என் மலர்
தோஷ பரிகாரங்கள்
மேட்டுப்பாளையத்தில் உள்ள வனபத்திர காளியம்மனை வழிபாட்டால் திருமண தடை, பில்லி, சூனியம், எதிரிகள் துன்பம் போன்ற பிரச்சனைகளில் இருந்து விடுபடலாம்.
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் நகரிலிருந்து 5 கிலோமீட்டர் தொலைவில் தேக்கம்பட்டி செல்லும் சாலையில் அமைந்துள்ளது வனபத்திர காளி கோவில்.
பசுமையான மலையடிவாரத்தில், குளுமையான பவானி ஆற்றின் கரையில், வனப்பகுதியிலே எழுந்துள்ள ஆலயம். அருகில் உள்ள பவானி ஆற்றில் மூழ்கி எழுந்து இத்திருக்கோவிலுக்கு வந்து வழிபட்டால் பில்லி, சூனியம் போன்ற தீய சக்திகளும் பகையும் விலகும், அதுவும் அமாவாசை என்றால் விசேஷம் என்று நம்பிக்கையுடன் பல ஊர்களிலிருந்து வரும் பக்தர்கள் சொல்கிறார்கள். ஆடி அமாவாசை சிறப்பென்றாலும் ஒவ்வொரு அமாவாசை மற்றும் செவ்வாய், வெள்ளி, ஞாயிற்றுக் கிழமைகளில் தரிசனம் செய்ய ஏற்ற நாள்.
எதிரிகள் தாக்கத்திலிருந்து விடுபடவும், திருமணத்தடை விலகவும், பிள்ளைப் பேறு கிட்டவும் பவானி ஆற்றில் இருக்கும் உருண்டைக் கற்களை எடுத்து வந்து மஞ்சள் துணியில் முடிந்து இத்திருக்கோவிலின் மேற்கு சுற்றில் நிற்கும் தொரத்தா மரத்தில் கட்டிவிட்டு வேண்டிய வரம் தர பிரார்த்தனை செய்து கொள்கிறார்கள். சிவப்பு நிற காய்களுடன் நிற்கும் தொரத்தா மரம் என்னும் காட்டு மரம் தல விருட்சமாக இருப்பது வேறு எங்கும் இல்லாத சிறப்பு மருத்துவகுணமுடைய இம்மரத்தின் இலைகள் தோல் நோய் தீர்க்கும் திறனுடையது. இத்திருக்கோவிலின் எதிரே பூக்குண்டம் அமைக்கப்பட்டு ஆடிமாதத்தில் விழா நடைபெறுகிறது.
இத்தலத்தில் வனத்திடையே நின்றருளும் வனபத்திரகாளி மங்கலத்தையும், வேண்டும் வரத்தையும் தருவாள் என்பது வழிபடுவோரின் நம்பிக்கை.

பைரவருக்கு ராகு காலத்தில் பூஜை செய்வது சிறப்பானது. தோஷம் நீங்க ஒவ்வொரு கிழமைகளில் பைரவருக்கு ராகுகாலத்தில் என்வென்ன பூஜைகள் செய்ய வேண்டும் என்பதை பார்க்கலாம்.
பைரவருக்கு ராகு காலத்தில் பூஜை செய்வது சிறப்பிக்கப்படுகிறது. ஞாயிற்றுக்கிழமை ராகு காலத்தில் பைரவருக்கு ருத்ராபிஷேகம் செய்தபின், புனுகு சாற்றி, எலுமிச்சம் பழ மாலை அணிவித்து, எள் கலந்த சாதமும் இனிப்புப் பண்டங்களும் சமர்ப்பித்து முன்னோர்களை நினைத்து பிதுர் பூஜைக்காக மந்திரங்களைச் சொல்லி அர்ச்சித்து வழிபட்டால் பிதுர் தோஷம் நீங்கும். அன்று அன்னதானம் சிறப்பிக்கப்படுகிறது.
