என் மலர்tooltip icon

    தோஷ பரிகாரங்கள்

    பல்வேறு பிரச்சனைகள் விரைவில் பலன் தரக்கூடிய எளிய பரிகாரங்கள் உள்ளன. கீழே கொடுக்கப்பட்டுள்ள பரிகாரங்களை பயன்படுத்தி பலன் பெறுங்கள்.
    (1) வேலை கிடைக்க சிரமம் ஏற்பட்டு வந்தால் தினசரி காலை சூரிய உதய நேரத்தில் சூரியனுக்கு கடுகு எண்ணெய் சிறிது ஊற்றி வர தகுந்த வேலை கிடைக்கும். இதை 41 நாட்கள் செய்ய வேண்டும். (சூரியனை பார்த்த படி வேண்டி கொண்டு கீழே விடலாம்)

    (2) ஜாதகத்தில் ராகுவினால் ஏதும் தொல்லைகள் இருந்து வந்தால் சனிக்கிழமை அல்லது செவ்வாய் கிழமைகளில் எளியோருக்கு மின் சாதன உபகரணங்கள் தானம் செய்ய, நிலை மாறும்.

    (3) பிரச்சனைகளுக்கு வழியே தெரியாமல் குழப்பமான சூழ்நிலை இருந்து வந்தால் உடனடி மிருதியுஞ்செய ஜெபம் 108 முறை பாராயணம் செய்ய, தீர்வு கிடைக்கும்.

    (4) வீட்டில் தந்தை மகன் இருவருக்கும் கஷ்டமான சூழ்நிலை/காலம் நடந்து வந்தால் வருடத்திற்கு நான்கு முறையாவது மான்களுக்கு உணவு மற்றும் நீர் வழங்கி வர மேன்மை உண்டாகும். நிரூபிக்கப்பட்ட முறை இது.

    (5) தடைகள் அதிகமாக இருந்து கொண்டே இருப்பின் யானைக்கு பேரீச்சம்பழம் கலந்த சாதம் கொடுத்து வர உடனடி தடைகள் விலகுவதை காணலாம்.
    வேதபுரீஸ்வரர் கோவிலில் உள்ள நாகநாத லிங்கத்தை சனிக்கிழமை தோறும் ராகுகாலத்தில் வழிபாடு செய்தால் சர்ப்ப தோஷங்கள் விலகும் என்பது நம்பிக்கை.
    திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறில் உள்ளது வேதபுரீஸ்வரர் கோவில்.

    இத்தலத்தில் நாகலிங்கம் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது. ஒரு முறை திருஞான சம்பந்தர் இத்தலத்திற்கு வந்தார். அப்போது பிற மதத்தைச் சேர்ந்த சிலர், வேள்வி ஒன்றை நடத்தி சம்பந்தர் மீது கொடிய பாம்புகளை ஏவிவிட்டனர். சம்பந்தர் இத்தல ஈசனை நினைத்து வேண்டினார்.

    உடனே சிவபெருமான், பாம்பாட்டியாக வந்து அந்த பாம்புகளை பிடித்துக் கொண்டு மறைந்துவிட்டார். 11 சர்ப்ப தலைகளுடன் இந்த நாகலிங்கம் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது. இந்த நாகநாத லிங்கத்தை சனிக்கிழமை தோறும் ராகுகாலத்தில் வழிபாடு செய்தால் சர்ப்ப தோஷங்கள் விலகும் என்பது நம்பிக்கை. இந்த நாகலிங்கத்தை அபிஷேகம் செய்து வழிபட்டால் திருமணத் தடை நீங்கும்.

