என் மலர்
முக்கிய விரதங்கள்
‘வெள்ளிக்கிழமையில் சந்தோஷி மாதாவை நினைத்து விரதம் இருப்பவர்களுக்கு, விநாயகரின் அருளும் கிடைக்கும் வேண்டும்’ என்று புராணங்கள் கூறுகின்றன.
விநாயகர் பெரும்பாலும் பிரம்மச்சாரியாகவே அறியப்படுகிறார். ஆனால் அவருக்கும் திருமணமாகி இரு மனைவியர், பிள்ளைகள் இருப்பதாக சில புராணங்கள் கூறுகின்றன. விநாயகப் பெருமானுக்கு சித்தி (ஆன்மிக சக்தி), புத்தி (அறிவு) என்ற இரு மனைவியர்களும், அவர்களுக்கு லாபம், சுபம் ஆகிய இரு மகன்கள் இருப்பதாகவும் அவை எடுத்துரைக்கின்றன.
ஒரு முறை விநாயகப்பெருமான், தனது மனைவியர் மற்றும் மகன்களுடன் பூலோகம் வந்தபோது, அங்கு ரக்ஷாபந்தன் என்னும் நிகழ்ச்சி நடைபெற்றது. அதில் பெண்கள் அனைவரும் தங்கள் சகோதரர்களுக்கு கயிறு கட்டி தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.
இதனைக் கண்ட விநாயகரின் மகன்கள் இருவரும், தங்களுக்கு கயிறு கட்ட, ஒரு சகோதரி இல்லையே! என்று வருந்தினர். பின்னர் தங்களுக்கு ஒரு சகோதரி வேண்டும் என்று தந்தையான விநாயகரிடம் வேண்டினர். விநாயகர், தன்னுடைய மகன்களுக்கு அவர்கள் கேட்ட வரத்தை அளித்தார். அதன்படி விநாயகருக்கு ஒரு பெண் குழந்தை பிறந்தது. அந்தக் குழந்தைக்கு ‘சந்தோஷி’ (சந்தோஷம்) என்று பெயரிட்டார். அவரே ‘சந்தோஷி மாதா’. அந்தக் குழந்தை பார்வதியின் சக்தியையும், லட்சுமிதேவியின் செல்வத்தையும், சரஸ்வதி தேவியின் கல்விச் சிறப்பையும் பெற்று திகழ்ந்தது.
வேண்டுபவர்களுக்கு சந்தோஷத்தை கொடுக்கக் கூடியவர், என்பதால் இந்த அன்னைக்கு ‘சந்தோஷி மாதா’ என்று பெயர் வந்தது. சந்தோஷி மாதா அவதரித்தது ஒரு வெள்ளிக்கிழமை ஆகும். எனவே ‘வெள்ளிக்கிழமையில் சந்தோஷி மாதாவை நினைத்து விரதம் இருப்பவர்களுக்கு, விநாயகரின் அருளும் கிடைக்க வேண்டும்’ என்று நாரதர், விநாயகப் பெருமானிடம் வேண்டிக்கொண்டதாக புராணங்கள் கூறுகின்றன.

கவுரி நோன்பும், தமிழகத்துப் பாவை நோன்பும் கன்னியர் நல்ல கணவனைப் பெற வேண்டும் என்ற குறிக்கோளால் ஒன்று என்றேக் கூறலாம். அதை பற்றி விரிவாக பார்க்கலாம்.
மகளிர் நோன்பு நோற்பதற்கு தகுந்த மாதம் மார்கழி, பாகவத புராணத்தில் இந்த நோன்பைப் பற்றிய ஒரு குறிப்புண்டு. ஆயர்பாடிக் கன்னியர், மார்கழி மாத முப்பது நாள்களும் கவுரி நோன்பு நோற்று, காத்யாயனியை-பார்வதியை வழிபட்டனர். ஸ்ரீகிருஷ்ணனைக் கணவனாக அடைய விரும்பினர்.
கவுரி நோன்பும், தமிழகத்துப் பாவை நோன்பும் கன்னியர் நல்ல கணவனைப் பெற வேண்டும் என்ற குறிக்கோளால் ஒன்று என்றேக் கூறலாம். மார்க் சீர்ஷம் என்ற தொடர் மார்கழி என்று மாறியது. மார்க் சீர்ஷம் என்றால் தலையாய மார்க்கம். இதன் வேறு பெயர் தனுர் மாதம்.
மார்கழி மாதத்தில் கன்னிப் பெண்கள் நல்ல கணவனை வேண்டி பாவை நோன்பிருப்பர். அத்தகைய நோன்பின் பலனாக தை மாதத்தில் அவர்களின் நல்வாழ்வுக்கான வழியமையும் என்பதை மனதில் கொண்டு “தை பிறந்தால் வழி பிறக்கும்” எனும் பழமொழியும் வழக்கில் வந்ததாக ஒரு நம்பிக்கை நிலவுகிறது.

குழந்தை வரம் வேண்டும் தம்பதிகள் தத்தாத்ரேயரை விரதமிருந்து வழிபட்டு வேண்டிக்கொண்டால், அவர்களது கோரிக்கை விரைவில் நிறைவேறும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.