திருமணத்தடை நீங்க ஞாயிற்றுக்கிழமை ராகு காலத்தில் விபூதி அபிஷேகம் அல்லது ருத்ராபிஷேகம் செய்து வடைமாலை சாற்றி வழிபட வேண்டும். மேலும் அன்று ஒன்பது முறை அர்ச்சித்து, தயிர் அன்னம், தேங்காய், தேன் சமர்ப்பித்து வழிபட்டால் வியாபாரம் செழித்து வளரும்; வழக்கில் வெற்றி கிட்டும்.
திங்கட்கிழமை ராகு காலத்தில் பைரவருக்கு அல்லிமலர் மாலை சூட்டி, புனுகு சாற்றி, பாகற்காய் கலந்த சாதம் படைத்து அர்ச்சனை செய்தால் கண்டச் சனியின் துன்பம் நீங்கும்.
செவ்வாய்க்கிழமை ராகு காலத்தில் பைரவருக்கு செவ்வரளி மலர் மாலை அணிவித்து, துவரம்பருப்பு சாதம் படைத்து, செம்மாதுளம் கனிகளை நிவேதித்து அர்ச்சித்து வழிபட்டால் குடும்பத்தில் உடன்பிறந்தவர்களிடையே ஒற்றுமை வலுப்படும்.
புதன்கிழமை ராகு காலத்தில் மரிக்கொழுந்து மாலை அணிவித்து, பயத்தம் பருப்பு சாதம் படைத்து அர்ச்சனை செய்ய, மாணவர்கள் கல்வியில் சிறந்து விளங்கலாம்; தடையின்றி விரும்பிய கல்வியைக் கற்று முதலிடம் பெறலாம்.
தேய்பிறை அஷ்டமி அன்று அல்லது வியாழக்கிழமையில் பைரவருக்கு சந்தனக்காப்பு அணிவித்து, மஞ்சள் நிற மலர்களால் மாலை சூட்டி, பால் பாயசம், சுண்டல், நெல்லிக்கனி, ஆரஞ்சு, புளிசாதம் படைத்து அர்ச்சனை செய்தால் செல்வச் செழிப்பு ஏற்படும்.
வெள்ளிக்கிழமை ராகு காலத்தில் சந்தனக் காப்பு அணிவித்து, புனுகு பூசி, தாமரை மலர் சூட்டி, அவல், கேசரி, பானகம், சர்க்கரைப் பொங்கல் படைத்து அர்ச்சனை செய்து வந்தால் திருமணத் தடைகள் நீங்கி திருமணம் நடைபெறும்.
சனிக்கிழமை அன்று ராகு காலத்தில் பைரவருக்கு நாகலிங்கப்பூ மாலையைச் சாற்றி, எள் கலந்த அன்னம், பால் பாயசம், கருப்பு திராட்சை நிவேதனம் செய்து அர்ச்சித்தால் சனி பகவானின் அனைத்து தோஷங்களும் நீங்கும்.

ராமேஸ்வரம் கடல் ‘அக்னி தீர்த்தம்’ என்று அழைக்கப்படுகிறது. இந்த தீர்த்தத்தில் நீராடினால் அனைத்து விதமான தோஷங்களும் நீக்கும் என்பது பக்தர்களின் அசைக்கமுடியாத நம்பிக்கை.
ராமேஸ்வரம் கடல் ‘அக்னி தீர்த்தம்’ என்று அழைக்கப்படுகிறது. சீதாதேவியின் கற்பை நிரூபிப்பதற்காக, அவளை அக்னி பிரவேசம் செய்ய வைத்தார் ராமர். அப்போது சீதையின் கற்புத்திறன், அக்னியையே சுட்டதாகவும், அந்த வெம்மை தாளாத அக்னி பகவான், இந்தக் கடலில் மூழ்கி தனது வெப்பத்தைத் தணித்ததாகவும் புராண வரலாறு கூறுகிறது.
மேலும் சீதையை தொட்ட தோஷம் நீங்குவதற்காகவும், அக்னி பகவான் இந்தக் கடலில் நீராடியதாக புராணம் தெரிவிக்கிறது. அக்னி தீர்த்தத்தில் நீராட, கடலில் இடம் ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டுள்ளது
தீர்த்தங்களும்.. பலன்களும்..
மகாலட்சுமி தீர்த்தம் - செல்வ வளம் பெருகும்.
