என் மலர்
தோஷ பரிகாரங்கள்
கேது தோஷம், நாக தோஷத்திற்கு சிறந்த பரிகார தலம் ஒன்று சென்னையில் உள்ளது. இந்த தலத்தை பற்றியும் எப்படி வழிபாடு செய்ய வேண்டும் என்பதையும் பார்க்கலாம்.
போரூர் அருகில் உள்ள கெருகம்பாக்கம் நீலகண்டேஸ்வரர் ஆலயம், கேதுவுக்குரிய பரிகார தலமாக விளங்குகிறது. இதனை வட கீழ்பெரும்பள்ளம் என்றும் அழைக்கிறார்கள். மூலவர் பெயர் நீலகண்டேஸ்வரர். அம்பிகையின் பெயர் ஆதி காமாட்சி. ஜாதக ரீதியாக உள்ள நாகதோஷத்தை போக்கக்கூடிய சக்தி வாய்ந்த தலமாக இது கருதப்படுகிறது. இத்தலத்தில் கேது பகவானை தனிச் சன்னிதியில் தரிசனம் செய்யலாம். ஆலயத்தின் பழைய பெயர், ‘அழகிய சோழ நல்லூர்’ என்பதாகும். கேதுவால் வழிபடப்பட்ட பெருமை கொண்ட ஆலயம் என்பதால், அவரால் ஏற்படும் தோஷங்கள் இங்கு நிவர்த்தியாகின்றன.
ஒவ்வொரு நாளும் வரக்கூடிய எமகண்ட வேளை என்பது கேதுவிற்கு உரியதாகும். இங்கே செய்யப்படும் எமகண்ட வேளை பூஜைகள் விசேஷமானது. நீலகண்டேஸ்வரருக்கும், நந்திக்கும் இடையே இருக்கும் மேல் விதானத்தில், சூரியனை கேது விழுங்குவது போன்ற ஒரு சிற்பம் வடிவமைக்கப்பட்டுள்ளது. அதற்கு கீழாக நின்றபடி நீலகண்டேஸ்வரரையும், அம்பிகையையும் பிரார்த்தனை செய்தால் கேது தோஷம் நீங்கும்.

சென்னைக்கு தெற்கே இருக்கும் பூந்தமல்லியில் உள்ள வைத்தீஸ்வரன் கோவில் செவ்வாய் கிரகத்திற்கு பரிகார தலமாக கருதப்படுகிறது.
சென்னைக்கு தெற்கே இருக்கும் பூந்தமல்லியில் உள்ளது வைத்தீஸ்வரன் கோவில். இந்த ஆலயம்தான் செவ்வாய் பரிகார தலமாக கருதப்படுகிறது.
காரணம் செவ்வாயும், தேவர்களின் அதிபதியான இந்திரனும் இத்தலத்தில் உள்ள வைத்தீஸ்வர சுவாமியை வணங்கி, தங்களது சிரமங்கள் நீங்க பெற்றிருக்கின்றனர். 1,300 ஆண்டுகள் பழமையான இந்த ஆலயம் சோழர் களால் அமைக்கப்பட்டதாக தெரிகிறது.
இக்கோவிலின் மூலவர் பெயர் வைத்தியநாத சுவாமி. அம்பிகையின் பெயர் தையல் நாயகி அம்மன். நவக்கிரகங்களில் அங்காரகன் எனப்படும் செவ்வாய்க்குரிய தலமாக இத்தலம் விளங்குகிறது.
செவ்வாய்க்கிழமை அன்று வரும் ராகுகால நேரத்தில் இத்தலத்தில் உள்ள அங்காரகனுக்கும், விஷ்ணு துர்கைக்கும் மாவிளக்கு தீபம் ஏற்றி வழிபட வேண்டும். அதன் மூலம் செவ்வாய் பரிகாரமும், தீராத நோய்கள், பகை மற்றும் தோல் நோய்கள் நீங்குவதாக பக்தர்களின் நம்பிக்கை நிலவுகிறது.

அங்குரேஸ்வரர் கோவில் இறைவன், தன்னை ஆராதிக்கும் பக்தர்களின் மன ஊனத்தையும் விலக்கி அருள்புரிவார் என்பது பக்தர்களின் அசைக்க முடியாத நம்பிக்கை.

