற்றாள்.
ஆணுக்கும் ஆணுக்கும் குழந்தை பிறக்காது. அப்படியே பிறந்தாலும் அது 12 வயது வரை உயிரோடிராது. அப்படியே இருந்தாலும் பிரம்மச்சரிய விரதத்தை கடைபிடிக்காது. ஆகவே தனக்கு மரணம் என்பது இல்லை என்பது மகிஷியின் எண்ணம்.
ஐயப்பன் பூவுலகில் பம்பை நதிக்கரையில் குழந்தையாகப் பிறந்து பந்தள அரசனால் வளர்க்கப்பட்டு புலிப்பாலுக்காகக் காட்டுக்குச் சென்ற போது மகிஷியை சம்ஹரித்தார். அவள் பூத உடல் வளரவே அவள் மீது கல்லை போட்டு அவ்வளர்ச்சியை நிறுத்தினார்.
சபரிமலை யாத்திரையில் இந்தக் குறிப்பிட்ட இடத்தில் கன்னி ஐயப்பன்மார் நதியில் ஸ்நானம் செய்யும் போது கிடைக்கும் கல்லை இந்த இடத்தில் போடுவது இன்றும் வழக்கமாக இருந்து வருகிறது.
மகிஷியின் உடல் மீது ஐயப்பன் நடனம் செய்ததால் சாபம் நீங்கியது. மகிஷி ஒரு சுந்தரவதியாகக் தோன்றினாள். இவள் ஐயப்பனை மணக்க விரும்பினாள். ஐயப்பன் அவள் மீது கருணை கொண்டு உனக்கு இனி மஞ்ச மாதா எனப் பெயர். நான் பிரம்மச்சரிய விரதத்தை அனுஷ்டிக்க முடிவு செய்திருப்பவன்.
இருந்தாலும் மகா உற்சவத்தின் போது இந்த கல்லிடம் குன்றில் என்று கல் விழாமல் இருக்கிறதோ, சரங்குத்தி மரத்தில் சரம் குத்தப் படாமல் இருக்கிறதோ அன்று உன்னை மணந்துக் கொள்கிறேன் என்றாராம். கல் விழாமல் இருப்பதும் இல்லை. சரங்குத்தியில் சரம் இல்லாமல் இருப்பதில்லை. ஆகவே ஐயப்பன் நித்திய பிரம்மசாரியாகவே இருந்து வருகிறார்.

மார்கழி மாதம் சுக்லபட்சத்தில் வரும் விநாயகர் சஷ்டி அன்று மட்டுமாவது முறைப்படி விரதம் அனுஷ்டித்து விநாயகப் பெருமானின் பூரண அருளைப் பெறலாம்.
மாகதர் என்னும் முனிவருக்கும், விபுதை என்ற அசுரப் பெண்ணுக்கும் பிறந்தவன் கயமுகாசுரன். அவன் சிவபெருமானைக் குறித்துத் தவமியற்றி, எந்த ஆயுதத்தாலும் தான் அழியக்கூடாது என்று வரம் பெற்றான். வரம் பெற்ற செருக்கில் தேவர், முனிவர் உள்ளிட்ட அனைவரையும் கொடுமைப்படுத்தினான். அனைவரும் சிவபெருமானிடம் பிரார்த்தித்தனர்.
சிவபெருமான் விநாயகப் பெருமானை அழைத்து, பூத கணங்களுடன் சென்று கயமுகாசுரனை அழிக்கும்படி ஆணை இட்டார். அதேபோல், விநாயகரும் பூதகணங்களுடன் சென்று, கய முகாசுரனுடன் போர் புரிந்தார். விநாயகர் ஏவிய எந்த ஆயுதத்தாலும் கயமுகாசுரனை அழிக்க முடியவில்லை.
அப்போதுதான் அவன் பெற்றிருந்த வரம் நினைவுக்கு வரவே, தன்னுடைய தந்தங்களில் ஒன்றை உடைத்து, கயமுகாசுரனின் மேல் ஏவினார் விநாயகர். அது கயமுகாசுரனைத் தாக்கியது. மார்பில் ரத்தம் பெருக்கெடுக்க, வலியால் துடித்த கயமுகாசுரன் மூஷிக வடிவம் கொண்டு ஓடினான். தந்தமும் அவனைத் துரத்தியது.