தத்தாத்ரேயர்- சிவன், விஷ்ணு, பிரம்மா ஆகிய மும்மூர்த்திகளும் ஒரே மூர்த்தியாக தோன்றிய சிறப்புமிகுந்த அவதாரம். மும்மூர்த்திகளின் மனைவியர்களான பார்வதி, லட்சுமி, சரஸ்வதி ஆகியோருக்கு தாங்களே உலகில் சிறந்த பதிவிரதைகள் என்பதில் கர்வம் இருந்தது. அந்த கர்வத்தைப் போக்க எண்ணம் கொண்ட இறைவன், அதற்கு கருவியாக நாரதரை தேர்வு செய்தார்.
ஒரு நாள் நாரதர் தன் கையில் இரும்பு குண்டு சிலவற்றை எடுத்துக்கொண்டு முப்பெரும் தேவியர்களையும் சந்தித்தார். ‘தேவியர்களுக்கு என் வணக்கம். தாயே இன்று இறைவன் எனக்கு அளித்த உணவு இது. இந்த இரும்பு குண்டை பொரியாக்கி சாப்பிட வேண்டும் என்பது இறைவனின் உத்தரவு. பதிவிரதை களால் மட்டுமே இந்த இரும்பு குண்டுகளை, பொரியாக்க முடியும் என்பதால் உங்களைத் தேடி வந்தேன்’ என்று தன் தந்திர வார்த்தைகளை உதிர்த்தார்.
இதனைக் கேட்டு மூன்று தேவியர்களும், ‘நாரதரே! விளையாடுகிறீர்களா? இரும்பு குண்டுகள் எப்படி பொரியாகும்? முட்டாள்தனமாக அல்லவா இருக்கிறது’ என்றனர்.
‘இல்லை தாயே! நிச்சயம் பதிவிரதைகளால் இது சாத்திய மாகும்’ என்று மீண்டும் நாரதர் வற்புறுத்தினார். இதனால் முப்பெரும் தேவியர்களும் அந்த இரும்புக் குண்டை தீயிலிட்டு பொரியாக்க முயன்றனர். ஆனால் அவர்களால் அது இயலவில்லை. அவர்களின் மனதில் இருந்த அகந்தையே அதற்கு காரணமாக அமைந்தது.
இதையடுத்து நாரதர் அந்த இரும்பு குண்டுகளைக் கொண்டுபோய், அத்ரி முனிவரின் மனைவியான அனுசுயா தேவியிடம் கொடுத்தார். அவர் அதனை பொரியாக்கி நாரதரிடம் கொடுத்தார். இந்த அரிய செயலை கேள்வியுற்ற முப்பெரும் தேவியர்களும், அனுசுயாவின் மீது பொறாமை கொண்டனர். தங்கள் கணவர்களிடம் கூறி அனுசுயாவின் கற்பை சோதனை செய்யும்படி அனுப்பி வைத்தனர்.
அதன்படி சிவன், விஷ்ணு, பிரம்மா மூவரும் முனிவர் வேடம் பூண்டு அனுசுயாவின் குடிலுக்கு வந்தனர். முனிவர்களுக்கு உணவளிப்பதற்காக பலகாரங்களை தயார் செய்தார் அனுசுயா. பின்னர் உணவு பரிமாற தொடங்கியபோது, முனிவர் வேடத்தில் இருந்த முப் பெரும்தேவர்களும், ‘நீங்கள் நிர்வாண நிலையில் உணவு பரிமாறினால்தான் உணவை ஏற்றுக்கொள்வோம்’ என்றனர்.
சற்று திகைத்தாலும், தன் பதிவிரதை தன்மையால் அந்த மூவரையும் குழந்தைகளாக உருமாற்றினாள் அனுசுயா. பின்னர் அவர்களுக்கு அமுது அளித்து தொட்டிலில் தூங்கச் செய்தாள். அனுசுயாவின் கற்பை பரிசோதிக்கச் சென்ற தங்கள் கணவன்மார்கள், பலகாலம் ஆகியும் இருப்பிடம் திரும்பாததை எண்ணி மனம் கலங்கிய முப் பெரும் தேவியர்கள், அனுசுயாவின் குடிலை நோக்கி வந்தனர்.
அங்கு மும்மூர்த்திகளும் குழந்தை வடிவில் விளையாடிக் கொண்டிருப்பதைக் கண்டு அனுசுயாவின் கற்பை எண்ணி மலைத்தனர். இதையடுத்து அனுசுயாவிடம் சென்ற அவர்கள், ‘தாயே! கற்பில் சிறந்த உன்னை சோதிக்க எண்ணிய தவறை உணர்ந்து கொண்டோம். எங்கள் கணவர்களை, பழைய படியே உருமாற்றி எங்களிடம் ஒப்படைக்க வேண்டும்’ என்று கேட்டனர்.
இதையடுத்து அனுசுயா, மும்மூர்த்திகளையும் பழைய உருவுக்கு மாற்றினார்.