சாவித்திரி தீர்த்தம் - பேச்சுத் திறன் வளரும்.
காயத்ரி தீர்த்தம் - உலக நன்மை உண்டாகும்.
சரஸ்வதி தீர்த்தம் - கல்வியில் உயர்வு தரும்.
சங்கு தீர்த்தம் - வசதியாக வாழ்வு அமையும்.
சக்கர தீர்த்தம் - மன உறுதி கிடைக்கும்.
சேதுமாதவ தீர்த்தம் - தடைபட்ட பணிகள் தொடரும்.
நள தீர்த்தம் - தடைகள் அகலும்.
நீல தீர்த்தம் - எதிரிகள் விலகுவர்.
கவய தீர்த்தம் - பகை மறையும்.
கவாட்ச தீர்த்தம் - கவலை நீங்கும்.
கந்தமாதன தீர்த்தம் - எத்துறையிலும் வல்லுநர் ஆகலாம்.
பிரம்மஹத்தி தீர்த்தம் - பிரம்மஹத்தி தோஷம் நீங்கும்.
கங்கா தீர்த்தம் - பாவங்கள் அகலும்.
யமுனை தீர்த்தம் - பதவி வந்து சேரும்.
கயா தீர்த்தம் - முன்னோர் ஆசி கிடைக்கும்.
சர்வ தீர்த்தம் - முன்பிறவி பாவம் விலகும்.
சிவ தீர்த்தம் - சகல பிணிகளும் நீங்கும்.
சத்யாமிர்த தீர்த்தம் - ஆயுள் விருத்தியாகும்.
சந்திர தீர்த்தம் - கலை ஆர்வம் பெருகும்.
சூரிய தீர்த்தம் - முதன்மை ஸ்தானம் கிடைக்கும்.
கோடி தீர்த்தம் - முக்தி அடையலாம்.

சிறைகாத்த அய்யனார் கோவிலில் உள்ள கருப்பண்ணசாமியை வழிபட்டால் திருமணத்தடை, புத்திரதோஷம் போன்ற அனைத்து விதமான தோஷங்களும் நீங்கும்.
தஞ்சாவூரில் இருந்து கும்பகோணம் செல்லும் சாலையில் 5 கிலோமீட்டர் தூரத்தில் அமைந்துள்ளது சிறைகாத்த அய்யனார் கோவில். 2 ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்த திருத்தலம். பூமியில் இருந்து தானாக, சுயம்புவாய் வெளிப்பட்ட இந்த அய்யனார் அபரிதமான சக்தி மிக்கவர்.
இங்குள்ள கோவிலில் உள்ள கருப்பண்ணசாமி திருமணத்தடை, புத்திரதோஷம் ஆகியவற்றை போக்கும் ஆற்றல் படைத்தவர். இவரது சன்னிதியில் பக்தர்கள் தங்கள் வேண்டுதல்களை துண்டு சீட்டில் எழுதி கட்டினால் 3 மாதத்திற்குள் அவை நிறைவேறுவதாக பக்தர்கள் தெரிவிக்கின்றனர். மேலும் அம்பாளுக்கு 7, 9, 21 என்ற எண்ணிக்கையில் தீபம் ஏற்றினால் நினைத்த காரியங்கள் எளிதில் நிறைவேறும் என்கிறார்கள். கோவிலுக்கு வரும் பக்தர்கள் சிறைகாத்த அய்யனாருக்கு அர்ச்சனை செய்தும், கருப்பண்ணசாமிக்கு பூஜை செய்தும், தேங்காய் உடைத்தும் நேர்த்திக்கடன் செலுத்துகின்றனர்.
விநாயகர், ஸ்ரீவீரபத்திரசாமி, காமாட்சி அம்மன், பேச்சி அம்மன், சங்கிலி கருப்பண்ணசாமி, சப்த கன்னியர்கள், காட்டேரி அம்மன், ஞாலி சன்னாசி சித்தர், மாமுண்டீஸ்வரர், பெரியண்ணசாமி, காத்தவீரியன், மதுரைவீரன் ஆகிய தெய்வங்களுக்கு தனி சன்னிதிகள் உள்ளன. அய்யனார் உற்சவமூர்த்தி பூரணை, புஷ்பகலா ஆகிய 2 அம்பாள்களுடன் பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார்.