ஓடி ஓடிச் சோர்ந்துபோன கயமுகாசுரன் இறுதியில் விநாயகரைச் சரண் அடைந்தான். விநாயகப் பெருமானும் அவனை மன்னித்து, தனது வாகனமாக ஏற்றுக்கொண்டார்.
கயமுகாசுரனை அடக்கி ஆட்கொண்டு திரும்பிய விநாயகப் பெருமானை பூதகணங்களின் அதிபதியாக நியமித்தார் சிவபெருமான். அன்று முதல், விநாயகருக்கு கணபதி என்ற பெயர் ஏற்பட்டது.
முருகப் பெருமான் சூரபத்மனை மயில் வாகனமாக ஆட்கொண்டு அருளியதுபோல், பிள்ளையாரும் கயமுகாசுரனை சம்ஹாரம் செய்யாமல், வாகனமாக ஏற்று அருள்புரிந்தார். இதனால், பிள்ளையார் சஷ்டி விரதம் இன்னும் விசேஷமாகும்.
பிள்ளையார் சஷ்டி விரதம் அனுஷ்டிக்கும் முறை :
பிள்ளையார் சஷ்டி விரதம் என்பது, கார்த்திகை மாதம் கிருஷ்ண பட்ச பிரதமை தொடங்கி (மார்கழி மாதம் சுக்லபட்ச சஷ்டி திதி வரை) 21 நாட்கள் அனுஷ்டிக்கும் விரதமாகும்.
கார்த்திகை மாதம் கிருஷ்ணபட்ச சஷ்டியன்று காலையில் ஸ்நானம் செய்த பிறகு, உடல் மனத் தூய்மை யுடன் விரதத்தைத் தொடங்க வேண்டும். விரத பங்கம் ஏற்படாமல் இருப்பதற்காக 21 இழைகளுடன் கூடிய நூலை மஞ்சளில் தோய்த்து, விநாயகரை தியானித்து, ஆண்கள் வலது கரத்திலும் பெண்கள் இடது கரத்திலும் காப்பாகக் கட்டிக் கொள்ளவேண்டும்.
முதல் 20 நாட்கள் ஒருவேளை மட்டும் உணவு உண்டு, உபவாசம் இருக்கவேண்டும். இறுதி நாளில் முழு விரதம் இருந்து, இரவு விநாயகரை தரிசித்து வழிபட்டு, விரதத்தைப் பூர்த்தி செய்யவேண்டும்.
21 நாட்களும் விநாயகரின் திருக்கதைகளைப் படிப்பதும், விநாயகரின் திருவிளையாடல்களைப் பேசக் கேட்பதும் மிகப் புண்ணியமாகும். விநாயகர் ஆலயங்களில் விசேஷ அபிஷேகங்கள், ஆராதனைகள் நடைபெற்ற பின், பவித்ரமான விநாயகப் பெருமானின் சரிதத்தைப் பாராயணம் செய்யலாம். உபன்யாசம் செய்யக் கேட்டும் பயன் பெறலாம்.
21 நாட்கள் விரதம் இருக்க இயலாதவர்கள், மார்கழி மாதம் சுக்லபட்சத்தில் வரும் விநாயகர் சஷ்டி அன்று மட்டுமாவது முறைப்படி விரதம் அனுஷ்டித்து விநாயகப் பெருமானின் பூரண அருளைப் பெறலாம்.

லட்சுமி கடாட்சம் அருளும் வெள்ளிக்கிழமை விரதம் கடைபிடித்தால் ஏற்படும் நன்மைகளை பற்றி கீழே பார்க்கலாம்.
வெள்ளிக்கிழமை...