திருச்சி மாவட்டம் லால்குடி - அன்பில் பேருந்து சாலையில், லால்குடியில் இருந்து 5 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது ஆதிகுடி என்ற திருத்தலம். இங்கு அங்குரேஸ்வரர் திருக்கோவில் அமைந்துள்ளது.
நம் நடப்பு சந்ததியினர் ஊனம் அடைந்திருந்தால், விபத்தால் அங்க வலிமை இழந்திருந்தால், பக்கவாதம் போல் நோயால் பாதிக்கப்பட்டிருந்தால், இந்த ஆலயத்தில் இருக்கும் விமல லிங்கத்தின் வலதுபுறம் நன்றாக திரண்ட வெண்ணெய் காப்பும், இடதுபுறம் வெண்ணெய் காப்பின் மேல் நிறைய மாதுளை முத்துகளைப் பதித்தும் வழிபட்டால் குணம் நிச்சயம் என்பது பக்தர்கள் நம்பிக்கை.
மாடு மேய்க்கும் சிறுவன் மேல் கருணை கொண்டு, அவனது பிறவி ஊனத்தை குணமாக்கிய இத்தலத்து இறைவன், தன்னை ஆராதிக்கும் பக்தர்களின் மன ஊனத்தையும் விலக்கி அருள்புரிவார் என்பது பக்தர்களின் அசைக்க முடியாத நம்பிக்கை.

ஸ்ரீவெளி கண்ட நாதர் திருக்கோவில் உள்ள ஸ்ரீபைரவரை மனதார வழிபட்டால், பில்லி - சூனியம் முதலான ஏவலில் இருந்து விடுபடலாம் என்கின்றனர் பக்தர்கள்.
திருச்சி மத்திய பேருந்து நிலையத்தில் இருந்து சுமார் 2 கி.மீ. தொலைவில் உள்ளது ஸ்ரீவெளி கண்ட நாதர் திருக்கோவில். சுமார் ஆயிரம் வருடப்பழமை வாய்ந்த ஆலயம் இது.
ஆலயத்தில் அற்புதமாகத் தரிசனம் தருகிறார் ஸ்ரீபைரவர். இவருக்கு, தேய்பிறை அஷ்டமியில் சிறப்பு வழிபாடுகள், பூஜைகள் நடைபெறுகின்றன. அந்த நாளில் கலந்து கொண்டு ஸ்ரீபைரவரை மனதார வழிபட்டால், பில்லி - சூனியம் முதலான ஏவலில் இருந்து விடுபடலாம், தொழில் சிறக்கும், வியாபாரத்தில் லாபம் கொழிக்கும் என்கின்றனர் பக்தர்கள்.
ஸ்ரீபைரவரிடம் பிரார்த்தனை செய்து, அது நிறைவேறியதும் சிறு துணியில் மிளகாயை மூட்டை போல் கட்டி, மாலையாகச் சார்த்தி, நேர்த்திக்கடனைச் செலுத்துகின்றனர். மேலும் ஐந்து வகை எண்ணெய் கொண்டு தீபமேற்றி வழிபடுகிறார்கள் பக்தர்கள்.

திருமணம், குழந்தை செல்வம் போன்ற குறைபாடு உள்ளவர்கள் தொடர்ந்து மாங்காடு கோவிலுக்கு வந்து அம்மனை வழிபாடு செய்து வந்தால் விரைவில் நல்ல பலனை காணலாம்.
தமிழ், ஆங்கிலப் புத்தாண்டு தினங்கள், தீபாவளி, பொங்கல், நவராத்திரி, மாசி மகம், மகாசிவராத்திரி, ஆனித் திருமஞ்சனம் ஆகிய நாட்கள் இக்கோயிலில் விஷேச நாட்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
அம்பாள் மாங்காடு தலத்தில் தவம் புரிந்து பின்னர் இதன் பயனால் காஞ்சியில் மணந்து கொண்டமையால் கன்னிப் பெண்கள் மஞ்சள் கயிற்றைக் கட்டி வழிபட்டால் மணக்கோலம் பூணுவர். ஆண்களுக்கும் இது பொருந்தும்.