தஞ்சாவூரில் இருந்து கும்பகோணம் செல்லும் சாலையில் பள்ளியக்ரஹாரம் என்ற பகுதி உள்ளது. அப்பகுதியில் உள்ள ரவுண்டானா அருகில் தான் இந்த கோவில் அமைந்துள்ளது. கும்பகோணம், திருவையாறு செல்லும் பஸ்சில் ஏறினால் பள்ளியக்ரஹாரம் ரவுண்டானாவில் இறங்கி 1 கிலோமீட்டர் தூரம் சென்றால் இந்த கோவிலை அடையலாம்.

திருப்பரங்குன்றம் மலையடிவாரத்தில் உள்ள சரவணப் பொய்கையில் நீராடினால் பாவங்கள் நீங்கிவிடும் என்பதுடன் அவர்களது வேண்டுதலும் உடனடியாக நிறைவேறும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.
பரம் என்றால் பரம் பொருளான சிவபெருமானைக் குறிக்கும். குன்றம் என்றால் குன்று (மலை) என்று பொருள். திரு என்பது அதன் சிறப்பை உணர்த்தும் அடைமொழியாகச் சேர்த்து ‘திருப்பரங்குன்றம்’ என ஆயிற்று.
இத்திருத்தலத்திற்கு இலக்கியங்களில் தண்பரங்குன்று, தென்பரங்குன்று, பரங்குன்று, பரங்கிரி, திருப்பரங்கிரி பரமசினம், சத்தியகிரி, கந்தமாதனம், கந்த மலை என வேறு சில பெயர்களும் உள்ளன. திருப்பரங்குன்றம் மலையடிவாரத்தில் கிழக்குப் பக்கம் சரவணப் பொய்கை அமைந்துள்ளது.
இந்த தீர்த்தம் முருகனின் கையிலுள்ள வேலினால் உண்டாக்கப்பட்டது என்றும் இந்த தீர்த்தத்தைக் கண்டாலும், அதில் நீராடினாலும் பாவங்கள் நீங்கிவிடும் என்பதுடன் அவர்களது வேண்டுதலும் உடனடியாக நிறைவேறும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.

விடிவு காலம் பிறக்க எந்த மாதங்களில் விளக்கேற்றினால் என்ன பலன்கள் கிடைக்கும், என்ன பிரச்சனைகள் தீரும் என்பதை விரிவாக கீழே பார்க்கலாம்.
* சித்திரை மாத பவுர்ணமியன்று வீட்டில் விளக்கேற்றி வழிபட்டால் தன தான்யம் பெருகும்.
* வைகாசி மாத பவுர்ணமியில், வீட்டில் விளக்கேற்றி வழிபட்டால் செல்வ நிலை உயரும்.
* ஆனி மாத பவுர்ணமிப் பொழுதில், வீட்டில் விளக்கேற்றி வழிபட்டால் விவாகப் பேச்சுகள் முடிவாகும்.
* ஆடி மாத பவுர்ணமியன்று, வீட்டில் விளக்கேற்றி வழிபட்டால் ஆயுள் விருத்தி உண்டாகும்.
* ஆவணி மாத பவுர்ணமியில், வீட்டில் விளக்கேற்றி வழிபட்டால் புத்திர பாக்கியம் கிடைக்கும்.
* புரட்டாசி மாத பவுர்ணமி தினத்தில், வீட்டில் விளக்கேற்றி வழிபட்டால் தடைபட்ட காரியங்கள் நடைபெறும்.
* ஐப்பசி மாத பவுர்ணமியில் வீட்டில் விளக்கேற்றி வழிபட்டால் உணவு பஞ்சம் ஏற்படாது.
* கார்த்திகை மாத பவுர்ணமி பொழுதில், வீட்டில் விளக்கேற்றி வழிபட்டால் நிலைத்த புகழ் வந்து சேரும்.