ஆன்மிக வழிபாட்டிற்கு சிறப்புக்குரிய நாளாகவே வெள்ளிக்கிழமையை மக்கள் பாவித்து வருகிறார்கள். இந்த நாளில் அம்பாளை வழிபடுவது விசேஷம். மகத்துவம் மிகுந்த வெள்ளிக்கிழமையை கொண்டு விரதம் ஒன்று அனுஷ்டிக்கப்பட்டு வருகிறது. அதுதான் வெள்ளிக்கிழமை விரதம். இந்த விரதம் முருகப்பெருமான், லட்சுமிதேவி, நவக்கிரகங்களில் ஒருவரான சுக்ரன் ஆகியோரின் அருளைப் பெறுவதற்காக கடைபிடிக்கப்படும் விரதம் என்று கூறப்படுகிறது. ஆக... வெள்ளிக்கிழமையில் விரதம் இருந்து வந்தால், லட்சுமி, முருகன், சுக்ரன் ஆகிய மூன்று பேரின் அருளைப் பெறலாம்.
இந்த விரதத்தை ஏதாவது ஒரு மாதத்தில் வருகின்ற 3-வது வெள்ளிக்கிழமை அல்லது கடைசி வெள்ளிக்கிழமையில் தொடங்கி, 11 வாரம் மட்டும் அனுஷ்டிக்க வேண்டும். வயதைப் பொறுத்து ஆயுள் முழுவதும் கூட இந்த விரதத்தை கடைப்பிடிக்கலாம்.
ஒரு முறை வைகுண்டத்தில் இருந்தபோது மகாலட்சுமியும், மகாவிஷ்ணுவும் பேசிக்கொண்டிருந்தனர். அப்போது மகாலட்சுமி, ‘சுவாமி! மனிதர்கள் அனைவரும் சமம்தானே! அப்படியிருக்கும்போது, எதற்காக அவர்களுக்குள் ஏற்றத்தாழ்வுகள் இருக்கின்றன?’ என்று கேட்டாள்.
லட்சுமியின் சந்தேகத்திற்கு பதிலளிக்கத் தொடங்கினார் மகாவிஷ்ணு. ‘தேவி! ஒவ்வொருவருடைய ஏற்றத்தாழ்வுக்குக் காரணம், அவர்களுடைய விதிப்பயன்தான். அதற்கு தகுந்தாற்போல் தான் ஒருவருடைய வாழ்வில் ஏற்றத்தாழ்வு அமைகிறது. ஆனால் அப்படிப்பட்டவர்கள், நல்ல வழியில் சென்று சில விரதமுறைகளை அனுஷ்டிக்கும்போது, அவர்களின் வாழ்விலும் நல்ல மாற்றம் கிடைக்கும். அந்த நல்ல மாற்றம் ஒருவரின் வாழ்வில் கிடைப்பதற்கு அவர்களுக்கு லட்சுமி கடாட்சம் தேவைப்படுகிறது. அது கிடைக்க அவர்கள் என்ன வழிமுறைகளைச் செய்ய வேண்டும் என்பதை நீ ஒரு முறை பூலோகம் சென்று பார்த்து வா’ என்று கூறினார்.
இதையடுத்து லட்சுமி தேவி பூலோகம் புறப்பட்டுச் சென்றாள். முதலில் ஒரு வீட்டைச் சென்று பார்த்தாள். அந்த வீடு குப்பையாகவும், அசுத்தமாகவும் இருந்தது. லட்சுமி தேவி அந்த வீட்டுக்குள் செல்லாமல் வேறு ஒரு வீட்டுக்குப் போனாள். அந்த வீடு சுத்தமாக இருந்தது. அதுதான் வாசம் செய்வதற்கு ஏற்ற வீடு என எண்ணிய லட்சுமி, அந்த வீட்டுக்குள் நுழைந்தாள். அந்த இல்லத்தின் தலைவியான சோமதேவம்மாள் என்பவரிடம் வெள்ளிக்கிழமை விரதம் எப்படி அனுஷ்டிக்கப்படுகிறது என்று கற்றுக்கொடுத்தாள். மேலும் லட்சுமிதேவி நுழைந்த அந்த வீடு செல்வத்தால் நிறைந்தது. லட்சுமிதேவியே இந்த விரதத்தைப் பற்றி சிறப்பாக கூறியிருக்கிறாள் என்றால், அந்த விரதத்தின் மகிமையை நாம் உணர்ந்து கொள்ளலாம்.