குழந்தைச் செல்வம் இல்லாதோர் தொட்டில் கட்டி வழிபட்டால் வீட்டிலே மழலை விளையாடும். பணி இல்லாதோரும் ஆறு வாரம் வழிபட்டால் பலன் கிடைக்கும்.
உத்தியோக உயர்வுக்காவும், உடல் சார்ந்த குறைகள் நீங்கவும் மாங்காடு தலத்திற்கு பக்தர்கள் பெருமளவில் வருகின்றனர்.

கோபூஜை செய்வதால், குழந்தை இல்லாமல் துன்பப்படுபவர்களுக்கு, புத்திரப்பேறு வாய்க்கும். தீய சக்திகள் விலகும். முற்பிறவியில் செய்த பாவங்கள் நீங்கும்.
தமிழர் திருநாளான பொங்கலுக்கு மறுதினம் மாட்டுப் பொங்கல் கொண்டாடப்படுகிறது. இந்த நாளில் கோ-பூஜை செய்து வழிபடுவது நல்லது. வாழ்க்கையில் பெரிய புண்ணியத்தைத் தருவது பசு வணக்கம். பசுவின் உடலில் மும்மூர்த்திகளும், முப்பத்து முக்கோடி தேவர்களும், இதர தெய்வங்களும், ரிஷிகளும், அஷ்டவசுக்கள் அடக்கம் என்று வேத நூல்கள் கூறுகின்றன. பசுவை பெற்ற தாய்க்கு இணையாக கருதிதான் நாம் ‘கோமாதா’ என்று அழைக்கிறோம். பசுவின் பால், நெய் கொண்டே யாகங்கள் செய்விக்கப்படுகின்றன. இவ்வாறு யாகங்கள் செய்வதால் மழை பொழியும் என்பது ஐதீகம்.
கோமாதா பூஜை செய்யும் போது பசுவை முன்புறமாக தரிசிப்பதை விட, பின்புறமாக தரிசிப்பது மிகவும் நன்மை தரும் என்று கூறப்படுகிறது. ஏனெனில் பசுவின் பின்புறத்தில்தான் மகாலட்சுமி வாசம் செய்கிறாள். பசுவை வழி படும்போது, முன் நெற்றி, வால் பகுதிகளில் சந்தனம், குங்குமம் வைத்து, மாலை அணிவிக்க வேண்டும். பசுவின் சாணமும் லட்சுமி அம்சம். எனவேதான் வீட்டு வாசலில் சாணம் கரைத்து தெளிக்கிறார்கள். பசுவுக்கு பூஜை செய்வது என்பது, அகிலத்தைக் காக்கும் அன்னை பராசக்திக்கு பூஜை செய்வதற்கு ஒப்பானதாகும்.
கோமாதா பூஜையின் போது பசுவிற்கு அகத்திக்கீரை, சர்க்கரைப்பொங்கல், பழவகைகள் போன்றவற்றை ஆகாரமாகத் தர வேண்டும். கோமாதாவின் 108 போற்றியை பக்தியுடன் சொல்லி வழிபட வேண்டும். பின்னர் நெய்தீபத்தால் ஆராதனை செய்து, மூன்று முறை வலம் வந்து விழுந்து வணங்க வேண்டும். கோபூஜையின் போது, பசுவுடன் கன்றையும் சேர்த்தே பூஜிக்க வேண்டும். வீட்டில் பசு இல்லாதவர்கள், தினமும் ஏதாவது ஒரு பசுவிற்கு அருகம்புல், அகத்திக்கீரை, வாழைப்பழம் ஆகியவற்றை தீவனமாக கொடுத்தால் கோ பூஜை செய்த பலன் கிடைக்கும். வெளியில் மேய்ந்து வரும் பசுக்களுக்கு, வீட்டின் வெளிப்புறம் தண்ணீர் தொட்டி வைக்கலாம்.
பாற்கடலில் பிறந்த ஐந்து பசுக்களும் கோலோகத்தில் இருந்து அருள்புரிவதாக ஐதீகம். பசுவைத்தெய்வமாக வழிபட்டால் கோலோகத்தை அடையும் பாக்கியம் உண்டாகும். வீட்டில் கோபூஜை நடத்த முடியாதவர்கள் அருகில் உள்ள பசுபராமரிப்பு இடங்களிலும், வழிபாட்டிலும் கலந்து கொள்ளலாம். தினமும் பூஜை செய்ய முடியாவிட்டால் வெள்ளிக்கிழமைதோறும் பூஜை செய்ய வேண்டும். ஆலயங்களில் நடைபெறும் கோபூஜைகளில் கலந்து கொள்ளலாம்.