* மார்கழி மாத பவுர்ணமியன்று, வீட்டில் விளக்கேற்றி வழிபட்டால் ஆரோக்கியமான உடல்நிலை உருவாகும்.
* தை மாத பவுர்ணமி தினத்தில், வீட்டில் விளக்கேற்றி வழிபட்டால் வாழ்க்கையில் வெற்றி கிடைக்கும்.
* மாசி மாத பவுர்ணமியில் வீட்டில் விளக்கேற்றி வழிபட்டால் துன்பங்கள் அகன்று இன்பங்கள் பெருகும்.
* பங்குனி மாத பவுர்ணமி அன்று வீட்டில் விளக்கேற்றி வழிபட்டால் சகல சவுபாக்கியங்களும் கிடைக்கும்.

நாகதோஷம், சகல தோஷம், எல்லா விதமான மன நோய்களும் விலக நாச்சியார் கோவிலில் உள்ள கல் கருடன், சக்கரத்தாழ்வாரையும் வழிபட்டு வரலாம்.
ஆழ்வார்களால் மங்களாசாசனம் செய்யப்பட்டுள்ள 108 திவ்ய தேசங்களில் ஒன்றாகவும், முக்தி தரும் 12 தலங்களுள், 11-வது தலமாகவும் போற்றப்படுவது நாச்சியார் கோவில் திருத்தலம்.
நாச்சியார் கோவிலில் உள்ள கல்கருடன் உடலில் ஒன்பது இடங்களில் நாகர் உருவம் அமைந்துள்ளது. இவருக்கு பூஜை செய்தால் நாகதோஷம் நீங்கும். இந்த கருடனுக்கு கஸ்தூரி, குங்குமப்பூ, புணுகுசட்டம், முதலியவற்றை வாழைச்சாற்றில் கலந்து இவரது திருமேனியில் சாற்றுவோர் எல்லா இஷ்ட சித்திகளையும் பெறுவர்.
ஆடி மாதத்தில் வரும் சுக்ல பஞ்சமி திதியில் வணங்குபவர்களுக்கு குழந்தை பாக்கியமும், கன்னிப் பெண்களுக்கு நல்ல கணவனும் கிடைப்பார். திருமணமான பெண்களுக்கு தீர்க்க சுமங்கலி பாக்கியம் கிடைக்கும். கருடனின் திரு நட்சத்திரமான சுவாதி அன்று, இங்குள்ள கல் கருடனுக்கு அர்ச்சனை செய்வது நல்லது.
இத்தலத்தில் கருடனுக்குத் தனிசிறப்பை போல், சக்கரத்தாழ்வாருக்கும் தனிசிறப்பு உண்டு. கோவிலின் நான்காவது சுற்றில் மடப்பள்ளிக்கு எதிரில் உள்ள தனிசன்னிதியில் இவர் அருள்பாலிக்கிறார். இந்த சுதர்சன ஆழ்வார் சிலை வடிவத்தின் பின் பக்கம், நரசிம்மப்பெருமாள் தரிசனம் தருகிறார். இந்த சக்கரத்தாழ்வார்தான், மணிமுத்தாற்றில் நீராடிய போது, மேதாவி முனிவரின் கையில் கிடைத்தது.
அசரீரி வாக்கு உரைத்தபடி அம்முனிவர் இந்தச் சக்கரத்தாழ்வாரை பிரதிஷ்டை செய்து பூஜை செய்துவந்தார். 48 நாட்கள் இந்தப் பெருமாளை சுற்றிவந்து வழிபட்டால் சகல தோஷங்களும் நீங்கும். எல்லா விதமான மன நோய்களும் விலகும். இந்தக் கோவில் காலை 6 மணி முதல் பகல் 12 மணி வரையிலும், மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரையிலும் திறந்திருக்கும்.
தஞ்சை மாவட்டம் கும்பகோணத்தில் இருந்து குடவாசல் செல்லும் வழியில் 10 கிலோமீட்டர் தொலைவில் நாச்சியார்கோவில் உள்ளது. கும்பகோணத்தில் இருந்து பஸ்வசதி உண்டு.