பின்னர் மும்மூர்த்திகளும் அனுசுயா- அத்ரி தம்பதியருக்கு ஆசி வழங்கி, ‘என்ன வரம் வேண்டும்?’ என்று கேட்டனர்.
அதற்கு அனுசுயா, ‘இறைவா! தாங்கள் மூவரும் எங்களுக்கு குழந்தையாக பிறக்க வேண்டும்’ என்ற வரத்தை தரும்படி இறைவனிடம் வேண்டினர்.
இறைவனும் அவ்வாறே வரம் அளித்தார். அதைத் தொடர்ந்து பல காலம் தவத்தில் ஈடுபட்டிருந்த அத்ரி- அனுசுயா தம்பதியருக்கு மும்மூர்த்திகளின் அம்சமாக, தத்தாத்ரேயர் பிறந்தார். அனுமன், மார்க்கண்டேயர் போலவே, தத்தாத்ரேயரும் சிரஞ்சீவியாக வாழும் சிறப்பு பெற்றவர்.
குழந்தை வரம் வேண்டும் தம்பதிகள் தத்தாத்ரேயரை விரதமிருந்து வழிபட்டு வேண்டிக்கொண்டால், அவர்களது கோரிக்கைகள் விரைவில் நிறைவேறும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.

செவ்வாய் தோஷம் உள்ளவர்கள் வளர்பிறை தேய்பிறை எதுவானாலும் செவ்வாய்கிழமைகளில் வந்தால் அன்று விரதம் இருந்து விநாயகரை பூஜித்தால் தோஷம் நீங்கும்.
செவ்வாய் கிரகம் வரம் பெறுவதற்காக ஆயிரம் ஆண்டுகள் தவம் செய்தார். விநாயகப் பெருமான் அவர் முன் தோன்றி அவனை நவக்கிரகங்களுள் ஒருவனாகவும் ராசி வீடுகளில் மேஷம், விருச்சிகம் இரண்டின் அதிபராகவும் செய்தார்.
போர் முறைகளை நன்கு கற்றதனால் அங்காரகனை நவக்கிரகங்களுள் ஒரு படைத்தலைவனாகவும், விநாயகர் அவனைச் சகோதரன் என்று அழைத்தால் சகோதரகாரகனாகவும் விளங்க அருள் செய்தார்.
மேலும் விநாயகருடைய சகோதரரான முருகப் பெருமானின் அம்சமாகவும் கருதி மக்கள் அனைவரும் செவ்வாயை வணங்கி வருகிறார்கள். அங்காரகனுக்கு விநாயகப் பெருமான் காட்சி அளித்த நாள் என்பதால் செவ்வாய்கிழமையை மங்கள வாரம் என்று அழைப்பார்கள். அங்காரகனுக்கு மங்களன் என்ற பெயரும் உண்டு.
செவ்வாய்கிழமை சதுர்த்தி திதியில் விநாயகர் காட்சி அளித்தார். செவ்வாய் தோஷம் உள்ளவர்கள் வளர்பிறை தேய்பிறை எதுவானாலும் செவ்வாய்கிழமைகளில் வந்தால் அன்று விரதம் இருந்து விநாயகரை பூஜித்தால் தோஷம் நீங்கும்.
செவ்வாய்க்கு பூமி காரகன் என்ற பெயரும் உண்டு. அவன் குழந்தையாக இருக்கும் போது பூமிதேவி எடுத்து வளர்த்த காரணத்தால்இந்தப் பெயர் உண்டாயிற்று.

கவுரி நோன்பும், தமிழகத்துப் பாவை நோன்பும் கன்னியர் நல்ல கணவனைப் பெற வேண்டும் என்ற ஒரே குறிக்கோளை கொண்டதாகும்.
ஆண்டாளால் பாடப்பட்டது திருப்பாவை; வைணவ தொடர்புடையது. மாணிக்கவாசகரால் பாடப்பட்ட திருவெண்பாவை, சைவத் தொடர்புடையது. மார்கழி நோன்பு அல்லது பாவை நோன்பு என்று அழைக்கப்படும் மேற்கண்ட இரண்டு நூல்களும், இறைவனை துயில் எழுப்பும் பாடல்களாகும். மார்கழி நோன்பு என்பது முற்றிலும் கன்னிப்பெண்களுக்கு உண்டானது.
அவர்கள் விடியலுக்கு முன்பாக துயில் கலைந்து, தனது தோழிகளையும் துயில்கலைய செய்வர். பின்னர் அவர்கள் அனைவரும் ஓரிடத்தில் கூடி ஆற்றில் மார்கழி நீராடுவர். அதன்பிறகு கரையில் பாவைக்களம் ஒன்றை அமைத்து, அங்கு பாவையை உருவாக்கி, அந்த பாவையை வைணவக் கன்னியர்கள் கவுரியாகவும், சைவக் கன்னியர்கள் பார்வதி தேவியாகவும் எண்ணி போற்றி வழிபடுவர்.