வீட்டு வாசலை பெருக்கி, பசுவின் சாணத்தை கரைத்து தெளிப்பதற்கு காரணம் இருக்கிறது. பசுநீர், பசு சாணம் போன்றவை கிருமி நாசினியாக செயல்படுகின்றன. இதனால்தான் பசு சாணத்தை கரைத்து தெளிக்கிறோம். புதிதாக வீட்டுமனை வாங்கும் போதும், வீட்டு கிரகப் பிரவேசத்தின் போதும், தீவினைகள், தீய சக்திகளின் பாதுகாப்புக்கு உள்ளாகாமல் இருக்கவே, பசுவின் சாணத்தை தெளிப்பது வழக்கமாக உள்ளது.
கோபூஜை செய்வதால், செல்வச் செழிப்பு உண்டாகும். குழந்தை இல்லாமல் துன்பப்படுபவர்களுக்கு, புத்திரப்பேறு வாய்க்கும். தீய சக்திகள் விலகும். கல்வி, செல்வத்துக்குரிய தேவதைகள் பசுவில் இருப்பதால், அவர்களுக்கு செய்யும் பூஜை மூலம் நல்ல கல்வியும், செல்வச் செழிப்பும் வந்து சேரும். முற்பிறவியில் செய்த பாவங்கள் நீங்கும். மன சஞ்சலங்கள் நீங்கி மகிழ்ச்சி குடிகொள்ளும். கோபூஜை செய்வதால், பல யாகங்கள் செய்த பலனும், பல புராதன கோவில்களுக்கு சென்று தெய்வத்தை வணங்கிய பலனும் கிடைக்கும்.

வசிஷ்டேஸ்வரர் திருக்கோவிலில் அம்மன் சன்னிதிக்கு மேலே உள்ள 12 ராசிக்கட்டங்களின் வழியாக தோஷங்களை நீக்கும் இறை அதிசயம் இந்த ஆலயத்திலேயே நிகழ்கிறது.
தஞ்சாவூர் மாவட்டம் திட்டையில் உள்ளது வசிஷ்டேஸ்வரர் திருக்கோவில். இந்த ஆலயம் குரு பரிகாரத் தலமாகவும் விளங்கி வருகிறது. சிவனும், சக்தியும் சமம் என்பதை உணர்த்தும் வகையில், இந்த ஆலயத்தில் இறைவனுக்கு நிகராக மிக உயர்ந்த பீடத்தில் அம்பாள் எழுந்தருளி, பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார்.
இத்தல அம்மன் உலக நாயகி என்றும், மங்களாம்பிகை என்றும் அழைக்கப்படுகிறார். அம்மன் சன்னிதிக்கு மேலே உள்ள விமானத்தில், மேஷம் முதல் மீனம் வரையான 12 ராசிக் கட்டங்கள் அமைக்கப்பட்டிருக்கின்றன. அந்தந்த ராசிக்காரர்கள் தங்கள் ராசியின் கீழ் நின்று அம்மனை பிரார்த்தித்தால், அவர்களின் தோஷங்களை அம்பாள் நீக்குவார் என்பது நம்பிக்கையாகும். ராசிக்கட்டங்களின் வழியாக தோஷங்களை நீக்கும் இறை அதிசயம் இந்த ஆலயத்திலேயே நிகழ்கிறது.

பசுவை தானமாக கொடுப்பவர்களின், 7 தலைமுறையினர் மோட்சத்துக்குச் செல்வார்கள். மேலும் அறியாமல் செய்த பாவங்களும் விலகும். தீய சக்திகள் விலகும்.
சிவபெருமான் வசிக்கும் இடம் கயிலாயம் என்று அழைக்கப்படுகிறது. இதுபோலவே விஷ்ணு இருக்கும் இடம் வைகுண்டம் என்றும், இந்திரன் இருக்கும் இடம் இந்திரலோகம் என்றும், கிருஷ்ணரின் இருப்பிடம் கோலோகம் என்றும் பெயர்பெற்றுள்ளது.