    சென்னையில் இருந்து 110 கிலோமீட்டர் தொலைவிலும், திருவண்ணாமலையில் இருந்து 85 கிலோமீட்டர் தொலைவிலும் உள்ளது செய்யாறு வேதபுரீஸ்வரர் திருத்தலம்.
    திருமணத்தடை, கடன் தொல்லையால் அவதிப்படுபவர்கள் செவ்வாய்க்கிழமைகளில் சிங்கிரி குடியில் உள்ள நரசிம்மருக்கு நெய் தீபம் ஏற்றி வழிபட்டு வரலாம்.
    கடலூர் மாவட்டம் சிங்கிரி குடியில், 16 திருக்கரங்களுடன் இரணியனை சம்ஹாரம் செய்த நிலையில் நரசிம்மர் உக்கிரமாக அருள்பாலிக்கிறார். ஓம் நமோ நாராயணா என்னும் நாமத்தை நிலை நிறுத்திய அவதாரம்தான் நரசிம்ம அவதாரம்.

    “நாளை என்பது நரசிம்மனிடத்தில் இல்லை’ என்னும் வாக்கிற்கு ஏற்ப, சரணடைந்த உடனேயே அருள்பாலிப்பவர் நரசிம்மர். ஐந்து நிலை, ஏழு கலசங்களுடன் மேற்கு பார்த்த ராஜகோபுரமும், மிகப்பெரிய கொடி மரமும் உள்ளது.

    வைகானஸ ஆகமப்படி இத்தலத்தில் பூஜை நடக்கிறது.

    மனநிலை பாதிப்பு, கடன் தொல்லை, திருமணத்தடை, குழந்தை பாக்கியம், எதிரிகளால் தொந்தரவு, கிரக தோஷம் உள்ளவர்கள் இங்கு பிரார்த்தனை செய்கிறார்கள்.

    வேண்டுதல் நிறைவேற செவ்வாய்க் கிழமைகளில் நெய்விளக்கு ஏற்றி, துளசி அர்ச்சனை செய்கிறார்கள்.

    பிரகலாதனின் விருப்பப்படி நரசிம்மர், மூலஸ்தானத்தில் 16 திருக்கரங்களுடன், இரணியனை வதம் செய்த கோலத்தில் மிகப்பிரமாண்டமாக அருள்பாலிக்கிறார்.
    இரணியனை மேற்கு பார்த்து நின்று நரசிம்மர் வதம் செய்ததைக் குறிக்கும் வகையில், மேற்கு பார்த்த நிலையில் உள்ளார்.

    ஒரே மூலஸ்தானத்தில் மூன்று நரசிம்மர் அருள்பாலிப்பதை காண்பது அரிது. இவ்வகை அபூர்வ நரசிம்மர் தலங்கள் ராஜஸ்தானிலும், தமிழகத்தில் இங்கு மட்டுமே உள்ளதாகக் கூறுகிறார்கள்.

    மற்ற நரசிம்மர் தலங்களை விட சிறப்பு வாய்ந்ததாக கருதப்படும் தலம் இது. உற்சவர் பிரகலாத வரதன், ஸ்ரீதேவி, பூதேவியுடன் நின்ற கோலத்தில் பாவன விமானத்தின் கீழ் அருள்பாலிக்கிறார்.
    குன்றத்தூருக்கு அருகில் உள்ள சதுர்வேதிமங்கலம் எனப்படும் சோமங்களம் சோமநாதீஸ்வரர் கோவில், சந்திரனுக்குரிய பரிகார தலமாக விளங்குகிறது.
    வாழ்க்கையில் வரக்கூடிய இன்ப துன்பங்கள் அனைத்தும், நவக்கிரக அமைப்பால் நிர்ணயம் செய்யப்படுகிறது என்பது பரவலான ஆன்மிக நம்பிக்கையாக இருந்து வருகிறது. சென்னையில் உள்ளவர்களுக்கு சென்னையைச் சுற்றிலுமே நவக்கிரகங்களுக்கான 9 பரிகாரத் தலங்களும் உள்ளன. நவக்கிரக பரிகாரத்திற்கு இந்தத் தலங்களை வழிபட்டாலே போதுமானது.

