என் மலர்
ஆன்மிகம்

பில்லி - சூனியத்திலிருந்து இருந்து விடுபட பைரவருக்கு மிளகாய் மாலை வழிபாடு
ஸ்ரீவெளி கண்ட நாதர் திருக்கோவில் உள்ள ஸ்ரீபைரவரை மனதார வழிபட்டால், பில்லி - சூனியம் முதலான ஏவலில் இருந்து விடுபடலாம் என்கின்றனர் பக்தர்கள்.
திருச்சி மத்திய பேருந்து நிலையத்தில் இருந்து சுமார் 2 கி.மீ. தொலைவில் உள்ளது ஸ்ரீவெளி கண்ட நாதர் திருக்கோவில். சுமார் ஆயிரம் வருடப்பழமை வாய்ந்த ஆலயம் இது.
ஆலயத்தில் அற்புதமாகத் தரிசனம் தருகிறார் ஸ்ரீபைரவர். இவருக்கு, தேய்பிறை அஷ்டமியில் சிறப்பு வழிபாடுகள், பூஜைகள் நடைபெறுகின்றன. அந்த நாளில் கலந்து கொண்டு ஸ்ரீபைரவரை மனதார வழிபட்டால், பில்லி - சூனியம் முதலான ஏவலில் இருந்து விடுபடலாம், தொழில் சிறக்கும், வியாபாரத்தில் லாபம் கொழிக்கும் என்கின்றனர் பக்தர்கள்.
ஸ்ரீபைரவரிடம் பிரார்த்தனை செய்து, அது நிறைவேறியதும் சிறு துணியில் மிளகாயை மூட்டை போல் கட்டி, மாலையாகச் சார்த்தி, நேர்த்திக்கடனைச் செலுத்துகின்றனர். மேலும் ஐந்து வகை எண்ணெய் கொண்டு தீபமேற்றி வழிபடுகிறார்கள் பக்தர்கள்.

Next Story