நல்ல கணவன் கிடைக்க வேண்டும். அந்த கணவனாகப்பட்டவன் சைவக் கன்னிக்கு சிவனடியாராகவும், வைணவக் கன்னிக்கு வைணவ அடியாராகவும் விளங்க வேண்டும். இனிமேல் பிறவிகள் இருக்குமாயின், அந்த பிறவிகளிலும் இறைவனுக்கு அடிமை தொண்டாற்றியே இருத்தல் வேண்டும் என்று தனக்குண்டானதை கேட்டு பெறும் பெண்கள், இறுதியில் பொதுவாக ஊரும், நாடும் செழிக்க மாதம் மும்மாரி பொழிய வேண்டும் என்றும் வேண்டு வார்கள்.
பெண்கள் நோன்பு இருப்பதற்கு தகுந்த மாதம் மார்கழி. ஆயர்பாடி கோபியர்கள் அனைவரும் கண்ணனை கணவனாக அடைய விரும்பி, மார்கழி மாதம் முழுவதும் கவுரி நோன்பு நோற்று காத்யாயனியை, பார்வதியை வழிபட்டனர். கவுரி நோன்பும், தமிழகத்துப் பாவை நோன்பும் கன்னியர் நல்ல கணவனைப் பெற வேண்டும் என்ற ஒரே குறிக்கோளை கொண்டதாகும்.

மார்கழி மாதம் முழுவதும் விரதம் இருந்து திருவெம்பாவை, திருப்பாவை, திருப்பள்ளி யெழுச்சி பாடல்களை பாடினால் திருமண தடை நீங்கும்.
பனி விழும் மாதம் மார்கழி. இந்த மாதத்தில் அனைவரும் அதிகாலையில் எழுந்து ஆறு, குளத்திற்கு சென்று நீராடிவிட்டு பகவானின் நாமத்தை கூறியபடியும், திருவெம்பாவை, திருப்பாவை, திருப்பள்ளி யெழுச்சி பாடல்களை பாடியபடியும் வீதிகள்தோறும் நடந்து செல்வார்கள்.
கோவிலுக்கு சென்றும் வழிபடுவர். வீட்டில் இருப்பவர்கள் குளித்துவிட்டு வீட்டின் வாசலை தெளித்து பெருக்கி, பெரிய கோலங்கள் போடுவர். மார்கழி மாதத்தில் அதிகாலைநேரத்தில் ஒசோன் வாயு கீழே வெளிப்படுகிறது.
அது வியாதிகளை கட்டுப்படுத்தும் தன்மைகொண்டது. ஓசோன் நம்மீது பட்டு உடல் ஆரோக்கியம் பெறுகிறது என்பது ஆராய்ச்சியாளர்களின் கருத்து. இதனால் தான் மார்கழி மாதத்தில் பொழுது விடியும் நேரத்தில் நீராடி நோன்பு நோற்கும் முறை உருவானது.
திருமணம் தடைபடுபவர்கள் மார்கழி மாதம் முழுவதும் விரதம் இருந்து வழிபாடு செய்தால் விரைவில் திருமணம் நடைபெறும்.

திருமண தடை நீங்க, விவாகம் முடிந்த பிறகு விவாகரத்து நடைபெறாமல் இருக்கவும் விஷ்ணுவையும் லட்சுமியையும் மார்கழி மாதத்தில் நோன்பு கொண்டாடி ஆலய தரிசனம் செய்ய வேண்டும்.
மார்கழி மாதம் திருப்பாவை, திருவெம்பாவை பாடி விரதமிருந்து கன்னிப் பெண்கள் அதிகாலை 4 மணிக்கு எழுந்து நீராடி, வாசலில் கோலமிட்டு கோலத்தின் மையத்தில் மங்கலம் தரும் மஞ்சள் நிற பூவான பரங்கிப் பூவை சாணத்தின் நடுவில் வைத்து மகாலட்சுமியை வரவேற்க வேண்டும். பிறகு ஆலயத்திற்குச் சென்று திருவனந்தலில் சிவன் வழிபாடும், நடராஜர் வழிபாடும் செய்தால் இறையருளால் இனிய வாழ்க்கை அமையும்.
காக்கும் கடவுளான விஷ்ணுவை மார்கழி மாதத்தில் காலை நேரத்தில் வழிபட்டால் கல்யாணமும் கைகூடும். கலகலப்பும் உருவாகும். சூடிக்கொடுத்த சுடர்க்கொடியாம் ஆண்டாள் மார்கழி மாதம் முழுவதும் நோன்பு கொண்டாடி இறைவனை மணந்ததாகப் புராணங்கள் சொல்கின்றன.
ஒரு சிலருக்கு காலம் காலமாகக் கல்யாணம் முடியாமல் இருக்கலாம். ஜாதகத்தில் களத்திர தோஷம் இருந்தாலும் கல்யாணத்தில் தடையும், பிரச்சினைகளும் உருவாகும். விவாகம் முடிந்த பிறகு விவாகரத்து நடைபெறாமல் இருக்கவும் சூடிக்கொடுத்த சுடர்க்கொடியையும், விஷ்ணுவையும் லட்சுமியையும் மார்கழி மாதத்தில் நோன்பு கொண்டாடி ஆலய தரிசனம் செய்ய வேண்டும்.