    குன்றத்தூருக்கு அருகில் உள்ள சதுர்வேதிமங்கலம் எனப்படும் சோமங்களம் சோமநாதீஸ்வரர் கோவில், சந்திரனுக்குரிய பரிகார தலமாக விளங்குகிறது. மூலவர் சோமநாதேஸ்வரர். அம்பிகையின் பெயர் காமாட்சி. சந்திரன் வழிபட்டு பேறு பெற்றதால் சோமங்களம் என்ற பெயர் வழங்கப்படுகிறது. சோமன் என்றால் சந்திரன் என்று பொருள். கோவில் கோபுரமானது கஜப் பிருஷ்ட அமைப்பில் இருப்பதும், சதுர தாண்டவ மூர்த்தியாக நடராஜர் விளங்குவதும் இங்குள்ள சிறப்பு களாகும். இத்தல இறைவனை வழிபட்டால் சந்திர தோஷம் நீங்கும்.
    ராகு பாதிப்பு உள்ளவர்கள், ராகு திசை அல்லது புத்தி நடப்பில் இருப்பவர்களுக்கு குன்றத்தூரில் இருக்கும் திருநாகேஸ்வரர் கோவிலில் விசேஷ வழிபாடுகள் செய்யப்படுகிறது.
    பெரிய புராணத்தை இயற்றிய சேக்கிழாரின் அவதாரத் தலமான, குன்றத்தூரில் இருக்கும் திருநாகேஸ்வரர் கோவில் ராகு பரிகாரத் தலமாக விளங்குகிறது. ராகுவால் வழிபடப்பட்டதால் இத்தலத்து ஈஸ்வரருக்கு ‘திருநாகேஸ்வரர்’ என்பது பெயராகும். இந்த ஆலயத்தில் ராகுவுக்குரிய வழிபாடுகள் விசேஷமாக செய்யப்படுகிறது. அம்பிகைக்கு காமாட்சி என்று பெயர். மூலவருக்கு வழங்கப்பட்ட பழைய பெயர் ‘சடையாண்டீஸ்வரர்’ என்பதாகும்.

    ராகு பாதிப்பு உள்ளவர்கள், ராகு திசை அல்லது புத்தி நடப்பில் இருப்பவர்கள், இத்தலத்து சிவபெருமானையும், அம்பிகையையும் வழிபடுவது வழக்கம். சர்ப்ப தோஷம் மற்றும் சர்ப்ப சாபம் போன்றவற்றால், திருமணத்தடை மற்றும் ஆயுள் பாதிப்பு உண்டாகலாம். அதற்கு ராகு கால வழிபாடு செய்வது அவசியம். சர்ப்ப சாந்தி பரிகாரமாக ஹோமமும் செய்து நல்ல பலன்களை பெறலாம்.
    சனி கிரகத்தால் அவதிப்படுபவர்களுக்கு சென்று வழிபாடு செய்ய சிறந்த பரிகார தலம் சென்னையில் இருக்கும் வடநள்ளாறு. இது குறித்த விரிவான செய்தியை பார்க்கலாம்.
    சனிக்குரிய திருத்தலமானது திருநள்ளாறு. அதேபோல சென்னையில் இருப்பது வடநள்ளாறு என்று அழைக்கப்படுகிறது. இந்த தலம், பல்லாவரம் அருகே உள்ள பொழிச்சலூரில் இருக்கிறது. மூலவர் பெயர் அகஸ்தீஸ்வரர். அம்பிகையின் பெயர் ஆனந்தவல்லி.