இந்த விரத நாளில் லட்சுமி, மகாவிஷ்ணு, முருகன் ஆகியோரை வழிபடுவதோடு, ஆலயங்களில் இருக்கும் நவக்கிரகங்களில் ஒருவரான சுக்ரனையும் வழிபடுவது நன்மை அளிக்கும். ஒருவருடைய இல்லறம் நல்லறமாக அமைவது, அவரது ஜாதகத்தில் சுக்ரன் எங்கு அமைந்திருந்திருக்கிறார் என்பதைப் பொறுத்து தான் என்பார்கள். எனவே இந்த விரத நாளில் சுக்ரனையும் வழிபடலாம்.
வெள்ளிக் கிழமை விரதம் இருக்க நினைப்பவர்கள், முதலில் ஏதாவது ஒரு மாதத்தில் வரும் மூன்றாவது அல்லது கடைசி வெள்ளிக்கிழமையை தேர்வு செய்து கொள்ள வேண்டும். பின்னர் ஒவ்வொரு வெள்ளிக்கிழமையிலும் அதிகாலை எழுந்து வீட்டை சுத்தப்படுத்தி, கோலம் போட்டு சுத்தமாக வைக்க வேண்டும். வீட்டை எப்போதும் சுத்தமாகவே வைத்துக் கொள்ள வேண்டும். அவ்வாறு செய்வது நம் வீட்டில் லட்சுமி கடாட்சத்தை கொண்டு வரும் என்று ஆன்மிக ரீதியாக கூறப்பட்டாலும், சுத்தம் எப்போதுமே நன்மை அளிக்கக்கூடியது அல்லவா?.
வீட்டை சுத்தம் செய்ததும், விரதம் இருப்பவர்களும் நீராடிவிட்டு வந்து வீடு முழுவதும் சாம்பிராணி புகை போட்டு தெய்வீக மணம் கமழச் செய்ய வேண்டும். பிறகு லட்சுமிதேவியின் படத்திற்கோ அல்லது விக்கிரகத்திற்கோ மலர்களால் அர்ச்சனை செய்வதுடன், தீபாராதனைக் காட்டி வழிபாடு செய்ய வேண்டும். அன்றைய தினம் முழுவதும் லட்சுமி தேவியைப் பற்றிய பக்திப் பாடல்களையோ, முருகப்பெருமான், சுக்ரனைப் பற்றிய பக்திப் பாடல்களையோ பாராயணம் செய்தபடி இருப்பது சிறப்பான நன்மையை வழங்கும்.
ஒரு நாள் முழுவதுமாக உபவாசம் இருக்க முடியாதவர்கள், பால், பழம் போன்றவற்றை மட்டும் சாப்பிட்டு விரதம் இருக்கலாம். விரத நாள் முடிந்ததும் சுவாமியின் படத்திற்கு சிறப்பு பூஜை செய்து விரத்தை முடித்துக் கொள்ளலாம். தொடர்ந்து 11 வாரங்கள் வெள்ளிக் கிழமையில் விரதம் இருந்து வந்தால் சகல சவுபாக்கியங்களும் கிடைக்கும் என்பது ஐதீகம். பகீரதன் என்னும் மன்னன் இந்த விரதத்தை கடைப்பிடித்து தான், இழந்து போன தனது அரசுரிமையை திரும்பப் பெற்றான். எனவே இந்த விரதத்தை அனுஷ்டித்து சிறப்பாக வாழுங்கள்.

சோமவார விரதத்தை கார்த்திகை மாதம் (21-11-2016) முதல் திங்கட்கிழமையில் தொடங்கி ஆண்டு முழுவதும் கடைப்பிடிக்க வேண்டும்.
கார்த்திகை மாதத்தில் பல முக்கிய விரதங்கள் இருந்தாலும், அவற்றில் சிறப்பான விரதமாக கடைப்பிடிக்கப்படுவது கார்த்திகை சோமவார விரதமாகும். சிவபெருமானை நினைத்து செய்யப்படும் இந்த விரதம் ஈசனின் அருளைப் பெற சிறந்த வழியை ஏற்படுத்தித் தரும் விரத முறையாகும். திங்கட்கிழமை என்பது சோமவாரம் என்று அழைக்கப்படுகிறது. சிவபெருமானை நினைத்து திங்கட்கிழமைகளில் மேற்கொள்ளப்படும் விரதம் என்பதால் சோமவார விரதம் என்று பெயர் பெற்றது.