கீழே கொடுக்கப்பட்டு ஆலயங்களை யோகபலம் பெற்ற நாளில் சென்று வழிபட்டு வந்தால் தன்னம்பிக்கையும், தைரியமும் அதிகரிக்கும் என்பது மறுக்கமுடியாத உண்மை.
இறைவனுக்கு வீரம் வந்த அட்ட வீரட்ட தலங்கள் உள்ளன. இவற்றிற்கு யோகபலம் பெற்ற நாளில் சென்று வழிபட்டு வந்தால் தன்னம்பிக்கையும், தைரியமும் அதிகரிக்கும்.
திருக்கடையூர் - எமதர்மனை காலால் உதைத்தது.
திருக்கண்டியூர் - பிரம்மனின் தலையைக் கொய்தது.
திருவதிகை - திரிபுரத்தை எரித்தது.
திருவழுவூர் - யானையின் தோலை உரித்தது.
திருப்பறியலூர் - தட்சனை சம்ஹாரம் செய்தது.
திருக்கோவிலூர் - அந்தகாசுரனை வதம் செய்தது.
திருக்குறுக்கை - மன்மதனை எரித்தது.
திருவிற்குடி - ஜலந்தராசுரனை வதம் செய்தது.

நல்ல வரன் கிடைக்க வேண்டும், குடும்பத்தில் பிரச்சினை தீர வேண்டும் என்று லட்சக்கணக்கானவர்கள் ஆண்டுதோறும் பழனி முருகனை நாடி, நடந்தே வருகிறார்கள்.
தமிழ்நாட்டில் எந்த கோவிலுக்கும் இல்லாத ஒரு சிறப்பு பழனி முருகன் கோவிலுக்கு உண்டு. அது பழனிக்கு படையெடுத்து வரும் பக்தர்களின் கட்டுக் கடங்காத பாதயாத்திரை கூட்டம். தைப்பூசம் சீசனில் பழனி நோக்கி தமிழ்நாட்டின் பல பகுதிகளில் இருந்தும் பக்தர்கள் நடந்தே பாதயாத்திரையாகச் சென்று முருகனை வழிபடுகிறார்கள்.
உலகம் முழுவதும் இந்த பாதயாத்திரை பழக்கத்தை ஏற்படுத்தியவர்கள் நகரத்தார்கள் ஆவார்கள். பல நூறு ஆண்டுகளுக்கு முன்பு நகரத்தார்கள் பழனி கோவிலுக்கு நடந்து வருவதை சில நடைமுறைகளுக்காக கடைப்பிடித்தனர். பாதயாத்திரை வரும் போது ஒவ்வொரு குடும்பத்தினரும் எப்படி நடந்து கொள்கிறார்கள் என்பதை கவனிப்பார்கள்.
அதை வைத்து அந்த குடும்பத்தினருடன் திருமண சம்பந்தம் பேசி முடிப்பார்கள். நாளடைவில் இந்த பாதயாத்திரை வழக்கம் தமிழர்கள் அனைவரிடமும் பரவி விட்டது. பாதயாத்திரையின் போது காவடி ஏந்தி செல்வதும், அலகு குத்தி தேர் இழுத்து செல்வதும் முக்கிய அம்சம்.
முருகனிடம் இடும்பன் வரம் கேட்டபோது, நான் மலைகளை காவடி ஏந்தியது போல காவடி ஏந்தி வரும் பாதயாத்திரை பக்தர்களின் வேண்டுதல்களை, நீ நிறைவேற்ற வேண்டும் என்றான். இதை ஏற்று காவடி ஏந்தி பாதயாத்திரையாக வரும் பக்தர்களின் வேண்டுதல்களை பழனி முருகன் நிறைவேற்றுகிறார்.
நோய் தீர வேண்டும், நல்ல வரன் கிடைக்க வேண்டும், வியாபாரம் செழிக்க வேண்டும், குடும்பத்தில் பிரச்சினை தீர வேண்டும் என்று லட்சக்கணக்கானவர்கள் ஆண்டுதோறும் பழனி முருகனை நாடி, நடந்தே வருகிறார்கள். சமீப காலமாக சென்னையில் இருந்தும் கேரளாவில் இருந்தும் பழனிக்கு பாதயாத்திரை செல்லும் பக்தர்கள் எண்ணிக்கை அதிகரித்தப்படி உள்ளது.