    சிவபெருமானின் திருக்கோலங்களில் ஒன்றான பைரவமூர்த்தி, இத்தலத்தில் காவல் தெய்வமாக ஆக்ரோஷம் பெற்ற சம்ஹார கால பைரவராக வீற்றிருக்கிறார். சனியின் தொல்லைகளை களைவதில் பைரவமூர்த்திக்கு இருக்கும் முக்கியத்துவத்தை அவரது அருளை பெற்றவர்களே அறிவார்கள். இத்தலத்தில் சனிக்கு தனி சன்னிதியும், நள தீர்த்தமும் அமைந்துள்ளது கூடுதல் சிறப்பு.
    நமக்காக வாழ்ந்து, நம்மைப் பற்றி, நம் எதிர் காலத்தை பற்றி மட்டுமே சிந்தித்த நம் முன்னோர்களுக்காக நாம் செய்ய வேண்டிய முக்கியமான கடமைகளில் ஒன்றாக இந்த பித்ரு பூஜை அவர்களுக்கு நன்றி சொல்லும் விதமாக சில விஷயங்களை செய்யலாம்.
    பிரதிமை முதல் அமாவாசை வரை மொத்தம் 15 திதிகள் உள்ளன. இதில் அமாவாசை திதி முக்கியமானது. சூரியனும், சந்திரனும் ஒன்றாக இணையும் நாளே அமாவாசையாகும். மற்ற திதிகளில் ஏதாவது ஒரு கிரகம் திதி, தோஷம் அடையும். ஆனால் அமாவாசையன்று எந்தக் கிரகமும் தோஷம் அடையாது. எனவேதான் அமாவாசை அன்று, சில செயல்களைத் தொடங்கினால் அது வெற்றியாகும் என்பார்கள். ராகு, கேது மற்றும் கிரகங்களால் ஏற்படும் பிரச்சினைக்கு தீர்வு காண, அமாவாசையில் பரிகாரம் செய்வது சிறப்பான பலன்களைத் தரும். இன்றைய தினம் மூதாதையர்களின் ஆசிகளையும் பெறலாம்.

    பட்டினியால் வாடும் ஏழைகளுக்கு உணவளித்தல் 3 தலைமுறைகளுக்கு நன்மை அளிக்கிறது. புண்ணிய நதிகளில் நீராடுதல் 3 தலைமுறைகளுக்கு நன்மை அளிக்கிறது. ஏழைப் பெண்ணிற்கு திருமணம் செய்து வைத்தல். 5 தலைமுறைகளுக்கு நன்மை அளிக்கிறது. திருக்கோவிலில் தீபம் ஏற்றி வைத்தல் 5 தலைமுறைகளுக்கு நன்மை அளிக்கிறது.

    அன்னதானம் செய்வது 5 தலைமுறைகளுக்கு நன்மை அளிக்கிறது. பித்ரு பூஜை செய்ய உதவுதலுக்கு 6 தலைமுறைகளுக்கு நன்மை அளிக்கிறது.  திருக்கோவில்களுக்கு புனர்நிர்மாணம் செய்விப்பதற்கு 7 தலைமுறைகளுக்கு நன்மை அளிக்கிறது. அனாதையாக இறந்தவர்களுக்கு அந்திமக்கிரியை செய்வித்தல் 9 தலைமுறைகளுக்கு நன்மை அளிக்கிறது. பசுவின் உயிரைக் காப்பாற்றுவது 14 தலைமுறைகளுக்கு நன்மை அளிக்கிறது. இவற்றைப் போலவே, முன்னோர்களுக்கு கயா சேத்திரத்தில் திதி பூஜை செய்தல் 21 தலைமுறைகளுக்கு நன்மை அளிக்கிறது.

    நமக்காக வாழ்ந்து, நம்மைப் பற்றி, நம் எதிர் காலத்தை பற்றி மட்டுமே சிந்தித்த நம் முன்னோர்களுக்காக நாம் செய்ய வேண்டிய முக்கியமான கடமைகளில் ஒன்றாக இந்த பித்ரு பூஜை அவர்களுக்கு நன்றி சொல்லும் விதமாகக் கூட நாம் இதுபோன்ற விஷயங்களை செய்யலாம். தை அமாவாசை என்கிற புண்ணிய நாளில் நம் முன்னோர்களை வழிபட்டு அவர்களது நல்லாசியினைப் பெறுவோம்.
    சென்னையில் குருவுக்குரிய பரிகார தலம் உள்ளது. இந்த தலத்தில் உள்ள குரு பகவானை வந்து வழிபாடு செய்தால் தடைபடும் நல்ல காரியங்கள் விரைவில் நடைபெறும்.
    போரூரில் வீற்றிருக்கும் ராம நாதேஸ்வரர் கோவில், குருவுக்குரிய பரிகார தலமாக கருதப்படுகிறது. மூலவர் பெயரானது ராமநாதேஸ்வரர் என்பதாகும். அம்பிகையின் பெயரானது சிவகாம சுந்தரி. சிவபெருமானை குருவாக பாவித்து, ராமபிரான் வழிபட்ட தலம் என்பதால், குரு தலமாக விளங்குகிறது. இந்த ஆலயம் ஆதி ராமேஸ்வரம் என்றும் வழங்கப்படுகிறது.