இந்த விரதத்தை கார்த்திகை முதல் சோமவாரத்தில் இருந்து சோமவாரம் அனைத்தும் கடைப்பிடிக்க வேண்டும். இந்த விரதத்தை ஒருவர் தனது வாழ்நாள் முழுவதும் அனுஷ்டிப்பது சிறப்புக்குரியதாகும். இல்லையெனில் 1, 2, 3, 12, 14 ஆண்டுகள் விரதம் அனுஷ்டிப்பேன் என்று சங்கல்பம் செய்து விரதத்தை தொடங்க வேண்டும்.
சந்திரன் தோன்றியது கார்த்திகை மாத சுக்லபட்ச அஷ்டமி திதியில்தான். அவன் பெரியவன் ஆனதும், ராஜசூய வேள்வி ஒன்றை நடத்தி, பெரும் புகழை அடைந்தான். சந்திரனுக்கு இருக்கும் புகழை அறிந்த தட்சன், தனது 27 பெண்களையும் சந்திரனுக்கு மணம் முடித்துக் கொடுத்தான். ஆனால் சந்திரன், 27 பேரில் ரோகிணியிடம் மட்டும் அதிக அன்பு காட்டி வந்தான். இதனால் மற்ற மனைவியர் அனைவரும் பெரும் கவலையடைந்தனர். தங்களின் வருத்தத்தை தந்தையான தட்சனிடமும் கூறினார்கள்.
பெண்களின் வருத்தத்தை அறிந்த தட்சன், சந்திரனை வரவழைத்து, ‘அனைத்து பெண்களிடமும் அன்பாக இரு’ என்று கூறினான். ஆனால் அதன்பிறகும்கூட சந்திரனிடம் மாற்றம் இல்லை. ரோகிணியிடம் மட்டும் அதீத அன்பு காட்டினான். இதனால் கோபம் கொண்ட தட்சன், ‘அழகின் மீது கொண்ட கர்வத்தால் தான் நீ இப்படி நடந்து கொள்கிறாய். எனவே இனி நீ நாளுக்கு நாள் தேய்ந்து கொண்டே போவாய்’ என்று சாபம் கொடுத்தான்.
தட்சனின் சாபத்தால், தான் நாளுக்கு நாள் தேய்ந்து வருவதைக் கண்ட சந்திரன், பிரம்மாவிடம் சென்று முறையிட்டான். அவரோ சிவபெருமானைத் தஞ்சம் அடையும் படி அறிவுறுத்தினார். இதையடுத்து சந்திரன், சிவனிடம் போய் தஞ்சமடைந்தான். சந்திரன் மீது இரக்கம் கொண்ட ஈசன், அவனைத் தனது சடைமுடியில் வைத்துக் கொண்டார். சந்திரன் அன்று முதல் வளர்ந்தான். ஆனால் அதன் பிறகு தட்சனது சாபத்தால் தேய்ந்தான். இப்படியாக தேய்வதைக் கிருஷ்ணபட்சம் (தேய்பிறை) என்றும், வளர்வதை சுக்லபட்சம் (வளர்பிறை) என்றும் வழங்கலாயினர்.
சந்திரன், சிவபெருமானுடைய சடைமுடியில் போய் அமர்ந்து கொண்டது, ஒரு கார்த்திகை மாத முதல் சோமவாரம் ஆகும். அப்படி அமர்ந்த சந்திரன், சிவபெருமானிடம் ‘ஐயனே! சோமவாரம் தோறும் பூஜை செய்து விரதம் இருக்கும் மக்களுக்கு, நற்கதியைக் கொடுத்து அருள வேண்டும்’ என்று வரம் கேட்டான். சிவபெருமானும் அப்படியே அருளினார்.