பசுவை தானம் கொடுப்பவர்கள், பல ஆயிரம் வருடங்கள் கோலோகத்தில் கிருஷ்ணபகவானுடன் சேர்ந்திருப்பர் என்று புராணங்கள் கூறுகின்றன. இது தவிர பசுவை தானமாக கொடுப்பவர்களின், 7 தலைமுறையினர் மோட்சத்துக்குச் செல்வார்கள். மேலும் அறியாமல் செய்த பாவங்களும் விலகும்.
கோபூஜை செய்வதால், செல்வச் செழிப்பு உண்டாகும். குழந்தை இல்லாமல் துன்பப்படுபவர்களுக்கு, புத்திரப்பேறு வாய்க்கும். தீய சக்திகள் விலகும். கல்வி, செல்வத்துக்குரிய தேவதைகள் பசுவில் இருப்பதால், அவர்களுக்கு செய்யும் பூஜை மூலம் நல்ல கல்வியும், செல்வச் செழிப்பும் வந்து சேரும்.
முற்பிறவியில் செய்த பாவங்கள் நீங்கும். மன சஞ்சலங்கள் நீங்கி மகிழ்ச்சி குடிகொள்ளும். கோபூஜை செய்வதால், பல யாகங்கள் செய்த பலனும், பல புராதன கோவில்களுக்கு சென்று தெய்வத்தை வணங்கிய பலனும் கிடைக்கும்.

செவ்வாய் தோஷத்திற்கு விரைவில் பலன் தரக்கூடிய எளிய பரிகாரங்கள் உள்ளன. இந்த பரிகார முறைகளை முறையாக கடைபிடித்தால் நல்ல பலனை எதிர்பார்க்கலாம்.
ஜாதக கட்டத்தில் லக்னத்துக்கு 2, 4, 7, 8, 12 ஆகிய இடங்களில் செவ்வாய் கிரகம் இருந்தால் செவ்வாய் தோஷம் என கருதப்படும்.
ஆனால், செவ்வாய்க்கு பல்வேறு காரணங்களால் தோஷ நிவர்த்தி உண்டாகும். அவ்வாறு தோஷ நிவர்த்தி பெற்றாலும்கூட திருமணம் என்றால், அதேபோல் 2, 4, 7, 8, 12 ஆகிய இடங்களில் செவ்வாய் இருக்கும் ஜாதகத்தை மட்டுமே சேர்க்க வேண்டும்.
பரிகாரங்கள் :
ஒவ்வொரு செவ்வாய்க்கிழமை விரதம் இருந்து முருகனுக்கு அர்ச்சனை செய்து வரலாம்.
வைத்தீஸ்வரன் கோயிலில் பரிகார பூஜை செய்யலாம்.
அறுபடை வீடுகளுக்கு சென்று தரிசனம் செய்யலாம்.
பழநி ஆண்டவருக்கு வேண்டிக்கொண்டு பிரார்த்தனைகளை நிறைவேற்றுதல் நலம்.

பைரவர் என்றால் நம் பயம், துன்பம், துயரம் எல்லாவற்றையும் போக்கி நம்மை காப்பவர் என்று பொருள். அவரை வழிபடுவதால் கிடைக்கும் பலன்களை பார்க்கலாம்.
சிவாலயங்களில் நீங்கள் சன்னதியை சுற்றி வரும் போது வட கிழக்குப் பகுதியில் பைரவர் வீற்றிருப்பதைப் பார்த்து இருப்பீர்கள். சிவபெருமானின் முக்கிய அம்சமான இவரை ஒவ்வொருவரும் அவசியம் வழிபட வேண்டும்.
ஏனெனில் பைரவரை மனம் உருகி வழிபடாவிட்டால், நீங்கள் சிவாலயத்துக்கு சென்று வழிபட்டதற்கான நோக்கமே பயன் தராமல் போய் விடக் கூடும். அந்த அளவுக்கு பைரவர் மிக, மிக முக்கியத்துவம் வாய்ந்தவர். பைரவர் என்றால் நம் பயம், துன்பம், துயரம் எல்லாவற்றையும் போக்கி நம்மை காப்பவர் என்று பொருள்.