    சுப காரியங்களை நடத்துவதற்கு முன்பாக இத்தலம் வந்து தரிசனம் செய்வது விசேஷம். குறிப்பாக வியாழன் தோறும் விரதம் இருந்து, குரு ஸ்துதியை மனதால் ஜெபித்து, வழிபாடுகள் நடத்துவதால் குருவின் பலமானது விரும்பியபடி கிடைக்கும்.
    ஜாதகரீதியாக புதன் நீச்சமாக இருப்பவர்கள், சென்னை போரூருக்கு அருகில் உள்ள சுந்தரேஸ்வரர் திருக்கோவிலுக்கு வந்து வழிபாடு செய்து புதனின் அருளை பெற்று மகிழலாம்.
    சென்னை போரூருக்கு அருகில் உள்ளது கோவூர் என்ற திருத்தலம். இங்கு சுந்தரேஸ்வரர் திருக்கோவில் அமைந்துள்ளது. இறைவனின் திருநாமம் சுந்தரேஸ்வரர், அம்பாளின் திருநாமம் சவுந்தராம்பிகை. கி.பி. 965-ம் ஆண்டில் சுந்தர சோழன் என்பவனால் இந்த ஆலயம் கட்டப்பட்டதாக குறிப்புகள் உள்ளன. இங்குள்ள இறைவனை காமதேனு வழிபட்டதால், இத்தலம் ‘கோவூர்’ என்று வழங்கப்படுகிறது. இத்தலமே சென்னையில் இருக்கும் புதனுக்குரிய பரிகார தலமாகும்.

    பஞ்ச ரத்ன கீர்த்தனை பாடல் பெற்ற தலங்களில் இத்தலமும் ஒன்று. இங்கு ஒவ்வொரு புதன்கிழமையும் நடைபெறும், மகாவில்வ இலை பூஜை விசேஷமானதாகும். சீதையை தேடி வந்த ராமன், இத்தல இறைவனை 48 நாள் விரதம் இருந்து வழிபட்ட பிறகே ராமேஸ்வரம் புறப்பட்டதாக தல புராணம் தெரிவிக்கிறது. ஜாதகரீதியாக புதன் நீச்சமாக இருப்பவர்கள், இங்கே வழிபாடு செய்து புதனின் அருளை பெற்று மகிழலாம். இத்தலத்தில் மகாவில்வ மரமானது ஸ்தல விருட்சமாக உள்ளது.
    சூரிய தோஷ பரிகாரத்திற்கான சிறந்த தலமாக சென்னை போரூருக்கு அருகில் உள்ள கொளப்பாக்கம் அகத்தீஸ்வரர் ஆலயம் உள்ளது. இது குறித்த விரிவான செய்தியை பார்க்கலாம்.
    சென்னை, வண்டலூரில் இருந்து 3 கி.மீ தொலைவில் உள்ள கொளப்பாக்கம் கிராமத்தில் அமைந்துள்ளது ஆனந்தவல்லி அம்மை உடனுறை அகத்தீஸ்வரர் ஆலயம்.

    இந்த அகத்தீஸ்வரர் ஆலயம், சூரிய பரிகார தலமாக விளங்குகிறது. 1,300 ஆண்டுகள் பழமையானது இந்த ஆலயம். இத்தலத்தின் இறைவன் அகத்தீஸ்வரர். அவருக்கு வாகீச மகாதேவர் என்ற பெயரும் உண்டு. இறைவியின் திருநாமம் ஆனந்தவல்லி. தெற்கு நோக்கி அருளும் அம்பிகையின் கருவறை கோஷ்டங்களில் விநாயகர், தட்சிணாமூர்த்தி, திருமால், துர்க்கை, பிரகாரத்தில் சண்டிகேஸ்வரர் ஆகியோர் அருள்கின்றனர். இங்கே தனி சன்னிதியில் சூரிய பகவான் ஈஸ்வரனை நோக்கிய வண்ணம் விசேஷமாக உள்ளார்.

    ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமை அன்றும், சூரியபகவானுக்கு சிவப்பு நிற உடை அணிவித்து, சிவப்பு நிற மலர்களால் அர்ச்சனை செய்து வழிபட வேண்டும். மேலும் சூரியனுக்குரிய தானியமான கோதுமையை, அவர் காலடிகளில் வைத்து மனமுருக வேண்டினால் சூரிய தோஷங்கள் நீங்குகின்றன. சூரிய பகவான் இத்தல மூலவரை வழிபட்டதால் சூரிய பரிகார தலமாக விளங்கி வருகிறது.
    சுக்ரனின் சாரம் பெற்ற பரணி, பூரம், பூராடம் நட்சத்திர நாட்களில் சுக்ரனுக்கு பரிகார பூஜைகள் செய்தும் மகிழ்ச்சியான வாழ்வை அடையலாம். இது குறித்த விரிவான செய்தியை கீழே பார்க்கலாம்.
    சென்னைக்கு தெற்கே இருக்கும் மாங்காட்டில் உள்ள மிகவும் பழமையான கோவில் திருவல்லீஸ்வரர் (வெள்ளஸ்வரர்) ஆலயம். நவக்கிரக தலங்களில் சுக்ரனுக்குரியதாக இத்தலம் விளங்குகிறது. சுக்ராச்சாரியாரால் பூஜிக்கப்பட்ட இத்தல இறைவனை, தமிழில் வெள்ளஸ்வரர் என்றும், சமஸ்கிருதத்தில் பார்க்கவேஸ்வரர் என்றும் அழைக்கிறார்கள்.

    இத்தலத்து வில்வ மரத்தடியில் பெரிய அளவிலான பாண லிங்கம் உள்ளது. இத்தலத்தின் தல விருட்சம் மகா வில்வம். கண் சார்ந்த குறைபாடுகள் உடையவர்கள் வெள்ளஸ்வரரை, வெள்ளிக்கிழமைகளில் தரிசித்து வழிபட்டு வந்தால், அவர்களது குறைகள் நீங்கப்பெறுவதாக ஐதீகம். சுக்ரனின் சாரம் பெற்ற பரணி, பூரம், பூராடம் நட்சத்திர நாட்களில் சுக்ரனுக்கு பரிகார பூஜைகள் செய்தும் மகிழ்ச்சியான வாழ்வை அடையலாம்.
    ஸ்ரீரங்கம் நம்பெருமாள் ஆலயத்தில் தாயார் சன்னிதிக்கு செல்லும் வழியில் உள்ள தன்வந்திரி பகவானை வழிபட்டால் தீராத நோயும் தீரும் என்பது பக்தர்களின் நம்பிக்கையாகும்.
    ஸ்ரீரங்கம் நம்பெருமாள் ஆலயத்தில் உள்ள தாயார் சன்னிதிக்கு செல்லும் வழியில் தன்வந்திரி பகவான் சன்னிதி உள்ளது. இத்தலத்தில் அருள்பாலிக்கும் அரங்கனுக்கே வைத்தியம் செய்யும் விதமாக, ஸ்ரீமன் நாராயணனே இங்கு தன்வந்திரியாக திகழ்வதாக கூறப்படுகிறது.

    கையில் அட்டைப் பூச்சி, அமிர்த கலசம் இவற்றுடன் தரிசனம் தரும் இவரை வழிபட்டால் தீராத நோயும் தீரும் என்பது பக்தர்களின் நம்பிக்கையாகும்.

    பொதுவாக எல்லாச் சன்னிதிகளின் உச்சியிலும், விமானம் அமைப்பது மரபு. ஆனால் தன்வந்திரி பகவான் வைத்தியராக இருப்பதால், நோயாளிகள் பலரும் அவரிடம் வைத்தியம் பார்க்க வருவார்கள் என்பதால் ஆகம விதிகளின்படி இவரது சன்னிதிக்கு மேல் விமானம் கட்டப்படவில்லை.
    ×