ராகு, கேது கிரக தோஷம், சர்ப்ப தோஷத்தால் பாதிக்கப்பட்டவர்கள், திருமணம் ஆகாதவர்களுக்கு காளஹஸ்தி கோவில் ராகு மற்றும் கேது கிரகங்களின் பரிகார தலமாகவும் திகழ்கிறது.
காளஹஸ்தி கோவில் ராகு மற்றும் கேது கிரகங்களின் பரிகார தலமாகவும் திகழ்கிறது. ராகு, கேது கிரக தோஷம், சர்ப்ப தோஷத்தால் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் திருமணம் ஆகாதவர்கள், குழந்தை பாக்கியம் இல்லாதவர்கள், நீண்டகால பிரச்சினையில் சிக்கி தவிப்பவர்கள் இங்கு வந்து ராகு மற்றும் கேது, சர்ப்பதோஷ நிவாரண பூஜை செய்து கொண்டால் பிரச்சினையில் இருந்து விடுபடலாம்.
இந்த ஆலயத்தில் தினமும் காலை 7.30 மணியில் இருந்து இரவு 9 மணி வரை பரிகார பூஜை செய்யப்படுகிறது. இதற்காக கோவில் தேவஸ்தான அலுவலகத்தில் அனுமதிச் சீட்டு விற்பனை செய்கிறார்கள். காலை 7 மணி முதல் இரவு 8 மணி வரை இந்த அனுமதிச் சீட்டு விற்பனை செய்யப்படும். இதில் ஒரு அனுமதிச் சீட்டு வாங்கினாலே போதுமானது.
பூஜைக்குரிய பொருட்கள் அனைத்தையும் கோவில் நிர்வாகமே வழங்கிவிடும். ஒரு அனுமதிச் சீட்டுக்கு 2 பேர் கலந்து கொள்ள அனுமதிக்கப்படுவார்கள். ஒரு வேளை பூஜையின் போது 200 பேர் வரை கலந்து கொள்ளலாம். 45 நிமிடம் இந்த பூஜை நடைபெறும்.

பூலோகநாத சுவாமி ஆலயத்திற்கு வந்து வாஸ்து நாயகனான ஸ்ரீ பூலோகநாத சுவாமியையும் ஸ்ரீ ஜெகதாம்பாளையும் வணங்குபவர்களுக்கு வாஸ்து தொடர்பான அனைத்து குறைபாடுகளும் நீங்கும்.
வீடு கட்டுதல், பழைய வீட்டின் அமைப்பு, வியாபார நிறுவனங்களின் அமைப்பு, நோக்கும் திசை, அறைகளின் நீளம், அகலம் என அனைத்திலும் வாஸ்து தோஷம் உள்ளதா? எனப் பார்ப்பது தற்போது அனைவரும் கடைப்பிடித்து வரும் பழக்கமாக இருந்து வருகிறது.
வாஸ்து நாயகருக்கு திருச்சியில் ஓர் ஆலயம் உள்ளது. இந்த ஆலயம் பூலோகநாத சுவாமி திருக்கோவில் என்று அழைக்கப்படுகிறது. இங்கு அருள்பாலிக்கும் பூலோகநாத சுவாமிதான், வாஸ்து நாயகராகத் திகழ்கிறார். இவர் வாஸ்து தோஷங்களை நீக்கும் வல்லமை படைத்தவர். இவரிடம் வாஸ்து தொடர்பான குறைபாடுகளைக் கூறி பிரார்த்தனை செய்துக் கொண்டால் அவை அறவே தீரும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.
ஒவ்வொரு வருடமும் இந்த ஆலயத்தில் வாஸ்து நாட்களில், சிறப்பு வாஸ்து ஹோமம் நடத்தப்படுகிறது. புதிதாக வீடு கட்டுபவர்களும், பழைய, புதிய வீட்டில் தோஷம் இருப்பதாக கருதுபவர்களும், வாஸ்து நாட்களில் இந்த ஹோமத்தில் கலந்து கொண்டால் வாஸ்து தோஷம் நீங்கும். மற்றவர்களுக்கு வீடு, மனை வாங்கும் யோகம் கிட்டும்.