வாழ்வில் உங்களுக்கு எப்போதாவது இக்கட்டான ஒரு சூழ்நிலை ஏற்பட்டால்... மனம் கலங்காமல், நம்பிக்கையுடன் “பைரவா... காப்பாற்று’’ என்று அழைத்துப் பாருங்கள், காகம் விரட்டும் போது கோழி தன் குஞ்சுகளை எப்படி தன் இறக்கைக்குள் வைத்து காப்பாற்றுகிறதோ, அப்படி ஓடோடி வந்து பைரவர் உங்களை காப்பாற்றுவர்.
பைரவரை நீங்கள் தொடர்ந்து தினமும் வணங்கினால். நவக்கிரக தோஷங்கள் விலகி, தீ வினைகள் அழிந்து, பிறவிப் பயனை உணர்ந்து, சுப மங்களமாக, தலை குனியா வாழ்க்கையை நிச்சயம் வாழ்வீர்கள். 8 மற்றும் 64 என்ற எண்ணிக்கையில் பல கோலங்களில் பைரவர் பக்தர்களுக்கு அருள்புரிகிறார். பைரவருக்கு சந்தன காப்பு அபிஷேகம் செய்து வழிபடுவது மிக, மிக பிடிக்கும்.
தாமரைப்பூ மாலை, வில்வ மாலை, சந்தன மாலை அணிவித்து சர்க்கரை பொங்கல், தயிர்சாதம், தேன், அவல் பாயசம் மற்றும் பழ வகைகளை படைத்து பைரவரை வழிபட்டால் நாம் விரும்பியதை எல்லாம் பைரவர் தருவார். தினமும் பைரவர் காயத்ரியை சொல்லி வந்தால் செல்வம் பெருகும். இது நிதர்சனமான உண்மை.
செல்வத்தை நமக்கு வாரி வழங்கும் அஷ்ட லட்சுமிகள், ஒவ்வொரு மாதமும் தேய்பிறை அஷ்டமி தினத்தன்று சொர்ண ஆகர்ஷண பைரவரை வழிபட்டு தங்களது செல்வவள சக்தியை மேம்படுத்தி கொள்கிறார்கள். எனவே நாமும் தேய்பிறை அஷ்டமி தினத்தன்று பைரவரை வழிபட்டால் மங்காத செல்வ வளத்தை பெறலாம் என்பது ஐதீகமாகும்.

ராமநாதபுரத்தில் இருந்து ராமேஸ்வரம் செல்லும் சாலையில் உள்ளது உத்தர கோச மங்கை ஆலயம். இது பிரிந்த தம்பதிகளை ஒன்று சேர்க்கும் சிறந்த பரிகார ஸ்தலமாகும்
தமிழகத்தில் சிறப்பு பெற்ற பல ஸ்தலங்கள் இருக்கின்றன. அவற்றில் ஒன்றுதான் ‘உத்திர கோச மங்கை’ என்ற திருத்தலம்.
இந்த ஆலயம் முற்பிறவி பாவங்கள், சாப - விமோசனங்கள், ஜாதகத்தில் உள்ள தோஷங்களை போக்கும் தலமாக விளங்குகிறது. சிவன் கோவில்களிலும், சிவ வழிபாடுகளிலும் சிவபெருமானுக்கு, தாழம்பூ படைத்து வழிபாடு நடைபெறுவதில்லை. ஆனால் இந்த ஆலயத்தில் மட்டும் சிவபெருமானுக்கு, தாழம்பூவைக் கொண்டு பூஜிக்கப்படுகிறது.
முன்னோர் சாபம், திருமணத் தடை, குழந்தைப் பேறு இல்லாமை, கல்வியில் தடை, வெளிநாட்டுப் பயணத்தில் தாமதம் போன்ற இடையூறுகளில் இருந்து விடுபட, இத்தல இறைவன் வழிவகை செய்கிறார். தினமும் இரவு 7.30 மணிக்கு நடைபெறும் பள்ளியறை பூஜையில் கலந்துகொண்டால், பிரிந்த தம்பதிகள் ஒன்று சேருவார்கள் என்பது நம்பிக்கையாகும்.