பொருள் வரவைப் பெருக்க, திருணம தடை போக்க விநாயகருக்கு விரதம் இருந்து வழிபாடு செய்தால் நல்லது. இந்த விரதத்தை பற்றி கீழே பார்க்கலாம்.
திருக்கார்த்திகை நாளில் இருந்து 21 நாட்கள் தொடர்ந்து விரதம் இருந்து, விநாயகரை வழிபட்டு வரவேண்டும்.
ஒவ்வொரு நாளும் ஒரு நூல் திரி தனியாக எடுத்து வைக்கவேண்டும். 21-வது நாளில் சஷ்டியும், சதயமும் கூடும் நேரத்தில் ஆவல்களை நிறைவேற்றும் ஆனைமுகன் சன்னிதியில் ஐந்து வகைப் பொரி வைத்து, ஆவாரம் பூ அருகில் வைத்து, கருப்பட்டிப் பணியாரம் செய்து கணபதியை வழிபாடு செய்ய வேண்டும்.
நெல் பொரி, கம்புப் பொரி, சோளப்பொரி, அவல் பொரி, எள் பொரி என்பது ஐந்து பொரிகளாகும்.
விநாயகரை வழிபட வேண்டிய அந்த நாள், மார்கழி மாதம் 19-ந் தேதி (3.1.2017) அன்று வருகிறது. அன்றைய தினம் விரதமிருந்த விநாயகரை வழிபட்டு வந்தால் வாழ்வில் துன்பங்களில் இருந்து விடுபடலாம்.
ஆண், பெண் யார் வேண்டுமானாலும் இந்த விரதத்தை அனுஷ்டிக்கலாம். திருமணம் தடைபடுபவர்கள் இந்த விரதத்தை அனுஷ்டித்தால் விரைவில் திருமணம் நடைபெறும் என்பது ஐதீகம்.

சபரிமலைக்கு மாலை அணிந்து செல்லும் ஐயப்பன் பக்தர்களிள் விரத விதி முறைகள் என்னவென்று விரிவாக தெரிந்து கொள்ளலாம்.
ஜந்து அல்லது ஏழு முறை மாலையணிந்து மலைக்குச் சென்றவாராயும், ஜயப்பனின் விரதமுறையை நன்கு உணர்ந்தவராயும், பொறுமையும் ஆசாரசீலராகவும் உள்ள ஒருவரை குருஸ்வாமியாய் ஏற்று தாய்இ தந்தையரை வணங்கி குருவின் கையால் மாலை அணிதல் வேண்டும்.
அவரவர் வசதிக்கேற்ப குருவிற்கு தட்சணை கொடுத்து குருவின் அனுக்கிரகத்தை பெறல் வேண்டும். கொடுக்கும் தட்சணை ஒரு ரூபாயனாலும் குரு ஐயப்பனே தந்ததாக அன்புடன் ஏற்றுக்கொள்ள வேண்டும்.
கார்த்திகை 1ம் தேதி மாலையணிதல் வேண்டும். ஒரு மண்டலம் எனப்படும் 48 நாட்கள் விரதமிருத்தல் வேண்டும். காலை உணவை விடுத்து மதிய உணவை ஜயப்பனிற்கு நிவேதனம் செய்து உண்ண வேண்டும். மாலை பால், பழம், பலகாரம் உண்ணலாம்.
விரதகாலத்தில் மிக இறுக்கமாக பிரம்மச்சரியத்தை கடைப்பிடிக்கவேண்டும். மனதளவில் கூட பெண்களை நினைத்துப் பார்க்க கூடாது. திருமணமானவர்கள் குடும்ப வாழ்வில் (இந்த நாட்களில் ஈடுபடக்கூடாது). மனதால் ஜயப்பனை மட்டும் நினைத்து அவன் பாதம் சரணடைய வேண்டும்.
உருத்திராட்சம் அல்லது துளசிமாலை 54 அல்லது 108 மணிகள் உடையதாக வாங்கி அதில் ஐயப்பன் பதக்கம் ஒன்றையும் சேர்த்து அணிதல் வேண்டும். துணை மாலை ஒன்றையும் சேர்த்து அணிதல் வேண்டும்.
விரதகாலத்தில் கறுப்பு, நீலம், பச்சை நிறமுள்ள ஆடைகளை அணிய வேண்டும்.கன்னி ஸ்வாமிகள் கறுப்பு மட்டும் தான் அணியலாம்.
காலை, மாலை குளிர்ந்த நீரில் குளித்து விட்டு ஐயப்பனிற்கு துளசி, பால், பழம், கற்கண்டு போன்றவற்றில் ஒன்றை நிவேதனம் செய்து 108 சரணம் சொல்லி வழிபடவேண்டும்.