விரதம் இருக்கும் முறை :
சோமவார விரதத்தை கார்த்திகை மாதம் முதல் திங்கட்கிழமையில் தொடங்கி ஆண்டு முழுவதும் கடைப்பிடிக்க வேண்டும். அப்படி இல்லையென்றால் சித்திரை, வைகாசி, ஆவணி, மார்கழி முதலான மாதங்களில் வரும் முதல் திங்கட்கிழமை தொடங்கி தொடர்ந்து கடைப்பிடிக்கலாம்.
ராகு காலத்துக்கு முன்பே பூஜையை தொடங்கவேண்டும். அதிகாலையில் கணபதியை வழிபட வேண்டும். மஞ்சளில் பிள்ளையார் பிடித்து வைத்து, அதற்கு தேங்காய் உடைத்து கற்பூர தீபம் காட்டவேண்டும். பின்னர் கும்பம் தயார் செய்ய வேண்டும். கலசத்தில் தண்ணீர் பிடித்து அதில் நாணயம், மஞ்சள்பொடி போன்றவற்றை போட்டு, கலசத்துக்கு மேல் பகுதியில் மாவிலையை வைக்க வேண்டும்.
கலசத்தின் மையப் பகுதியில் மஞ்சள் தடவி, தேங்காய் வைத்து சந்தனம், குங்குமம் வைத்து அலங்காரம் செய்ய வேண்டும். அதன்பிறகே பூஜையைத் தொடங்க வேண்டும். சாதம், நெய், பருப்பு, பாயாசம், தேங்காய், வாழைப்பழம் போன்றவற்றை நைவேத்தியமாக படைக்கலாம். வழிபாட்டின் போது சிவ நாமத்தை உச்சரிப்பது சிறப்பான வாழ்வை அருளும். வழிபாட்டின் முடிவில் இறைவனுக்கு தீபாராதனை காட்ட வேண்டும்.
பூஜை முடிந்த பின்னர் வயதான தம்பதியரை பார்வதி பரமேஸ்வரனாக மனதில் நினைத்து சந்தனம், குங்குமம் அளித்து நமஸ்காரம் செய்ய வேண்டும். அவர்களுக்கு புதுவேட்டி, ரவிக்கைதுணி, வெற்றிலைப்பாக்கு மற்றும் பழம் இவற்றுடன் தட்சனை ஆகியவை அடங்கிய தட்டை கொடுக்க வேண்டும். அவர்களுக்கு அன்னமிட்டு அட்சதையை அவர்கள் கையில் கொடுத்து வணங்கி ஆசி பெறவேண்டும்
இந்த விரதத்தைக் கடைப்பிடிப்பவர்கள், அன்றைய தினம் முழுவதும் உபவாசம் இருப்பது நல்லது. அப்படி இருக்க முடியாதவர்கள் ஒரு பொழுது மட்டும் சாப்பிட்டு விரதத்தை கடைப்பிடிக்கலாம். இந்த விரதத்தை வாழ்நாள் முழுவதுமோ அல்லது 12 ஆண்டுகளோ கடைப்பிடிக்கலாம். அதுவும் இயலாதவர்கள் கார்த்திகை மாதத்தில் மட்டுமாவது இந்த விரதத்தை அனுஷ்டிப்பது நலம் தரும். இந்த விரதத்தை கடைப்பிடிப்பதால் பாவங்கள் அகலும், நோய் அண்டாது என்பது ஐதீகம்.

சபரிமலையில் ஐயப்பனுக்கு விரதம் மேற்கொள்ளும் போது செய்ய வேண்டிய வழிபாடுகளை கீழே பார்க்கலாம்.
1. பதினெட்டு படி நெருங்கியதும், படிக்கு வலதுபுறம் சுவரில் சிதறு தேங்காய் உடைக்க வேண்டும். உடன் நமது மனதில் ஐயனிடம் பிரார்த்திப்பதை மனதில் வேண்டிக்கொண்டு 18 படிகளையும் தொட்டு வணங்கிக்கொண்டே 18 படி ஏற வேண்டும்.