ராமநாதபுரத்தில் இருந்து ராமேஸ்வரம் செல்லும் சாலையில் உள்ளது உத்தர கோச மங்கை ஆலயம்.

திருமணம் தடைபடுபவர்கள் துர்க்கையை எவ்வாறு வழிபட வேண்டும் என்பதையும், எந்த கிழமைகளில் வழிபட்டால் என்ன பலன் கிடைக்கும் என்பதையும் பார்க்கலாம்.
திருமணம் தடைபடுபவர்கள் துர்க்கை வழிபாடு செய்தால் போதுமானது. ஒவ்வொரு கிழமையிலும் வழிபாடு செய்ய வேண்டிய விபரம் தரப்பட்டுள்ளது.
ஞாயிறு : ஞாயிற்றுக்கிழமை துர்க்கை சன்னிதியில் மாலை 4.30 முதல் - 6 மணிக்குள் புதிய வெள்ளைத்துணியில் திரி செய்து, விளக்கேற்ற வேண்டும். சர்க்கரை பொங்கல் நைவேத்யம் செய்ய வேண்டும். இதனால் குடும்பத்தில் வறுமை நீங்கி, செல்வம் பெருகி எல்லா நலன்களும் உண்டாகும்.
திங்கள்: திங்கள்கிழமைகளில் காலை 7.30 - முதல் 9 மணிக்குள் துர்க்கைக்கு வெண்ணெய் காப்பு செய்து வெண் பொங்கல் நைவேத்யம் செய்து வழிபட வேண்டும். இதனால் மூட்டு சம்பந்தமான நோய் நீங்கும் என்பதும். வெளிநாட்டில் கல்வி பயில வாய்ப்பு கிட்டும் என்பதும் நம்பிக்கை.
செவ்வாய்: ராகு கால நேரமான மாலை 3 மணி முதல் - 4.30க்குள் வடக்கு முகமாக தீபமேற்றி, தக்காளி சாதம் நைவேத்யம் செய்து துர்க்கைய வழிபட வேண்டும். இதனால் மாங்கல்ய பலமும், குழந்தை பாக்கியமும் கிடைக்கும் என்பது நம்பிக்கை.
புதன்: மதியம் 12 முதல் 1.30 மணிக்குள் பஞ்சில் திரிசெய்து, விளக்கேற்றி, புளியோ தரை நைவேத்யம் செய்து துர்க்கையை வழிபட வேண்டும். இதனால் பதவி உயர்வு கிட்டும் என்பது, ரத்த சம்பந்தமான நோய் தீரும் என்பதும் நம்பிக்கை.
வியாழன்: வியாழக்கிழமைகளில் மதியம் 1.30 முதல் - 3 மணிக்குள் விளக்கேற்றி, எலும்மிச்சம்பழம் சாதம் நைவேத்யம் செய்து, வழிபட வேண்டும். இதனால் வியாபாரிகளுக்கு அதிக லாபம் கிட்டும். இதய சம்பந்தமான நோய்கள் நீங்கும் என்பது நம்பிக்கை.
வெள்ளி: வெள்ளிக்கிழமைகளில் ராகுகால நேரமான காலை 10.30 முதல் - 12 மணிக்குள் துர்க்கையை வழிபட மற்ற நாட்களை விட மிக ஏற்ற காலம். எலுமிச்சம்பழத்தை பிழிந்து விட்டு, அதை குழிவாகச் செய்து, நல்லெண்ணெய் அல்லது நெய் ஊற்றி, பஞ்சில் திரியிட்டு தீபம் ஏற்ற வேண்டும். தேங்காய் சாதம் அல்லது பாயாசம் நைவேத்யம் செய்ய வேண்டும். இதனால் தீராத துன்பம் தீரும். மாங்கல்ய பலம் பெருகும் என்பது நம்பிக்கை.
சனி: காலை 9 - முதல் 10.30 மணிக்குள் மஞ்சள்துணி திரியில் விளக்கேற்றி, காய்கறி கலந்த அன்னத்தை நைவேத்யம் செய்து வழிபட வேண்டும். இதனால் வேலை வாய்ப்பு கிட்டும், அரசியல்வாதிகள் ஏற்றம் பெறுவர், சிறுநீரக கோளாறு நீங்கும் என்பது நம்பிக்கை.