விரதகாலத்தில் முடிவெட்டிக் கொள்ளுதல், முகச்சவரம் செய்தல் என்பன கூடாது. காலணி, குடை, மழைக்கு போடும் கவசம் என்பவற்றை தவிர்க்கவேண்டும். (இது மேலைநாடுகளிற்கு காலநிலைக்கு ஏற்புடையதன்று விசுவாசமுடன் கடைப்பிடிக்க வேண்டும்) மது அருந்துதல், பொய் பேசுதல், மாமிசம் உண்ணுதல், கோபம் கொள்ளுதல் இகடும் சொற்கள் பேசுதல் என்பன கூடாது.
விரதகாலத்தில் எவருடன் பேச நேர்ந்தாலும் பேச தொடங்கும் போதும் பேசி முடிக்கும் போதும் “ஸ்வாமி சரணம்” கூறவேண்டும். மாலையணிந்தால் விரதம் பூர்த்தியாக முன்னர் அதை எக்காரணம் கொண்டும் அதை கழட்டகூடாது. நெருங்கிய உறவினரின் இறப்பால் தீட்டு நேர்ந்தால் மாலையை கழற்றி ஐயப்பன் படத்தில் போட்டு விடவேண்டும். பின்னர் மறுவருடம் தான் மாலை அணியலாம்.
விரதகாலத்தில் பகலில் தூங்ககூடாது. இரவில் பாய் தலையணை என்பவற்றை தவிர்த்து வஸ்திஇரத்தை விரித்து தூங்க வேண்டும். (இது மேலைநாடுகளிற்கு காலநிலைக்கு ஏற்புடையதன்று)
மாலையணிந்த பின் சந்திக்கும் ஆண்களை “ஐயப்பா” என்றும் பெண்களை “மாளிகைப்புறம்” என்றும் சிறுவர்களை “மணிகண்டன்” என்றும் சிறுமிகளை “கொச்சி” என்றும் அழைக்கவேண்டும்.
மாதவிலக்கான பெண்களை பார்ப்பது அவர்கள் தயாரிக்கும் உணவை உண்பது கூடாது. மாதவிலக்கான பெண்களை அறியாமல் பார்க்க நேர்ந்தால் நீராடி 108 சரணம் கூறி வழிபடவேண்டும்.
மலைக்கு யாத்திரை புறப்பட சில நாட்களுக்கு முன்னர் விரிவான முறையில் பஜனை கூட்டுவழிபாடு பூஜை முதலியன நடத்தி எல்லோருக்கும் பிரசாதம் வழங்கி உணவளிக்க வேண்டும்.
இருமுடிக்கட்டு பூஜையை குருசாமி வீட்டிலோ கோவிலிலோ நடத்தலாம். கணபதியை பிரார்த்தித்து பெற்றோரை வணங்கி ஐயப்பன் நாமத்தை சொல்லிக்கொண்டே கட்டு நிறைக்க வேண்டும்.
யாத்திரை புறப்படும் போது ஐயப்பன்மார்கள் போய் வருகின்றேன் என்றோ தன்னுடன் வரும் ஐயப்பன்மார்களை வசதியாக அழைத்துச்செல்வதாகவோ தன்னுடன் தைரியமாக வரலாம் என்றோ கூறக்கூடாது.
யாத்திரை புறப்படும் போது இருமுடியை தலையில் தாங்கி வீட்டு வாசலில் ஐயப்பனை பிரார்த்தித்துக்கொண்டு தேங்காயை உடைத்து விட்டு சரணம் சொல்லி போய்வருகிறேன் என எதுவும் கூறாது திரும்பிப் பார்க்காது செல்ல வேண்டும்.
யாத்திரை புறப்பட்டதில் இருந்து கன்னி சாமிமார்கள் இருமுடியை தாமக ஏற்றிக்கொள்ளவோ இறக்கவோ கூடாது. குருசாமியின் கையாலோ அல்லது பலமலை சாமியின் கையாலோ கொண்டு தான் அதை செய்யவேண்டும்.
பம்பையில் நீராடி மறைந்த முன்னோர்க்கு பித்ருதர்ப்பணம் செய்யலாம்.யாத்திரை முடிந்துதும் பிரசாதங்களை ஏந்தி வந்து வீட்டு வாசலில் தேங்காய் உடைத்துவிட்டு வீட்டிற்குள் சென்று பூஜை அறையில் பூஜை செய்து கற்பூர ஆராத்தி காட்டி இருமுடி அரிசியை பொங்கி எல்லோருக்கும் கொடுக்கவேண்டும்.
12 வயதிற்கு கீழ்ப்பட்ட சிறுமிகளும் ருதுகாலம் நின்ற பெண்களும் மட்டுமே சபரிமலைக்கு மாலை போட்டு விரதம் மேற்கொள்ளலாம்.
விரதகாலத்தில் மாலை போட்ட சாமிமார்களின் வீடுகளை தவிர வேறெந்த வீட்டிலும் ஐயப்பன்மார்கள் உணவருந்தக்கூடாது.
மாலைபோட்ட சாமிமார்கள் அதிலும் கன்னிசாமிமார்கள் மிகவும் கண்டிப்பாக பெருவழிப்பாதையில் செல்லவேண்டும்.