2. தீபஸ்தம்பம் (கொடிமரத்தை) வணங்கி பின் நிதானமாக வரிசையில் நின்று அகிலாண்ட கோடி நாயகன் ஐயன் ஐயப்பனை திவ்ய தரிசனம் செய்து மனமுருக வேண்ட வேண்டும். நமது குறைகளை கூறி நிவர்த்திக்க வேண்ட வேண்டும்.
3. சன்னிதானத்தின் மேலேயுள்ள கன்னிமூல கணபதியை வலம் வந்து கபற்பூரம் ஏற்றி வணங்க வேண்டும்.
4. வேண்டுதல் இருந்தால் மணி கட்ட வேண்டும்.
5. கணபதி கோவிலுக்கு அருகில் உள்ள நாகராஜா (ஸ்ரீசண்முக சுவாமி சன்னதியை) வணங்கி பன்னீர் சந்தனம், ஊதுபத்தி, கற்பூரம் போன்றவற்றை வைத்து சுவாமியை வணங்க வேண்டும்.
6. சன்னிதானத்தில் இருந்தே நடைமேடை வழியாக மஞ்சமாதா கோவில் அடைந்து முதலில் கருப்ப சாமியை வணங்கி, அவல், நெல் போரி, வெல்லம், பழம், தேங்காய், வறுத்த பொரி காணிக்கை இங்கு வைக்க வேண்டும். கருப்பசுவாமிக்கு திராட்சை பழம், கற்கண்டு, கற்பூரம் காணிக்கை வைத்து வணங்க வேண்டும்.
7. சர்ப்ப தோஷம் சத்ரு தோஷம் ஏற்படாமல் இருக்க அங்குள்ள புள்ளுவன்களிடம் அமர்ந்து பாட்டு படிக்க வேண்டும்.
8. மணிமண்டபம் சுற்றி வந்து வணங்க வேண்டும்.
9. அடுத்து நாகராஜா,, நாகயட்சி ஆகிய தெய்வங்களுக்கு கற்பூரம் கொளுத்தி வணங்க வேண்டும்.
10. நவக்கிரகங்களை 9 முறை சுற்றி வந்து கற்பூரம் கொளுத்தி வணங்க வேண்டும்.
11. மலை தெய்வங்களை (காட்டு தேவதைகளை) மஞ்சள் பொடி தூவி வணங்கி வலம் வர வேண்டும்.
12. மஞ்சமாதா எழுந்தருளியுள்ள கோவிலை முழுத் தேங்காயை கீழே உருட்டி கோவிலை வலம் வர வேண்டும். இந்த மாளிகைப்புரத்தம்மா சன்னதியில் அம்மனுக்கு பட்டு துண்டு, மஞ்சள் பொடி, குங்குமம், வெற்றிலை பாக்கு வைத்து வணங்க வேண்டும். வணங்கிய பின் அம்மனை தொழுதபடியே முதுகை கோவில் பின் பக்கம் பார்த்த நிலையில் படி இறங்கி தங்குமிடம் செல்ல வேண்டும்.
13. வாபர் கோவிலில் சென்று நெல் மிளகு ஊதுபத்தி வைத்து வணங்க வேண்டும்.
14. அவரவர் இருமுடி கட்டுப் பிரித்து குருசாமி மூலம் நெய் தேங்காய் உடைத்து மஞ்சமாதா கோவிலுக்கு அருகில் கிடைக்கும் நெய் அபிஷேக சீட்டு பெற்று ஐயன் பூதநாதனுக்கு நம் நெய்யை அபிஷேகம் செய்து தரும் நெய்யை பெற்று வர வேண்டும். டப்பாவில் நெய்யை அடைத்துக் கொள்ள வேண்டும்.
15. அரவணப்பாயாசம் அப்பம் வாங்கிக் கொள்ள வேண்டும்.
16. திரும்ப செல்லும் போது (அனுமதித்தால் 18 படி ஐயப்பனை பார்த்தபடி இறங்கலாம்). 18 படிக்கு அருகில் சிதறு தேங்காய் உடைக்க வேண்டும்.
17. ஓமகுண்டத்தில் ஒரு தேங்காய் மூடி போட வேண்டும்.
18. பம்பை திரும்ப வேண்டும்.