வாஸ்து ஹோமத்தன்று, பூமிக்கு அடியில் விளையும் பெரும்பாலான கிழங்குகளைக் கொண்டு, விசேஷ கதம்ப கிழங்குகள் சாதம் தயாரித்து வாஸ்து பகவானுக்கு படையல் இடப்படுகிறது. பின்னர் இதனை பக்தர்களுக்கு பிரசாதமாக வினியோகம் செய்கின்றனர்.
சுமார் 1000 ஆண்டுகள் பழமையானது இந்த ஆலயம். வாஸ்து தலமான இந்த ஆலயத்திற்கு வந்து வாஸ்து நாயகனான ஸ்ரீ பூலோகநாத சுவாமியையும் ஸ்ரீ ஜெகதாம்பாளையும் வணங்குபவர்களுக்கு வாஸ்து தொடர்பான அனைத்து குறைபாடுகளும் நீங்கி அவர்கள் வாழ்வில் வளம் பெறுவார்கள் என்பது நிதர்சனமான உண்மையே!

யந்திரங்கள் மிக சக்தி வாய்ந்தவை. செல்வம் பெருக கீழே கொடுக்கப்பட்டுள்ள இந்த குபேர யந்திரத்தை பயன்படுத்தி விரைவில் நல்ல பலனை காணலாம்.
யந்திரங்கள் மிக சக்தி வாய்ந்தவை. பல பெரிய, நடக்க முடியாத விஷயங்களுக்கெல்லாம் முற்காலத்தில் யந்திரங்கள் உபயோகித்து பயன் அடைந்துள்ளனர். இதில் மிக எளிய அனைவரும் வீட்டிலேயே பின்பற்ற கூடிய, அதுவும் ஐப்பசி மாதம் தொடங்க வேண்டிய ஒரு சுலப தன ஆகர்ஷன முறையை பார்க்கலாம். குபேரர் உருவம் அல்லது படம் வைத்து செய்வது மிக சிறப்பு. (சீனத்து சிரிக்கும் குபேரர் சிலை அல்ல)

கீழே கொடுக்கப்பட்டுள்ள குபேர யந்திரத்தை அரிசி மாவினால் பூஜை அறையில் வரைந்து கொள்ளவும். பின்பு ஒவ்வொரு கட்டத்திலும் ஒரு-ஒரு ரூபாய் நாணயத்தை வைக்கவும். நாணயத்தின் மேல் ஒரு சிகப்பு ஒரு வெள்ளை பூவையும் வைக்கவும். கோலத்தின் முன் சுத்தமான நெய் தீபம் மண் அகலில் ஏற்றவும். இதை வடக்கு திசையில் செய்தால் சிறப்பு-அல்லது பூஜை அறையில் செய்யலாம்.
விளக்கேற்றியதும் கீழ் கண்ட குபேர மந்திரத்தை 11 முறை கூறி வழிபடவும். பின்பு நிவேதனம் செய்து பூஜையை முடித்து கொள்ளலாம். விளக்கு அணைந்ததும் 9 நாணயங்களையும் எடுத்து தனியாக வைத்து கொள்ளவும். மறுநாள் அதே நாணயத்தை உபயோகிக்கலாம். இதை ஐப்பசி மாதம் முழுவதும் செய்து வர, குபேரர் நம் அனைத்து பண தேவைகளையும் நிறைவேற்றி செல்வ செழிப்போடு வாழ வைப்பார். மேலும் ஐப்பசி மாதம் முடிந்ததும் ஒவ்வொரு வாரமும் செவ்வாய் மற்றும் வெள்ளியிலும் இதை செய்யலாம். தங்களால் முடிந்த நேரத்திலும் செய்யலாம்.
மந்திரம் :
ஓம் ஷ்ரீம் ஓம் ஹ்ரீம்
ஷ்ரீம் ஹ்ரீம் க்லீம் ஷ்ரீம்
க்லீம் விட்டேஸ்வராய நமஹ