யாத்திரை நிறைவு பெற்றதும் குருநாதர் மூலம் மாலையை கழற்றி ஐயப்பன் திருவுருவப் படத்திற்கு அணிவித்து விட்டு ஐயப்பனை பாடித்துதிப்போமாக.
ஸ்வாமியே சரணம் ஐயப்பா.

நாகசதுர்த்தி, நாக பஞ்சமி, கருட பஞ்சமி விரதங்களை கடைபிடிக்க முக்கியமான காரணங்கள் என்னவென்று கீழே விரிவாக பார்க்கலாம்.
ஆவணி மாதம் வளர்பிறை நான்காம் நாளாகிய சதுர்த்தியிலும் ஐந்தாம் நாளாகிய பஞ்சமியிலும் நாக சதுர்த்தி வருகின்றன.
பகவான், அனந்தன் என்னும் நாகமாக இருந்து பூமியைக் காத்துக் கொண்டிருக்கிறார். அவருக்கு உதவியாக தட்சகன், வாசுகி, கார்க்கோடகன் முதலான நாகங்களும் பாதாள லோகத்தில் வசிக்கின்றனர். கஸ்யபருக்கு கத்ரு என்பவளிடம் தோன்றியவர் நாகர். தாய் சொல்லைக் கேளாததால், நெருப்பில் வீழ்ந்து இறந்து போகும்படி தாயே சபித்து விட்டாள். அந்தச் சாபத்தால் பல சர்ப்பங்கள் நெருப்பில் மாண்டு போயின. அஸ்தீகர் ஜனமேஜயனது சர்ப்பயாகத்தை நிறுத்தி, சாபத்தை அகற்றினார். அதுவே இந்த பஞ்சமி. அப்பொழுது நாகங்களை வழிபட்டால் நலம் உண்டாகும்.
புத்திரப்பேறு உண்டாக நாக பிரதிஷ்டை செய்யும்படி சாஸ்திரம் கூறுகிறது. அவ்வாறு பிறந்தவர்களுக்கு நாகராஜன் நாகசுவாமி, நாகப்பன், நாகலட்சுமி எனப் பெயர் சூட்டப்படுவதைக் காணலாம்.
ஒரு பெண்ணுக்கு இரண்டு சகோதரர்கள் இருந்தனர். அவர்கள் வயலில் வேலை செய்து கொண்டிருக்கும்போது நாகப் பாம்பு கடித்து இறந்து விட்டனர். அவர்களை உயிர்ப்பித்துத் தரும்படி அந்தப் பெண், நாகராஜனை வேண்டி நோன்பு செய்தாள். அதுவே நாகசதுர்த்தி. பாம்பு கடித்து இறந்தவருக்கு உயிர்ப்பிச்சை அளிக்கும்படி கருடனை நோக்கிச் செய்த நோன்பு கருட பஞ்சமி.
தங்கள் விருப்பம் போல் நாகசதுர்த்தி, நாக பஞ்சமி, கருட பஞ்சமி விரதங்களை மேற்கொள்வார்கள்.
விரதம் எதுவானாலும் சரி அன்றைய தினம், பாம்புப் புற்றில் பால் வார்த்து, புஷ்பங்களைச் சாத்தி, பழம் முதலியவற்றை வைத்து பூஜை செய்வார்கள். புற்று மண்ணை எடுத்து வந்து நெற்றியில் இட்டுக் கொள்வார்கள். குறிப்பாக சகோதரர்களின் நெற்றியில் இடுவார்கள்.

சபரிமலைக்கு விரதம் அனுஷ்டிக்கும் ஐயப்ப பக்தர்கள் கடைபிடிக்க வேண்டிய வழிமுறைகளை கீழே விரிவாக பார்க்கலாம்.
விரத காலத்தில்...எளிமை, சுகாதாரம், புனித எண்ணங்கள் ஏற்படுதல் ஆகியவையே ஐயப்ப விரதத்தின் தத்துவம். உடலும், மனமும் சுத்தமாக இருக்க வேண்டும். பிரம்மச்சரியத்தை கடைபிடிக்க வேண்டும்.
மது, புகைபிடித்தல், அசைவ உணவு ஆகியவற்றை தவிர்க்க வேண்டும். அலங்காரம் செய்யக்கூடாது. முடி திருத்துதல், சேவிங் போன்றவை அனுமதிக்கப்படுவதில்லை. நீலம், கருப்பு, காவி நிறங்களில் வேட்டி உடுத்த வேண்டும்.
காலையும், மாலையும் நீராட வேண்டும். கார்த்திகை முதல் தேதியே மாலை அணிந்துவிட வேண்டும். இடைப்பட்ட காலத்தில் மாலை அணிவதும், அதைக் கழற்றுவதும் கூடாது. வீடு திரும்பியதும் தேங்காய் உடைத்து பூஜை முடித்து அதன்பிறகே மாலையை கழற்ற வேண்டும்.
ஐயப்பனை கற்பூர தீபப்பிரியன் என்பர். சபரிமலை யாத்திரையின்போது அங்கு தங்கியிருக்கும் நாட்களில் மாலை நேரத்தில் கற்பூரம் ஏற்றி சரண கோஷம் ஒலித்து ஐயப்பனை வழிபட வேண்டும் என்பது கட்டாயமான விதிமுறையாகும். கற்பூர ஆழியில் ஐயப்பன்மார் கற்பூரத்தை இட்டு வழிபடுகிறார்கள்.
சபரிமலைக்கு 18 முறைக்கு மேல் சென்று வந்தவர்கள் குருசாமி என்ற தகுதியை பெறுகிறார்கள். ஒரே ஆண்டில் 18 முறை சென்றுவிட்டு, குருசாமி என கூற முடியாது. 18 ஆண்டுகள் மகரவிளக்கு அல்லது மண்டல பூஜைக்கு கட்டு கட்டி, 41 நாட்கள் முதல் 60 நாட்கள் வரை விரதமிருந்து சென்று வருபவர்களே குருசாமி ஆக முடியும். இவர்கள் தங்கள் கையால் மற்ற ஐயப்பன் மார்களுக்கு மாலை அணிவிக்கலாம். இவர்கள் சபரிமலை சீசன் அல்லாத நாட்களில் கூட ஐயப்பனுக்கு பூஜை செய்து வரவேண்டும்.

பார்வதி தேவியை வழிபடத்தக்க விரத நாள்கள் எத்தனை. அவை பற்றி விரிவான தகவல்களை கீழே விரிவாக பார்க்கலாம்.
பார்வதி தேவியை வழிபடத்தக்க விரத நாள்கள் மூன்று. அவை வருமாறு:
வெள்ளிக்கிழமை விரதம்: சித்திரை மாதம், வளர்பிறை, முதல் வெள்ளிக்கிழமையன்று தொடங்கி, வாரந்தோறும் பார்வதி தேவியரைக் குறித்து மேற்கொள்ளும் விரதம் இது. விரதத்தின்போது பகலில் ஒரு பொழுது உண்ணலாம்.
ஆடிப்பூர வழிபாடு :
ஆடி மாதத்தில் சூரியன் கடக ராசியில் சஞ்சரிக்கும் போது சுக்கிரனின் நட்சத்திரமான பூரம் நட்சத்திரம் வரும் நாள் Ôஆடிப்பூரம்Õ என்று அழைக்கப்படுகிறது. அன்றைய தினம் கோவில்களில் உற்சவம் மற்றும் சிறப்பு வழிபாடுகள் நடைபெறும். இந்த பூரத்திற்கு சில நாட்களுக்கு முன்பு பச்சைப் பயிறைத் தண்ணீரில் நனைத்து முளைவிட வைப்பார்கள்.
ஆடிப்பூரம் தினத்தன்று அது நன்றாக முளைவிட்டிருக்கும். அதை பெண்கள் தலையில் சுமந்து கோவிலுக்குச் சென்று அம்பிகைக்கு நைவேத்தியமாக வைப்பார்கள். பின்னர் அதை அவர்கள் பிரசாதமாகச் சாப்பிடுவார்கள். குழந்தை பாக்கியம் இல்லாத பெண்கள் இவ்வாறு முளைப்பாரி எடுத்து நைவேத்தியம் செய்து வணங்கினால் குழந்தை பாக்கியம் கிடைக்கும் என்பது நம்பிக்கை.
துளசி வழிபாடு :
துளசி இருக்கும் இடத்தில் லட்சுமி வசிப்பாள். விஷ்ணு அருள் கிடைக்கும். வீட்டின் மேற்குப் பகுதியில் சூரிய உதயத்தைப் பார்த்த நிலையில் துளசி செடியை தொட்டியில் வைத்து வழிபட வேண்டும். துளசி மாடத்திற்கு தினமும் நீர் ஊற்றி, கோலமிட்டு வழிபட்டு வந்தால் நல்லது. துளசி மாலையை விஷ்ணுவுக்கும் அணிவித்தால் சகல பாக்கியங்களும் கிடைக்கும்.
ஒவ்வொரு ஆண்டும் ஐப்பசி அல்லது கார்த்திகை மாதம் வளர்பிறை திவாதசி அன்று பிருந்தாவன துளசி பூஜை செய்ய வேண்டும். புஷ்பங்களால் அர்ச்சிப்பது விசேஷம்.
பாவை நோன்பு :
ஸ்ரீஆண்டாள் பாடி அருளிய திருப்பாவையும் ஸ்ரீமாணிக்கவாசக சுவாமிகள் பாடி அருளிய திருவெம்பாவையும் மார்கழி நோன்பை அடிப்படையாகக் கொண்டவை ஆகும்.
‘மாதங்களில் நான் மார்கழி ஆவேன்’ எனக் கண்ணபிரான் கீதையில் அருளினார். வைணவர்களும் சைவர்களும் ஒருங்கே கொண்டாடும் மாதம் இது. வைகுண்ட ஏகாதசியும் ஆருத்ரா தரிசனமும் இம்மாதத்தில் தான் வருகின்றன. இம்மாதத்தில் அதிகாலையில் செய்யக் கூடிய பூஜையானது, ஒரு வருடத்தில் பூஜை செய்த பலனைத் தரும்.